PHP-and-MySQL/C2/Arithmatic-Operators/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:00 | அடிப்படை Arithmetic operators குறித்த tutorial க்கு நல்வரவு! |
0:03 | கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் செயல்பாடுகளை பார்க்கலாம் |
0:09 | கூட்டல், கழித்தல், பெருக்கல் ஆனது asterisk ஆகவும், வகுத்தல் ஆனது forward slash ஆகவும் எழுதப்படுகின்றன |
0:17 | 2 variable கள் உள்ளன |
0:20 | "num1" எனும் variable ஐ உருவாக்கி, மதிப்பு "10" ஆகவும், அவ்வாறே "num2" க்கு"2" ஆகவும் சேமிக்கிறேன். |
0:30 | இவை தசம மதிப்பு இல்லாமல் integer எண்களாக உள்ளன |
0:34 | இப்போது "num1" மற்றும் "num2" ஐ கூட்ட போவதாக வைத்து கொள்வோம் |
0:40 | "num1" ன் மதிப்பை "num2"வுடன் கூட்ட echo செய்கிறேன் |
0:44 | பரிசோதித்து பார்க்கலாம் |
0:47 | அது "12". 10 மற்றும் 2,.... num1 மற்றும் num2,.... அதாவது 10 மற்றும் 2 கூட்டப்படும் பொழுது விடை "12".. |
0:55 | கழித்தல் பற்றி பார்க்கலாம். அங்கு கழித்தல் குறியால் இடமாற்றம் செய்வோம். |
1:01 | Refresh பண்ண பின் அது "8" ஆக இருக்கும் |
1:05 | பெருக்கலை பற்றி பார்க்கலாம். 10 முறைகள் 2 ஆனது 20. எனவே 20 கிடைத்துள்ளது. |
1:11 | அடுத்து 10 ஐ 2 ஆல் வகுப்பதால் கிடைப்பது. 10 இல் பாதி அதாவது "5". |
1:18 | தற்பொழுது என்ன செய்யலாம்? இதன் இறுதியில் ஏதாவதொன்றை சேர்க்கலாம் |
1:24 | அதாவது இதனை num2 ஆல் வகுக்கலாம் |
1:27 | இந்த செயல்பாடு என்ன செய்யும் எனப் பார்த்தால் "num1" மற்றும் "num2"வை கூட்டுவதால் கிடைக்கும் 12 ஆனது 2 ஆல் வகுக்கப்படும் |
1:39 | எனவே 12 ஆனது 2 ஆல் வகுக்க... கிடைப்பது 6. |
1:43 | உண்மையில் இது செய்வதை பார்த்தால்.... num2 ஆனது num2ஆலேயே வகுக்கப்பட்டு... 1 கிடைத்துவிடுகிறது. பிறகு இந்த 1ஆனது num1 வுடன் கூட்டப்படுகிறது. |
1:56 | இதனால் 6க்கு பதிலாக 11 நமக்கு கிடைத்துவிடும் |
2:00 | இதற்கு காரணம்.... எப்போதும் வகுத்தல் குறியானது கூட்டல் குறிக்கு முன் செயல்படும். இப்படியே பெருக்கல் குறியும். |
2:10 | இதனை சரி செய்ய ... அடைப்பு குறியை சேர்க்க வேண்டும் |
2:16 | இந்த அடைப்புக் குறி சொல்வது ... முதலில் இதற்குள் இருக்கும் செயல்பாட்டை எடுத்துக்கொண்டு ….அதனை செய்து முடித்த பின் … வகுத்தலை தொடர். அப்படி தொடரப்படும் போது அது integer ஆகவோ அல்லது variable ஆகவோ இருக்கலாம். |
2:29 | இப்பொழுது இது என்ன செய்யும் என்றால் … num1 மற்றும் num2 … அதாவது 10 மற்றும் 2 ஐ கூட்டுவதால் கிடைக்கும் 12... 2 ஆல் வகுபடும் போது 6 கிடைக்கும். |
2:39 | refresh பண்ணி பார்த்தால் … அது சரியாக நடந்திருக்கிறது. |
2:43 | இவைதான் ... எளிதாக பயன்படுத்தக்கூடிய..... அடிப்படை கணித operators |
2:48 | நீங்கள் அணுகும் எவ்வித கணக்குகளையும் … எப்போதும் ஒரு துணை கொண்டு … அவை சரியாக கணக்கிடப்பட்டுள்ளதா என சரி பார்க்கவும் |
2:55 | இதுபோன்ற சிலவற்றை விரைவில் காண்போம் |
2:58 | increment arithmetic operator பற்றி கற்க உள்ளோம். இது மதிப்பை 1 ஆல் அதிகரிக்கும். இதனை சிறிது நேரத்திற்கு பின்பு பயன்படுத்தி பார்க்கலாம் |
3:05 | இவற்றை பழகிப்பார்த்து நன்றாக கற்றுள்ளீர்களா என உறுதி செய்க |
3:09 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. தமிழாக்கம் நித்யா. நன்றி |