LibreOffice-Suite-Base/C4/Database-Maintenance/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:00 LibreOffice Base மீதான இந்த Spoken tutorial க்கு நல்வரவு
00:04 இந்த tutorial லில் கற்க போவது: Database ஐ பராமரித்தல், Database Structure ஐ மாற்றுதல், database ஐ ஒருங்கமைத்தல் மற்றும் Backups எடுத்தல்
00:19 Database பராமரிப்பு
00:21 ஒரு Base database ன் வாழ்க்கை முழுதும், அந்த data நவீனமாக, நம்பகத்தன்மையுடன் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
00:31 data structure ஐ மாற்றுதல், மற்றும் data நடப்பில் இருக்க forms ஐ update செய்தல் ஆகியவற்றை இது உள்ளடக்கியது
00:41 நம் முன் tutorialகளில் உருவாக்கிய உதாரண Library database ஐ எடுத்துக்கொள்ளலாம்.
00:48 இந்த database... books, members மற்றும் books issued கொண்ட tables ஐ உடையது
00:55 நம் உதாரண forms, queries மற்றும் database structure அடிப்படையில் reports ஆகியவற்றை உருவாக்கலாம்
01:03 பின்னொரு நாளில் library, DVDs CDs போன்ற மற்ற ஊடகங்களையும் கொண்டு விரிவடைந்தது
01:11 நாம் Library database ன் structure ஐ நவீனமாக்க அதை மாற்றினோம்
01:16 அதற்கு நாம் Media என்ற மற்றொரு table ஐ சேர்த்தோம்
01:21 DVD மற்றும் CD தகவல்களை இந்த புது Media table ல் சேமித்தோம்
01:28 இவ்வழிப்படி, தேவையான மாற்றங்களை செய்தது நம் database ஐ மேலும் பயனுள்ளதாகவும் நவீனமாகவும் மாற்றியது
01:39 table மாற்றங்களுடன், பயன்படுத்த சுலபமாக forms ஐயும் நாம் மாற்ற வேண்டியுள்ளது
01:47 அல்லது புது table structures ஐ கொண்டுவர புது forms ஐ உருவாக்கலாம்
01:54 உதாரணமாக, books data ஐ உள்நுழைக்க ஒரு form வைத்துள்ளோம் என்றால் அதில் DVDs மற்றும் CDs data உம் உள்நுழைய அனுமதிக்க மாற்றலாம்.
02:08 இங்கே media வகையைத் தேர்ந்தெடுக்க, books, அல்லது DVDs or CDs என்ற option buttonகளை சேர்க்க முடியும்
02:19 அல்லது, DVD மற்றும் CD media க்கு data entry ஐ அனுமதிக்க ஒரு புத்தம் புதிய form ஐ சேர்க்க முடியும்
02:28 அதேபோல், நாம் மாற்றிய data structure ஐ பொருத்து queries மற்றும் reports ஐ மாற்ற வேண்டும் அல்லது புதிதாய் சேர்க்க வேண்டும்
02:39 மேலும் சிலசமயம் ஏற்கனவே இருக்கும் table structureகளை மாற்ற நினைக்கலாம்
02:45 உதாரணமாக Library ன் அனைத்து உறுப்பினர்களையும் பட்டியலிடும் Members table ஐ கருத்தில் கொள்வோம்
02:53 இது தற்போது அவர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்களை மட்டுமே சேமிக்கிறது
02:58 இப்போது அவர்களுடைய முகவரி மற்றும் city தகவலை சேர்க்க வேண்டுமென்றால் Members table structure ஐ மாற்றியமைக்க வேண்டும்
03:09 அதற்கு SQL syntax ஐ இவ்வாறு பயன்படுத்தலாம்:
03:15 ALTER TABLE Members ADD Address TEXT, ADD City TEXT
03:22 ALTER TABLE statement... table structure ஐ மாற்றி மேலும் இரு புதிய columnகளை சேர்க்கிறது
03:30 TEXT data ஐ வைத்திருக்க Address மற்றும் City
03:36 table structure உருவாக்கம் மற்றும் மாற்றியமைப்பது பற்றி மேலும் அறிய hsqldb.org/ க்கு செல்லவும்
03:47 screen ல் தெரியும் url address ஐ பயன்படுத்தவும்
03:52 அடுத்து, Base database ஐ பயன்படுத்த நம்பத்துடன் வைத்திருப்பது எப்படி என பார்க்கலாம்
03:59 சிலசமயம் ஒப்பீட்டில் குறைந்த எண்ணிக்கையில் records ஐ வைத்திருக்க Base க்கு அதிக memory தேவைப்படுகிறது
04:08 இது ஏனெனில், database க்கு தேவைப்படலாம் என Base ஒரு குறிப்பிட்ட அளவு memory ஐ எதிர்பார்க்கிறது
04:17 நாம் table களில் பார்க்கும் data ஒரே விதமான முறையில் சேமிக்கப்படுவதில்லை
04:26 ஏனெனில் வெவ்வேறு நேரங்களில் நாம் data ஐ tableகளுக்கு சேர்க்கிறோம், அதன் சேமிப்பு ஒரு குறிப்பிட்ட முறையில் இல்லை
04:36 Library புத்தகங்களுக்கு பயன்படுத்தும் அட்டவணை போல table data க்கு index களை பயன்படுத்த முடியும்
04:45 ஒரு அட்டவணை புத்தகங்களின் பட்டியல் மட்டுமல்லாது அது இருக்கும் இடத்தையும் சேமிக்கிறது
04:53 அதேபோல், திறம்பட data ஐ கண்டுபிடிக்க table indexகளை உருவாக்கலாம்
05:00 ஆனால் indexகளும் அதிக memory எடுத்துக்கொள்ளும்
05:04 table data ஐ நீக்குவது சில சமயங்களில் முழுமையாக நீக்கப்படாது
05:11 அவை table index களில் இருந்து துண்டிக்கபடுமே தவிர அந்த இடத்தை நிரப்ப புது data வரும் வரை data அந்த இடத்திலேயே இருக்கும்
05:24 இவ்வாறே உண்மையான data குறைந்த அளவில் சேமிக்கப்பட்டிருந்தாலும், database அளவில் பெரிதாகிறது
05:35 Defragmenting என்ற ஒரு எளிய மறுஒழுங்கமைவு வழியை Base தருகிறது
05:42 அதற்கு, defragment செய்யவேண்டிய database ஐ திறப்போம்
05:49 LibreOffice Base window ல் Tools menu பின் SQL sub menu ல் சொடுக்கி
06:01 பின்வரும் command ஐ SQL window ல் type செய்க
06:07 CHECKPOINT DEFRAG
06:10 இந்த SQL command... Base database file ல் தேவையில்லாத தகவல்களை நீக்குகிறது
06:19 இது முதலில் database ஐ மூடி, data ஐ மறுஒழுங்கு செய்து database ஐ மீண்டும் திறக்கிறது.
06:27 இப்போது SQL window ல் மற்றொரு command ஐயும் பயன்படுத்தலாம்
06:33 SHUTDOWN COMPACT.
06:36 ஒரே ஒரு வித்தியாசம், இந்த command, database ஐ மீண்டும் திறக்காது.
06:43 defragmenting பற்றி மேலும் தகவல்களுக்கு hsqldb.org ல் Chapter 11 க்கு செல்லவும்
06:54 கடைசியாக, database ஐ பாதுகாப்பாக வைக்க உதவும் Backups பற்றி அறிவோம்
07:02 Computer crash, Hard disk drive உடைதல் அல்லது வைரஸ் தாக்குதலினால் நம் database ஐ இழக்கலாம்
07:14 data இழப்பைக் குறைக்க LibreOffice நல்ல recovery wizard ஐ கொண்டுள்ளது
07:20 ஆனால் database ஐ அவ்வபோது backups எடுத்து வைப்பது புத்திசாலித்தனம்
07:26 backup எடுப்பது மிகவும் சுலபமே
07:30 database file ன் ஒரு பிரதியை எடுக்கவேண்டியிருக்கும்
07:34 பின் அதை external hard disks, அல்லது CDs அல்லது DVDs, அல்லது flash drives போன்ற secondary storage media ல் சேமிக்க வேண்டும்
07:47 Library database ன் ஒரு backup ஐ எடுக்க Library.odb file சேமிக்கப்பட்டிருக்கும் இடத்தை கண்டறியவும்
07:57 பின் அந்த file ஐ வேறு hard disk drive அல்லது flash drive ல் copy, paste செய்க
08:08 இப்போது இந்த ஒரு copy மற்றும் paste செய்வது மொத்த database ஐயும்
08:17 அனைத்து data structures, data, forms, queries மற்றும் reportகளுடன் சேர்த்து backup எடுக்கும் பொறுப்பை ஏற்கிறது
08:24 நாம் எப்படி அடிக்கடி backups எடுப்பது?
08:28 இது data terms ல் அல்லது அதன் structure ல் database அடிக்கடி எவ்வாறு மாற்றப்படுகிறது என்பதை பொருத்தது
08:37 அதாவது எப்படி அடிக்கடி நாம் data ஐ சேர்த்தல், update செய்தல் அல்லது நீக்குதல் செய்கிறோம்
08:42 மேலும் எவ்வாறு அடிக்கடி table structures, forms, queries மற்றும் reports ஐ மாற்றியமைக்கிறோம்
08:49 database ஐ பயன்படுத்துவதைப் பொருத்து backups ஐ தினமும் அல்லது வாரத்திற்கு ஒருமுறை என திட்டமிடலாம்
08:58 இப்போது assignment
09:00 இரண்டு columns - Address மற்றும் City ஐ சேர்க்க Members ஐ மாற்றுக
09:08 இரண்டு column உம் data type TEXT ல் இருக்கட்டும்
09:13 மேலும் Members table ஐ Data Entry mode திறந்து சில உதாரண address மற்றும் city data ஐ நுழைக்கவும்
09;23 அடுத்தது Library database ஐ Defragment செய்யவும்
09:27 கடைசியாக Library database ஐ backup எடுத்து, flash drive அல்லது மற்றொரு hard disk drive இருந்தால் அதில் சேமிக்கவும்
09:38 இத்துடன் LibreOffice Base ல் Database Maintenance மீதான இந்த tutorial முடிகிறது
09:45 இதில் நாம் கற்றது
09:48 Database ஐ பராமரித்தல்
09:50 Database Structure ஐ மாற்றியமைத்தல்
09:54 database ஐ ஒருங்கமைத்தல்
09:56 மற்றும் Backups எடுத்தல்
09:58 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
10:20 மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst