PERL/C3/Special-Variables-in-PERL/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | Perlலில் special variableகள் குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு. |
00:04 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Global special variableகள், Special command line variableகள், Global special constantகள் |
00:13 | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 12.04 இயங்கு தளம், Perl 5.14.2 மற்றும் gedit Text Editor. உங்களுக்கு விருப்பமான எந்த text editorயும் பயன்படுத்தலாம். |
00:27 | முன்நிபந்தனையாக, Perl Programmingல் வேலை செய்ய தெரிந்து இருக்க வேண்டும். |
00:32 | இல்லையெனில், அதற்கான Perl டுடோரியல்களுக்கு, spoken tutorial வலைத்தளத்தை பார்க்கவும். |
00:38 | Special variableகள் என்பவை யாவை? |
00:41 | Special variableகள், Perlலில் சிறப்பு பொருள் கொண்ட predefined variableகள் ஆகும். |
00:46 | இவற்றை பயன்படுத்துவதற்கு முன்பு, initialize செய்ய தேவையில்லை. |
00:50 | தேடுதல்களின் முடிவுகள், environment variableகள் மற்றும் Debuggingஐ கட்டுப்படுத்த flagகள் ஆகியவற்றை தடுக்க, இவைகள் பயன்படுத்தப்படுகின்றன. |
00:58 | முதலில், Global special variableகள் பற்றி கற்போம். |
01:02 | '$_': (Dollar Underscore). இது பரவலாக பயன்படுத்தப்படும் special variable ஆகும். |
01:06 | பல functionகளுக்கும், pattern-தேடும் stringகளுக்கும், $_ - Dollar Underscore, default parameter ஆகும். |
01:14 | ஒரு மாதிரி programஐ பயன்படுத்தி'$_' (Dollar Underscore) variableன் பயன்பாட்டை புரிந்து கொள்வோம். |
01:20 | நான் ஏற்கெனவே உருவாக்கியுள்ள special dot pl fileஐ திறக்கிறேன். |
01:26 | Terminalலுக்கு சென்று, டைப் செய்க: gedit special dot pl ampersand , பின்Enterஐ அழுத்தவும். |
01:32 | Geditல், special dot pl file, இப்போது திறக்கப்படுகிறது. திரையில் தெரியும் பின்வரும் codeஐ டைப் செய்யவும். இப்போது codeஐ விளக்குகிறேன். |
01:42 | இங்கு, இரண்டு foreach loopகள் உள்ளன. இந்த 2 loopகளும் ஒரே முடிவை இயக்கும். |
01:49 | Loopன் ஒவ்வொரு iteration யிலும், தற்போதைய string '$_'ல் வைக்கப்படுகிறது. |
01:54 | மேலும், முன்னிருப்பாக அது print statementஆல் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கூடுதல் variableஆன $colorன் பயன்பாட்டை$_ (Dollar Underscore) சேமிக்கிறது. |
02:03 | Fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும். |
02:06 | Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl special dot pl, பின்Enterஐ அழுத்தவும். |
02:13 | இங்கு, இரண்டு foreach loopகளும் ஒரே முடிவைத் தருகின்றன. |
02:18 | '$_' (Dollar Underscore) variable , எப்படி உள்ளடங்கி இருக்கிறது என்பதைக் காட்ட மற்றொரு உதாரணத்தை காண்போம். Special dot pl fileக்கு திரும்பிச் செல்லவும். |
02:27 | திரையில் காட்டப்படும் codeஐ டைப் செய்யவும். |
02:30 | இந்த program, "first.txt" text fileஐ ஒவ்வொரு வரியாக படிக்கிறது. எல்லா வரிகளையும் படித்து முடிக்கும் வரை, அது DATA fileன் உள் loop செய்கிறது. |
02:40 | 'First.txt' fileல் இருந்து, தற்போதைய வரியின் contentகளை, print $_ variable print செய்கிறது. 'While' loopல், '$_'ன் பயன்பாடு உள்ளடங்கியுள்ளது. |
02:51 | பின்வரும் டுடோரியல்களில் இதைப் பற்றி மேலும் காண்போம். |
02:55 | Subroutine parameterகளை சேமிக்க, At the rate underscore என்ற special variable பயன்படுத்தப்படுகிறது. |
03:01 | இந்த array variableலில், ஒரு subroutineகான Argumentகள் சேமிக்கப்படுகின்றன. |
03:06 | சாதாரண arrayகளில் செய்வதைப் போல, pop/shift போன்ற Array operationகளை, இந்த variableன் மேல் செய்ய முடியும். |
03:13 | இதற்கு ஒரு உதாரணத்தை காட்டுகிறேன். special dot pl fileக்கு வருவோம். |
03:19 | திரையில் காட்டியபடிcodeஐ டைப் செய்யவும். |
03:22 | இரண்டு எண்களுக்கு இடையே உள்ள அதிகபட்ச மதிப்பை இந்த program, return செய்யும். Dollar 'a' comma dollar 'b' என்ற இரண்டு argumentகளை, @_ (At the rate underscore) என்ற ஒரு local array சேமிக்கிறது. |
03:35 | அதாவது, dollar underscore index of zero மற்றும் dollar underscore index of oneன் கீழ் அது சேமிக்கப்படுகிறது. |
03:43 | கொடுக்கப்பட்டுள்ள இரண்டு எண்களில் அதிகபட்சமானதை, print statement, print செய்கிறது. |
03:47 | Fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும். |
03:51 | Terminalக்கு திரும்பி, Perl scriptஐ இயக்க டைப் செய்க: perl special dot pl, பின்Enterஐ அழுத்தவும். |
03:58 | அதிகபட்சமான மதிப்பு outputஆக காட்டப்படுகிறது. |
04:02 | Percentage (%) ஐ தொடர்நது capital 'ENV'ஐ எழுதுவதன் மூலம் Environment variableகள் குறியிடப்படுகின்றன. |
04:10 | பின்வரும் தற்போதைய environment variableகளின் copyஐ, Environment variableகள் கொண்டிருக்கும். |
04:17 | ஒரு மாதிரி programஐ பயன்படுத்தி %ENV variableஐ புரிந்து கொள்வோம். |
04:23 | Special dot pl fileக்கு திரும்பிச் செல்வோம். |
04:26 | திரையில் காட்டியபடி பின்வரும் codeஐ டைப் செய்யவும். |
04:30 | Fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும். Terminalக்கு திரும்பி, Perl scriptஐ இயக்கவும். |
04:37 | டைப் செய்க: perl special dot pl, பின்Enterஐ அழுத்தவும். |
04:42 | PWD (present working directory), username, language போன்ற environment விவரங்களை காணலாம். |
04:51 | அடுத்து, dollar zero என்ற மற்றொரு special variable பற்றி காண்போம். |
04:55 | இயங்கிக் கொண்டிருக்கும் தற்போதைய Perl program ன் பெயரை special variable dollar zero ('$0') கொண்டிருக்கும். |
05:02 | இது பொதுவாக logging நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. |
05:05 | உதாரணத்திற்கு: இங்கு காட்டப்பட்டுள்ளபடி, 'First.pl' என்ற fileன் உள், '$0' variableஐ நான் பயன்படுத்துகிறேன். |
05:14 | அதை இயக்கினால், First dot pl file பெயரை அது print செய்யும். |
05:19 | Perlலில் உள்ள, sort என்ற built-in function, ஒரு array ஐ sort செய்கிறது. |
05:24 | Numerical comparison operatorஐ பயன்படுத்தி, ஒரு comparison function, தன் parameterகளை ஒப்பிடும். |
05:30 | இங்கு காட்டப்பட்டு உள்ளபடி, lesser than equal to greater than symbolகளால் இந்த operator குறியிடப்படுகிறது. |
05:38 | இதற்கு ஒரு உதாரணத்தை பார்ப்போம். |
05:40 | Terminalஐ திறந்து, டைப் செய்க: gedit sort.pl ampersand , பின் Enterஐ அழுத்தவும். |
05:47 | 'Gedit' Text Editorல், sort.pl திறக்கப்படுகிறது. திரையில் காட்டப்பட்டு உள்ளபடி பின்வரும் codeஐ டைப் செய்யவும். |
05:56 | Codeஐ விளக்குகிறேன். எண்களின் array ஒன்றை, முதல் வரி declare செய்கிறது. |
06:02 | இரண்டு மதிப்புகளையும், எண்களாக numerical comparison operator ஒப்பிடுகிறது. |
06:08 | ஒப்பிடப்பட வேண்டிய மதிப்புகள், special package local variableகளான, Dollar a மற்றும் dollar b ல் load செய்யப்படுகிறது. |
06:16 | மேலும் இந்த sort function, எண்களை ஏறுவரிசையில் sort செய்கிறது. |
06:21 | இப்போது programஐ சேமித்து இயக்கவும். |
06:25 | Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl sort.pl, பின் Enterஐ அழுத்தவும். |
06:31 | எண்கள் ஏறுவரிசையில் sort செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். |
06:35 | Dollar exclamation என்ற மற்றொரு special variableஐ காணலாம். |
06:39 | Dollar exclamationஐ string contextல் பயன்படுத்தினால், system error stringஐ return செய்யும். இதோ, அதன் பயன்பாட்டிற்கு ஒரு உதாரணம். |
06:48 | 'Hello.txt' file இல்லையெனில், பின்வரும் error messageஐ print செய்யும்: "Cannot open file for reading : No such file or directory". |
06:59 | இப்போது, dollar at the rate என்ற மற்றொரு special variableஐ காணலாம். |
07:04 | இது பரவலாக பயன்படுத்தப்படும் மற்றொரு variable ஆகும். இது, eval அல்லது require commandல் இருந்து return செய்யப்படும் error messageஐ return செய்யும். |
07:12 | இந்த உதாரணம், "could not divide Illegal division by zero" என print செய்யும். |
07:17 | Dollar dollar என்பது வேறொரு special variable ஆகும். இந்த scriptஐ run செய்து கொண்டிருக்கும் Perl interpreterன், process IDஐ இது வைத்திருக்கும். |
07:26 | Command lineல் குறிப்பிடப்பட்டிருக்கும் fileகளில் இருந்து ஒவ்வொரு வரியையும் படிக்க diamond operator பயன்படுத்தப்படுகிறது. |
07:32 | இதற்கு ஒரு உதாரணத்தை பார்ப்போம். |
07:35 | Terminalக்கு திறந்து, டைப் செய்க: gedit commandline.pl ampersand |
07:42 | Geditல், 'commandline.pl' file, இப்போது திறக்கப்படுகிறது. |
07:46 | திரையில் தெரியும் codeஐ டைப் செய்யவும். |
07:49 | Fileஐ சேமிக்கவும். |
07:51 | sample dot txt என்றfileலில் உள்ள textஐ நான் உங்களுக்கு காட்டுகிறேன். |
07:56 | Command lineல் இருந்து programஐ run செய்ய, டைப் செய்க: perl commandline dot pl space sample dot txt , பின்Enterஐ அழுத்தவும். |
08:07 | sample dot txt fileலில் இருந்த text தான் இது. |
08:11 | எந்த fileகளும் குறிப்பிடப்படவில்லை எனில், அது , standard input, அதாவது keyboardல் இருந்து படிக்கும். |
08:17 | Perl, array at the rate capital A R G V special variableஐ கொண்டு இருக்கிறது. இது, command lineல் இருந்து எல்லா மதிப்புகளையும் கொண்டு இருக்கும். |
08:27 | At the rate capital A R G V arrayஐ பயன்படுத்தும் போது, variableகளை declare செய்ய வேண்டிய தேவையில்லை. |
08:33 | Command lineல் இருந்து மதிப்புகள் தானாகவே இந்த variableலில் வைக்கப்படுகின்றன. |
08:37 | அடுத்து, Global Special Constantகளுக்கு செல்வோம். |
08:41 | Underscore underscore (capital எழுத்துகளில்)E N D ( )underscore underscore, programன் logical இறுதியைக் குறிக்கிறது. |
08:50 | இந்த special variable ஐ தொடர்ந்து வரும் எந்த textஉம், இந்த statementக்கு பிறகு புறக்கணிக்கப்படுகிறது. |
08:55 | Underscore underscore (capital எழுத்துகளில்)FILE ' underscore underscore', programன் file பெயரை, அது பயன்படுத்தப்படும் இடத்தில் குறிக்கிறது. |
09:06 | Underscore underscore (capital எழுத்துகளில்)LINE underscore underscore, தற்போதைய வரியின் எண்ணை குறிக்கிறது. |
09:13 | Underscore underscore (capital எழுத்துகளில்)PACKAGE underscore underscore, compile செய்யும் நேரத்தில், தற்போதைய packageன் பெயரையும், தற்போதைய package இல்லையெனில், undefined எனவும் குறிக்கிறது. |
09:25 | Global Special Constantகள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பதை ஒரு மாதிரி programஐ பார்த்து கற்போம். |
09:30 | Terminalஐ திறந்து, டைப் செய்க: gedit specialconstant dot pl ampersand , பின்Enterஐ அழுத்தவும். |
09:39 | Geditல், specialconstant dot pl file, இப்போது திறக்கப்படுகிறது. |
09:44 | திரையில் தெரியும் பின்வரும் codeஐ டைப் செய்யவும். இப்போது, Codeஐ விளக்குகிறேன். |
09:50 | சிறப்பு literalகளான, "PACKAGE, FILE, LINE" என்பன, programன் அந்த இடத்தில், முறையே, packageன் பெயர், தற்போதைய fileன் பெயர் மற்றும் வரி எண்ணைக் குறிக்கிறது. |
10:00 | Programஐ இயக்குவோம். |
10:02 | Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl specialconstant.pl, பின் Enterஐ அழுத்தவும். |
10:09 | நமது programன், packageன் பெயர், தற்போதைய fileன் பெயர் மற்றும் வரி எண்ணைக் காணலாம். |
10:15 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கசொல்ல, |
10:19 | இந்த டுடோரியலில் நாம் கற்றது, Perlலில் பொதுவாக பயன்படுத்தப்படும் சில special variableகள். |
10:25 | பயிற்சியாக, பின்வரும் எண்களின் arrayஐ ஏறுவரிசை மற்றும் இறங்குவரிசையில் sort செய்ய, ஒரு Perl scriptஐ எழுதவும். |
10:34 | கவனிக்கவும்: இறங்குவரிசைக்கு, கீழ்கண்ட codeஐ ஒப்பிடுவதற்கு பயன்படுத்தவும். |
10:39 | Special variable $_ (Dollar Underscore), மற்றும் while loopஐ பயன்படுத்தி, sort செய்யப்பட்ட முடிவை print செய்யவும். |
10:45 | Programஐ சேமித்து இயக்கவும். |
10:47 | இப்போது, முடிவை சரி பார்க்கவும். |
10:49 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
10:56 | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
11:03 | மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
11:06 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. |
11:13 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
11:17 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |