PERL/C3/Perl-Module-Library-(CPAN)/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Perl Module Library அதாவது CPANஐ பயன்படுத்துவது குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில், PERLலில் ஏற்கெனவே உள்ள moduleகளை பயன்படுத்துவும், மேலும், புது moduleகளை உருவாக்கவும் கற்போம்.
00:16 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 12.04 இயங்கு தளம், Perl 5.14.2 மற்றும் gedit' Text Editor.
00:28 உங்களுக்கு விருப்பமான எந்த text editorயும் பயன்படுத்தலாம்.
00:32 இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, Perl Programmingல் வேலை செய்ய தெரிந்து இருக்க வேண்டும்.
00:37 இல்லையெனில், அதற்கான Perl ஸ்போகன் டுடோரியல்களுக்கு, spoken tutorial வலைத்தளத்தை பார்க்கவும்.
00:43 Moduleகள்: இவை பொதுவான routineகளை கொண்டிருக்கும் code fileகள் ஆகும். இவை வெவ்வேறு programmerகளால் எழுதப்பட்டவை. மேலும், இவற்றை, ஒரே நேரத்தில் பல programகளால் பயன்படுத்த முடியும்.
00:55 CPAN: PERL ஒரு open source language, மேலும், PERLன் standard CPAN libraryக்கு எவரும் பங்களிக்கலாம்.
01:03 வெவ்வேறு programmerகளால் எழுதப்பட்ட, ஆயிரக்கணக்கான பயன்படுத்த தயாராக இருக்கும் moduleகளை, CPAN கொண்டிருக்கிறது.
01:09 CPAN ன் official website: www.cpan.org
01:17 List colon colon U t i lஐ உதாரணமாக எடுத்துக் கொண்டு, அதை பயன்படுத்தக் கற்போம்.
01:24 இந்த moduleன் உள் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கும் functionகளை அணுக இது உதவுகிறது.
01:30 Terminalக்கு திரும்பவும்.
01:32 டைப் செய்க: perldoc List colon colon Util.
01:38 You need to install the perl hyphen doc package to use this program என்ற errorஐ நீங்கள் பெறலாம்.
01:46 இது, perl hyphen doc packageஐ நீங்கள் நிறுவ வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
01:50 அதை, Synaptic Package Managerஐ பயன்படுத்தி செய்யவும்.
01:55 அதற்கான Linux ஸ்போகன் டுடோரியல்களுக்கு, spoken tutorial வலைத்தளத்தை பார்க்கவும்.
02:01 இங்கு, நீங்கள் காண்பது, List colon colon Util moduleக்கு உண்டான ஆவணங்கள் ஆகும்.
02:08 ஆவணங்கள் பின்வருவனவற்றை பெற்றுள்ளன என்பதை கவனிக்கவும்- moduleன் விளக்கம், அதை பயன்படுத்த உதாரணம் மற்றும் ஒரு overview.
02:20 Perldoc viewerஐ விட்டு வெளிவர, 'Q' keyஐ அழுத்தவும்.
02:25 அடுத்து, ஒரு Perl programல், List colon colon Util moduleஐ பயன்படுத்தக் கற்போம்.
02:33 நான் ஏற்கெனவே சேமித்து வைத்திருந்த exist underscore modules.pl என்ற sample programஐ திறக்கிறேன்.
02:40 உங்கள் exist underscore modules dot pl fileலில், திரையில் தெரியும் பின்வரும் codeஐ டைப் செய்யவும்.
02:47 இப்போது codeஐ புரிந்து கொள்ளவோம்.
02:50 Use List colon colon Util, Perlஐ, List colon colon Util moduleஐ கண்டுபிடித்து load செய்யச் சொல்கிறது.
03:00 Qw() function, ஒரு delimiter ஐ பயன்படுத்தி, stringல் இருந்து சொற்களை எடுத்து, அதை ஒரு listஆக திருப்பித் தருகிறது.
03:09 இது ஒரு arrayஐ declare செய்ய விரைவான வழியாகும்.
03:13 ஒரு moduleஐ import செய்யும் போது, நமது programற்குள் listல் குறிப்பிடப்பட்ட subroutineகளை மட்டுமே அது import செய்கிறது.
03:21 அது subroutineகளின் பொது பயன்பாட்டு பட்டியலை கொண்டிருக்கும்.
03:26 நமது programற்குள், அதன் subroutineகளையும், variableகளையும், module export செய்கிறது.
03:32 List colon colon Utilலில் கிடைக்கும் மிகப் பிரபலமான subroutineகள்: first- listன் முதல் elementஐ இது return செய்கிறது.
03:42 max- listன் பெரிய எண்ணின் மதிப்பை இது return செய்கிறது.
03:47 maxstr- listன் பெரிய stringஐ இது return செய்கிறது.
03:52 min- சிறிய எண்ணின் மதிப்பை இது return செய்கிறது
03:57 minstr – listன் சிறிய stringஐ இது return செய்கிறது
04:02 shuffleInputன் மதிப்புகளை சீரற்ற வரிசையில் இது return செய்கிறது
04:08 sum – listன் அனைத்து elementகளின் மொத்த எண்ணிக்கையை இது return செய்கிறது
04:14 ஒவ்வொரு functionக்கும் தனி source code எழுத தேவையில்லை.
04:18 இருக்கும் இந்த subroutineகளை நாம் நம் programல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
04:23 max, min, sum மற்றும் shuffle என்ற inputகளை, நான் functionக்கு pass செய்கிறேன்.
04:30 இவை தான் print statementகள்.
04:33 இப்போது fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும்.
04:37 Programஐ இயக்குவோம்.
04:40 Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl exist underscore modules dot pl, பின் Enterஐ அழுத்தவும்.
04:49 Outputஐ கவனிக்கவும்.
04:51 Random numberல், 0 முதல் 51 வரையுள்ள எந்த மதிப்பையும் நீங்கள் பெறலாம்.
04:58 அடுத்து, ஒரு Perl moduleஐ உருவாக்கி, அதை CPANக்கு சேர்க்கக் கற்போம்.
05:04 பின்வருவன, ஒரு moduleஐ உருவாக்குவதற்கு வேண்டிய படிகள்:
05:08 Moduleஐ உருவாக்க, ஒரு இடத்தை உருவாக்கவும்.
05:11 Moduleக்கு skeleton fileகளை உருவாக்கவும்.
05:14 Moduleஐ document செய்யவும்.
05:16 Perl codeஐ எழுதவும்.
05:18 Test செய்வதற்கு codeஐ எழுதவும்.
05:20 CPANல், moduleலில் விநியோகிக்கவும்.
05:24 ஒரு புது moduleக்கு fileகளை உருவாக்க பயன்படும் h2xs என்ற programஉடன் Perl விநியோகிக்கப்படுகிறது.
05:32 Math colon colon Simple, நமது moduleன் பெயரைக் குறிக்கிறது.
05:37 தன்னுள் கொண்டிருக்கும் moduleஐ தெளிவாக அடையாளம் காட்டக்கூடிய directoryஐ உருவாக்க இது பயன்படுகிறது.
05:43 அடிப்படையில், moduleக்கு skeleton fileகளை இது உருவாக்குகிறது. hyphen P A X என்பன autoload மற்றும் autogenerateஐ தவிர்க்கும் optionகளாகும்.
05:54 Math colon colon Simple என்ற புது moduleஐ உருவாக்குவோம்.
05:59 அது எளிய functionகளை கொண்டிருக்கும்: add, subtract, multiply மற்றும் divide.
06:06 h2xs commandஐ இயக்க, terminalக்கு திரும்புவோம்.
06:12 டைப் செய்க: h2xs hyphen PAXn Math colon colon Simple.
06:20 Moduleஐ விநியோகிக்க தேவையான எல்லா fileகளையும், h2xs program உருவாக்குகிறது.
06:27 Directoryஐ Math hyphen Simpleக்கு மாற்றுவோம்.
06:33 உங்கள் கணிணியில் directory pathஐ கவனிக்கவும். அது Math forward slash Simple என இருக்கலாம்.
06:41 Directoryல் உள்ள எல்லா fileகளையும் பட்டியலிட, டைப் செய்க: "ls" . பின்வரும் fileகளை நாம் காணலாம்.
06:49 நாம் புது பதிப்புகளை எழுதும் போது, நமது moduleக்கு செய்யப்பட்ட மாற்றங்களை, "Changes" fileலில் கண்காணிப்போம்.
06:58 lib subdirectory , moduleஐ கொண்டிருக்கும்.
07:02 இந்த directoryயில், MANIFEST, fileகளின் ஒரு பட்டியலைக் கொண்டிருக்கும்.
07:07 Makefile, என்பது Unix Makefileஐ உருவாக்க பயன்படுத்தப்படும் ஒரு Perl program ஆகும்.
07:12 நமது moduleஐ சோதித்து நிறுவ இந்த Makefileஐ பயன்படுத்துவோம்.
07:18 Test scriptகள், 't' subdirectoryன் உள் இருக்கும்.
07:22 Testகள், எளிய Perl scriptகள் ஆகும். ஆனால் dot t extensionஉடன் கூடிய, அவை unit testingக்கு பயன்படுத்தப்படும்
07:30 Simple.pm, நமது module ஆகும்.
07:34 நாம் h2xs commandஐ இயக்கும் போது இந்த fileகள் தானாகவே உருவாக்கப்படும்.
07:41 Simple.pm fileஐ திறக்கவும்.
07:45 Directoryஐ lib forward slash Mathக்கு மாற்றவும்.
07:51 இப்போது, ஏற்கெனவே உள்ள content ஐ காண simple.pmfileஐ திறப்போம்.
07:57 டைப் செய்க: gedit Simple.pm.
08:02 நாம் இங்கு காண்பது, எதையும் செய்யாத, ஆவணப்படுத்தப்பட்டு செயல்படும் Perl module ஆகும்.
08:09 அதை செயல்படுத்த, அதற்கு தேவையான functionகளை எழுத வேண்டும்.
08:16 "Preloaded methods go here" என்ற textக்கு பிறகு, கீழ்கண்ட codeஐ சேர்க்கவும்.
08:22 இங்கு, add, subtract, multiply மற்றும் divide என்ற நான்கு subroutineகளை சேர்ப்போம்.
08:29 இப்போது fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும்.
08:33 இப்போது, நமது code சரியாக வேலை செய்கிறதா என்பதை சோதிக்க ஒரு மாதிரி Perl programஐ உருவாக்குவோம்.
08:41 Subdirectory 't'ன் கீழ் இருக்கும், Math-Simple.t என்ற test fileஐ திறப்போம்.
08:49 டைப் செய்க: gedit Math hyphen Simple.t
08:55 ஏற்கெனவே உள்ள code, “Insert your test code below..” ன் கீழ், பின்வரும் codeஐ சேர்க்கவும்.
09:02 Print statementகள் outputஐ print செய்யும்
09:06 இப்போது fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும்.
09:10 Test scriptrun செய்யவும்.
09:13 டைப் செய்க: perl Math hyphen simple.t
09:19 தன் directoryனுள், Simple.pmஐ, Perl scriptஆல் கண்டுபிடிக்க முடியாததால், இந்த error messageஐ நாம் காண்கிறோம்.
09:27 அது lib directoryனுள் பார்க்க வேண்டும். இந்த errorஐ எப்படி திருத்துவது?
09:33 இதற்கு சில optionகளைக் காண்போம்.
09:37 At the rate INC என்பது directoryகளின் பட்டியலைக் கொண்டிருக்கும் ஒரு special variable ஆகும்.
09:43 இந்த directoryகளில் இருந்து Perl moduleகள் மற்றும் libraryகளை load செய்யலாம்.
09:48 அதன் at the rate INC search directoryக்கு, இந்த directory pathஐ சேர்க்கச் சொல்லி, இந்த code வரி, Perl programக்கு கூறுகிறது.
09:57 இதற்கு மாற்றாக, run timeல், '-I' optionஐ பயன்படுத்தி, at the rate INCக்கு fileகளை சேர்க்கலாம்.
10:06 இப்போது, terminalக்கு திரும்புவோம்.
10:10 '-I' command line parameterஐ பயன்படுத்தி, நான் programஐ execute செய்கிறேன்.
10:16 அதனால், டைப் செய்க: perl hyphen Ilib t slash Math hyphen Simple.t
10:24 இங்கு எதிர்பார்க்கப்பட்ட output தெரியும்.
10:27 நாம் moduleஐ சோதித்துவிட்டோம், அது நன்றாக வேலை செய்கிறது.
10:31 இறுதிப்படி, moduleஐ விநியோகிப்பது.
10:34 Moduleஐ நிறுவுவதற்கு பொதுவான செயல்முறை, இந்த commandகளை run செய்வதே.
10:40 நிறுவுதலுக்கு, Perl library directoryனுள் fileகளை copy செய்ய வேண்டும்.
10:45 இந்த directoryனுள் copy செய்ய, நம்மில் பலருக்கு அனுமதி கிடையாது.
10:49 Math-Simple, மிகவும் பயனுள்ள module இல்லை என்பதால், அதன் நிறுவுதல் பகுதியை நான் காட்டவில்லை.
10:57 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
11:02 சுருங்கசொல்ல , இந்த டுடோரியலில் நாம் பயன்படுத்தக் கற்றது: ஏற்கெனவே உள்ள moduleகளை பயன்படுத்துவது, புது moduleகளை உருவாக்குவது, மேலும், அவற்றை Perl programல் எப்படி பயன்படுத்துவது.
11:11 இங்கே உங்களுக்கான பயிற்சி.
11:13 Text colon colon Wrap moduleஐ பயன்படுத்தவும்.
11:17 ஒழுங்காக பத்திகளை வடிவமைக்க input textஐ wrap செய்யும் Wrap() functionஐ பயன்படுத்தவும்.
11:24 "Columns" என்ற variableஐ, Text colon colon Wrap module கொண்டுள்ளது. columnsன் மதிப்பை 30க்கு அமைக்கவும்.
11:31 Format செய்யப்பட்ட outputஐ காண, textஐ print செய்யவும்.
11:35 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
11:42 Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
11:51 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
11:55 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது.
12:02 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
12:06 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst