LaTeX/C2/Tables-and-Figures/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
0:00 அட்டவணைகள் மற்றும் படங்கள் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.
0:05 இந்த டுடோரியலில் இரண்டு நோக்கங்கள் உள்ளன.
0:08 முதலாவது அட்டவணைகளை டேபுலார் சூழலைக் கொண்டு உருவாக்குவது; இரண்டாவது டேபிள் சூழலை கொண்டு அட்டவணைகளை லேடக் ஆவணங்களில் உள்ளிடுவது
0:22 இதே போல படங்களையும் உள்ளிடலாம்.
0:27 title பக்கத்தை உருவாக்குவதை முன்னேயே கண்டோம்.
0:32 இதில் title, author குறித்த தகவல் மற்றும் creative commons, copyright தகவல் ஆகியன உள்ளன. இவை சமன்பாடுகள் குறித்த டுடோரியலில் விளக்கப்பட்டன.
0:45 இந்த date கட்டளையால் இன்றைய தேதி இங்கே வருகிறது.
0:51 இரண்டாம் பக்கத்துக்கு போகலாம்.
0:58 இப்போது படிப்படியாக எப்படி இந்த அட்டவணையை உருவாக்குவது என்று காணலாம்.
1:05 இதை சுத்தமாக துடைத்துவிட்டு ஆரம்பிக்கலாம்.
1:08 இந்த கட்டளைகளை நீக்குகிறேன்.
1:19 இதை தொகுக்கலாம்; சுத்தமான கரும்பலகையுடன் ஆரம்பிக்கலாம்.
1:29 begin tabular மற்றும் end tabular கட்டளைகளை பயன்படுத்தி tabular சூழல் உருவாக்கப்படுகிறது.
1:38 அதை இங்கே செய்கிறேன்
2:03 begin tabular க்கு அடுத்துள்ள முள் அடைப்புக்குறிகளுக்குள் உள்ள ‘r r’ எழுத்துருக்கள் இரண்டு நெடுபத்திகள் உள்ளன மற்றும் அவை வலது ஒழுங்கு செய்யப்பட்டன என்று காட்டுகின்றன.
2:14 முதல் வரியில் உள்ளீடு , mango மற்றும் mixed.
2:20 இரண்டு பின்சாய் கோடுகள் அடுத்த வரியை காட்டுகின்றன.
2:24 அடுத்த வரியை உள்ளிடலாம்.
2:28 Jackfruit.
2:32 Kolli hills.
2:37 Banana.
2:40 Green.
2:42 இந்த tabular சூழலை முடிக்கிறேன்
2:47 இதை தொகுக்கலாம்.
2:51 இது இங்கே வந்துவிட்டது.
2:56 நமக்கு 3 க்கு 2 அட்டவணை ஒன்று கிடைத்துவிட்டது, மூன்றுவரிகள் மற்றும் 2 நெடுபத்திகள்.
3:02 இரண்டு நெடுபத்திகளும் வலது ஒழுங்கு செய்யப்பட்டன; r r எழுத்துருக்கள் இதை குறிக்கின்றன.
3:09 இரண்டு நெடுபத்திகளையும் பிரிக்க ஒரு செங்குத்து வரியை இடுகிறோம் - நெடுபத்தி ஒழுங்கு எழுத்துருக்களுக்கு நடுவில்.
3:20 ஆகவே இந்த செங்குத்து வரியை இடுகிறேன்.
3:23 இதை சேமிக்கலாம். இதை தொகுக்கலாம்.
3:28 செங்குத்து வரிகள் வந்துவிட்டன.
3:31 கடைசியிலும் செங்குத்து வரிகள் வேண்டுமானால் பொருத்தமான இடத்தில் அவற்றை இடவும்.
3:42 அவற்றை உள்ளிட்டு சேமித்து தொகுக்கிறேன்.
3:48 ஆகவே இவை வந்துவிட்டன.
3:50 உண்மையில் இன்னும் அதிக செங்குத்து வரிகளை உள்ளிடலாம்.
3:54 ஆரம்பத்தில் இன்னொரு செங்குத்து வரி.....
4:02 இதோ பாருங்கள்! இன்னொரு இரண்டாவது வரி வந்துவிட்டது.
4:07 இரண்டு செங்குத்து வரிகளை பாருங்கள்.
4:11 இப்போது வித்தியாசமான ஒழுங்குகளை பார்க்கலாம்.
4:15 இரண்டாவது நெடுபத்தி மையப்படுத்தி ஒழுங்கு செய்யப்பட்டது என சொல்வதற்கு இங்கே ஒரு 'சி' ஐ இடலாம்.
4:27 இப்போது மையப்படுத்தி ஒழுங்கு செய்யப்பட்டது.
4:30 முதல் நெடுபத்தியை இடது ஒழுங்கு செய்யப்பட்டதாக ஆக்கலாம்.
4:34 அது வலது ஒழுங்கு செய்யப்பட்டதாக உள்ளது. இடது ஒழுங்கு செய்யப்பட்டதாக ஆக்கலாம்.
4:40 L, சேமி,
4:43 தொகு.
4:46 இப்போது அது இடது ஒழுங்கு செய்யப்பட்டது .
4:50 பத்திகளை கிடைமட்ட வரிகளால் பிரிக்கலாம்.
4:56 இங்கே ஒரு hline எழுதலாம்.
5:00 அடுத்து என்ன ஆகிறது என்று பார்க்கலாம்.
5:04 மேல் வரிக்கு அது ஒரு கோட்டை இட்டது.
5:07 இங்கே இன்னொரு hline,
5:16 இன்னொரு கோட்டை இட்டது.
5:17 ஆகவே இதை முடித்துவிடலாம்.
5:19 இன்னொரு hline இடுகிறேன்.
5:22 இங்கே இரண்டு பின்சாய் கோடுகளால் வரி முறிவு, பின்னர் hline .
5:30 hline சொல் தொடரின் ஆரம்பத்தில் இருக்கும்.
5:36 ஆகவே கிடைமட்ட வரிகளை முடித்துவிட்டேன்.
5:42 மேலும் மூன்று நெடுபத்திகளையும் இன்னும் ஒரு பத்தியையும் சேர்க்கலாம்.
5:49 ஆகவே என்ன செய்கிறேன், இங்கு வந்து, எழுதுகிறேன் C , C, R.
6:01 மேலும் மூன்று நெடுபத்திகளை சேர்த்தாயிற்று, முதல் இரண்டும் மைய ஒழுங்கு செய்யப்பட்டது, மூன்றாவது வலது ஒழுங்கு செய்யப்பட்டது .
6:08 அப்புறம் நான் சொல்ல விரும்புவது:
6:15 fruit
6:19 type
6:22 number of units
6:26 cost per unit
6:30 cost Rupees
6:38 hline .
6:41 ஆகவே mixed
6:43 இருபது
6:45 எழுபத்தைந்து ரூபாய்கள்
6:47 ஆயிரத்து ஐநூறு ரூபாய்கள்.
6:51 Jackfruit
6:54 பத்து
6:57 ஐம்பது ரூபாய்கள்
6:59 ஐநூறு ரூபாய்கள்.
7:01 Banana green
7:05 பத்து டஜன்கள்
7:07 இருபது ரூபாய்கள் ஒரு டஜனுக்கு, 200 ரூபாய்கள் மொத்தம் .
7:12 இதை தொகுத்து பார்க்கலாம்.
7:20 அட்டவணையை உருவாக்கிவிட்டது.
7:25 வலது ஒழுங்கு செய்வதன் அவசியத்தை கவனிக்கவும். அப்போதுதானே கூட்டல் சுலபமாக இருக்கும்
7:34 நெடுபத்திகளை இரண்டாக பிரிக்கப்பார்க்கலாம்.
7:39 உதாரணமாக, இங்கே இந்த இரண்டு நெடுபத்திகளில் பழங்களின் விவரமும் இந்த மூன்றில் விலை கணக்கும் இருக்கின்றன.
7:48 இதை multi-column கட்டளையின் உதவியுடன் செய்யலாம்.
7:55 பின் வருமாறு செய்கிறேன்.
7:59 Multi- column
8:04 take 2
8:06 மைய ஒழுங்கு செய்யப்பட்டது
8:10 Fruit Details.
8:12 முதல் இரண்டு முடிந்தது. அடுத்த நெடுபத்தி என்று காட்ட ஒரு tab இடுகிறேன்.
8:19 அடுத்த வரிக்கு போகலாம்.
8:24 Multi-column, மூன்று, இதுவும் மைய-ஒழுங்கு செய்யப்பட்டது .
8:29 Cost … முள் அடைப்புக்குறிகளுக்குள் – cost calculations
8:37 slash hline .
8:44 முடிந்தது.
8:46 முதல் இரண்டில் பழங்களின் விவரமும் அடுத்த மூன்றில் விலை கணக்கும் இருக்கின்றன.
8:52 இங்கே செங்குத்து வரிகள் இல்லை, ஏனென்றால் நான் லேடக்குக்கு அதை செய்யச் சொல்லவில்லை. அதையும் செய்யலாம்.
8:59 இங்கே இரண்டு செங்குத்து வரிகள், இங்கே ஒரு செங்குத்து வரி .
9:05 இதற்கு முன் அது இருக்கிறது. ஆகவே இங்கே மட்டும் இடலாம்.
9:11 என்ன ஆகிறது என்று பார்க்கலாம்.
9:16 இப்போது செங்குத்து வரிகளும் வந்துவிட்டன.
9:24 2, 3 இரண்டும் ஒற்றை எழுத்துரு argument கள். ஆகையால் முள் அடைப்புக்குறிகள் இல்லாமலே அவற்றை எழுதலாம்.
9:40 அதுவும் வேலை செய்கிறது.
9:42 சில சமயம் கிடைமட்ட வரிகளை சில நெடுபத்திகளுக்கு இடையே மட்டுமே இட வேண்டி இருக்கிறது.
9:52 இதை பின் வருமாறு விளக்கலாம்.
9:54 இந்த mango வை பிரிக்கலாம். mixed என்பதற்கு பதில் இதை மல்கோவா எனலாம்.
10:05 பின் பதினெட்டு கிலோகிராம்கள்
10:13 ஐம்பது கிலோகிராம்கள்
10:17 இதை நீக்குகிறேன் சரி.
10:24 இங்கே இதை Alfanso எனலாம்.
10:33 இரண்டு டஜன்கள்
10:35 முன்னூறு ரூபாய்கள் ஒரு டஜனுக்கு, ஆக மொத்தம் ஆயிரத்தைனூறு.
10:44 இதை சேமித்து தொகுக்கலாம். நடப்பதை பார்க்கலாம்.
10:50 இதோ கிடைத்துள்ளது. என்ன நடந்தது என்றால் இந்த வரி இங்கே வந்துள்ளது. இங்கேயும். இதுவும் இதுவும் எனக்கு வேண்டாம். ஆகவே இதை சரி செய்ய சொல்ல வேன்டும், இந்த கிடைமட்ட வரிக்கு பதில் எனக்கு நெடுபத்திகள் 2 மற்றும் 4 நடுவில் சி லைன் வேண்டும் எனலாம்.
11:19 ஆகவே நான் அதை இங்கு செய்திருக்க வேண்டும் .
11:22 ஆகவே இதை மீண்டும் இங்கே வைக்கிறேன்.
11:27 hline இங்கே.
11:30 Cline 2 to 4.
11:40 இப்போது கோடு நெடுபத்திகள் இரண்டு மற்றும் நான்கு நடுவில் மட்டுமே உள்ளது.
11:52 ஆகவே இந்த நடு வரி mangoes ஐ இரண்டு பிரபலமான மாம்பழங்களாக பிரித்துவிட்டது.
11:58 இந்த உதாரணத்தை , இந்த அட்டவணையை ஒரு கடைசி வரியுடன் முடிக்கலாம்.
12:04 மொத்தமாக பார்க்கப்போனால்...
12:11 Multi-column நான்கு
12:14 2 செங்குத்து வரிகள், வலது-ஒழுங்கு செய்யப்பட்டது
12:20 செங்குத்து பிரிப்பி
12:24 total cost
12:27 Rupees.
12:32 இதை மூடவும்.
12:35 அடுத்த tab
12:38 2200
12:42 hline .
12:48 முடிந்துவிட்டது.
12:50 டுடோரியல் ஆரம்பத்தில் நாம் பார்த்த அட்டவணை இதுதான்.
12:59 tabular சூழலில் உருவாக்கிய அட்டவணைகளுடன் எப்படி வேலைசெய்வது?
13:04 லேடக் tabular சூழலில் உருவாக்கிய அட்டவணையை ஒரே ஒரு ஆப்ஜக்டாக கருதுகிறது.
13:10 உதாரணமாக, இப்படி எழுதினால் ,
13:17 this is
13:24 an
13:27 example ....
13:39 This is an example table
13:47 என்ன நடக்கிறது? இந்த அட்டவணை இந்த இரண்டுக்கும் நடுவே மாட்டிக்கொண்டது. This is an example முதல், example table
13:56 இந்த டேபிள் நடப்பு வாக்கியமாகிவிட்டது.
14:01 ஒரு centre சூழலை பயன்படுத்தி அட்டவணைகளை அமைக்கலாம்.
14:05 அட்டவணை சூழலில் அதை அமைப்பது இன்னும் பரவலான வழக்கம். அதை காட்டலாம்.
14:18 ஆரம்பிக்க...
14:21 டேபிள்
14:25 இதை மூடலாம்.
14:33 இப்போது இது காட்டுவது ‘this is an example table’.
14:36 இந்த வாக்கியம் தனியாக வருகிறது. எதெல்லாம் இந்த ‘begin’ மற்றும் ‘end’ table கட்டளைகளுக்கு நடுவே வந்ததோ அவை தனி அட்டவணையாக அமைக்கப்பட்டது.
14:50 வேறு விதமாக சொல்ல அட்டவணை உரையின் நடுவே அமைந்தாலும் அது தனியாக வைக்கப்பட்டது.
14:57 ஆனால் இது மையத்தில் இல்லை.
14:59 ‘centering’ கட்டளையை தரலாம்.
15:08 இது மையத்தில் அமைந்துவிடும்.
15:17 இப்போது ஒரு தலைப்பை உருவாக்கலாம்.
15:20 table தலைப்பு table க்கு முன் அமைக்கப்படும்.
15:23 இங்கே ஒரு தலைப்பு இடுகிறேன்.
15:31 caption – cost of fruits in India.
15:42 ஆகவே தலைப்பு வந்துள்ளது.
15:44 இது மிகவும் நெருக்கமாக இருக்கிறது. எனக்கு கொஞ்சம் வெற்றிடம் வேண்டும்.
15:47 இதை செய்ய நான் தருவது vspace கட்டளை - 1 ex.
15:57 இது ‘x’ எழுத்துரு எடுத்துக்கொள்ளக்கூடிய இடம்.
16:01 ஆகவே இந்த செங்குத்து வெற்றிடத்தை விட்டுள்ளேன்.
16:04 இப்போது சரியாக இருக்கிறது.
16:06 முன்னிருப்பாக, லேடக் அட்டவணைகளை பக்கத்தின் உச்சியில் வைக்கும்.
16:11 இந்த இட அமைப்பு தானியங்கியாக நடக்கிறது.
16:14 இந்த அட்டவணை அடுத்து கிடைக்கும் இடத்துக்கு நகர்த்தப்படும்.
16:18 இதை விவரிக்க ஆவணத்தின் கீழிருந்து கொஞ்சம் உரையை வெட்டி ஒட்டலாம்.
16:25 இதை நீக்குகிறேன்
16:28 இதை நீக்குகிறேன்,
16:38 சரி.
16:43 இங்கு பழங்களைப்பற்றி சில விஷயங்கள் எழுதப்பட்டுள்ளது.
16:49 இதன் மேலே போய்...
16:55 ஒட்டலாம்.
16:58 இதை தொகுக்கலாம்.
17:01 முன் போல அட்டவணை பக்கத்தின் உச்சியில் உள்ளது.
17:06 இன்னும் கொஞ்சம் உரையை ஒட்டலாம்.
17:12 நான்கு பிரதிகள்.
17:16 என்னவாயிற்று?
17:26 இந்த அட்டவணை இரண்டாவது பக்கத்துக்கு மிதந்து சென்றுவிட்டது.
17:31 அங்கே வேறு எதுவும் இல்லை என்பதால் பக்கத்தின் நடுவில் தோன்றுகிறது.
17:35 இன்னும் கொஞ்சம் உரையை, இன்னொரு பிரதியை ஒட்டலாம்
17:43 இப்போது என்ன ஆயிற்று?
17:49 இதுதான் title பக்கம், இது உரை பக்கம், இந்த அட்டவணை பக்கத்தின் உச்சிக்கு மிதந்து சென்றுவிட்டது.
18:01 சமன்பாடுகள் போலவே இங்கும் நாம் label களை உருவாக்கி மேற்கோள் காட்ட பயன்படுத்தலாம்.
18:06 உதாரணமாக
18:12 caption கட்டளையின் கீழே இந்த கட்டளையை கொடுத்தால்....
18:15 caption கட்டளையின் கீழேதான் இந்த கட்டளையை கொடுக்க வேண்டும். ஏனெனில் caption கட்டளைதான் அட்டவணை எண்களை உருவாக்குகிறது.
18:21 உதாரணமாக, இங்கே அட்டவணை 1 என்பது caption கட்டளையால் தானியங்கியாக உருவாக்கப்பட்டது.
18:26 இதற்கு அடுத்து label ஐ இட்டால் இந்த label, ... caption கட்டளையால் உருவாக்கப்பட்ட எண்னை மேற்கோள் காட்டும்.
18:33 ஆகவே label
18:40 fruits.
18:43 ஆகவே திரும்பிப்போய் இப்படி சொல்லுகிறேன்...
18:48 இந்த வரியை இங்கு சேர்க்கிறேன்.
18:53 The cost of these fruits is shown in table... reference, இங்கே label ஐ தர வேண்டும். அது இதுவாகவே இருக்க வேண்டும்.
19:08 tab fruits
19:12 இதை தொகுக்கலாம். வந்துவிட்டது...
19:17 முதல் தொகுப்பில் variable அமைக்கப்படவில்லை.
19:22 ஆகவே மறுபடி தொகுக்கலாம், இப்போது இது வந்துள்ளது.
19:28 அட்டவணைகளின் பட்டியலை தானியங்கியாக உருவாக்கலாம்.
19:33 எப்படி என விவரிக்கலாம்.
19:37 ‘make title’ க்குப்பிறகு , இந்த கட்டளை தேவை.. ‘list of tables’ - ஒரே சொல்...
19:50 என்ன நடந்தது?
19:53 அட்டவணைகளின் பட்டியலை உருவாக்கிவிட்டது.
19:57 சாதாரணமாக தொகுத்தலை இரு முறை செய்தால்தான் அட்டவணை எண்கள் சரியாக வரும்.
20:03 இதோ வருகிறது. இதன்படி அட்டவணை பக்கம் இரண்டில் இருக்கிறது. ஆனால் அது பக்கம் 3 இல் இருப்பது நமக்குத்தெரியும்.
20:13 ஆகவே பக்கம் 3 இல் இருக்கிறது.
20:15 பின் சென்று இதை மறு தொகுக்கலாம்.
20:20 இப்போது அது பக்கம் 3 இல் இருக்கிறது.
20:26 இதை முன்னமேயே விவரித்து இருக்கீறேன்.
20:29 சரி அட்டவணைகள் குறித்த கடைசி பகுதிக்கு வந்துவிட்டோம்.
20:36 கட்டளை ‘include graphics’ ஐ பயன்படுத்தி படங்களை சேர்ப்பதை பார்க்கலாம்.
20:48 இதற்கு ‘graphicx’ என்ற பேக்கேஜை சேர்க்க வேண்டும்.
21:00 இதன் கீழே போய்,
21:08 எழுதுகிறேன், கட்டளை பின்வருமாறு. Begin, figure,
21:14 include graphics,
21:19 width சமக்குறி... லைன் விட்த்...
21:29 என்னிடம் iitb.pdf உள்ளது...
21:36 இதோ வருகிறது..
21:38 வரியின் அகலத்துக்கு சமமாக படத்தின் அகலம் வருமாறு அதை சேர்க்கிறேன். .
21:51 இந்த figure ஐ முடிக்கிறேன்... .
21:55 இதை தொகுக்கலாம்.
22:01 இதோ வந்துள்ளது.
22:04 இதுவும் பக்கத்தின் உச்சியில் அமைந்துள்ளது.
22:09 என்ன செய்கிறேன் என்றால்... இது முழு வரி அகலத்தை படத்துக்கு அமைக்க வேன்டும் என்றால்...
22:17 ஒரு வேளை புள்ளி ஐந்து என அமைத்தால் , அது வரியின் அகலத்தில் பாதி.
22:26 அப்போது அது சின்னதாக ஆகிவிடுகிறது.
22:29 இது இடது ஒழுங்கு செய்யப்பட்டது .
22:32 அட்டவணை போலவே இங்கு ‘centering’ என்று சொல்லமுடியும்.
22:38 பக்க நடுவில் இது மையப்படுத்தப்படும்.
22:49 நான் ஒரு தலைப்பும் இதற்கு உருவாக்கமுடியும். படத்தை சேர்த்தபின் பட தலைப்புகள் உருவாக்கப்படும்.
23:00 ‘Golden Jubilee logo of IIT Bombay.
23:13 முன் போல் ‘ref’ கட்டளையை பயன்படுத்தி label உருவாக்கி அதை கொண்டு மேற்கோள் காட்டலாம்.
23:28 அட்டவணைகள் பட்டியலுடன் படங்கள் பட்டியலையும் தோன்ற வைக்கலாம்.
23:36 படங்கள் பட்டியல் வேண்டுமானால்...
23:45 இதை தொகுக்கலாம்.
23:48 இதை இரு முறை தொகுக்கலாம்.
23:51 இதோ.. படங்கள் பட்டியல் தானியங்கியாக வருகிறது.
23:56 எல்லா படங்களின் தலைப்புகளும் இங்கே வரும்.
24:08 கடைசியாக ஒன்று இங்கே காட்டுகிறேன்.
24:11 அதுதான் படங்களை எப்படி சுழற்றுவது என்பது.
24:15 angle option ஆல் இது சாத்தியம்.
24:21 ஒரு வேளை தொன்னூறு பாகைகள் சுழற்ற வேண்டுமானால்...
24:25 இந்த figure க்கு போகலாம்.
24:29 இதை தொகுக்கலாம்.
24:32 ஆகவே இது தொன்னூறு பாகைகள் சுழன்றுவிட்டது.
24:37 minus தொன்னூறு பாகைகள் சுழற்ற ...
24:42 இப்படித்தான் படங்களை சேர்க்க வேண்டும்.
24:48 உங்களிடம் iitb.pdf இருக்கும் என்று கொள்கிறேன்.
24:53 இத்துடன் நாம் இந்த டுடோரியல் முடிகிறது.
24:55 லேடக்கின் ஆரம்ப கால பயனர்கள் மூல ஆவணத்தை அடிக்கடி தொகுக்க வேண்டும். அதனால் அவர்கள் உள்ளிட்டது சரி பார்க்கப்படும்.
25:05 நன்றி

Contributors and Content Editors

Chandrika, Priyacst