PERL/C2/Blocks-in-Perl/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration'
00:01 Perl ல் BLOCKகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில், Perl ல் உள்ள பல்வேறு BLOCKகள் குறித்து கற்போம்
00:13 நான் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்கு தளம் மற்றும் Perl 5.14.2
00:21 நான் gedit Text Editor ஐயும் பயன்படுத்துகிறேன்.
00:26 உங்களுக்கு விருப்பமான எந்த text editor ஐயும் பயன்படுத்தலாம்.
00:31 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, Perl ல் Variableகள், Commentகள் குறித்த அறிவு இருக்க வேண்டும்
00:38 PERL ல் Data structureகள் குறித்து தெரிந்திருப்பதும் நன்று
00:44 அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் இணையத்தளத்தில் காணவும்.
00:50 Perl 5 சிறப்பு block களை தருகிறது
00:53 இந்த blockகள் ஒரு Perl ப்ரோகிராமின் பல்வேறு நிலைகளில் இயக்கப்படுகின்றன.
00:59 அந்த blockகள்:
01:01 BEGIN, END
01:03 UNITCHECK, CHECK , INIT
01:06 BEGIN block ஐ புரிந்துகொள்வதுடன் ஆரம்பிக்கலாம்.
01:10 compilation நேரத்தின் போது BEGIN block இயக்கப்படுகிறது.
01:15 எனவே compilation ன் போது இந்த block னுள் எழுதப்படும் code முதலில் இயக்கப்படுகிறது.
01:22 ஒரு Perl script னுள் பல BEGIN blockகளை நாம் வைக்கலாம்.
01:26 இந்த blockகள் அவை declare செய்யப்பட்ட வரிசையின் படி இயக்கப்படும்.
01:31 அதாவது First define First execute முறைப்படி
01:35 BEGIN block க்கான syntax
01:40 பெரிய எழுத்துக்களில் BEGIN space open curly bracket
01:45 எண்டரை அழுத்துக
01:47 compilation ன் போது இயக்கப்பட வேண்டிய code ன் பகுதி எண்டரை அழுத்துக
01:52 Close curly bracket
01:55 இப்போது, BEGIN blockக்களுக்கான உதாரணத்தைக் காண்போம்.
01:59 டெர்மினலைத் திறந்து டைப் செய்க
02:02 gedit beginBlock dot pl space ampersand
02:08 எண்டரை அழுத்துக
02:10 இது gedit ல் beginBlock dot pl file ஐ திறக்கும்
02:15 திரையில் காட்டப்படும் பின்வரும் code ன் பகுதியை டைப் செய்க.
02:20 script னுள் நான் எழுதியுள்ளதை காண்போம்.
02:24 இங்கே, BEGIN blockகளுக்கு முன்னும் பின்னும் சில உரைகளை நான் அச்சடித்துள்ளேன்.
02:31 அதேபோல, ஒவ்வொரு BEGIN block லும் ஒரு print statement ஐ எழுதியுள்ளேன்.
02:37 BEGIN blockகளுக்கு பின் நான் semicolon கொடுக்கவில்லை என்பதை கவனிக்கவும்.
02:42 ஒரு semicolon ஐ கொடுத்தால் ப்ரோகிராமின் இயக்கத்தின் போது ஒரு syntax பிழை வரும்.
02:49 இப்போது fileஐ சேமிக்க Ctrl+s ஐ அழுத்துக.
02:53 இப்போது script ஐ இயக்க டெர்மினலுக்கு வந்து டைப் செய்க,
02:58 perl beginBlock dot pl
03:01 எண்டரை அழுத்துக
03:04 டெர்மினலில் காட்டப்படுவது போல வெளியீட்டை பெறுவீர்கள்.
03:09 கவனிக்க முதல் BEGIN blockனுள் எழுதப்பட்ட வரி முதலில் அச்சடிக்கப்படுகிறது
03:16 script ல் முதலாவது print statement .... BEGIN block statement களுக்கு பின் அச்சடிக்கப்படுகிறது
03:25 BEGIN blockகள் அவை declare செய்யப்பட்ட வரிசையில் இயக்கப்படுகின்றன.
03:31 இந்த உதாரணத்திலிருந்து நமக்கு தெரிவது....
03:34 BEGIN blockகளினுள் உள்ள code முதலில் இயக்கப்படுகிறது.
03:40 இது PERL script னுள் BEGIN block ன் இடத்தை பொருத்தது அல்ல.
03:46 BEGIN blockகள் எப்போதும் First In First Out முறையிலேயே இயக்கப்படுகின்றன.
03:52 எனவே உண்மையான இயக்கம் ஆரம்பிக்கும் முன் ஒரு Perl scriptனுள் fileகளை சேர்ப்பதே இந்த block ன் பயன்களில் ஒன்றாகும்.
04:01 இப்போது END block பற்றி காண்போம்
04:04 PERL program ன் முடிவில் END block இயக்கப்படுகிறது
04:09 ப்ரோகிராமை PERL இயக்கிமுடித்தப்பின் இந்த blockனுள் எழுதப்பட்ட code இயக்கப்படுகிறது.
04:17 ஒரு Perl script னுள் பல END block களை வைக்கலாம்
04:21 declare செய்யப்படுவதன் தலைகீழ் வரிசையில் இந்த blockகள் இயக்கப்படும்
04:26 அதாவது, Last define First execute முறையில்.
04:30 END block க்கான syntax
04:35 பெரிய எழுத்துகளில் END open curly bracket எண்டரை அழுத்துக
04:40 PERL script ன் முடிவில் இயக்கப்பட code ன் பகுதி எண்டரை அழுத்துக
04:46 Close curly bracket
04:49 இப்போது END blockகளுக்கான உதாரணத்தைக் காண்போம்.
04:53 டெர்மினலை திறந்து டைப் செய்க
04:56 gedit endBlock dot pl space ampersand
05:00 எண்டரை அழுத்துக
05:03 இது gedit ல் endBlock dot pl file ஐ திறக்கும்
05:08 திரையில் காட்டப்படும் பின்வரும் code ன் பகுதியை டைப் செய்க.
05:13 இந்த scriptனுள் நான் எழுதியுள்ளதைக் காண்போம்.
05:17 இங்கே END blockகளுக்கு முன்னும் பின்னும் சில உரைகளை அச்சடித்துள்ளோம்.
05:23 அதேபோல, ஒவ்வொரு END blockலும் ஒரு print statement ஐ எழுதியுள்ளோம்.
05:29 END blockக்கு பின் நான் semicolon ஐ இடவில்லை என்பதை கவனிக்கவும்.
05:34 semicolon ஐ கொடுத்தால், compilation ல் ஒரு syntax பிழை வரும்.
05:41 இப்போது file ஐ சேமிக்க Ctrl+s ஐ அழுத்துக.
05:45 பின் script ஐ இயக்க டெர்மினலுக்கு வந்து டைப் செய்க,
05:50 perl endBlock dot pl
05:53 எண்டரை அழுத்துக
05:55 டெர்மினலில் காட்டப்படுவதுபோல வெளியீடை பெறுவீர்கள்.
06:00 கவனிக்க : END blockனுள் எழுதப்பட்ட வரி கடைசியில் அச்சடிக்கப்படுகிறது.
06:06 script ல் கடைசி print statement உண்மையில் END block statementகளுக்கு முன் அச்சடிக்கப்படுகிறது
06:13 END blockகள் அவை declare செய்யப்பட்டதன் தலைகீழ் வரிசையில் இயக்கப்படுகின்றன.
06:20 இந்த உதாரணத்திலிருந்து நமக்கு தெரிவது....
06:23 END blockகளினுள் எழுதப்பட்ட code கடைசியில் இயக்கப்படுகின்றன.
06:29 இது PERL script னுள் END block ன் இடத்தை பொருத்தது அல்ல.
06:36 Last In First Out முறையில் END blockகள் இயக்கப்படுகின்றன.
06:41 எனவே முடிவதற்கு முன், ப்ரோகிராமில் உருவாக்கப்பட்ட objectகளை அழிக்க END block ஐ பயன்படுத்தலாம்.
06:49 அதேபோல, PERL ல் UNITCHECK, CHECK மற்றும் INIT blockகள் உள்ளன.
06:55 இந்த blockகள் developerகளால் அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன மேலும் இவற்றை புரிந்துகொள்வதும் சற்று சிரமம்.
07:02 எனவே இந்த block கள் பற்றி சுருக்கமாக சொல்கிறேன்.
07:06 UNITCHECK, CHECK மற்றும் INIT blockகளின் பயன்கள்
07:10 main program ன் compilation மற்றும் execution நிலைக்கு இடையேயான மாற்றத்தை பிடிக்க
07:18 compilation க்கு பின்னும் execution க்கு முன்னும் சில சோதனைகள் அல்லது initialisation ஐ செயல்படுத்த,
07:24 UNITCHECK மற்றும் CHECK blockகள் Last in First out முறையில் இயங்குகின்றன
07:31 அதே சமயம் INIT block First In First Out முறையில் இயங்குகிறது.
07:37 UNITCHECK block க்கான syntax
07:41 பெரிய எழுத்துக்களில் UNITCHECK space open curly bracket
07:46 எண்டரை அழுத்துக
07:48 இயக்கப்பட code ன் பகுதி
07:50 எண்டரை அழுத்துக
07:52 Close curly bracket
07:54 CHECK block க்கான syntax
07:58 பெரிய எழுத்துக்களில் CHECK space open curly bracket எண்டரை அழுத்துக
08:04 இயக்கப்பட code ன் பகுதி
08:07 எண்டரை அழுத்துக. Close curly bracket
08:11 INIT block க்கான syntax
08:15 பெரிய எழுத்துக்களில் INIT space open curly bracket எண்டரை அழுத்துக
08:21 initialise செய்யப்பட code ன் பகுதி
08:24 எண்டரை அழுத்துக
08:26 Close curly bracket
08:28 மேலும் புரிந்துகொள்ள உங்கள் Perl scriptகளில் இந்த block களை செய்து பார்க்க பரிந்துரைக்கிறேன்.
08:37 சுருங்கசொல்ல இந்த டுடோரியலில்-
08:40 உதாரண ப்ரோகிராம்களை பயன்படுத்தி BEGIN மற்றும் END blockகளை விரிவாகவும்
08:44 UNITCHECK, CHECK மற்றும் INIT blockகளுக்கு அறிமுகத்தையும் கற்றோம்
08:52 இங்கே உங்களுக்கான பயிற்சி-
08:54 ஒரு PERL scriptனுள் கீழுள்ள code ஐ டைப் செய்க;
08:58 script ஐ இயக்கி வெளியீட்டைக் காணவும்.
09:02 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
09:06 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
09:09 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
09:14 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
09:20 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
09:24 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
09:32 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
09:37 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:45 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
09:57 இந்த டுடோரியல் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம்.
10:00 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst