Java/C3/Custom-Exceptions/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | Custom exceptions குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு. |
00:05 | இந்த tutorialஇல் நாம் கற்கப் போவது: Custom exceptions மேலும் throw மற்றும் throws keywordகளின் பயன்பாடு |
00:14 | இந்த tutorialஐ பதிவு செய்ய நான் பயன்படுத்தியிருப்பது :Ubuntu Linux 16.04 OS JDK 1 .7 மற்றும் Eclipse 4.3.1 |
00:26 | இந்த tutorialஐ தொடர Javaவில் Exceptions Handling பற்றி அறிந்திருத்தல் வேண்டும். தெரியாவிட்டால், அதற்கான Java tutorials ஐ, கீழே காணும் தொடுப்பின் மூலம் அறியலாம் |
00:38 | முதலில் custom exceptions குறித்து கற்கலாம். |
00:42 | Custom exception என்பது user defined exception class ஆகும். பொதுவாக அவை checked exceptionகளாக உருவாக்கப்படும் |
00:51 | பயன்படுத்துபவரின் தேவைக்கேற்ப, exceptionஐ தனிப்பயனாக்க, இது பயன்படுகிறது |
00:57 | இப்போது Eclipseஐ திறந்து, CustomExceptionDemo எனும் புதிய project ஐ உருவாக்குவோம். |
01:04 | Projectஇனுள், custom exceptionsகளை விளக்க தேவையான classகளை உருவாக்குவோம். |
01:11 | InvalidMarkException எனும் புதிய classஐ உருவாக்குவோம். |
01:15 | இதனை exception class ஆக வகைப்படுத்த, இது Java exception class இன் subclass ஆக இருக்க வேண்டும். |
01:22 | இவ்வாறு செய்ய, type செய்க extends Exception. |
01:27 | Source menuவை click செய்து, Generate constructors from Superclass என்பதை தேர்ந்தெடுக்கவும். |
01:34 | இப்போது வலது புறமுள்ள Deselect All buttonஐ click செய்யவும் |
01:38 | பின்னர் single string argument உள்ள constructorஐ தேர்ந்தெடுத்து, கீழே உள்ள OK button ஐ சொடுக்கவும். |
01:45 | இந்த string argument, இந்த exception நிகழும்போது காட்டப்படும் செய்தியை தனிப்பயனாக்க பயன்படுகிறது. <<PAUSE>> |
01:52 | StudentMarksஎன பெயரிட்ட மற்றொரு classஐ இணைப்போம். |
01:57 | பின்வரும் codeஇனை type செய்யவும் |
02:00 | இந்த class, marks எனும் ஒரே ஒரு variableயே கொண்டிருக்கும். |
02:04 | இந்த constructor, marksஇன் மதிப்பை initialize செய்யும். |
02:09 | இப்போது மதிப்பெண்களை சரிபார்க்க, ஒரு methodஇனை சேர்ப்போம். |
02:13 | பொதுவாக மதிப்பெண்களின் வரம்பு 0 இலிருந்து 100 ஆகும். |
02:18 | marks less than 0 or greater than 100 செயலாக்கப்பட்டால், InvalidMarkException என்பது போடப்படும். |
02:25 | இதற்கு, custom exceptionஐ வெளிப்படையாக வீசுவதற்கான throw keyword ஐ பயன்படுத்த வேண்டும். |
02:33 | மதிப்பெண் சரியானதாக இருந்தால், “Entry OK” எனும் செய்தி காண்பிக்கப்படும். |
02:39 | InvalidMarkException என பிழை காண்பிக்கப்படுவதைக் காணலாம். |
02:43 | அதனை சரிபார்த்து பின்னர் முறைப்படுத்தலாம். |
02:46 | எனவே பிழையில் click செய்து “Add throws declaration”என்பதை double click செய்யவும். |
02:51 | “throws InvalidMarkException”ஐ method signatureஉடன் இணைத்த பின், பிழை நீக்கப்பட்டிருப்பதைக் காணலாம் |
03:00 | throws keyword , methodsஉடன் பயன்படுத்தப்பட்டிருப்பதை, இங்கு நாம் காணலாம். |
03:06 | method, specified exceptionஐ உயர்த்தும் என்பதை இது குறிக்கிறது. |
03:11 | அத்தகைய method அழைக்கப்படும் போது, நாம் exception handling' codeஇனை கொடுக்க வேண்டும். |
03:16 | அடுத்து, FileNotFoundExceptionஐ எழுப்பும் ஒரு file access operationஐ செயல்படுத்துவோம். |
03:23 | எனவே ஒரு FileReader class இன் உதாரணத்தை உருவாக்க பின்வரும் codeஇனை type செய்யவும். |
03:29 | தொடர்புடைய Java packageகளை நாம் இறக்குமதி செய்யாததால், Eclipse சில பிழைகளை காண்பிக்கும். |
03:36 | இதனை சரி செய்ய, errorஇல் click செய்து, import 'FileReader' (java.io) என்பதை double click செய்யவும். |
03:44 | நாம் package மற்றும் அதன் பயன் பற்றி விவரமாக, பிந்தைய tutorialஇல் கற்கலாம். |
03:50 | Home folderஇல் உள்ள Marks எனும் fileஐ அணுகுவதற்கு frஐ அனுமதிக்க, பின்வரும் codeஇனை type செய்யவும் |
03:59 | இங்கு காட்டப்பட்டுள்ள தடம், கணினியின் home folderக்கு என மாற்றம் செய்யப்பட வேண்டும் |
04:05 | Codeஇன் இந்த வரி FileNotFoundExceptionஐ உருவாக்கக் கூடும் என்னும் பிழை காண்பிக்கப்படுகிறது |
04:10 | throws clauseஇல் இந்த exceptionஐ இணைப்பதன் மூலம் நாம் இதனை சரி செய்யலாம். |
04:16 | FileNotFoundExceptionஉம் கூடthrows clauseஇல் சேர்க்கப்பட்டுள்ளதை நாம் காணலாம். |
04:22 | இங்கு காட்டியுள்ளது போல் throwகள் மூலம் பற்பல exceptionகளை நாம் கையாளலாம். |
04:28 | StudentMarks classஇனுள் main method இனை உருவாக்கி, முடிவுகளை சரி பார்க்கலாம். |
04:34 | இங்கு m1 எனும் object ஐ உருவாக்கி, அதன் marksஇன் மதிப்பினை 40 என initialize செய்யலாம் |
04:41 | அடுத்த வரியில், validate எனும் methodஐ m1 எனும் objectஇன் மூலம் செயலாக்கலாம். |
04:47 | validate method செயலாக்கப்பட்ட போது, ஒரு பிழை தோன்றுவதைப் பார்க்கலாம் |
04:52 | அது, இந்த method, InvalidMarkException மற்றும் FileNotFoundExceptionஐ எழுப்பலாம் எனக் கூறுகிறது. |
04:59 | இந்த பிழையை சரி செய்ய, முன்பு போல throws clauseஐ main method இல் நாம் இணைக்கலாம். |
05:05 | ஆனால் try' மற்றும் catch blockகளைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது |
05:10 | Surround with try/catch என்பதை double click செய்யவும் |
05:14 | இப்போது தேவைப்படும் try-catch blockகள் சேர்க்கப்பட்டுள்ளதால், exceptionஐக் கையாளலாம் |
05:20 | இப்போது programஐ run செய்யலாம் |
05:23 | இது “Entry OK” எனவும் “rest of the code”ஐயும் காட்டுகிறது. |
05:27 | இது ஏனென்றால், marks இன் மதிப்பு 40என்பது சரியானதாகும் |
05:32 | -10 எனும் தவறான entryயை இப்போது மாற்றலாம் |
05:37 | மீண்டும் program ஐ run செய்யலாம் |
05:40 | -10 என்பது தவறான entry என்பது InvalidMarkException ஆகப் போடப்படுவதை நாம் காணலாம் |
05:47 | exception கையாளப்பட்டிருப்பதால், “rest of the code” என்ற தகவலை நாம் காணலாம். |
05:53 | அதற்கு பதிலாக “throws” clauseஐ பயன்படுத்தியிருந்தால், “rest of the code” எனும் தகவல் print ஆகாது. |
06:00 | மேலும் program நிறுத்தப்பட்டிருக்கும். |
06:03 | ஒரு method, main methodஇனுள் அழைக்கப்படும் போது, try catch blockஐ பயன்படுத்துவது நல்லது |
06:10 | இதன் மூலம் இந்த tutorialஇன் முடிவுக்கு வருகிறோம். |
06:13 | சுருக்கமாகப் பார்ப்போம். |
06:15 | இந்த tutorialஇல் நாம் கற்றது: Custom Exception, throw மற்றும் throws keywordகளின் பயன்பாடு, மேலும் custom exceptionகளை எவ்வாறு உருவாக்குவது மற்றும் பயன்படுத்துவது என்பதாகும். |
06:26 | ஒரு பயிற்சியாக, InvalidAgeException எனப்படும் custom exception classஐ உருவாக்கவும். |
06:33 | Ageஎனும் மற்றொரு classஐ உருவாக்கி, அதன் மதிப்பினை initialize செய்ய ஒரு constructorஐ உருவாக்கவும். |
06:39 | Age ஆனது 18இன் கீழிருந்தால், ஒரு exceptionஐ வீசுவதற்கு, validate method இனை உருவாக்கவும். |
06:45 | main methodஇனுள் objectகளை உருவாக்கி, validate() methodஇனை செயலாக்கம் செய்யவும். |
06:51 | தேவைப்பட்டால், try-catch blockகள் மூலம் exception handling கொடுக்கவும் |
06:56 | custom exception classஇனை சரி பார்க்கவும். |
07:00 | கீழே காணும் தொடுப்பின் மூலம், Spoken Tutorial திட்டம் குறித்து சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம். அதை பதிவிறக்கம் செய்து காணுங்கள். |
07:08 | Spoken Tutorial திட்டக்குழு,
spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது; இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது மேலும் அறிய mail எழுதவும்... |
07:20 | இந்திய அரசின் MHRD இன் NMEICT, Spoken Tutorial திட்டத்திற்கு நிதியுதவி தருகிறது. மேலும் இந்த திட்டம் பற்றி அறிய, கீழே உள்ள தொடுப்பினைக் காணவும். |
07:33 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஐஸ்வர்யா, குரல் கொடுத்தது சண்முகப்பிரியா நன்றி. |