Java/C2/Primitive-type-conversions/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Java-ல் Type Conversion குறித்த spoken tutorial-க்கு நல்வரவு. |
00:06 | நாம் கற்கபோவது: |
00:08 | data-ஐ ஒரு data type-லிருந்து மற்றொன்றுக்கு மாற்றுவது. |
00:13 | இருவகை conversions உள்ளன. மறைமுக மற்றும் வெளிப்படை conversion |
00:18 | strings-ஐ எண்களாக மாற்றுதல். |
00:23 | இந்த tutorial-க்கு பயன்படுத்துவது Ubuntu 11.10 JDK 1.6 மற்றும் Eclipse 3.7 |
00:33 | இந்த tutorial-ஐ தொடர, java-ல் data types பற்றி தெரிந்திருக்க வேண்டும். |
00:38 | இல்லையெனில் அது தொடர்பான tutorialகளுக்கு எங்கள் வலைதளத்தைக் காணவும் |
00:47 | Type conversion என்பது data-ஐ ஒரு data type-லிருந்து மற்றொன்றுக்கு மாற்றுதல். |
00:53 | அதை செய்வதைக் காண்போம். |
00:55 | Eclipse-க்கு வருவோம் |
01:02 | eclipse IDE மற்றும் மீதி code-க்கு தேவையான அமைப்பும் உள்ளது |
01:07 | class TypeConversion-ஐ உருவாக்கி main method-உம் சேர்த்துள்ளோம். |
01:13 | சில variableகளை உருவாக்குவோம். |
01:19 | int a equal to 5; float b; b equal to a; |
01:33 | இரண்டு variableகளை உருவாக்கியுள்ளேன். a ஒரு integer மற்றும் b ஒரு float. |
01:39 | float variable-ல் integer மதிப்பை சேமிக்கிறேன். |
01:43 | இப்போது float variable வைத்துள்ளதைக் காண்போம். |
01:48 | System dot out dot println (b) '; |
01:58 | file-ஐ சேமித்து இயக்குவோம். |
02:07 | integer 5... float 5.0-ஆக மாறியுள்ளதைக் காண்கிறோம் |
02:13 | இந்த வகை மறைமுக conversion எனப்படும். |
02:17 | மதிப்பு... தானாகவே data type-க்கு பொருந்துமாறு மாற்றப்படுகிறது. |
02:24 | அதே முறையைப் பயன்படுத்தி float-ஐ int-ஆக மாற்றலாம். |
02:30 | 5-ஐ நீக்கவும். float b equal to 2.5f; |
02:45 | b-ஐ a-ல் சேமித்து a-ன் மதிப்பை அச்சடிப்போம் . |
02:50 | file-ஐ சேமிக்கவும். |
02:56 | பிழை இருப்பதை பார்க்கிறோம். |
03:00 | அது, Type mismatch: cannot convert from float to int |
03:06 | அதாவது int-லிருந்து float-க்கு மாற்றுதல் மட்டுமே மறைமுக conversion-ஆல் முடியும். மற்ற வழியில் அல்ல. |
03:13 | float -லிருந்து intக்கு மாற்ற வெளிப்படை conversion-ஐ பயன்படுத்த வேண்டும். |
03:17 | அதை செய்வதைப் பார்ப்போம் |
03:23 | variable-க்கு முன்னால் parentheses-ல் int-ஐ பயன்படுத்துவதன் மூலம் செய்கிறோம் |
03:34 | இந்த statement சொல்வது... variable b-ல் உள்ள data... int data type-ஆக மாற்றப்பட்டு a-ல் சேமிக்கப்பட வேண்டும். |
03:43 | file-ஐ சேமித்து இயக்கவும் |
03:51 | பார்ப்பது போல float மதிப்பு int-ஆக மாற்றப்பட்டுள்ளது. |
03:56 | ஆனால் data type-க்கு பொருந்த, data அதற்கேற்றாற்போல மாறியுள்ளது. |
04:01 | int-லிருந்து float-க்கு data-ஐ மாற்ற வெளிப்படை conversion-ஐயும் பயன்படுத்தலாம் |
04:07 | முன் உதாரணத்தை முயற்சிப்போம். |
04:10 | int a =5; |
04:18 | float b; |
04:24 | b = float a; |
04:32 | System.out.println(b); |
04:36 | integer-ஐ float-ஆக மாற்ற வெளிப்படை conversion-ஐ பயன்படுத்துகிறோம். |
04:42 | file-ஐ சேமித்து இயக்கவும். |
04:51 | int மதிப்பு float மதிப்பாக மாறியுள்ளதை பார்க்கிறோம் |
04:58 | character-ஐ integer-ஆக மாற்றும்போது நடப்பதைப் பார்ப்போம். |
05:06 | int a; char c equal to single quoteகளில் 'm; |
05:24 | a equal to '(int) c ; |
05:32 | System dot out dot println ' (a); |
05:36 | character m-ஐ integer-ஆக மாற்றி மதிப்பை அச்சடிக்கிறோம் |
05:43 | அதை சேமித்து இயக்குவோம் |
05:53 | நாம் பார்ப்பதுபோல வெளியீடு 109... அது m-ன் ascii மதிப்பு. |
05:58 | அதாவது char-ஐ int-ஆக மாற்றும் போது, அதன் ascii மதிப்பு சேமிக்கப்படுகிறது. |
