LibreOffice-Suite-Writer/C2/Typing-text-and-basic-formatting/Tamil
From Script | Spoken-Tutorial
Resources for recording Typing text and Basic Formatting
Time | NARRATION |
00:01 | Writer இல் – text எழுதுதல் மற்றும் basic formatting செய்தல் குறித்த tutorial க்கு நல்வரவு. |
00:07 | நாம் கற்கபோவது. |
00:10 | text Aligning, |
00:12 | புல்லட்கள், Numbering , |
00:14 | cut , copy , paste option கள், |
00:18 | Bold,Underline, Italics option கள். |
00:21 | font பெயர், font அளவு, font வண்ணம். |
00:26 | மேற்கண்டவற்றை document களில் பயன்படுத்தி வெற்று text ஐ விட அழகாகவும் படிக்க சுலபமாகவும் ஆக்குதல். |
00:36 | இங்கு பயன்படுத்துவது Ubuntu 10.04 லீப்ரே Office Suite பதிப்பு 3.3.4. |
00:47 | Writer இல் “Aligning Text” ஐ காணலாம். |
00:50 | புதிய document ஐ திறந்து இவற்றை பயன்படுத்தி பார்க்கலாம். |
00:57 | கடைசி டுடோரியலில் உருவாக்கிய “resume.odt” பைலையே திறக்கலாம். |
01:08 | முன்னே “RESUME” என எழுதி பக்கத்தின் நடுவுக்கு Align செய்தோம். |
01:14 | இப்போது அதை தேர்ந்தெடுத்து “Align Left” ஐ சொடுக்கலாம். “RESUME” என்ற சொல் இடது நேருக்கு வந்துவிட்டது. அதாவது ஆவண பக்கத்தின் இடது மார்ஜினுக்கு பக்கமாக வந்துவிட்டது. |
01:25 | “Align Right” ஐ சொடுக்கினால் “RESUME” என்ற சொல் வலது நேருக்கு வந்துவிடும். |
01:32 | “Justify”, ஐ சொடுக்கினால் “RESUME” என்ற சொல் வலது இடது விளிம்புகளுக்கு நடுவில் சீராக அமைக்கப்படும். |
01:44 | இந்த அம்சம் சரியாக உணரப்படுவது ஒரு வரியோ அல்லது பாராவோ text இருக்கும்போதுதான். |
01:51 | இதை செயல் நீக்குவோம். |
01:54 | புல்லட்கள் மற்றும் Numbering தனித்தனி விவரங்களை எழுத பயன்படுகிறது. |
01:58 | ஒவ்வொரு விவரமும் ஒரு புல்லட், எண்ணில் துவங்கும். |
02:02 | document இல் எழுதிய ஒவ்வொரு விஷயத்தையும் சரியாக புரிந்து கொள்ளலாம். |
02:07 | இதை அணுக menu bar இல் “Format” option , பின் “bullets and numbering” மீது சொடுக்கவும் |
02:15 | “bullets and numbering” option மீது சொடுக்கிய பின், வரும் dialog box வெவ்வேறு tab களில் பலவித பாங்குகளை காட்டுகிறது. இவற்றை உங்கள் document இல் பயன்படுத்தலாம். |
02:26 | Numbering அதே போல. Numbering option மீது சொடுக்க ஒவ்வொரு வரியும் புதிய எண்ணுடன் துவங்குகிறது. |
02:34 | “numbering type” பாங்கில் இரண்டாம் பாங்கின் மீது சொடுக்கலாம். |
02:40 | “OK” ஐ சொடுக்கவும். |
02:42 | இப்போது முதல் வரியை எழுத நீங்கள் தயார். |
02:46 | டைப் செய்யலாம் “NAME: RAMESH” |
02:50 | “Enter” ஐ அழுத்தவும். |
02:53 | வரியை எழுதியபின் எப்போதெல்லாம் “Enter” விசையை அழுத்துகிறோமோ அப்போதெல்லாம் புதிய புல்லட் point அல்லது புதிய அடுத்த எண் உருவாகிறது. |
03:04 | தேர்ந்தெடுக்கும் பாங்கை பொருத்து புல்லட்களுக்குள் புல்லட்களும், எண்களுக்குள் எண்களும் இருக்க முடியும். |
03:13 | இரண்டாம் வரியில் எழுதலாம்: “ FATHER’S name colon MAHESH”. |
03:20 | “Enter” செய்க. மீண்டும் டைப் செய்க: “MOTHER’S name colon SHWETA”. |
03:26 | மேலும் அடுத்தடுத்து டைப் செய்க: “FATHERS OCCUPATION colon GOVERNMENT SERVANT” மற்றும் “MOTHERS OCCUPATION colon HOUSEWIFE” |
03:38 | Tab மற்றும் shift tab விசைகளால் புல்லட்கள் விளிம்பிலிருந்து தள்ளி இருப்பதை அதிகமாக்கவோ குறைக்கவோ முடியும். |
03:47 | இந்த “bullets and numbering” option ஐ ரத்துசெய்ய முதலில் கர்சரை HOUSEWIFE என்ற சொல்லுக்கு அடுத்து கொண்டுபோகவும். “Enter”விசை மீது முதலிலும் பின் “bullets and numbering” dialog boxஇல் “numbering Off” option இலும் சொடுக்கவும். |
04:03 | இனி டைப் செய்யும் புதிய text இல் புல்லட் பாங்கு வராது. |
04:10 | document இல் இரு முறை “name” டைப் செய்ததை பாருங்கள். |
04:14 | ஒரே text ஐ மீண்டும் மீண்டும் எழுதாமல் Writer இல் “Copy” மற்றும் “Paste” option களை பயன்படுத்தலாம். |
04:21 | இதை செய்வதை பார்க்கலாம். |
04:24 | “MOTHER’S name” -லிருந்து “name” ஐ நீக்கிவிட்டோம். இதை copy மற்றும் paste option களால் மீண்டும் உள்ளிடலாம். |
04:33 | “FATHER’S name” -ல் கர்சரை ,"name” ன் மீது இழுத்து அதை முதலில் தேர்வு செய்து கொள்ளலாம். |
04:40 | வலது பட்டனை சொடுக்கி “Copy” ஐ சொடுக்கவும். |
04:45 | “MOTHER’S” க்கு அடுத்து கர்சரை வைக்கவும். |
04:48 | மீண்டும் வலது பட்டனை சொடுக்கி பின் “Paste” ஐ சொடுக்கவும். |
04:54 | “name” தானியங்கியாக ஒட்டப்பட்டது. |
04:57 | இந்த option களுக்கு குறுக்கு வழிகளும் உண்டு - copy செய்ய CTRL+C மற்றும் ஒட்ட CTRL+V |
05:08 | document களில் ஒரே மாதிரியான text யை அடிக்கடி எழுதும் போது இது வெகு உதவிகரமாக இருக்கும். text யை திருப்பி திருப்பி எழுத தேவையில்லை. |
05:19 | ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு text யை வெட்டி நகர்த்த “Cut” மற்றும் “paste” பயனாகும். |
05:26 | இப்போது அதை செய்வதை பார்க்கலாம். |
05:29 | “MOTHER’S” -க்கு அடுத்துள்ள “name” ஐ நீக்கிவிடலாம். |
05:34 | இந்த சொல்லை cut மற்றும் paste செய்வதற்கு “FATHERS name” -ல் உள்ள “name” ஐ தேர்வு செய்க. |
05:40 | வலது பட்டனை சொடுக்கி “Cut” ஐ சொடுக்கவும். “name” என்ற சொல் “FATHER'S”, என்ற சொல்லுக்கு அடுத்து இப்போது இல்லை. அதாவது அந்த சொல் வெட்டப்பட்டது, நீக்கப்பட்டது. |
05:54 | “MOTHER’S” -க்கு அடுத்து கர்சரை வைக்கவும். சொடுக்கியை வலது சொடுக்கவும். |
05:59 | “Paste” மீது சொடுக்கவும். |
06:02 | “MOTHER'S” -க்கு அடுத்து அந்த சொல் ஒட்டப்பட்டது. |
06:07 | வெட்டுவதற்கான குறுக்கு வழி விசை - CTRL+X. |
06:11 | ஆகவே copy, cut option களுக்குள் உள்ள வேறுபாடு: “Copy” option text யை அங்கேயே வைக்கிறது. “Cut” option text யை அதனிடத்தில் இருந்து முழுதும் நீக்குகிறது. |
06:27 | “name” ஐ Father’s -க்கு அடுத்து ஒட்டிவிட்டு தொடருவோம். |
06:31 | புதிய தலைப்பை எழுதுக: “EDUCATION DETAILS”. |
06:35 | “புல்லட்கள் மற்றும் Numbering ” பற்றி கற்றபின் “font பெயர்” மற்றும் text இன் font அளவை மாற்றி அமைப்பதை காணலாம். |
06:45 | format tool bar இல் இப்போது “font name” என்ற field உள்ளது |
06:52 | இது வழக்கமாக “Liberation Serif” என்ற முன்னிருப்பாக இருக்கும். |
06:57 | font name... text ஐ அமைக்க விரும்பும் font வகையை தேர்ந்தெடுக்க பயன்படும். |
07:04 | உதாரணமாக, “Education Details” -க்கு வேறொரு font பாங்கு, font அளவு அமைக்கலாம். |
07:11 | “Education details”, ஐ தேர்ந்தெடுத்து “font name” field இல் கீழ் அம்புகுறியை சொடுக்க வேண்டும். |
07:19 | கீழிறங்கும் மெனுவில் பலவித font பெயர் option களை காணலாம். |
07:25 | “Liberation Sans” ஐ தேடி அதில் சொடுக்கவும். |
07:29 | தேர்ந்தெடுத்த text இன் font மாறிவிட்டதை காணலாம். |
07:34 | “font name” field தவிர, “font size” field உம் உள்ளது. |
07:38 | பெயர் சொல்லுவது போல, “font size” தேர்ந்தெடுத்த text இன் font அளவை அதிகமாக்க/ குறைக்க அல்லது இனி டைப் செய்யும் புதிய text இல் அளவை அமைக்க பயனாகும். |
07:52 | ஆகவே “EDUCATION DETAILS” என்ற text ஐ தேர்ந்தெடுக்கலாம். |
07:55 | font அளவு இப்போது பன்னிரண்டாக இருக்கிறது. |
07:58 | “font size” -ன் கீழ் அம்புக்குறி மீதும் பின் பதினொன்று மீதும் சொடுக்குக. |
08:05 | text யின் font அளவு குறைவதை காணலாம். |
08:09 | font அளவு அதே போல அதிகமாக்கப்படலாம். |
08:13 | font அளவு குறித்து கற்றபின், font இன் நிறத்தையும் Writer இல் மாற்ற கற்கலாம். |
08:21 | டைப் செய்த document இலோ அல்லது சில வரிகளிலோ text நிறத்தை அமைக்க “font Color” பயன்படுகிறது. |
08:27 | உதாரணமாக தலைப்பு “EDUCATION DETAILS” ஐ வேறு நிறத்தில் அமைக்கலாம். |
08:32 | ஆகவே மீண்டும் “EDUCATION DETAILS” ஐ தேர்ந்தெடுக்கவும். |
08:36 | இப்போது tool bar இல் “font Color” -ன் கீழ் அம்புக்குறியை சொடுக்கவும். பெட்டியில் இளம் பச்சை மீது சொடுக்க text இளம் பச்சை நிறத்துக்கு மாறிவிடும். |
08:48 | இப்போது இளம் பச்சை நிறத்தில் உள்ளது. |
08:52 | font அளவு option க்கு அடுத்து மூன்று option களை காணலாம். அவை “Bold” “Italic” மற்றும் “Underline”. |
09:00 | இவை text யை தடிமனாகவோ, சாய்வெழுத்துக்களாகவோ அல்லது கீழ் கோடிட்டதாகவோ மாற்றும். |
09:07 | “EDUCATION DETAILS” என்ற தலைப்பை தேர்ந்தெடுக்கவும். |
09:11 | text யை தடிமனாக்க 'Bold' மீது சொடுக்கவும். |
09:15 | text தடிமனாகிவிட்டதை காணலாம். |
09:19 | “Italic” மீது சொடுக்க text சாய்வெழுத்துக்களாக ஆகிவிடும். |
09:25 | “Underline” மீது சொடுக்க text அடிக்கோடிடப்படும். |
09:31 | தேர்ந்தெடுத்த text அடிக்கோடிடப்பட்டுள்ளது. |
09:35 | தலைப்பை “bold” மற்றும் “underlined” ஆக வைத்துக்கொண்டு “italic” ஐ மட்டும் நீக்க அதன் மீது மீண்டும் சொடுக்கவும். மற்ற option களை விடவும். |
09:45 | ஆகவே தலைப்பு இப்போது தடிமனாகவும் அடிக்கோடிட்டும் இருக்கிறது. |
09:50 | இத்துடன் LibreOffice Writer குறித்த spoken tutorial முடிகிறது |
09:55 | சுருங்கச்சொல்ல, கற்றது: |
09:57 | Writer இல் Aligning Text |
10:00 | புல்லட்கள் மற்றும் Numbering . |
10:02 | Cut, Copy, Paste option கள். |
10:05 | Bold, Underline, Italics option கள் |
10:09 | font பெயர், font அளவு, font நிறம். |
10:13 | முழுமையான பயிற்சி: |
10:16 | புல்லட்கள் மற்றும் எண்ணிடலை செயலாக்கவும். |
10:18 | ஒரு பாங்கை தேர்ந்தெடுத்து சில விஷயங்கள் எழுதுங்கள். |
10:22 | கொஞ்சம் text யை தேர்ந்தெடுத்து font வை “Free Sans” என மாற்றவும். font அளவை “16” ஆக்கவும். |
10:29 | அந்த text ஐ சாய்வெழுத்தாக்கவும். |
10:32 | font நிறத்தை சிவப்பாக்கவும். |
10:35 | இந்த தொடுப்பில் உள்ள வீடியோ |
10:38 | Spoken Tutorial திட்டத்தை சுருக்கமாக சொல்கிறது. |
10:41 | இணைப்பு இல்லையானால் தரவிறக்கி பாருங்கள். |
10:46 | spoken டுடோரியல் திட்டக்குழு spoken tutorialகளை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
10:52 | இணையத்தில் பரீட்சை எழுதி தேருவோருக்கு சான்றிதழ்களும் தருகிறது |
10:55 | மேற்கொண்டு விவரங்களுக்கு எழுதவும்: contact@spoken-tutorial.org |
11:02 | Spoken Tutorial திட்டம் Talk to a Teacher project இன் முனைப்பாகும். |
11:06 | இது இந்திய அரசின் ICT, MHRD வழியாக National Mission on Education மூலம் ஆதரிக்கப்படுகிறது. |
11:14 | மேற்கொண்டு தகவல்களுக்கு, |
11:18 | spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
11:25 | தமிழில் கடலூர் திவா. நன்றி |