LibreOffice-Suite-Writer/C2/Introduction-to-LibreOffice-Writer /Tamil
From Script | Spoken-Tutorial
Resources for recording Introduction to Writer
Time | Narration |
0:01 | லீப்ரே Office Writer குறித்த ஸ்போக்கன் டுடோரியலுக்கு நல்வரவு! Writer க்கு ஒரு அறிமுகத்தை பார்க்கலாம்., |
0:10 | பலவித tool bars, |
0:13 | புதிய ஒரு document ஐயும் பழைய document ஐயும் திறப்பது, |
0:17 | document ஐ சேமிப்பது, |
0:20 | document ஐ மூடுவது ஆகியன. |
0:22 | லீப்ரே Office Suite இல் உள்ள word processorதான் லீப்ரே Office Writer. |
0:27 | இது மைக்ரோசாப்ட் Office Suite இல் மைக்ரோசாப்ட் வேர்ட் க்கு சமம். |
0:32 | இது ஒரு இலவச திறந்த மூல மென்பொருள். இதை பகிர, மாற்ற, விநியோகம் செய்ய தடை ஏதுமில்லை. |
0:41 | லைசென்ஸ் கட்டணம் இல்லாமல் இதை பகிர்ந்து கொள்ளலாம். |
0:47 | லீப்ரே Office suite ஐ பயன்படுத்த துவங்க மைக்ரோசாப்ட் விண்டோஸ் 2000, MS விண்டோஸ் XP அல்லது MS விண்டோஸ் 7 ஆகியவற்றையோ அல்லது GNU/Linux சையோ .. Operating System ஆக பயன்படுத்தலாம். |
1:04 | இங்கு Ubuntu Linux 10.04 நம் operating system . லீப்ரே Office Suite பதிப்பு 3.3.4. |
1:16 | லீப்ரே Office Suite நிறுவப்படாவிட்டால், Writer ஐ Synaptic Package Manager மூலம் நிறுவிக்கொள்ளலாம். |
1:24 | Synaptic Package Manager, குறித்த மேல் தகவல்களுக்கு Ubuntu Linux டுடோரியல்களை பாருங்கள். பின் இந்த வலைத்தளத்தில் சொன்ன படி தரவிறக்கிக்கொள்ளுங்கள். |
1:37 | விரிவான குறிப்புகள் லீப்ரே Office Suite இன் முதல் டுடோரியலில் இருக்கிறது. |
1:43 | 'Writer' ஐ நிறுவும் போது 'Complete' option ஐ மறவாதீர்கள். |
1:50 | லீப்ரே Office Suite ஐ ஏற்கெனெவே நிறுவி இருந்தால், |
1:54 | லீப்ரே Office Writer ஐ கண்டுபிடிக்க “Applications” option மீது சொடுக்கவும். அது திரையின் இடது மேல் மூலையில் உள்ளது. |
2:02 | பின் முறையே “Office” , “லீப்ரே Office” option களில் சொடுக்கவும். |
2:08 | புதிய dialog box திறக்கும். அதில் லீப்ரே Office மென்பொருட்கள் இருக்கும். |
2:13 | லீப்ரே Office Writer ஐ அணுக, “text document” option இல் சொடுக்கவும். இதுவே அதன் word processor. |
2:23 | main Writer window வில் இது ஒரு காலி document ஐ திறக்கும். . |
2:28 | Writer option இல் பல tool barகள் உள்ளன. அவை title bar, |
2:33 | menu bar, standard tool bar, |
2:36 | formatting bar மற்றும் status bar. இவற்றில் சாதாரணமாக நாம் அடிக்கடி பயன்படுத்தும் option கள் உள்ளன. இவை குறித்து மேல் வரும் டுடோரியல்கள் கற்பிக்கும். |
2:47 | புதிய document ஒன்றை Writer திறப்பதுடன் ஆரம்பிக்கலாம். |
2:53 | standard tool bar இல் “new” சின்னத்தை சொடுக்கி புதிய document ஐ திறக்கலாம். |
3:00 | அல்லது menu bar இல் “File” option , |
3:05 | பின் “new” தேர்வு, கடைசியாக “text document” option ஐ சொடுக்குவதன் மூலம். |
3:12 | புதிய Writer option இரண்டு விதத்திலும் தோன்றுகிறது. |
3:17 | இப்போது ஏதேனும் text யை, editor area ல் இடலாம். |
3:21 | “RESUME” என டைப் செய்வோம். |
3:24 | document ஐ எழுதி அதை பின்னே பயன்படுத்த சேமிக்க வேண்டும். |
3:29 | சேமிக்க menu bar இல் “File” மீதும், |
3:33 | பின் “Save As” தேர்விலும் சொடுக்கவும். |
3:36 | திரையில் ஒரு dialog box திறக்கும். அதில் “Name” field இல் பைலின் பெயரை உள்ளிட வேண்டும். |
3:44 | “resume” என பெயர் இடலாம். |
3:48 | “Name” field இன் கீழ் “Save in folder” என்று இருக்கிறது. |
3:53 | இந்த field இல் பைலை சேமிக்க வேண்டிய folder இன் பெயரை தர வேண்டும். |
3:58 | “Save in folder” field இல் கீழ் அம்பு விசையை தட்டி “Desktop” ஐ தேர்வு செய்யவும். |
4:02 | மெனுவில் பைலை சேமிக்கக்கூடிய folder களின் பட்டியலை காணலாம். |
4:08 | இப்போது நாம் “Desktop” option இல் சொடுக்கலாம்.. அந்த பைல் desktop இல் சேமிக்கப்படும். |
4:14 | “Browse for other folders” என்பதன் மீதும் சொடுக்கலாம். |
4:18 | பின் document ஐ சேமிக்க விருப்பமான folder ஐ தேர்ந்தெடுக்கலாம். |
4:23 | இப்போது dialog boxயில் “File type” option மீது சொடுக்கவும். |
4:27 | file ஐ சேமிக்க file வகை option கள் அல்லது file extensions ஆகியவற்றின் பட்டியலை காட்டும். |
4:34 | லீப்ரே Office Writer இல் default ... “ODF Text Document” இதன் extension “dot odt”. |
4:45 | ODT என்பது Open Document Format வகையை சார்ந்தது. ODF உலகளாவிய word document களுக்கு standard வகையாகும். |
4:56 | மின்னாளுமைக்கு திறந்த standard ஆக இந்திய அரசாலும் அங்கீகரிக்கப்பட்டது. |
5:04 | லீப்ரே Office Writer இல் திறக்கக்கூடிய dot odt text document களாக சேமிப்பதுடன் |
5:11 | நீங்கள் உங்கள் file ஐ MS Office Word இல் திறக்கக்கூடிய dot doc மற்றும் dot docx format இலும் சேமிக்கலாம். |
5:23 | பல மென்பொருட்களால் திறக்கக்கூடிய பிரபல வகையின் extension dot rtf, இது “Rich Text Format” . |
5:33 | இப்போது “ODF Text Document” option இல் சொடுக்கவும். |
5:37 | இப்போது “ODF Text Document” வகை அடைப்புக்குள் dot “odt”, என “File type” option க்கு அடுத்து காணப்படுகிறது. |
5:48 | “Save” button மீது சொடுக்கவும். |
5:50 | இது உங்களை பைல் பெயர், தேர்ந்தெடுத்த extensionஉடன் title bar இல் காணும்படி Writer சாளரத்துக்கு இட்டுச்செல்லும். |
5:58 | இப்போது Writer window வில் text document ஒன்று எழுத தயார். |
6:03 | மேலே சொன்ன format களுடன் Writer ஆவணங்களை “dot html” format இலும் சேமிக்கலாம். இது வலைப்பக்க ஒழுங்கு. |
6:13 | இது முன் சொன்ன வழியிலேயே செய்யப்படுகிறது. . |
6:17 | menubar இல் “File” option இல் சொடுக்கி “Save As” தேர்விலும் சொடுக்கவும். |
6:24 | இப்போது ”File Type” option இல் சொடுக்கி, “HTML Document – அடைப்புக்குள் OpenOffice dot org Writer” தேர்விலும் சொடுக்கவும். |
6:35 | இந்த option document க்கு “dot html” பின்னொட்டை தருகிறது. |
6:40 | “Save” button மீது சொடுக்கவும். |
6:42 | dialog boxயில் “Ask when not saving in ODF format” option இல் குறியிடவும். |
6:50 | கடைசியாக “Keep Current Format” option இல் சொடுக்கவும். |
6:55 | dot html extension உடன் document சேமிக்கப்படுகிறது. |
7:00 | document ஐ PDF format க்கு ஏற்றுமதியும் செய்யலாம். இதற்கு standard tool bar இல் “Export Directly as PDF” option இல் சொடுக்கவும். |
7:10 | முன் போல சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்க. |
7:15 | மாறாக இதையே menu bar இல் “File” தேர்விலும், பின் “Export as pdf” தேர்விலும் சொடுக்கியும் செய்யலாம். |
7:24 | தோன்றும் dialog boxயில் “Export” மீது சொடுக்கி பின் “Save” button இல் சொடுக்கவும். |
7:32 | ஒரு pdf file உருவாக்கப்படும். |
7:35 | இந்த document ஐ “File” , பின் “Close” மீது சொடுக்கி மூடலாம். |
7:40 | அடுத்து லீப்ரே Office Writer இல் இருப்பில் உள்ள ஒரு document ஐ திறப்பது எப்படி என பார்க்கலாம். |
7:47 | “document “Resume.odt ஐ திறக்கலாம்." |
7:51 | இருப்பில் உள்ள ஒரு document ஐ திறக்க மேலே menubar இல் “File” menu இல் “Open” option ஐ சொடுக்கவும். |
8:00 | திரையில் dialog box ஐ காணலாம். |
8:04 | இங்கே document ஐ சேமித்த folder ஐ கண்டு பிடிக்க வேண்டும். |
8:08 | பின் text box இன் மேல் இடது மூலையில் உள்ள pencil button ஐ சொடுக்கவும். |
8:14 | அங்கே, “Type a file Name” என இருக்கிறது. |
8:16 | இது “Location Bar” field ஐ திறக்கும். |
8:19 | நமக்கு வேண்டிய பைலின் பெயரை உள்ளிடவும். |
8:24 | ஆகவே நாம் “resume” என உள்ளிடுகிறோம். |
8:27 | தோன்றும் பட்டியலில் “resume dot odt” என்பதை தேர்க. |
8:34 | இப்போது “Open” button ஐ சொடுக்கவும். |
8:37 | resume.odt file திறக்கிறது. |
8:41 | இருப்பில் உள்ள ஒரு document ஐ திறக்க மேலே toolbar இல் “Open” சின்னத்தை சொடுக்கி முன் சொன்ன வழியிலேயே திறக்கலாம். |
8:52 | மைக்ரோசாப்ட் Word பயன்படுத்தும் “dot doc”, “dot docx extensionஉள்ள பைல்களையும் Writer ஆல் திறக்கலாம். |
9:03 | அடுத்து file ஐ மாற்றி பின் அதே பேரில் எப்படி சேமிப்பது என பார்க்கலாம் |
9:10 | முதலில் “RESUME” என்ற text யை அதன் மீது இடது சொடுக்கியால் இழுப்பதன் மூலம் தேர்ந்தெடுங்கள். |
9:17 | இது text ஐ தேர்ந்தெடுத்து முன்னிலை படுத்தும். இப்போது இடது சொடுக்கி பட்டனை விடவும். |
9:24 | text இப்போதும் முன்னிலை படுத்தப்பட்டு இருக்க வேண்டும். |
9:26 | இப்போது standard toolbar இல் “Bold” சின்னத்தில் சொடுக்கவும். text தடிமனாக ஆகிவிடும். |
9:33 | இந்த text யை பக்கத்தின் நடுவில் ஒழுங்கு செய்ய toolbar இல் “Centered” சின்னத்தில் சொடுக்கவும். |
9:41 | text பக்கத்தின் நடுவில் ஒழுங்கு செய்யப்பட்டது. |
9:45 | இப்போது text இன் எழுத்து அளவை கூட்டலாம். |
9:48 | toolbar இல் “Font Size” கீழ் அம்பு விசையை சொடுக்கலாம். |
9:53 | கீழிறங்கும் menu வில் நாம் “14” மீது சொடுக்கலாம். |
9:57 | ஆகவே font இன் அளவு “14” ஆகிறது. |
10:01 | இப்போது “Font Name” field இல் கீழ் அம்பு குறியை சொடுக்கி
“UnDotum” என்பதை font பெயராக தேர்ந்தெடுக்கவும். |
10:09 | toolbar இல் “Save” சின்னத்தை சொடுக்கவும். |
10:13 | மாற்றங்களை செய்தாலும் அதே பெயரில் பைல் சேமிக்கப்படுவதை காணலாம்.. |
10:21 | document ஐ சேமித்த பின் அதை மூட விரும்பினால், |
10:25 | menu bar இல் “File” menu வை சொடுக்கி “Close” option இல் சொடுக்கவும். இது file ஐ மூடும். |
10:33 | இத்துடன் லீப்ரே Office Writer குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது.
நாம் கற்றது: |
10:43 | Writer க்கு அறிமுகம்.
Writer இல் பலவித toolbars |
10:45 | புதிய document ஐ திறத்தல் , இருப்பில் உள்ள document ஐ திறத்தல்,
document ஐ சேமித்தல், |
10:52 | document ஐ மூடுதல். |
10:55 | முழுமையான பயிற்சி:
புதிய document ஐ Writer இல் திறத்தல், |
11:01 | “practice.odt” என்ற பெயரில் document ஐ சேமித்தல், |
11:05 | “This is my first assignment” என text எழுதுதல்,
File ஐ சேமித்தல், text ஐ அடிக்கோடு இடுதல், |
11:13 | font அளவை 16 என அதிகரித்தல்.
File ஐ மூடுதல். |
11:18 | கீழ் வரும் தொடுப்பில் விடியோவை காணவும். இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது. |
11:24 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
11:29 | spoken tutorial களை பயன்படுத்தி spoken tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
11:38 | மேலும் தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும். contact@spoken-tutorial.org |
11:45 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
11:48 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:56 | மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
12:07 | தமிழில் நிரலாக்கம் கடலூர் திவா. நன்றி கூறி விடை பெறுவது --------------(name of the recorder) வணக்கம். |