06:03 | இதை ஒரு எண்ணுடன் முயற்சிக்கலாம். |
06:06 | char c = 5; |
06:11 | அதை சேமித்து இயக்குவோம் |
06:18 | நாம் பார்ப்பதுபோல வெளியீடு 53... அது 5-ன் ascii மதிப்பு. |
06:24 | இது எண் 5 அல்ல. |
06:26 | எண்ணை பெற string-ஐ பயன்படுத்தி அதை integer-ஆக மாற்ற வேண்டும் |
06:31 | அதை செய்வதைப் பார்க்கலாம் |
06:33 | main function-ஐ நீக்குவோம் |
06:38 | எழுதுக |
06:40 | String sHeight Height-ன் string வடிவம் equal to double quoteகளில் 6 ; |
06:58 | int h equal to வெளிப்படை conversion int of sHeight ; |
07:11 | System dot out dot println (h); file-ஐ சேமிக்கவும். |
07:27 | மதிப்பு 6 உடன் ஒரு string variable-ஐ உருவாக்கி அதை interger-க்கு மாற்ற முயற்சிக்கிறேன். ஆனால் ஒரு பிழையைப் பார்க்கிறோம். |
07:37 | அது Cannot cast from String to int. |
07:42 | அதாவது strings-ஐ மாற்ற, வெளிப்படையான அல்லது மறைமுகமான conversion-ஐ பயன்படுத்த முடியாது. |
07:48 | அதை மற்ற முறைகளால் செய்ய வேண்டும். அவற்றை பயன்படுத்துவோம். |
07:58 | int of sHeight -ஐ நீக்கி எழுதுக Integer dot parseInt of sHeight ';. |
08:21 | file-ஐ சேமித்து இயக்கவும் |
08:29 | மதிப்பு வெற்றிகரமாக integer-க்கு மாறியுள்ளதைக் காண்கிறோம். |
08:35 | இதை செய்ய integer module-ன் parseInt method -ஐ பயன்படுத்துகிறோம். |
08:41 | 6543 போல ஒன்றுக்கும் மேற்பட்ட எண்கள் இருப்பின் என்ன நடக்கும் என பார்க்கலாம் |
08:49 | file-ஐ சேமித்து இயக்கவும். |
08:55 | மீண்டும் string வைத்துள்ள எண் வெற்றிகரமாக integer-ஆக மாற்றப்பட்டுள்ளதைக் காண்கிறோம் |
09:03 | string ஒரு தசம எண்ணாக இருந்தால் என்ன நடக்கும் என பார்க்கலாம் |
09:10 | 6543-ஐ 65.43 ஆக மாற்றுக. இப்போது string-ல் தசம எண்ணைக் கொண்டுள்ளோம். இதை integer-க்கு மாற்றுகிறோம் |
09:22 | file-ஐ சேமித்து இயக்கவும். |
09:31 | பிழை இருப்பதை பார்க்கிறோம்.ஏனெனில் தசம எண்ணைக் கொண்ட string-ஐ integer-ஆக மாற்ற முடியாது. |
09:41 | இதை float-ஆக மாற்ற வேண்டும். அதை பார்க்கலாம்; |
09:45 | முதலில் data type... float ஆக இருக்க வேண்டும், |
09:51 | அடுத்து float . parsefloat-ஐ பயன்படுத்துவோம் |
10:07 | தசம எண் கொண்ட string-ஐ சரியான தசம எண்ணாக மாற்ற float class-ன் Parsefloat methods-ஐ பயன்படுத்துகிறோம் |
10:18 | file-ஐ சேமித்து இயக்கவும். தசம எண்ணைக் கொண்ட string வெற்றிகரமாக தசம எண்ணாக மாறியுள்ளதைக் காண்கிறோம். |
10:33 | இவ்வாறுதான் மறைமுகமான மற்றும் வெளிப்படையான conversionகளையும் strings-ஐ எண்களாக மாற்றுவதையும் செய்ய வேண்டும். |
10:45 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
10:48 | நாம் கற்றது. data-ஐ ஒரு type-லிருந்து மற்றொன்றுக்கு மாற்றுதல். |
10:54 | வெளிப்படையான மற்றும் மறைமுகமான conversionகள் என்றால் என்ன |
10:57 | strings-ஐ எண்களாக மாற்றுதல். |
11:01 | இப்போது assignment. Integer.toString மற்றும் Float.toString பற்றி கற்கவும் |
11:07 | அவை என்ன செய்கிறது என்பதை கண்டறியவும்? |
11:14 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக காணவும். இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது |
11:23 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
11:27 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
11:31 | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
11:34 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
11:40 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:50 | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
11:55 | மூலப்பாடம் TalentSprint . தமிழாக்கம் பிரியா. நன்றி |