PERL/C3/Exception-and-error-handling-in-PERL/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | PERLலில், Exception மற்றும் error ஐ கையாளுதல் குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: errorகளை Catch செய்வது மற்றும் exceptionகளை கையாளுவது. |
00:12 | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 12.04 இயங்கு தளம், Perl 5.14.2 மற்றும் gedit Text Editor. |
00:23 | உங்களுக்கு விருப்பமான எந்த text editorயும் பயன்படுத்தலாம். |
00:27 | இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, Perl Programmingல் வேலை செய்ய தெரிந்து இருக்க வேண்டும். |
00:32 | இல்லையெனில், அதற்கான Perl ஸ்போகன் டுடோரியல்களுக்கு, எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும். |
00:39 | ஒரு error நிகழும் போது, சாதாரண பாதையிலிருந்து, programன் இயக்கத்தை Exception handling மாற்றுகிறது. |
00:47 | Applicationஐ நிறுத்தாமல், programஐ மீட்க, Error handling உதவுகிறது. |
00:53 | ஒரு errorஐ நாம் பல வழிகளில் அடையாளம் கண்டு, தடுக்கலாம். Perlலில் பயன்படுத்தப்படும் சில பொதுவான முறைகளைக் காண்போம். |
01:01 | Warn function, நடவடிக்கை எதுவும் எடுக்காமல், எச்சரிக்கை messageஐ மட்டுமே எழுப்புகிறது. |
01:07 | Die function, உடனடியாக இயக்கத்தை நிறுத்தி, error messageஐ காட்டுகிறது. |
01:13 | நான் ஏற்கெனவே சேமித்து வைத்திருந்த ஒரு மாதிரி programஐ பயன்படுத்தி die functionஐ புரிந்து கொள்வோம். |
01:20 | Terminalக்கு சென்று, டைப் செய்க: gedit die dot pl ampersand , பின் Enterஐ அழுத்தவும். |
01:29 | 'Die.pl' fileலில் இருக்கும் code இது தான். இப்போது codeஐ புரிந்து கொள்வோம். |
01:35 | இங்கு, இரண்டு input parameterகளை எடுத்துக் கொள்ளும் divide என்கிற functionஐ வரையறுத்துள்ளோம். அவை dollar numerator மற்றும் dollar denominator |
01:46 | Parameter listஐ, functionக்கு தருவதற்கு பயன்படுத்தப்படும் At the rate underscore (@_), ஒரு special variable ஆகும். |
01:53 | Denominator, பூஜ்ஜியமாக இருந்தால், die function, scriptஐ விட்டு வெளியேறும். |
01:57 | User படிப்பதற்கு error messageஐயும் காட்டும். இல்லையெனில், outputஐ print செய்யும். |
02:05 | இவை, function call statementகள் எனப்படும். |
02:08 | இரண்டாவது parameter பூஜ்ஜியமாக இல்லாததனால், முதல் இரண்டு தடவை, function இயக்கப்படுகிறது. |
02:15 | மூன்றாவது முறை denominatorன் மதிப்பு பூஜ்ஜியமாகுகிறது. அதனால், die function இயக்கப்படுகிறது. |
02:23 | Die function, scriptஐ விட்டு வெளியேறுவதால், இறுதி divide function இயக்கப்படமாட்டாது. |
02:29 | Programஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும். |
02:32 | Programஐ இயக்குவோம். |
02:35 | Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl die dot pl, பின் Enterஐ அழுத்தவும். |
02:43 | இங்கு காட்டப்பட்டுள்ளபடி, output தெரியும். "Can't divide by zero!" |
02:49 | இந்த error messageஐ தான் நாம் programன் die statementல் கொடுத்துள்ளோம். |
02:54 | அடுத்து, errorஐ கையாளுவதில், eval functionஐ பயன்படுத்தக் கற்போம். |
03:00 | Run-time errorகள் அல்லது exceptionகளை கையாள eval function பயன்படுத்தப்படுகிறது. |
03:06 | உதாரணத்திற்கு, built-in errorகளான, out of memory, divide by zero அல்லது user defined errorகள். |
03:14 | Eval functionனுக்கான பொதுவான syntax இங்கு காட்டப்பட்டுள்ளது. |
03:19 | Error message ஏதேனும் இருந்தால், அதை dollar exclamation($!) special variable கொண்டிருக்கும். |
03:25 | இல்லையெனில், dollar exclamation( $!) காலி stringஐ கொண்டிருக்கும். அப்படியெனில், அது false என மதிப்பிடபடுகிறது என்று பொருள். |
03:33 | ஒரு மாதிரி programஐ பயன்படுத்தி, eval functionஐ புரிந்து கொள்வோம். Terminalக்கு திரும்பவும். |
03:40 | டைப் செய்க: gedit eval dot pl ampersand , பின் Enterஐ அழுத்தவும். |
03:47 | Eval dot pl fileலில், திரையில் தெரியும் பின்வரும் codeஐ டைப் செய்யவும். இப்போது, அதை விளக்குகிறேன். |
03:54 | இங்கு, நம் உதாரணத்தில், open FILEக்கு, “test.dat” fileஐ திறப்பதில் பிரச்சனை இருந்தால், அது die statementஐ தூண்டுகிறது. |
04:05 | இறுதி eval blockல் இருந்து , dollar exclamation( $!) variable வரைக்கும், Perl, system error messageஐ தருகிறது. |
04:13 | Fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும். |
04:17 | Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl eval dot pl, பின் Enterஐ அழுத்தவும். |
04:25 | இங்கு காட்டப்பட்டுள்ளபடி, system error message தெரியும். |
04:30 | மற்றொரு உதாரணத்தை காண்போம். இம்முறை, '$@' (dollar at the rate)ஐ பயன்படுத்தி, eval functionல் இருந்து ஒரு error message பெறுவதைக் காணலாம். |
04:40 | Eval dot pl fileக்கு திரும்புவோம். |
04:44 | திரையில் காட்டப்பட்டுள்ளபடி codeஐ டைப் செய்யவும். |
04:48 | Average functionக்கு input parameterகளாக, $total மற்றும் $countஐ தருகிறோம். |
04:56 | Count பூஜ்ஜியமாக இருந்தால், ஒரு errorஐ பெறக்கூடிய சாத்தியம் இருக்கிறது. |
05:00 | இங்கு, அது die statement மூலம் கையாளப்படுகிறது. |
05:04 | Evalல் இருந்து திரும்பப் பெறப்படும் error message, $@ ( dollar at the rate)ஐ பயன்படுத்தி காட்டப்படுகிறது. |
05:11 | இல்லையெனில், அது Average மதிப்பை print செய்யும். |
05:15 | Fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும். Programஐ இயக்குவோம். |
05:22 | Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl eval dot pl, பின் Enterஐ அழுத்தவும். |
05:31 | இங்கு காட்டப்பட்டுள்ளபடி, output தெரியும். |
05:35 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கசொல்ல, |
05:41 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: errorகளை Catch செய்வது மற்றும் exceptionகளை கையாளுவது. |
05:47 | பயிற்சியாக பின்வருவனவற்றை செய்யவும். உங்கள் Linux machineல், 5 employee பெயர்களுடன் ஒரு 'emp.txt' fileஐ உருவாக்கவும். |
05:57 | 'Emp.txt'ன் permissionஐ READ onlyக்கு மாற்றவும். |
06:02 | கவனிக்கவும்: change permission optionக்கு, spoken tutorial வலைத்தளத்தில் உள்ள, அதற்கான Linux டுடோரியல்களைப் பார்க்கவும். |
06:10 | 'Emp.txt' fileஐ, WRITE modeல் திறந்து, அதற்கு சில employee பெயர்களைச் சேர்க்க, ஒரு Perl programஐ எழுதவும். |
06:19 | Open அல்லது write operation தோல்வியடைந்தால், "eval"ஐ பயன்படுத்தி, தகுந்த error messageஐ print செய்யவும். |
06:26 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
06:33 | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
06:42 | மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
06:46 | இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது. |
06:53 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
06:58 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |