Linux/C2/General-Purpose-Utilities-in-Linux/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
0:00 லீனக்ஸில் பொதுவான அப்ளிகேஷன் களை இப்போது காணலாம்.
0:06 அடிப்படையான மிக அதிகமாக பயன்படுத்தப்படும் லீனக்ஸின் கமாண்ட் களை அறிமுகப்படுத்திக்கொள்ளலாம்.
0:14 இதன் முக்கிய நோக்கம் லீனக்ஸில் வேலை செய்ய உங்களுக்கு ஒரு உத்வேகம் கொடுப்பதே.
0:21 முதல் கமாண்ட் எகோ. லீனக்ஸில் எல்லா கமாண்ட் களும் case sensitive ஆனாவை. அவற்றை சார்ந்தே வேலை செய்யும்.
0:29 குறிப்பாக சொன்னால் ஒழிய எல்லாம் கீழ் நிலை எழுத்துக்களே
0:36 எகோ கமாண்ட் திரையில் செய்தியை காட்ட பயன்படுகிறது. டெர்மினலுக்கு போகலாம்.
0:43 உபுன்டுவில் டெர்மினலை திறக்க கண்ட்ரோல் ஆல்ட் டி [T].
0:48 இந்த கமாண்ட் எல்லா யூனிக்ஸ் கணினிகளிலும் வேலை செய்யும் என சொல்ல முடியாது.
0:52 டெர்மினல் ஐ திறக்க பொதுவான முறை வேறு ஒரு டுடோரியலில் உள்ளது.
0:58 டைப் செய்க எகோ ஸ்பேஸ் ஹெலோ வெர்ல்ட் என்டரை தட்டவும்.
1:08 இது ஹெலோ வெர்ல்ட் செய்தியை திரையில் காட்டுகிறது.
1:14 ஒரு வேரியபிலின் மதிப்பை காட்டக்கூட எகோ கமாண்டை பயன்படுத்தலாம்.
1:19 டைப் செய்யுங்கள்: எகோ ஸ்பேஸ் டாலர் மேல்நிலை எழுத்துக்களில் ஷெல்.... என்டர் செய்க.
1:30 இது நடப்பு ஷெல் ஐ வெளியிடுகிறது.
1:36 எகோ கமாண்ட் உடன் ஒரு எஸ்கேப் சீக்வென்ஸ் ஐயும் உள்ளிடலாம்.
1:42 இதற்கு லீனக்ஸ் இல் ஹைபன் இ.
1:46 பொதுவான மாற்று வரிகள்: டேப் ற்கு பேக்ச்லாஷ் டி [t], புதிய வரிக்கு பேக்ச்லாஷ் என், அதே வரியில் ப்ராம்ட்டை காட்ட பேக்ச்லாஷ் சி.
2:03 உள்ளீடுக்கு முன் ப்ராம்ட் வரியை காட்ட வேண்டிய நேரத்தில் இது பயனாகும். டைப் செய்வோம்: எகோ ஸ்பேஸ் ஹைபன் இ ஒற்றை மேற்கோளில் என்டர் எ கமாண்ட் பேக்ஸ்லாஷ் சி. என்டரை தட்டுவோம்.
2:32 இப்போது என்டர் அ கமாண்ட் க்கு பின் ப்ராம்ட் காணப்படும்.
2:38 நாம் எந்த பதிப்பு லினக்சை பயன்படுத்துகிறோம் என்று அறிய ஆசை இருக்கலாம்.
2:43 இதை அறியவும் நம்கணினி குறித்து பல தகவல்களை அறியவும் யுநேம் என்ற கமாண்ட் பயன்படும். எழுதுவோம்: யுநேம் ஸ்பேஸ் ஹைபன் ஆர். என்டரை தட்டுவோம்.
2:58 உங்கள் பயனர் பெயரை அறிய ப்ராம்ட்டில் ஹு ஸ்பேஸ் ஆம் ஸ்பேஸ் ஐ என டைப் செய்து என்டர் விசையை தட்டுவோம். .
3:11 பலரும் பயன்படுத்தும் கணினியாக இருந்தால்... எல்லா பயனரையும் பட்டியலிடும் ஹு கமாண்ட் இல் இருந்து இது வருகிறது.
3:21 சில சமயம் நம் லாக் இன் பாஸ்வேர்ட் பாதுகாப்பு இல்லாமல் போய்... மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் அல்லது சும்மா அதை மாற்ற விரும்பலாம்.
3:28 இதற்கு பயனாவது பாஸ்வேர்ட் கமாண்ட் . பி[P] ஏ எஸ் எஸ் டபிள்யு டி[D] என்டர் விசையை தட்டுவோம்.
3:37 இந்த கமாண்டை உள்ளிட்டது நடப்பு கடவுச்சொல்லை உள்ளிட தூண்டும்.
3:43 இங்கு என் கணினியின் நடப்பு கடவுச்சொல்லை உள்ளிடுகிறேன்.
3:48 இதை சரியாக உள்ளிட்டதும் புதிய கடவுச்சொல்லை உள்ளிட்ட வேண்டும். அதை உறுதிசெய்ய மீண்டும் உள்ளிட்ட வேண்டும்.
4:02 நம் கடவுச்சொல் மறந்து போனால்?
4:06 அப்போதும் கடவுச்சொல்லை மாற்றலாம். ஆனால் ரூட் பயனர் மட்டுமே அதை செய்ய முடியும்.
4:14 யார் அந்த ரூட் பயனர்?
4:18 அவர் கூடுதல் சலுகைகள் உள்ள சிறப்பு மனிதர்!
4:22 ஒரு ஒப்பீடு செய்ய விண்டோஸில் உள்ள அட்மினிஸ்ட்ரேட்டர் போல இவர்.
4:30 இன்றைய தேதி நேரம் என்ன என்று தெரிந்துகொள்ள நினைக்கலாம். இதற்கு உள்ளது டேட் கமாண்ட் .
4:36 டெர்மினலில் டேட் என்று எழுதி என்டர் அடிக்கலாம்.
4:42 நடப்பு தேதி நேரம் காட்டப்படுகிறது.
4:45 டேட் என்று இட்டாலும் தேதி நேரம் இரண்டையுமே காட்டுகிறது. இது பன்முக வித்தகர். இதற்கு பல தேர்வுகளும் உண்டு.
4:54 ப்ராம்ட்டில் டைப் செய்க: டேட் ஸ்பேஸ் ப்ளஸ் சதவிகித குறி மேலெழுத்து டி [T]. என்டரை தட்டலாம்.
5:07 இது நேரத்தை மணி நிமிஷம் வினாடி வகையில் காட்டுகிறது.
5:12 ப்ராம்ட்டில் டைப் செய்க: டேட் ஸ்பேஸ் ப்ளஸ் சதவிகித குறி சிறிய ஹெச். என்டரை தட்டலாம்.
5:23 இது மாதத்தின் பெயரை தருகிறது.
5:25 ப்ராம்ட்டில் டைப் செய்க: டேட் ஸ்பேஸ் ப்ளஸ் சதவிகித குறி சிறிய எம். என்டரை தட்டலாம்.
5:38 இது மாதத்தை எண்ணில் தருகிறது. இங்கே பிப்ரவரி மாதத்திற்கு 02 என காட்டுகிறது. இதே போல் உங்களுக்கு என்ன காட்டுகிறது என பொருத்திப் பார்க்கவும்.
5:50 ப்ராம்ட்டில் டைப் செய்க: டேட் ஸ்பேஸ் ப்ளஸ் சதவிகித குறி சிறிய ஒய். என்டர் விசையை அடிக்கலாம்.
6:01 நடப்பு வருடத்தின் கடைசி இரண்டு எண்களை காட்டுகிறது.
6:05 இந்த தேர்வுகளை கலந்து பயன்படுத்தலாம். ப்ராம்ட்டில் டைப் செய்க: டேட் ஸ்பேஸ் ப்ளஸ் இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் சதவிகித குறி சிறிய ஹெச் சதவிகிதக்குறி சிறிய ஒய். என்டர் விசையை அடிக்கலாம்.
6:34 இது இப்போது பிப்ரவரி 11 என்று காட்டுகிறது.
6:39 இதே போன்ற இன்னொரு கமாண்ட் கால். அதிகம் பயன்படாவிட்டாலும் இது எந்த வருட எந்த மாத காலண்டரையும் பார்க்க உதவுகிறது.
6:48 நடப்பு மாத காலண்டரை பார்க்க கால் என டைப் செய்து உள்ளிடுக.
6:56 எந்த மாத காலண்டரையும் காண - உதாரணமாக டிசம்பர் 2070 - ப்ராம்ட்டில் கால் ஸ்பேஸ் 12 ஸ்பேஸ் 2070 என டைப் செய்து என்டர் விசையை அடிக்கலாம்.
7:13 இது டிசம்பர் 2070 மாத காலண்டரை காட்டுகிறது.
7:19 மேலே போகு முன் பைல்கள், டிரக்டரிகள் பற்றி பார்க்கலாம்.
7:26 லினக்ஸில் எல்லாமே ஒரு பைல். அது சரி, பைல் என்றால் என்ன?
7:34 நமக்கு பழக்கமான பைல் பேப்பர்களையும் ஆவணங்களையும் வைத்துக்கொள்ளும் பெட்டி. அதே போல லினக்ஸில் பைல் என்றால் தகவல்களை வைத்துக்கொள்ளும் கலம்.
7:48 டிரக்டரி என்றால் என்ன?
7:52 பல பைல்களும் சப் டிரக்டரிகளும் சேர்ந்தது டிரக்டரி
7:58 டிரக்டரி நம் பைல்களை ஒரு சீரான முறையில் அடுக்கி வைக்க உதவுகிறது.
8:04 விண்டோஸில் போல்டர் என்று சொல்வதும் இதைத்தான்.
8:08 லினக்ஸில் உள்ளே நுழைந்ததும் முன்னிருப்பாக நாம் இருப்பது ஹோம் டிரக்டரி. அதை காண ப்ராம்ட்டில் எகோ ஸ்பேஸ் டாலர் ஹோம் என்று மேல் எழுத்துகளில் உள்ளிட்டு என்டர் விசையை தட்டவும்.
8:27 அடுத்த கமாண்ட் நாம் இப்போது வேலை செய்து கொண்டிருக்கும் அடைவை அறிய உதவும். பி டபில்யு டி[d] என்பது ப்ரெசென்ட் வொர்கிங் டிரக்டரி..... ப்ராம்ட்டில் பி டபில்யு டி[d] என்று எழுதி என்டர் செய்க.
8:42 நடப்பு டிரக்டரி தெரிந்தபின் அதில் இருக்கும் மற்ற டிரக்டரிகள் சப் டிரக்டரிகள் என்னென்ன என்று அறிய ஆசை படலாம். இதற்கான கமாண்ட் எல்எஸ். அநேகமாக இதுவே யுனிக்சில் லினக்ஸில் மிக அதிகமாக பயன்படும் கமாண்ட்.
8:56 எல்எஸ் என்ற கமாண்டை எழுதி என்டர் செய்க.
9:01 இப்போது வெளியீட்டை கவனிக்கலாம்.
9:04 பொதுவாக பைல்களும் சப் டிரக்டரிகளும் வெவ்வேறு நிறத்தில் காட்டப்படும்.
9:08 அது பன்முக கமாண்ட் . அதற்கு பல ஆப்ஷன்ஸ் துணையாகும். சிலதை பார்க்கலாம். எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் ஹைபன் ஆல் என எழுதி என்டர் செய்க.
9:24 இப்போது மறைந்து இருக்கும் பைல்களும் கூட காட்டப்படும்.(மறைந்திருக்கும் பைல்கள் புள்ளியில் ஆரம்பிக்கும் பைல் பெயர்கள்.)
9:33 பைல் பெயர் மட்டும் இல்லாமல் கூடுதல் தகவல் வேண்டுமானால் ஹைபன் எல் தேர்வு உதவும்.
9:40 எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் சிறிய எல் என ப்ராம்ட்டில் எழுதி என்டர் செய்க.
9:50 இது பைலின் அனுமதிகள், பைலின் உரிமையாளரின் பெயர், கடைசியாக திருத்திய நேரம், பைட்டுகளில் பைலின் அளவு ஆகியவற்றை காட்டும். இவைபற்றி சொல்லப்போவதில்லை.
10:06 எல்எஸ் க்கு உள்ள மற்ற தேர்வுகளை பின்னால் பார்க்கலாம்.
10:11 இந்த தகவலை பார்ப்பது மட்டுமில்லாமல் ஒரு கோப்பில் சேமிக்கலாம். உண்மையில் இது போல் கமாண்ட் களின் எல்லா அவுட்புட் களையும் கூட கோப்பில் வைக்கலாம்.
10:23 கமாண்ட் க்கு பின் வல அம்புக்குறி இட்டு பைலின் பெயரை உள்ளிட்ட வேண்டும். உதாரணமாக எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் சிறிய எல் வல அம்புக்குறி ஸ்பேஸ் பைல்இன்போ என எழுதி என்டர் செய்க.
10:46 இப்போது பைல்கள் டிரக்டரிகள் பற்றிய எல்லா தகவல்களும் பைல்இன்போ என்ற பைல் க்கு அனுப்பப்படும்.
10:54 சரி, கோப்பில் உள்ள தகவலை எப்படி படிப்பது. இதற்கான கமாண்ட் (cat)கேட். டைப் செய்யலாம். கேட் ஸ்பேஸ் பைலின் பெயர், இங்கு பைல்இன்போ. என்டரை தட்டலாம்
11:12 இப்போது கோப்பில் உள்ள தகவலை படிக்கலாம். உண்மையில் கேட் கமாண்ட் யின் இன்னொரு முக்கிய பயன் ஒரு பைல் ஐ உருவாக்குவது. இதற்கு டைப் செய்க. கேட் ஸ்பேஸ் வல அம்புக்குறி ஸ்பேஸ் பைலின் பெயர் உதாரணமாக பைல்1. என்டர் விசையை தட்டலாம்.
11:36 என்டர் விசையை தட்டிய பின் அது பயனரின் உள்ளீட்டுக்கு காத்து இருக்கிறது.
11:42 என்ன எழுதினாலும் அது கோப்பில் எழுதப்படும். ஆகவே நாம் ஏதாவது எழுதலாம்.
11:50 மீண்டும் என்டர் விசையை தட்டலாம். அது உள்ளீடு முடிந்தது என குறிக்கும்.
11:56 இப்போது கண்ட்ரோல் விசை, டி[D] விசை இரண்டையும் அழுத்தலாம்.
12:05 ஏற்கெனெவே பைல் ஒன் என்ற பைல் இருந்தால் பயனரின் உள்ளீடு மேலெழுதப்படும்.
12:13 ஆகவே நாம் உள்ளீட்டை ஏற்கெனெவே உள்ள பைல் ஒன் என்ற கோப்பில் சேர்க்க விரும்பினால் ப்ராம்ட்டில் எழுத வேண்டியது: கேட் ஸ்பேஸ் இரட்டை வல அம்புக்குறிகள் ஸ்பேஸ் பைல். என்டரை தட்டலாம்
12:36 நாம் இன்னும் பலகமாண்ட் களை பார்த்திருக்கலாம். ஆனால் இப்போதைக்கு இது போதும். உண்மையில் இதே கமாண்ட் களில் பல தேர்வுகளும் சாத்தியக்கூறுகளையும் நாம் பார்க்கவில்லை.
12:50 இத்துடன் இந்த டுடோரியல் நிறைவு பெறுகிறது. ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
13:02 மேலும் விவரங்களுக்கு : http://spoken-tutorial.org/NMEICT-Intro.
13:10 மொழியாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

Chandrika, Pravin1389, Priyacst