Inkscape/C4/Mango-pattern-for-Textile-design/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:01 வணக்கம். Inkscapeஐ பயன்படுத்தி textile designக்கான Mango Pattern குறித்த டுட்டோரியல்-க்கு நல்வரவு.
00:08 இந்த tutorialல் நாம் கற்கபோவது: Mango patternஐ உருவாக்குவது, Pattern along Pathஐ பயன்படுத்தி வரைவது
00:17 இந்த டுட்டோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்தியது: Ubuntu Linux 12.04 OS, Inkscape பதிப்பு 0.91
00:26 Inkscape ஐ திறக்கவும்.
00:28 Bezier toolஐ தேர்வு செய்யவும். Tool Controls barல் ModeCreate Spiro pathக்கும் ShapeEllipse க்கும் மாற்றவும்.
00:38 இப்போது canvasல் காட்டியவாறு மாங்காய் போன்று வரையவும். அது ஒரு mango pattern போல் இருக்க வேண்டும்
00:47 அடுத்து Star toolஐ தேர்வு செய்யவும்.
00:50 இப்போது canvasல் ஒரு நட்சத்திரம் வரைய வேண்டும். Selector toolஐ க்ளிக் செய்யவும்.
00:55 Tool controls barல் Width மற்றும் Height ஐ 30 ஆக மாற்றவும்.
01:00 அதன் நிறத்தை சிவப்பாக மாற்றவும்.
01:03 அடுத்து நாம் row patternல் நட்சத்திரம் உருவாக்க வேண்டும்.
01:07 அதற்கு Edit menu ற்கு சென்று Clone மற்றும் Create Tiled Clonesமீது க்ளிக் செய்யவும்.
01:16 Resetஐ க்ளிக் செய்யவும்.
01:18 Rows ன் எண்ணிக்கை 1 மற்றும் Columns ன் எண்ணிக்கை 46 ஆக மாற்றவும்.
01:24 Columnsன் எண்ணிக்கை மாங்காய் வடிவத்தின் அளவிற்கு ஏற்ப மாறுபடும்.
01:28 Createஐ க்ளிக் செய்யவும். இப்போது row pattern உருவாக்கப்பட்டுள்ளது.
01:33 அனைத்து நட்சத்திரங்களையும் தேர்வு செய்து ஒன்றாக்க Ctrl + G ஐ அழுத்தவும்.
01:38 இப்போது மாங்காய் வடிவம் மற்றும் star patten இரண்டையும் தேர்வு செய்யவும்.
01:42 Extensions ற்கு சென்று Generate from Path மற்றும் Pattern along Pathஐ க்ளிக் செய்யவும்.
01:49 Applyன் மீது க்ளிக் செய்து dialog boxஐ மூடவும்.
01:53 star pattern, வடிவத்தின் மீது உருவாவதை கவனிக்கவும்.
01:57 இப்போது மாங்காய் வடிவம் மற்றும் star row வை தேர்வு செய்து நீக்கவும்.
02:01 star patternஐ தேர்வு செய்து அதை duplicate செய்ய Ctrl + D ஐ அழுத்தவும்.
02:07 இப்போது duplicate patternஐ தேர்வு செய்து Ctrl keyஐ அழுத்திக்கொண்டே அதன் அளவை சிறிதாக்கவும்.
02:13 Original pattern மத்தியில் அதை வைக்கவும்.
02:16 இப்போது mango pattern ன் உள்ளே வேறொரு design ஐ வைப்போம்.
02:21 Bezier toolஐ தேர்வு செய்து, இங்கு காட்டியவாறு ஒரு வடிவமைப்பை வரையவும்.
02:28 இப்போது Path menu சென்று Path Effectsஐ தேர்வு செய்யவும்.
02:32 Pattern along Path ன் கீழ் நாம் பல optionகளை காணலாம்.
02:37 Pattern sourceல் முதல் optionஆன Edit on-canvasஐ க்ளிக் செய்யவும்
02:43 canvas ன் மேல் இடது பக்கத்தில் 4 nodeகள் உருவாக்கப்பட்டு உள்ளதை கவனிக்கவும்.
02:48 node களை பெரிதாக்கி தெளிவாக பார்க்கவும். இதை pattern க்கு அருகில் நகர்த்தவும்.
02:54 இப்போதுnode களின் மீது க்ளிக் செய்து இழுக்கவும். வடிவத்தின் மாற்றங்களை கண்காணிக்கவும்.
03:00 Selector tool ஐ க்ளிக் செய்யவும். இப்போது Path menu பின் Object to Pathஐ க்ளிக் செய்யவும்.
03:06 அளவை மாற்றும்போது வடிவத்தில் எந்த மாற்றமும் ஏற்படாமல் இது தவிர்க்கிறது.
03:12 Pattern அளவை மாற்றவும். அதை duplicate செய்து Mango patternன் உள்ளே வைக்கவும்.
03:20 அடுத்து சிறிய mango patternன் உள்பகுதியை நிரப்புவோம்.
03:25 'Star tool’ ஐ க்ளிக் செய்து ஒரு நட்சத்திரம் வரையவும்.
03:28 Inner handleஐ க்ளிக் செய்து இவ்வாறு வடிவத்தை உருவாக்கவும். அதை நீல நிறமாக்கவும்
03:34 Selector toolஐ க்ளிக் செய்து வடிவத்தின் அளவை மாற்றவும்.
03:38 இந்த வடிவத்தை duplicate செய்து சிறிய mango patternஐ நிரப்பவும்.
03:47 அனைத்து objectகளையும் தேர்வு செய்ய Ctrl + Aஐ அழுத்தி, ஒன்றாக்க Ctrl + Gஐ அழுத்தவும்.
03:53 Pattern அளவை மாற்றி canvasன் மேல் இடது பகுதியில் வைக்கவும்.
03:58 நாம் இந்த Pattern ஐ குளோனிங் மூலம் திரும்ப செய்யலாம். Edit menu சென்று Clone பின் Create Tiled clonesஐ க்ளிக் செய்யவும்.
04:07 Symmetry tabன் கீழ், mode, Simple translation ஆக இருக்க வேண்டும்.
04:12 Rowsன் எண்ணிக்கை 8 மற்றும் columnsன் எண்ணிக்கை 5 ஆக மாற்றவும்.
04:17 Shift tabஐ க்ளிக் செய்யவும். Per columnல் Shift X மதிப்பை 30 ஆக மாற்றவும்.
04:24 Create buttonஐ க்ளிக் செய்யவும். இப்போது canvasல் pattern உருவாக்கப்பட்டுள்ளது.
04:32 kurtaல் இந்த patten இப்படிதான் இருக்கும்
04:35 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது: Mango pattern, Pattern along Pathஐ பயன்படுத்தி வரைதல்
04:44 பயிற்சியாக ஒரு leaf pattern ஐ உருவாக்கவும்.
04:47 நீங்கள் செய்து முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும்.
04:52 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. அதை காணவும்.
04:58 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் அளிக்கிறது மேலும் தகவல்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
05:07 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD, NMEICT மூலம் கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்.
05:16 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது மெஹ்தாஜ் குரல் கொடுத்தது IIT Bombay ல் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst