LibreOffice-Suite-Base/C2/Create-queries-using-Query-Wizard/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:02 LibreOffice Base குறித்த Spoken tutorial க்கு நல்வரவு!
00:06 இந்த tutorial லில் காணபோவது: Query wizard மூலம் எளிய queries உருவாக்குவது, field களை தேர்வு செய்தல்; field களை வரிசைப்படுத்துதல்; மற்றும் queries க்கு search criteria அல்லது conditions தருதல்.
00:24 முதலில் queries என்பது என்ன என்று பார்க்கலாம்.
00:29 queries என்பது ஒரு database லிருந்து ஒரு குறிப்பிட்ட தகவலை பெற உதவுவது.
00:35 அதாவது ஒரு database ஐ கொடுத்த search criteria க்கு பொருந்துவனவற்றை காட்டும் படி உசாவலாம்.
00:49 உதாரணத்துக்கு நமக்கு அறிமுகமான Library database ஐ பார்க்கலாம்.
00:57 நம் Library database இல் புத்தகங்கள், உறுப்பினர்கள் குறித்த தகவல்களை வைத்து இருக்கிறோம்.
01:04 இப்போது Library database ஐ எல்லா Library உறுப்பினர்களும் யார் யார் என்று உசாவ முடியும்.
01:12 அல்லது Library database ஐ Library யில் இப்போது இல்லாத புத்தகங்களை எல்லாம் எவை என உசாவ முடியும்.
01:21 Base ஐ பயன்படுத்தி எளிய Query ஐ எப்படி உருவாக்குவது என்று பார்க்கலாம்.
01:30 உதாரணமாக, எல்லா உறுப்பினர்களையும் அவர்களின் phone numberகள் உடன் பட்டியலிடலாம்.
01:44 Library database இல் இருக்கிறோம். இதற்குள் அதை திறக்க கற்று இருப்பீர்கள்.
01:52 இடது panel இல் Queries சின்னத்தில் சொடுக்கலாம்.
01:57 வலது panel இல் மூன்று தேர்வுகளை காணலாம்.
02:02 முதலில் ஒரு எளிய Query ஐ உருவாக்குவதால் சுலபமான விரைவான வழியை கடைபிடிப்போம்.
02:10 அது queries Wizard ஐ பயன்படுத்துவது...
02:17 சிக்கலான queries களை உருவாக்க Base நமக்கு தோதான சில தேர்வுகளை வைத்து இருக்கிறது....... 'Create Query in Design View' ...
02:30 'Create Query in SQL view' போன்ற இவற்றை பின்னால் கற்போம்.
02:36 இப்போதைக்கு 'Use Wizard to Create Query' மீது சொடுக்கலாம்.
02:42 இப்போது, மேலே queries Wizard என்று சொல்லும் ஒரு pop up window வை காணலாம்.
02:50 இடது பக்கம் போக வேண்டிய எட்டு படிகள் உள்ளன.
02:58 படி 1 – 'field Selection'.
03:03 வலது பக்கத்தில் Tables label இன் கீழ் ஒரு கீழிறங்கும் பெட்டியை காணலாம்.
03:11 இங்குதான் query ஐ கோரும் data வின் source ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
03:21 நம் உதாரண query எல்லா Library உறுப்பினர்களின் பட்டியல் பற்றியது. ஆகையால் கீழிறங்கும் பெட்டியில் Tables: Members மீது சொடுக்கலாம்.
03:35 இப்போது, இடது பக்கம் கிடைக்கும் field களில் 'Name' field இல் இரட்டை சொடுக்கு சொடுக்கி வலது பக்க List boxக்கு நகர்த்தலாம்.
03:50 அடுத்து, 'Phone' field இல் சொடுக்கி வலது பக்க List boxக்கு நகர்த்தலாம்
03:59 எல்லா field களையும் வலது பக்கம் நகர்த்த இரு அம்புக்குறியுள்ள வலது சுட்டும் button ஐ அழுத்தலாம் என நினைவு கொள்க.
04:07 இப்போது கீழே Next button மீது சொடுக்கலாம்.
04:15 படி 2 - Sorting Order.
04:20 நம் உதாரண query எல்லா Library உறுப்பினர்களின் பட்டியல் பற்றியது ஆகையால் இது அப்படியே இருக்கலாம்.
04:31 அல்லது member பெயர்களால் பட்டியலை ஒழுங்கு செய்யலாம்.
04:35 Base Wizard, விடை பட்டியலை 4 field கள் வரை அடுக்க வழி செய்கிறது.
04:47 இப்போதைக்கு மேலே உள்ள கீழிறங்கும் பெட்டியை சொடுக்கி....
04:52 Members.Name இல் சொடுக்கலாம்.
04:55 மேலும் அடுக்குதல் கீழிறங்கு வரிசையா அல்லது மேலேறு வரிசையா என்று நிர்ணயிக்கலாம்.
05:04 Ascending தேர்வில் சொடுக்கலாம்.
05:06 அடுத்த படி...
05:11 படி 3 - Search Conditions.
05:16 இந்த படி விடையை சில நிபந்தனைகளால் கட்டுப்படுத்த உதவுகிறது.
05:22 உதாரணமாக விடை R எழுத்தில் ஆரம்பிக்கும் member பெயர்களை மட்டும் காட்ட வேண்டும் எனலாம்.
05:34 இதற்கு, Fields கீழிறங்கும் பெட்டியையும் பின் Members.Name ஐயும் சொடுக்க வேண்டும்.
05:45 இப்போது, Condition drop down box ஐ சொடுக்குக.
05:50 இங்கே பலவித நிபந்தனைகளை காணலாம்.
05:58 'Like' மீது சொடுக்குகிறோம்.
06:02 Value text box இல் ‘capital R’ மற்றும் ஒரு ‘percentage symbol’ ஐ type செய்யலாம்.
06:13 இப்படி எளிய மற்றும் சிக்கலான நிபந்தனைகளை நம் query இல் நுழைக்க முடியும்.
06:22 இப்போது எல்லா உறுப்பினர்களையும் பட்டியலிட 'R%' value text box இலிருந்து நீக்கிவிட்டு Next மீது சொடுக்கலாம்.
06:38 படி 7 க்கு தாவி வந்துவிட்டோம் என்பதை கவனிக்க.
06:42 ஏனெனில் ஒரு எளிய query ஐ ஒரே ஒரு table இல் உருவாக்குகிறோம்.
06:50 மேலும் நம் queries விவரங்களை தரும், சுருக்கங்களை அல்ல.
06:56 சுருக்க queries data, aggregate functionகள் மற்றும் by grouping இலிருந்து தரப்படுகின்றன.
07:05 சில உதாரணங்கள் - எல்லா உறுப்பினர்கள், அல்லது எல்லா புத்தகங்களின் மொத்த விலை.
07:13 இவற்றை பின்னால் பார்க்கலாம்.
07:18 இப்போது இங்கே மாற்றுப்பெயர்களை அமைக்கலாம்.
07:25 அதாவது கிடைக்கும் விடை பட்டியலில் friendly மற்றும் விவரமான labels அல்லது தலைப்புகளை தரலாம்.
07:32 ஆகவே 'Name' field க்கு மாற்றுப்பெயர் 'Member Name' மற்றும் 'Phone' field க்கு மாற்றுப்பெயர் 'Phone Number' என வைப்போம்.
07:45 இந்த புது மாற்றுப்பெயர்களை இந்த இரண்டு text boxகளில் இட்டு பின் Next ஐ சொடுக்கலாம்.
07:57 இப்போது எட்டாவது படி
08:01 இங்கே நம் எளிய query க்கு பொருத்தமான பெயரை கொடுக்கலாம்.
08:10 'List of all members and their phone numbers' என 'Name of the Query’ label எதிரில் உள்ளிடலாம்.
08:21 இப்போது காண்பது நம் Wizardயில் இட்ட தேர்வுகளின் பட்டியல்.
08:27 இங்கிருந்து மேலே எப்படி போவது?
08:31 வலது பக்கம் மேலே 'Display Query' தேர்வை சொடுக்கி, Finish button ஐயும் சொடுக்கலாம்.
08:40 Wizard window மூடப்பட்டு விட்டது. மேலும் 'List of all members and their phone numbers' என்ற ஒரு புதிய window திறந்துள்ளது.
08:52 உறுப்பினர்கள் table இல் உள்ளிட்ட எல்லா நான்கு உறுப்பினர்கள் பெயர்களையும் அவர்களுடைய phone number களுடன் காண்கிறோம்.
09:04 மேலும் அவை அகர வரிசையில் மேலேறும் வரிசையில் அமைந்துள்ளன.
09:13 ஆகவே இதுவே நம் எளிய query.
09:18 இதோ ஒரு பயிற்சி.
09:20 எல்லா புத்தகங்களையும் மேலேறு வரிசையில் காட்ட ஒரு query ஐ உருவாக்குக.
09:30 இதில் எல்லா field களையும் சேர்க்கவும்.
09:32 அதற்கு ‘List of all books in the Library’ என பெயரிடுக.
09:38 இத்துடன் Baseஇல் Wizard ஐ பயன்படுத்தி queries உருவாக்கம் மீதான Tutorial முடிகிறது.
09:45 சுருங்கச்சொல்ல கற்றது: queries Wizardயை பயன்படுத்தி எளிய உசாவல்கள் உருவாக்கம்; field களை தேர்வு செய்தல்; field களை வரிசைப்படுத்துதல்; மற்றும் queries க்கு search criteria அல்லது conditions தருதல்.
10:00 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:11 இந்த திட்டம் http://spoken-tutorial.org ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது.
10:17 மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
10:22 தமிழாக்கம் கடலூர் திவா, நன்றி

Contributors and Content Editors

Chandrika, Pravin1389, Priyacst