Inkscape/C4/Special-effects-on-text/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம். Inkscapeஐ பயன்படுத்தி Text மீதான Special Effects குறித்த டுட்டோரியல்-க்கு நல்வரவு.
00:07 இந்த tutorialல் நாம் உருவாக்க கற்றுக்கொள்வது: Reflected text, Labeled text மற்றும் text-ன் case-ஐ மாற்றுவது.
00:16 இந்த டுட்டோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது Ubuntu Linux 12.04 OS.
00:22 இந்த தொடரில் அனைத்து முந்தைய tutorial-களும் Inkscape 0.48.4 -இல் பதிவு செய்யப்பட்டன.
00:28 இந்த டுட்டோரியலில், நான் பதிவு செய்த பதிப்பு 0.91, இது சமீபத்திய நிலையான பதிப்பு.
00:35 Inkscape ஐ திறக்கவும். முதலில், நாம் ஒரு Reflected text ஐ உருவாக்க கற்றுக்கொள்வோம்.
00:41 Text tool-ஐ தேர்வு செய்து, SPOKEN என்ற வார்த்தையை டைப் செய்யவும். text-ஐ "Bold" ஆக்கவும்.
00:49 அதை நன்றாக பார்க்க பெரிதாக்குகிறேன். இதனால் இதை நீங்கள் தெளிவாக பார்க்க முடியும்.
00:54 இப்பொது Object menu- விற்குச் சென்று Fill and Stroke option-ஐ தேர்வு செய்யவும்.
00:59 பின்னர் Fill tab ன் கீழ் இருக்கும் , Linear gradientஐ கிளிக் செய்யவும்.
01:03 இப்போது காண்பிக்கப்படும் gradient handle-களை கிளிக் செய்து சிவப்பு மற்றும் நீல gradient நிறங்களாக மாற்றவும்.
01:12 செங்குத்தாக gradient-ஐ வைக்கவும். எனவே இப்போது gradientன் மேலே சிவப்பும் கீழே நீலமும் காட்டப்படும்.
01:21 Selector tool - ஐ க்ளிக் செய்து Text-ஐ duplicate செய்ய Ctrl + D-ஐ அழுத்தவும்
01:27 Duplicate text -ஐ flip செய்ய keyboard -ல் V-ஐ அழுத்தவும்.
01:32 Textஐ flip செய்ய நாம் Tool controls barல் உள்ள optionஐயும் பயன்படுத்த முடியும்.
01:39 இப்போது, நாம் duplicated textஐ கண்ணாடி படம் போல் தோன்றும் வகையில் original textன் கீழே நகர்த்துவோம்.
01:46 இப்போது Gradient tool-ஐ தேர்வு செய்து கீழுள்ள gradient handleஐ க்ளிக் செய்யவும்.
01:52 மீண்டும் Fill and Stroke dialog boxக்கு வரவும். இங்கே நாம் Alpha value ஐ 0 ஆக மாற்றலாம்.
01:59 நாம் bottom handle-ஐ மேல்நோக்கி சிறுது நகர்த்துவோம்.
02:05 Selector toolன் மீது க்ளிக் செய்யவும். Opacityஐ 80 ஆக குறைக்கவும் பின் Enterஐ அழுத்தவும்.
02:12 நம் reflected textமுடிவு பெற்றது . அதை நன்றாக பார்க்க அளவை சற்று சிறியதாக்கவும்.
02:20 அடுத்து நாம் labeled textஐ உருவாக்க கற்றுக்கொள்வோம்.
02:23 முதலில் , நாம் பச்சை நிறத்தில் ஒரு செவ்வகத்தை உருவாக்குவோம். Alphaன் மதிப்பு zero ஆக இருப்பதால், அதை தற்போது பார்க்க முடியாது.
02:32 அதை 255 ஆக, மாற்றி enter ஐ அழுத்தவும்.
02:36 இப்போது , செவ்வகத்தின் மீது '“SPOKEN TUTORIAL என டைப் செய்யவும்.
02:43 Selector tool-ஐ க்ளிக் செய்து textக்கு ஏற்றவாறு செவ்வகத்தின் அளவை மாற்றவும்
02:48 அடுத்து textஐ தேர்வு செய்யவும். இப்போது textஐ duplicate செய்ய Ctrl + Dஐ அழுத்தவும்.
02:54 Duplicate text சரியாக original text-ன் மேலே உள்ளது.
02:58 Text-ன் நிறத்தை வெள்ளையாக மாற்றி, பின் Path menu ற்கு சென்று Object to path option-ஐ க்ளிக் செய்யவும்.
03:07 இப்போது Object menuஐ க்ளிக் செய்து, பின்னர் Ungroup optionஐ க்ளிக் செய்யவும்.
03:12 மீண்டும் Path menuவிற்குச் சென்று Union option-ஐ க்ளிக் செய்யவும்.
03:17 Tool controls barல் Lower selection one step icon-ஐ க்ளிக் செய்யவும்.
03:23 மீண்டும்Path மெனு சென்று இம்முறை Linked offset optionஐ க்ளிக் செய்யவும்.
03:30 Text ன் மேலே தோன்றும் handle ஐ க்ளிக் செய்து, பின்னர் அவுட்லைனை பெரிதாக்க handle ஐ இழுக்கவும்.
03:37 Selector toolஐ க்ளிக் செய்து, பின்னர் text ன் மீது க்ளிக் செய்து அதை நகர்த்தவும்.
03:43 மற்றொரு text உருவாக்கப்பட்டதை கவனிக்கவும். text ஐ தேர்ந்தெடுத்து அதை நீக்கவும்.
03:49 இப்போது அவுட்லைன் பகுதியை தேர்வு செய்து Nodes toolன் மீது க்ளிக் செய்யவும்.
03:53 Tool controls barல் Convert selected object to path toolஐ க்ளிக் செய்யவும்.
03:58 இப்போது நீங்கள் அவுட்லைனில் nodeகளை பார்க்க முடியும். இங்கு காட்டியவாறு, மத்தியில் இருக்கும் தேவையற்ற nodeகளை தேர்வு செய்து நீக்கவும்.
04:09 Selector toolஐ க்ளிக் செய்து மீண்டும் textஐ அதன் அசல் நிலைக்கு நகர்த்தவும்.
04:14 text ன் நிறத்தை பச்சையாக மாற்றவும்.
04:18 அவுட்லைன் பகுதியை தேர்வு செய்து அதை duplicate செய்ய Ctrl + Dஐ அழுத்தவும். Duplicate அவுட்லைன் சரியாக originalன் மேலே உள்ளது என்பதை நினைவுகொள்ளவும்.
04:28 கருப்பு நிறமாக மாற்றவும்.
04:31 பின்னர் Tool controls barல் Lower selection one step iconஐ மூன்று முறை க்ளிக் செய்யவும்.
04:38 இறுதியாக Fill and stroke dialog boxல் opacityஐ 60 ஆக குறைத்து blurஐ 7 ஆக அதிகரிக்கவும்.
04:47 இதை செய்த பின், நாம் லேபிளிற்கு ஒரு hangerஐ உருவாக்குவோம்.
04:50 '"Ellipse tool-ன் மீது கிளிக் செய்யவும். '" Ctrl key-ஐ அழுத்தி ஒரு வட்டத்தை செவ்வகத்தின் மேல் இடது பக்கத்தில் வரையும் போது, லேபிளின் மீது துளை உருவாகும்.
05:00 வட்டத்தை duplicate செய்ய Ctrl + Dஐ அழுத்தவும். வட்டத்தை செய்வகத்தின் மற்றொரு முனைக்கு நகர்த்தவும்.
05:06 அடுத்து Bezier toolஐ க்ளிக் செய்து இங்கு காட்டியவாறு ஒரு வளைந்த கோட்டை வரையவும் .
05:13 வரையப்பட்ட கோடு ஒரு hanger போல் இருக்க வேண்டும்.
05:16 Fill and stroke dialog boxல் Stroke styleன் அகலத்தை 5 ஆக மாற்றவும்.
05:22 இப்போது நம்முடைய labeled text தயாராக உள்ளது. நன்றாக பார்க்க சிறியதாக்கவும்.
05:30 அடுத்து Inkscapeல் text caseஐ எவ்வாறு மாற்றலாம் என கற்போம்.
05:34 Text toolஐ க்ளிக் செய்து , canvasல் alphabet களை டைப் செய்யவும். அனைத்து text களும் lower-caseல் இருப்பதை கவனிக்கவும்.
05:43 இப்போது Extensions menuற்கு சென்று Text என்று பெயரிடப்பட்ட optionல் Change Case ஐ க்ளிக் செய்யவும். நீங்கள் சில options களை பார்ப்பீர்கள்.
05:52 UPPERCASE optionஐ க்ளிக் செய்யவும். alphabetsன் Text case , upper-case ஆக மாறிவிட்டதை காணலாம்.
05:59 மீண்டும் text-ன் மீது க்ளிக் செய்யவும். Extensions menuற்கு சென்று, Text optionல் Change Case’”-ஐ க்ளிக் செய்யவும்.
06:07 இந்த முறை Random Case optionஐ தேர்வு செய்யவும். Text case ல் மாற்றத்தை காணலாம்.
06:13 நீங்கள் உங்கள் மற்ற விருப்பங்களை முயற்சி செய்யலாம்.
06:16 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
06:19 சுருங்க சொல்ல இந்த டுட்டோரியலில் நாம் உருவாக்க கற்றுக்கொண்டது: Reflected text, Labeled text மற்றும் Text-ன் caseஐ lowercase லிருந்து uppercase மற்றும் random-case க்கு மாற்றுவது.
06:31 பயிற்சியாக பின்வருவனவற்றை உருவாக்கவும். ‘”INKSCAPE’” என்ற reflected text ஐ உருவாக்கவும்.
06:37 Inkscape என்ற text ஐ உருவாக்கி அதன் text case ஐ Flip caseஆக மாற்றவும்
06:42 நீங்கள் செய்து முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும்.
06:45 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. அதை காணவும்.
06:51 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் அளிக்கிறது
06:58 மேலும் தகவல்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
07:01 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD, NMEICT மூலம் கிடைக்கிறது.
07:06 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்.
07:10 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது மெஹ்தாஜ் குரல் கொடுத்தது IIT Bombay ல் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst