Jmol-Application/C2/Modify-Display-and-View/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:01 'Jmol அப்ளிகேஷனில்' Display மற்றும் View ஐ மாற்றுதல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது,
00:11 திரையில் மாதிரியை சுழற்றுதல், பெரிதாக்குதல், நகர்த்துதல் மற்றும் spin செய்தல்
00:17 view ஐ மாற்றுதல்
00:19 display ன் style ஐ மாற்றுதல்
00:22 அணுக்கள் மற்றும் பிணைப்புகளின் நிறம் மற்றும் அளவை மாற்றுதல்
00:26 அச்சுகளுடன் பெட்டியில் மாதிரியை காட்சிபடுத்துதல்
00:30 வெவ்வேறு file formatகளில் படத்தை சேமித்தல்.
00:34 இந்த டுடோரியலைத் தொடர உங்களுக்கு
00:37 Jmol அப்ளிகேஷன் விண்டோ மற்றும்
00:40 modelkit function ஐ பயன்படுத்தி எவ்வாறு மாதிரிகளை உருவாக்குவது மற்றும் திருத்துவது என்பதை தெரிந்திருக்க வேண்டும்.
00:45 அது குறித்த டுடோரியல்களுக்கு, எங்கள் வலைத்தளத்தைக் காணவும்.
00:51 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:
00:53 உபுண்டு இயங்குதளம் பதிப்பு. 12.04
00:58 Jmol பதிப்பு 12.2.2
01:02 மற்றும் Java பதிப்பு 7.
01:05 panel ல் 2-க்ளோரோ-1-ப்ரோபனால் மாதிரியுடன் ஒரு புதிய Jmol விண்டோவை திருந்து வைத்துள்ளேன்.
01:12 அமைப்புகளின் நல்ல தோற்றத்தைப் பெற மாதிரியை சுழற்றவும் பெரிதாக்கவும் முடியும்.
01:18 மாதிரியை சுழற்ற, tool bar ல் “Rotate molecule” ஐகான் மீது க்ளிக் செய்க.
01:24 மாதிரி மீது க்ளிக் செய்து..... கை பொன்ற ஐகானாக கர்சர் மாறியிருப்பதைக் கவனிக்கவும்.
01:29 மவுஸ் பட்டனை பிடித்துக்கொண்டு panel ல் மவுஸை இழுக்கவும்
01:34 மாதிரி சுழலுவதைக் காணலாம்.
01:37 பெரிதாக்குவும் சிறியதாக்கவும் கர்சரை panel மீது வைக்கவும்.
01:42 சிறியதாக்க மவுஸ் சக்கரத்தை மேல்நோக்கியும்.... பெரியதாக்க கீழ்நோக்கியும் நகர்த்தவும்.
01:49 panel ல் மாதிரியை நகர்த்த, மாதிரி மீது கர்சரை வைக்கவும்.
01:54 விசைப்பலகையில் Shift பட்டனை அழுத்தி பிடிக்கவும்.
01:57 டபுள்-க்ளிக் செய்து மவுஸை இழுக்கவும்.
02:00 விரிவான விளக்கத்திற்கு, Pop-up-menu ல் கொடுக்கப்பட்டுள்ள “Mouse Manual” ஐ காணவும்.
02:06 Pop-up-menu ஐ திறந்து கீழே வந்து “About ல் Jmol 12.2.2” ஐ தேர்ந்தெடுத்து Mouse Manual மீது க்ளிக் செய்க
02:17 நீங்கள் இணைய இணைப்பில் இருந்தால்,
02:19 Mouse manual” உடன் ஒரு இணையப்பக்கம் திரையில் தோன்றும்.
02:24 Pop-up menu ஐ மூட panel மீது க்ளிக் செய்க.
02:28 panel ல் மூலக்கூறை தானாக spin செய்ய, Pop-up menu ஐ திறக்கவும்.
02:34 Spin” க்கு வந்து “On” தேர்வு மீது க்ளிக் செய்க.
02:40 panel ல் அந்த மாதிரி சுழலுவதைக் காணலாம்.
02:44 spin ஐ நிறுத்த, மீண்டும் Pop-up-menu ஐ திறந்து,
02:49 Spin” க்கு வந்து “Off” மீது க்ளிக் செய்க.
02:54 பயிற்சியாக,
02:56 2-க்ளோரோ-3-ஐயடோ(Iodo)-பென்டேன்(pentane) மாதிரியை உருவாக்குக.
03:00 Pop-up menu ல் உள்ள “Spin” தேர்வை ஆராயவும்.
03:04 spin ன் திசையை “Z” அச்சுக்கு மாற்றி spin rate ஐ “40” க்கு மாற்றவும்.
03:10 குறிப்பு: pop-up menu ல் Set Z Rate தேர்வை பயன்படுத்தவும்
03:16 நீங்கள் முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும்.
03:22 இப்போது View menu பற்றி கற்போம்.
03:25 menu bar ல் உள்ள “View” menu, பல்வேறு கோணங்களில் மாதிரிகளை காண தேர்வுகளை கொண்டுள்ளது.
03:31 'View' menu மீது க்ளிக் செய்க.
03:33 menu ல் கீழே வந்து கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு தேர்வுகளில் இருந்து தேர்ந்தெடுக்கவும்.
03:38 உதாரணமாக, நான் “Top” view ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
03:42 'Top' தேர்வு மீது க்ளிக் செய்க.
03:45 திரையில் காட்டப்படும் இந்த படம் மேலிருந்து பார்த்தால் மூலக்கூறு எவ்வாறு தெரியும் என்பதைக் காட்டுகிறது.
03:50 இந்த காட்சியை ஒரு படமாக பல்வேறு file formatகளில் சேமிக்கலாம்.
03:55 Save current view as an image” ஐகான் மீது க்ளிக் செய்க.
03:59 ஒரு “Save” dialog box தோன்றுகிறது.
04:03 file format ஐ தேர்ந்தெடுக்க, “Image Type” ல் தேர்வுகளில் கீழே வந்து.
04:09 JPEG format ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
04:13 எந்த folder ல் நீங்கள் file ஐ சேமிக்க விரும்புகிறீர்களோ அதை தேர்வு செய்க.
04:17 நான் Desktop ல் சேமிக்க விரும்புகிறேன்
04:19 Desktop ஐ தேர்ந்தெடுத்து Open பட்டன் மீது க்ளிக் செய்க.
04:24 File Name உரைப்பெட்டியில் டைப் செய்க “2-chloro-1-propanol”
04:30 Files of Type” க்கு சென்று jpg ஐ தேர்ந்தெடுக்கவும்.
04:35 Save பட்டன் மீது க்ளிக் செய்க.
04:38 இந்த படம் இப்போது Desktop ல் JPEG format ல் சேமிக்கப்படும்.
04:44 மூலக்கூறு மாதிரியின் display style ஐ பல்வேறு வழிகளில் மாற்றலாம்
04:50 தேவையெனில் இந்த மூலக்கூறின் அணுக்கள் மற்றும் பிணைப்புகளின் அளவு மற்றும் நிறத்தை மாற்றலாம்.
04:57 இந்த மூலக்கூறில் அனைத்து அணுக்கள் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பை மாற்ற ஒரு தேர்வு உள்ளது.
05:03 panel ல் மாதிரியின் முன்னிருப்பு display ball and stick
05:09 display ஐ “CPK Space fill” ஆக மாற்ற, Pop-up-menu ஐ திறக்கவும்.
05:15 முழு மூலக்கூறையும் மாற்ற “Select” க்கு சென்று All மீது க்ளிக் செய்க.
05:22 மீண்டும் Pop-up-menu ஐ திறக்கவும்.
05:25 கீழே 'Style' க்கு வந்து, துணை-menu ல் 'Scheme' ஐ தேர்ந்தெடுக்கவும்.
05:30 பின் CPK Spacefill தேர்வு மீது க்ளிக் செய்க.
05:35 திரையில் மாதிரியானது CPK Spacefill மாதிரியாக மாற்றப்பட்டுள்ளது.
05:40 இப்போது இதை மீண்டும் ball and stick மாதிரியாக மாற்றுவோம்.
05:44 முன்புபோலவே அதே படிகளை பின்பற்றுவோம்.
05:48 Pop-up-menu ஐ திறக்கவும்.
05:50 Style” க்கு சென்று, Scheme ஐ தேர்ந்தெடுத்து Ball and Stick தேர்வு மீது க்ளிக் செய்க.
05:56 மாதிரி இப்போது ball and stick style display ஆக மாற்றப்படுகிறது.
06:01 பிணைப்புகளின் அளவை Pop-up menu ஐ பயன்படுத்தி மாற்றலாம், அதேபோல menu bar ல் Display menu ஐயும் பயன்படுத்தலாம்.
06:08 Display menu ஐ க்ளிக் செய்து Bond ஐ தேர்ந்தெடுக்கவும்.
06:12 angstrom அலகுகளில் உள்ள வெவ்வேறு விட்ட அளவுகளில் பிணைப்புகளின் தேர்வுகளை துணை-menu கொண்டுள்ளது
06:19 உதாரணமாக, “0.1 Angstrom” ஐ தேர்ந்தெடுத்து அதன் மீது க்ளிக் செய்க.
06:26 பிணைப்புகளின் தடிமனில் மாற்றத்தை கவனிக்கவும்.
06:30 அணுக்கள் மற்றும் பிணைப்புகளின் நிறத்தையும் நாம் மாற்றலாம்.
06:34 மாதிரியில் உள்ள அனைத்து கார்பன் அணுக்களின் நிறத்தையும் மஞ்சளாக மாற்ற விரும்புகிறேன்.
06:39 அதை செய்ய, Pop-up menu ஐ திறந்து Select க்கு செல்க.
06:44 Element க்கு சென்று Carbon மீது க்ளிக் செய்க.
06:48 Pop-up menu ஐ மீண்டும் திறந்து Color க்கு சென்று
06:52 பின் Atoms ஐ தேர்ந்தெடுத்து Yellow தேர்வின் மீது க்ளிக் செய்க.
06:57 மாதிரியில் உள்ள அனைத்து கார்பன்களும் இப்போது மஞ்சள் நிறத்தில் தோன்றுகின்றன.
07:02 பிணைப்புகளின் நிறத்தை எவ்வாறு மாற்றுவது என காண்போம்.
07:06 Pop-up-menu ஐ திறந்து All ஐ தேர்ந்தெடுக்கவும்
07:10 மீண்டும் Pop-up-menu ஐ திறக்கவும்.
07:12 Color க்கு வந்து, துணை menu ல் Bonds ஐ தேர்ந்தெடுக்கவும்.
07:16 கீழே வந்து Blue தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
07:20 அணைத்து பிணைப்புகளும் இப்போது நீல நிறத்தில் உள்ளன.
07:23 ஒரு பெட்டியினுள் “X,Y மற்றும் Z” அச்சுகளினுள் படத்தை display செய்யலாம்.
07:31 Pop-up menu ஐ திறந்து Style ஐ தேர்ந்தெடுத்து
07:34 Axes தேர்வுக்கு வரவும்
07:37 துணை-menu ல் Pixel Width ஐ தேர்ந்தெடுத்து
07:40 pixelன் அகலமாக 3 px. ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
07:44 இப்போது திரையில் அனைத்து அச்சுகளுடனும் மாதிரியைக் கொண்டுள்ளோம்.
07:49 படத்தை சுற்றி ஒரு பெட்டியை வரைய, Pop-up-menu ஐ திறந்து.
07:54 Style க்கு வந்து, தேர்வுகளில் Boundbox ஐ தேர்ந்தெடுக்கவும்.
07:59 Pixel width ஐ தேர்ந்தெடுத்து pixel அகலம் 3 px மீது க்ளிக் செய்க.
08:05 பெட்டியில் அச்சுகளுடன் 2-க்ளோரோ-1-ப்ரொபனால் (propanol) மாதிரியை திரையில் கொண்டுள்ளோம்
08:12 பெட்டியை தெளிவாக காண, அதை பெரிதாக்கலாம் அல்லது சிறிதாக்கலாம்.
08:17 படத்தை சேமித்து ப்ரோகிராமை மூடுவோம்.
08:21 சுருங்கசொல்ல.
08:23 இந்த டுடோரியலில் நாம் கற்றது
08:26 திரையில் மாதிரியை சுழற்றுதல், பெரிதாக்குதல், நகர்த்துதல் மற்றும் spin செய்தல்
08:31 பல்வேறு கோணங்களில் மாதிரியை காணுதல்
08:34 Display ன் style ஐ மாற்றுதல்
08:36 அணுக்கள் மற்றும் பிணைப்புகளின் நிறத்தை மாற்றுதல்.
08:39 மேலும் நாம் கற்றது,
08:41 அச்சுகள் மற்றும் பெட்டியுடன் படத்தை display செய்தல் மற்றும்
08:44 வெவ்வேறு file formatகளில் படத்தை மாற்றுதல்.
08:48 பயிற்சியாக
08:50 3-அமினோ-1-ப்ரொபனால் மாதிரியை உருவாக்குக
08:53 display ஐ “Sticks” க்கு மாற்றுக
08:56 மாதிரியில் உள்ள அனைத்து ஹைட்ரஜன்களின் நிறங்களையும் பச்சையாக மாற்றுக
09:00 அனைத்து பிணைப்புகளின் நிறத்தையும் மஞ்சளாக மாற்றுக.
09:04 நீங்கள் முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும்.
09:12 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
09:15 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
09:19 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
09:24 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
09:29 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
09:34 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
09:41 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
09:44 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:51 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
09:57 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst