KiCad/C2/Designing-circuit-schematic-in-KiCad/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | வணக்கம், “Kicadல் circuit schematicஐ வடிவமைத்தல்", குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு. |
00:08 | 'PCB'ஐ வடிவமைப்பது சம்பந்தப்பட்ட வழிமுறைகளை காண்போம். |
00:12 | முதல் படி, விரும்பிய circuitக்கான schematicஐ உருவாக்குவது. |
00:16 | இரண்டாம் படி, netlistஐ உருவாக்குவது. |
00:19 | மூன்றாம் படி, footprintளுடன், componentகளை map செய்வது. |
00:22 | மற்றும் நான்காம் படி, circuitக்கு, board layoutஐ உருவாக்குவது. |
00:27 | இந்த டுடோரியலில், முதல் படியைக் கற்போம், |
00:32 | விரும்பிய circuitக்கான schematicஐ உருவாக்குவோம். |
00:35 | இந்த டுடோரியலுக்கு நாம் பயன்படுத்துவது, Operating systemஆக, Ubuntu 12.04 உடன் |
00:40 | KiCad பதிப்பு 2011 hyphen 05 hyphen 25. |
00:49 | இந்த டுடோரியலுக்கு முன் நிபந்தனையாக, அடிப்படை electronic circuitகள் பற்றி தெரிந்து இருக்க வேண்டும். |
00:56 | இந்த டுடோரியலுக்கு, உதாரண circuitஆக, Astable multivibratorஐ நாம் பயன்படுத்துவோம். |
01:04 | KiCadஐ தொடங்க- Ubuntu desktop screenன் மேல் இடது மூலைக்கு செல்லவும். |
01:08 | முதல் icon, Dashhomeஐ க்ளிக் செய்யவும். |
01:12 | Search barல், டைப் செய்க: 'KiCad', பின் Enterஐ அழுத்தவும். |
01:19 | திரையில், KiCad main window தெரியும். |
01:22 | Ubuntu 12.04ல், KiCadன் menu bar, Ubuntu desktopன், மேல் panelலில் தெரியும். |
01:30 | புது projectஐ தொடங்க, முதலில் File, பிறகு New மீது க்ளிக் செய்யவும். |
01:35 | உங்கள் projectக்கு ஒரு பெயரை கொடுக்கவும். உதாரணமாக, "project1". |
01:42 | Project, '.pro' extentionஉடன் சேமிக்கப்படுவதை கவனிக்கவும். |
01:47 | சிறந்த பார்வைக்கு, இந்த windowஐ resize செய்கிறேன். |
01:52 | உங்கள் project எங்கு சேமிக்கப்படுகிறது என்பதை கவனித்து, தேவையெனில், directoryஐ மாற்றவும். |
01:58 | Saveஐ க்ளிக் செய்யவும். |
02:01 | EESchemaஐ பயன்படுத்தி, KiCadல், Circuit schematics செய்யப்படுகின்றன. |
02:06 | KiCadல், 'EESchema'ஐ எப்படி தொடங்குவது என காட்டுகிறேன். |
02:10 | KiCad main windowன், மேல் panelலில் இருக்கும் முதல் tab, 'EESchema' அல்லது schematic editor எனப்படும். |
02:19 | 'EESchema' tabஐ க்ளிக் செய்தால், schematic editor திறக்கும். |
02:23 | Schematicஐ கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறும் ஒரு Info dialog-box தோன்றும். |
02:28 | OKஐ க்ளிக் செய்யவும். |
02:32 | Circuit schematicsஐ இங்கு உருவாக்குவோம். |
02:35 | 'EESchema' windowவின் வலது panelக்கு செல்லவும். |
02:38 | Place a component பட்டனை க்ளிக் செய்யவும். |
02:42 | இப்போது, வெற்று 'EESchema' windowஐ க்ளிக் செய்யவும். |
02:46 | Component selection window திறக்கும். |
02:49 | EESchema windowவில், 555 timer IC schematicஐ வைப்போம். |
02:56 | Component selection windowவின், Name fieldல், "555" என டைப் செய்து, OKஐ க்ளிக் செய்யவும். |
03:05 | தேடுதலின் முடிவை, LM555N என அது காட்டும். |
03:11 | இந்த முடிவைத் தேர்ந்தெடுத்து, OKஐ க்ளிக் செய்யவும். |
03:14 | EESchema windowவில், componentன் schematic தெரியும். |
03:19 | அது உங்கள் cursorஉடன் கட்டப்படும். |
03:22 | சிங்கிள் க்ளிகினால், componentஐ, திரையின் நடுவில் வைக்கவும். |
03:27 | சிறந்த பார்வைக்கு, Zoom in மற்றும் zoom out செய்ய, உங்கள் mouseன் scroll பட்டனை பயன்படுத்தவும். |
03:35 | Zoom in மற்றும் zoom out செய்யப்பட வேண்டிய component மீது, cursorஐ வைக்கவும். |
03:39 | Zoom in மற்றும் zoom out செய்ய, முறையே, 'F1' மற்றும் 'F2' keyகளையும் பயன்படுத்தலாம். |
03:46 | '555 IC'ன் மீது, 'VCC மற்றும் 'GND' அதாவது, ground terminalஐ, நீங்கள், காணலாம் அல்லது காணாமலும் போகலாம். |
03:56 | அதை, காணவில்லையெனில், EESchema windowவின், இடது panelக்கு சென்று, |
04:00 | Show hidden pins பட்டனை க்ளிக் செய்யவும். |
04:04 | இப்போது, EESchema windowவில், ஒரு resistorஐ வைப்போம். |
04:09 | Place a component option, நம்மால், முன்பே தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டது. |
04:13 | அதனால், EESchemaஐ க்ளிக் செய்தால், component selection windowஐ நீங்கள் காணலாம். |
04:21 | Name fieldல், டைப் செய்க: 'r', பின் OKஐ க்ளிக் செய்யவும். |
04:26 | EESchemaல் தோன்றும் Resistor schematic, உங்கள் cursorஉடன் கட்டப்படும். |
04:32 | சிங்கிள் க்ளிகினால், EESchema மீது எங்கேனும், resistorஐ வைக்கவும். |
04:37 | மேலும் இரு resistorகள் தேவைப்படுகின்றன. |
04:39 | Place a component பட்டனை பயன்படுத்தி, இரு resistorகளை பெறலாம். |
04:42 | ஆனால், நம்மிடம் ஏற்கெனவே ஒரு resistor உள்ளதால், ஒரு componentஐ copy செய்யக் கற்போம். |
04:48 | Componentஐ copy செய்ய, componentஐ ரைட்-க்ளிக் செய்து, Copy Componentஐ தேர்வு செய்யவும். |
05:01 | Componentன் ஒரு copy, உங்கள் cursorஉடன் கட்டப்படும். |
05:05 | சிங்கிள் க்ளிகினால், EESchemaல் எங்கேனும், resistorஐ வைக்கவும். |
05:11 | Keyboard shortcut 'c'ஐ பயன்படுத்தி, இதை மேலும் விரைவாக செய்யலாம். |
05:16 | இதற்கு, component மீது cursorஐ வைத்து, பின் 'c'ஐ அழுத்தவும். |
05:22 | மீண்டும், அது cursorஉடன் கட்டப்படும். |
05:27 | அதை வைக்க, ஒரு முறை க்ளிக் செய்யவும். |
05:30 | Shift மற்றும்? (question mark) keyஐ அழுத்துவதன் மூலம், shortcutகளின் ஒரு பட்டியலை நாம் பெறலாம். |
05:36 | Keyboard shortcutகளின் பட்டியல் இதோ. |
05:40 | இந்த windowஐ மூடவும். |
05:43 | Component selection windowஐ திறக்க, EESchema windowஐ க்ளிக் செய்யவும். |
05:49 | அடுத்து, நமக்கு, electrolytic மற்றும் ceramic என்று இரண்டு capacitorகள் தேவை. |
05:53 | Electrolytic capacitorஐ சேர்க்க, டைப் செய்க: "cp1", பின் OKஐ அழுத்தவும். |
06:00 | Ceramic capacitorஐ சேர்க்க, டைப் செய்க: 'c', பின் OKஐ அழுத்தவும். |
06:06 | 'LED' எனப்படும் Light Emitting Diode ஒன்றும் நமக்கு தேவை. |
06:10 | Component selection windowவில், டைப் செய்க: led, பின் OKஐ அழுத்தவும். |
06:17 | இப்போது, நமக்கு, மின்சார வழங்கல் , அதாவது, 'Vcc' மற்றும் Ground terminalகள் தேவை. |
06:22 | EESchemaவின் வலது panelலில், Place a power port பட்டனை க்ளிக் செய்யவும். |
06:29 | Component selection windowஐ திறக்க, EESchema ஐ ஒரு முறை க்ளிக் செய்யவும். |
06:34 | List All பட்டனை க்ளிக் செய்தால், பல்வேறு மின்சார குறியீடுகளின் பட்டியலை காணலாம். |
06:40 | +5V (plus 5 volt)ஐ தேர்வு செய்து, OKஐ க்ளிக் செய்யவும். |
06:48 | EESchema windowவின் மீது, சிங்கிள் க்ளிகினால், componentஐ வைக்கவும். |
06:52 | அதே போல், ground terminalஐ பெற, |
06:54 | பட்டியலில் இருந்து, groundஐ தேர்வு செய்து, OKஐ க்ளிக் செய்யவும். |
07:01 | Ground terminalஐ நான் தேர்வு செய்கிறேன். |
07:08 | வெளிப்புற மின்சார வழங்கலை இணைக்க, நமக்கு, ஒரு connector தேவை. |
07:14 | Component selection windowஐ திறக்க, EESchema ஐ க்ளிக் செய்யவும். |
07:19 | List All பட்டனை க்ளிக் செய்தால், ஒரு பட்டியலை காணலாம். |
07:24 | Conn optionஐ தேர்வு செய்து, OKஐ க்ளிக் செய்யவும். |
07:31 | கீழே வந்து, பட்டியலில் இருந்து, CONN_2ஐ தேர்வு செய்து, OKஐ க்ளிக் செய்யவும். |
07:41 | ஒரு இரண்டு terminal connector தோன்றும். அது உங்கள் mouse pointerஉடன் கட்டப்படும். |
07:48 | அதை வைக்க, ஒரு முறை க்ளிக் செய்யவும். |
07:56 | இப்போது, componentகளை, அதற்கான இடங்களுக்கு நகர்த்தி, அவற்றை ஒழங்குபடுத்துவோம். |
08:01 | Componentகளை நகர்த்த, 'm' shortcut keyஐ பயன்படுத்துவோம். |
08:04 | Componentஐ நகர்த்த, mouse-pointerஐ component அதாவது இங்கே 'resistor' மீது வைத்து, பின் 'm'ஐ அழுத்தவும். |
08:15 | EESchemaவில், சிங்கிள் க்ளிக் செய்து, IC 555ன் வலது பக்கத்தில், இந்த resistorஐ வைப்போம். |
08:28 | 'LED'ஐ சுழற்றி, மேலும் அதை செங்குத்தாக வரிசைப்படுத்துவதற்கு, நாம், (keyboard) shortcut keyஐ பயன்படுத்துவோம். |
08:40 | Circuit diagramன் படி, componentகளை, wire அல்லது சேர்த்திணைக்க கற்போம். |
08:45 | Componentகளை சேர்த்திணைக்க தொடங்குவோம். |
08:48 | EESchemaவின் வலது panelலில், Place a wire பட்டனை க்ளிக் செய்யவும். |
08:56 | இப்போது, இரண்டு resistorகளை சேர்த்திணைப்போம். |
08:58 | இரண்டு resistorகளின், nodeகளில் ஒன்றை க்ளிக் செய்து, wireஐ நாம் இணைப்போம். |
09:11 | இப்போது, IC 555ன் ஏழாவது pinஐ, இரண்டு resistorகளையும் இணைக்கும், wireஉடன் இணைப்போம். |
09:18 | முதலில், IC 555ஏழாவது pin மீதும், பின், இரண்டு resistorகளையும் இணைக்கும், wire மீதும் க்ளிக் செய்யவும். |
09:30 | இது, nodeஆக தெரியும் ஒரு junctionஐ தானாகவே வடிவமைக்கும். |
09:35 | நான் முன்பே componentகளை சேர்த்திணைத்து, சேமித்துவிட்டேன். |
09:39 | நேரத்தை சேமிப்பதற்கு, முன்பே schematic ஆக்கப்பட்ட இதை, இப்போது திறந்து பயன்படுத்துகிறேன். |
09:44 | File menuவிற்கு சென்று, Openஐ க்ளிக் செய்கிறேன். |
09:53 | ஒரு Confirmation window திறக்கிறது. Yesஐ க்ளிக் செய்யவும். |
10:04 | விரும்பிய directoryல் இருந்து, 'project1.sch'ஐ நான் தேர்வு செய்கிறேன். |
10:18 | முதலில், window ஐ resize செய்கிறேன். |
10:22 | பின், Openஐ க்ளிக் செய்கிறேன். |
10:33 | முன்னர் உருவாக்கிய schematic இதோ. |
10:36 | இப்போது componentகளை annotate செய்யக் கற்போம். |
10:39 | Annotation, ஒவ்வொரு componentக்கும் தனிப்பட்ட அடையாளத்தை கொடுக்கிறது. |
10:43 | Annotate செய்வது, componentகளின் மீதுள்ள கேள்விக் குறிகளுக்கு பதிலாக தனிப்பட்ட எண்களை வைக்கிறது. |
10:50 | EESchemaவின் மேல் panelலில், “Annotate schematic” பட்டனை க்ளிக் செய்யவும். |
10:58 | இது Annotate Schematic windowஐ திறக்கும். |
11:02 | இந்த windowவில், முன்னிருப்பான configurationஐ வைக்கவும். |
11:05 | Annotation பட்டனை க்ளிக் செய்யவும். |
11:09 | Annotate செய்யாத componentகளை மட்டுமே இது annotate செய்யும் என்று இது எச்சரிக்கும். |
11:13 | OKஐ க்ளிக் செய்யவும். |
11:15 | Annotate Schematic windowவின் மீதுள்ள Close பட்டனை க்ளிக் செய்யவும். |
11:20 | Componentகளின் மீதுள்ள கேள்விக் குறிகளுக்கு பதிலாக தனிப்பட்ட எண்கள் வைக்கப்பட்டிருப்பதை கவனிக்கவும். |
11:30 | Fileஐ க்ளிக் செய்யவும். |
11:37 | மேலும், இந்த schematicஐ சேமிக்க, Save Whole Schematic Projectஐ தேர்வு செய்யவும். |
11:43 | Fileஐ க்ளிக் செய்து, Quitஐ தேர்வு செய்யவும். |
11:48 | இது EESchema windowஐ மூடும். |
11:50 | இப்போது KiCad main windowக்கு செல்லவும். |
11:53 | Fileஐ க்ளிக் செய்து, Quitஐ தேர்வு செய்யவும். |
11:56 | KiCadல் circuit schematicஐ உருவாக்குவது என்ற இந்த டுடோரியலின் நோக்கத்தை இது நிறைவு செய்கிறது. |
12:01 | இந்த டுடோரியலில் நாம் கற்றதை, சுருங்கசொல்வோம். |
12:07 | Circuit schematicஐ உருவாக்குவதற்கு, KiCadல் EESchemaஐ பயன்படுத்துவது. |
12:11 | Circuit schematicன் annotation. |
12:15 | பின்வரும் பயிற்சியை முயற்ச்சிக்கவும்- |
12:17 | Component selection windowஐ பயன்படுத்தி, EESchemaவின் மேல், component 'Inductor'ஐ வைக்கவும். |
12:24 | shortcut keyகளான, 'a', 'x' மற்றும் 'y'ஐ ஆராயவும். |
12:31 | இந்த இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். |
12:35 | அது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
12:37 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில், அதை தரவிறக்கி காணவும். |
12:43 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு: |
12:45 | ஸ்போகன் டுடொரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
12:48 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
12:52 | மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் |
12:59 | Spoken Tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். |
13:03 | இதற்து ஆதரவு இந்திய அரசாங்கத்தின் National Mission on Education through ICT, MHRD மூலம் கிடைக்கிறது. |
13:09 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்: |
13:13 | spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro. |
13:20 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. |
13:25 | குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |