PERL/C3/Including-files-or-modules/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 PERL programல், Fileகள் அல்லது moduleகளை சேர்ப்பது குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில் நாம் PERL programming ல் பயன்படுத்தக் கற்கப்போவது: do, use மற்றும் require methodகள்.
00:16 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 12.04 இயங்கு தளம், Perl 5.14.2 மற்றும் gedit Text Editor.
00:28 உங்களுக்கு விருப்பமான எந்த text editorயும் பயன்படுத்தலாம்.
00:32 இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, Perl Programmingல் வேலை செய்ய தெரிந்து இருக்க வேண்டும்.
00:37 இல்லையெனில், அதற்கான Perl டுடோரியல்களுக்கு, spoken tutorial வலைத்தளத்தை பார்க்கவும்.
00:44 do()' method: மற்ற fileகளில் இருந்து, தற்போதைய script fileக்கு, source codeஐ சேர்க்க இவை எளிய வழிகள் ஆகும்.
00:53 do() methodஐ பயன்படுத்த புரிந்து கொள்வோம்.
00:57 உங்கள் text editorல் ஒரு புது fileஐ திறந்து, அதை datetime dot pl என பெயரிடவும்.
01:03 datetime dot pl fileலில், திரையில் தெரியும் பின்வரும் codeஐ டைப் செய்யவும்.
01:09 இப்போதிலிருந்து, terminalலில், ஒவ்வொரு commandக்கு பிறகும், Enter keyஐ அழுத்த நினைவு கொள்ளவும்.
01:15 இப்போது codeஐ புரிந்து கொள்வோம்.
01:18 தற்போதைய தேதியும் நேரமும், dollar datestring என்ற variableலில் சேமிக்கப்படுகின்றன.
01:23 இங்கு, ஒரு “Thank you” messageஐ திருப்பி கொடுக்கும், "msgThanks" என்ற function என்னிடம் உள்ளது.
01:31 இப்போது fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும்.
01:35 அடுத்து, datetime dot pl என்ற இந்த fileஐ பயன்படுத்தும், மற்றொரு Perl programஐ காண்போம்.
01:43 உங்கள் text editorல் ஒரு புது fileஐ திறந்து, அதை main dot pl என பெயரிடவும்.
01:49 main dot pl file ல், திரையில் தெரியும் பின்வரும் codeஐ டைப் செய்யவும்
01:55 இப்போது codeஐ விளக்குகிறேன்.
01:58 இங்கு, முதல் வரி welcome messageஐ print செய்கிறது.
02:03 நாம் codeஐ பயன்படுத்த வேண்டிய இடத்திலிருந்து, fileன் பெயருடன் 'do()' method, call செய்யப்படுகிறது.
02:09 datetime dot pl fileன், $datestring variableலில், தற்போதைய தேதியும் நேரமும் சேமிக்கப்படுகின்றன.
02:16 மேலும், இறுதியில், அதே fileலில் இருந்து, msgThanks() functionஐ நாம் call செய்கிறோம்.
02:21 இப்போது fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும்.
02:25 Programஐ இயக்குவோம்.
02:27 Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl main dot pl, பின் Enterஐ அழுத்தவும்.
02:34 Terminalலில் outputஐ கவனிக்கவும்.
02:37 அடுத்து, ஒரு Perl programல் require() method மற்றும் use() methodஐ பயன்படுத்த கற்போம்.
02:44 பல Perl programகளில் பயன்படுத்தக் கூடிய, subroutineகளின் தொகுப்புகள் இருக்கும் போது, இந்த methodகள் பயன்படுத்தப்படுகின்றன.
02:52 Use() method, moduleகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்ப்படுகிறது.
02:56 Compilationன் போது இது சரிபார்க்கப்படுகிறது.
02:59 இதற்கு, file extension கொடுக்கத் தேவையில்லை.
03:03 Perl program மற்றும் moduleகள் இரண்டிற்கும் require() method பயன்படுத்தப்ப்படுகிறது.
03:08 அது, run செய்யப்படும் போது சரி பார்க்கப் படுகிறது.
03:10 அதற்கு, file extensionஐ தர வேண்டும்.
03:14 Use methodன் syntax: use module name semicolon.
03:20 '.pm' extensionஉடன் முடியும் fileகள், Perl moduleகள் ஆகும்.
03:25 Moduleகள் மூலமாக codeன் மறு பயன்பாடு செயல்படுத்தப்படுகிறது.
03:30 மற்ற( computer) languageகளின் உள்ளிருக்கும் libraryகளும், இவையும் ஒன்றே.
03:35 இப்போது, Perl codeல் ஒரு moduleஐ சேர்க்க, use methodஉடன் ஒரு எளிய programஐ காட்டுகிறேன்.
03:43 உங்கள் text editorல் ஒரு புது fileஐ திறந்து, அதை sum dot pm என பெயரிடவும்.
03:49 Sum dot pm லில், திரையில் தெரியும் பின்வரும் codeஐ டைப் செய்யவும்.
03:55 இங்கு, கொடுக்கப்பட்டுள்ள எண்களின் தொகுப்பின் தொகையை கணக்கிடும் ஒரு எளிய function என்னிடம் உள்ளது.
04:01 இப்போது fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும்.
04:05 இந்த sum dot pm fileஐ பயன்படுத்தும், மற்றொரு Perl scriptஐ எழுதுவோம்.
04:11 நான் ஏற்கெனவே சேமித்து வைத்திருந்த app dot pl என்ற sample programஐ திறக்கிறேன்.
04:17 App dot pl fileலில், திரையில் தெரியும் பின்வரும் codeஐ டைப் செய்யவும்.
04:22 இப்போது codeஐ விளக்குகிறேன்.
04:25 Module பெயருடன் use methodஐ முதல் வரி காட்டுகிறது.
04:29 இங்கு, Module பெயர் 'sum' ஆகும்.
04:33 Sum dot pm fileலில், function total()க்கு, input parameterகளாக 1, 7, 5, 4, 9 pass செய்யப்படுகின்றன.
04:44 மீண்டும், அடுத்த வரியில், அதே functionக்கு input parameterகளாக 1 முதல் 10 வரை pass செய்கிறோம்.
04:52 இப்போது fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும்.
04:56 Programஐ இயக்குவோம்.
04:59 Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl app dot pl, பின் Enterஐ அழுத்தவும்.
05:06 Terminalலில் தெரியும் outputஐ கவனிக்கவும்.
05:10 Use methodல் மேலும் பல optionகளைக் காண்போம். Text editorல் sum dot pmக்கு திரும்ப வருவோம்
05:18 Source codeன் தொடக்கத்தில், "use strict" semicolon, "use warnings" semicolon, என்ற வரிகளைச் சேர்க்கவும்.
05:27 "Use strict" மற்றும் "use warnings" என்பன, Perlஐ கடுமையான முறையில் நடந்து கொள்ள அறிவுறுத்தும் compiler flagகள் ஆகும்.
05:35 பொதுவான programming தவறுகளை தவிர்க்க இவை பயன்படுத்தப்படுகின்றன.
05:39 Use strict, programல் பயன்படுத்தப்படும் எல்லா variableகளையும் declare செய்ய userஐ கட்டாயப்படுத்துகிறது.
05:45 Errorகள் இருந்தால், use strict, இயக்கத்தை abort செய்யும்.
05:50 Use warnings, எச்சரிக்கைகள் மட்டும் வழங்கி, இயக்கத்தை தொடரவிடும்.
05:56 Variable $sum ஐ, myஆக declare செய்ய மறந்துவிட்டோம் என கொள்க.
06:02 அதே program இப்போது எப்படி இயக்கப்படுகிறது என்பதைக் காண்போம்.
06:06 Fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும்.
06:09 Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl app dot pl.
06:15 முடிவை இயக்காமல், program நிறுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.
06:21 Terminalலில் தெரியும், முதல், வரிகளின் தொகுப்பு, “use strict”ஆல் உருவாக்கப்பட்டerror message கள் ஆகும்.
06:29 கடைசி இரண்டும், abort messageகள் ஆகும்.
06:32 Use method optionகள் இப்படி தான் வேலை செய்கின்றன.
06:36 அடுத்து, require methodஐ பயன்படுத்தும் ஒரு Perl programக் காண்போம்.
06:41 நான் ஏற்கெனவே சேமித்து வைத்திருந்த commonfunctions dot pl, என்ற sample programஐ திறக்கிறேன்.
06:48 உங்கள் commonfunctions dot pl fileலில், திரையில் தெரியும் பின்வரும் codeஐ டைப் செய்யவும். இப்போது codeஐ விளக்குகிறேன்.
06:57 இங்கு, பொதுவாக பயன்படுத்தப்படும் functionகளின் தொகுப்பை காணலாம்.
07:01 முதல் functionஆன, square(), ஒரு எண்ணின் squareஐ return செய்கிறது.
07:06 இரண்டாவது functionஆன, square underscore root(), ஒரு எண்ணின் square rootஐ return செய்கிறது.
07:12 அடுத்த functionஆன, random underscore number(), ஒரு random எண்ணை உருவாக்குகிறது.
07:18 கடைசி functionஆன, random underscore range(), குறைந்த எல்லை மற்றும் அதிக எல்லை உடைய எண்களுக்கு இடையே உள்ள ஒரு random எண்ணை உருவாக்குகிறது.
07:26 Fileன் இறுதியில், 1 semicolon (1;) தேவை என்பதை கவனிக்கவும்.
07:31 இது ஏனெனில், ஒரு true மதிப்பை return செய்ய, fileலில் இறுதி expression, Perlக்கு தேவைப்படுகிறது.
07:37 இப்போது fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும்.
07:41 அடுத்து, "require" methodஐ பயன்படுத்தி, இந்த subroutineகளை, call செய்ய, ஒரு Perl programஐ எழுதுவோம்.
07:48 நான் ஏற்கெனவே சேமித்து வைத்திருந்த callprogram dot pl, என்ற sample programஐ திறக்கிறேன்.
07:54 உங்கள் fileலில், திரையில் தெரியும் பின்வரும் codeஐ டைப் செய்யவும். இப்போது codeஐ விளக்குகிறேன்.
08:02 Perl codeஐ கொண்டுள்ள commonfunctions dot pl fileஐ , require படித்து, அதை compile செய்கிறது.
08:09 இந்த program, userக்கு 4 optionகளை தருகிறது. ஒரு நேரத்தில், user, ஒரு optionஐ தேர்வு செய்ய வேண்டும்.
08:17 1:(ஒன்று) , ஒரு எண்ணின் squareஐ கண்டுபிப்பதற்கு.
08:20 2: இரண்டு, ஒரு எண்ணின் square rootற்காக.
08:23 3: மூன்று, கொடுக்கப்பட்டுள்ள எல்லைக்குள், ஒரு random எண்ணிற்காக. 4: நான்கு, programஐ விட்டு வெளியேறுவதற்கு.
08:29 Option 1(ஒன்று)ஐ டைப் செய்தால், அது userஐ, ஒரு எண்ணை enter செய்ய கேட்கும்.
08:34 அதன் மதிப்பு, $numberல் சேமிக்கப்படுகிறது. அந்த மதிப்பு, commonfunctions dot pl fileலில் உள்ள square() functionக்கு pass செய்யப்படுகிறது.
08:44 அந்த function, ஒரு எண்ணின் squareஐ return செய்கிறது.
08:47 Ouputஆக, print statement, ஒரு எண்ணின் squareஐ print செய்கிறது.
08:52 Option 2(இரண்டு)ஐ டைப் செய்தால், Ouputஆக, ஒரு எண்ணின் square root காட்டப்படுகிறது.
08:58 முந்தைய square() functionல் விளக்கப்பட்டுள்ளபடி இயக்கம் பின்பற்றப்படுகிறது.
09:03 Option3(மூன்று)ஐ டைப் செய்தால், கொடுக்கப்பட்டுள்ள எல்லைக்குள், ஒரு random எண், Ouputஆக காட்டப்படுகிறது.
09:09 இல்லையெனில், option (4) நான்காக இருந்தால், program வெளியேறுகிறது. குறிப்பிட்டுள்ள optionகளைத் தவிர வேறு தரப்பட்டு இருந்தால், print statement , “Incorrect option” எனக் கூறும்.
09:20 இந்த programல், commonfunctions dot plல் இருந்து, நான்கில் மூன்று functionகளை மட்டுமே நாம் call செய்துள்ளோம் என்பதை கவனிக்கவும்.
09:28 இப்போது fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும்.
09:31 Programஐ இயக்குவோம்.
09:34 Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl callprogram dot pl.
09:41 Output ஐ கவனிக்கவும்.
09:44 வேறு optionஐ பயன்படுத்தி, மீண்டும் programஐ இயக்குகிறேன்.
09:49 டைப் செய்க: perl callprogram dot pl.
09:53 இப்போது optionஐ மூன்று என enter செய்யவும்.
09:56 Enter a lower range 50.
09:59 Enter a upper range 99.
10:02 கொடுக்கப்பட்டுள்ள எண்களின் எல்லைக்குள், random எண் உருவாக்கப்படுவதைக் காணலாம்.
10:08 நீங்களே மற்ற optionகளை முயற்சி செய்து பார்க்கவும்.
10:11 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கசொல்ல,
10:16 இந்த டுடோரியலில் நாம் PERL programming ல் பயன்படுத்தக் கற்றது: do, use மற்றும் require methodகள்.
10:24 கவனிக்கவும்: Compile timeல், moduleன் இருப்பை "require" module தீர்மானிப்பதனால், "use" moduleக்கு பதிலாக அது பரிந்துரைக்கப்படுகிறது.
10:33 இங்கே உங்களுக்கான பயிற்சி. பங்கேற்பவர்களுக்கு ஒரு கடிதம் எழுத, reminder.pl என்ற Perl programஐ எழுதவும்.
10:41 Userஐ, To மற்றும் From பெயரை எழுத prompt செய்யவும்.
10:45 ‘Use’ methodஐ பயன்படுத்தி, Letter dot pmல் இருந்து subroutineகளை call செய்யவும்.
10:50 Letter dot pm fileலில் கீழ்கண்ட functionகளை எழுதவும்.
10:54 LetterDate() function தற்போதைய தேதி மற்றும் நேரத்தை return செய்யும்.
10:58 To() function, பங்கேற்பவர்களின் பெயர்களை return செய்யும்.
11:02 From() function, அனுப்பனரின் பெயரை return செய்யும்.
11:05 Lettermsg() function, கடிதத்தின் contentகளை return செய்யும்.
11:09 Thanksmsg() function, "thanks" மற்றும் "regards"ஐ return செய்யும்.
11:13 இங்கே காட்டப்பட்டு உள்ளபடி output தெரிய வேண்டும்.
11:20 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
11:27 Spoken Tutorial திட்டக்குழு செய்முறை: ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
11:36 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
11:40 இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
11:51 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst