Health-and-Nutrition/C2/Reasons-for-increase-in-junk-food-consumption/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:00 ஜங்க் உணவுகள் அதிகம் உண்ணப்படுவதற்கான காரணம் குறித்த ஸ்போக்கன் டுட்டோரியலுக்கு நல்வரவு
00:08 இந்த டுட்டோரியலில் நாம் கற்கபோவது
00:11 ஜங்க் உணவுகளை அதிகம் உண்பதற்கான காரணிகள்
00:15 ஜங்க் உணவை நம் சாப்பாட்டிலிருந்து நீக்க வழிகள்
00:20 ஜங்க் உணவில் அதிக அளவிலான சர்க்கரை, உப்பு, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவு அடங்கியுள்ளது
00:28 ஜங்க் உணவினால் ஏற்படும் தீமைகளை நாம் வேறொரு டுட்டோரியலில் பார்த்தோம்
00:34 மேலும் தகவல்களுக்கு எங்கள் வலைதளத்தை காணவும்
00:38 ஜங்க் உணவுகள் அதிகம் உண்ணப்படுவதற்கான காரணிகளை பார்ப்போம்
00:45 ஜங்க் உணவுகள் இக்காலத்தில் எளிதாக கிடைக்கின்றன
00:49 நீங்கள் அதை கடைகளில்,
00:52 பள்ளிக்கூட உணவகத்தில், தெருமுனை விற்பனையாரிடம்
00:54 மற்றும் உணவககங்ககளில் பார்க்கலாம்
00:56 ஜங்க் உணவுககளை அதிகம் உண்பதற்கான இன்னொரு காரணத்தை இப்பொழுது நாம் பார்ப்போம்
01:02 தாய்மார்கள், அலுவலக பனி மற்றும் வீட்டுவேளைகளில் பரபரப்பாக இருக்கலாம்
01:06 குழந்தைகளுக்கான சரியான வீட்டு உணவை செய்து கொடுக்க அவர்களுக்கு நேரமில்லாமல் போகலாம்
01:14 மாறாக, வெளி உணவை வாங்கி சாப்பிட அவர்களுக்கு பணம் கொடுக்கலாம்
01:20 குழந்தைகள் அந்த பணத்தை கொண்டு சாக்லேட், ஐஸ் கிரீம் மற்றும் சிப்ஸை வாங்குவார்கள்
01:26 மேலும், ஜங்க் உணவுகள் ஆரோக்கியமான உணவினை காட்டிலும் விலை குறைவானது.
01:33 எதுத்துக்காட்டாக: ஒரு தட்டில் சாப்பாடு, பயிறு மற்றும் காய்கறிகள் கொஞ்சம் அதிக விலை.
01:42 இதனால் மக்கள் குறைந்த விலையில் கிடைக்க கூடிய சமோசா, சிப்ஸ் மற்றும் biscuitகளை தேர்வு செய்கின்றனர்.
01:50 சிலநேரங்களில், பெற்றோர்கள் குழந்தைகளின் விருப்பு வெறுப்புகளை கண்டு கொள்வதில்லை
01:56 குழந்தைகள், பாரம்பரிய வீட்டில் செய்த உணவை சாப்பிட்டு சலிப்படைகின்றனர்.
02:01 வீட்டில் செய்த உணவில் அதிக வகை இல்லாததால், அவர்கள் ஜங்க் உணவை உண்ண விரும்புகிறார்கள்.
02:08 அவர்களுக்கு இது சுவைள்ளதாக தென்படுகிறது
02:11 சர்க்கரை அதிகம் உள்ள ஜங்க் உணவை உண்ணுவதால், மூளை dopamine என்னும் ரசாயனத்தை வெளியிடுகிறது.
02:19 இந்த ரசாயனம் அதிக அளவில் வெளியிடப்பட்டு, நமக்கு உற்சாகத்தையும் ஆனந்தத்தையும் தருகிறது.
02:26 இதனால் தான் நாம் ஜங்க் உணவுக்கு அடிமையாகி மேலும் அதிக உண்ண தோன்றுகிறது.
02:34 பின் வரும் நேரங்களில், ஜங்க் உணவை அதிகம் சாப்பிட்டு ஆறுதல் அடைகிறோம்.
02:38 மாதவிடையினால் ஏற்படும் மனஅழுத்தததின் போது
02:42 மனசோர்வு, தனிமை
02:44 கவலை ஆகிய நேரங்களில்.
02:47 ஜங்க் உணவை ஈர்க்கும் மற்றோடு காரணம் விளம்பரம்.
02:53 இந்த விளம்பரங்கள் கவர்ச்சியானவை.
02:56 மற்றும் தவறான வழி நடத்துபவை.
02:59 குழந்தைகள் மற்றும் குமர பருவத்தினர் இதில் எளிதில் விழுகின்றனர்.
03:05 நண்பர்களும் நமது உணவுத் தேர்வை பாதிக்கின்றனர்.
03:08 எடுத்துக்காட்டாக, ஒரு மாணவி பள்ளிக்கூடத்திற்கு சப்பாத்தியம் காய்கறியும் எடுத்து செல்கிறாள்.
03:14 அவளுடைய தோழிகள் ஜங்க் உணவை எடுத்து வந்தால், அவளும் ஜங்க் உணவு எடுத்துச் செல்ல விருப்பப்படுவாள்.
03:22 நம்மை சுற்றியுள்ளவர்களின் உணவு பழக்கத்தை பொறுத்து நம்முடையதும் மாறுகிறது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.
03:29 அடுத்து, ஜங்க் உணவை தவிர்ப்பதற்கான சில வழிகளை பாப்போம்.
03:35 குழந்தைகள் எதை பார்க்கிறார்களோ அதையே கற்று, பின்பற்றுகிறார்கள் என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
03:41 பெற்றோர்கள், சத்துள்ள ஆகாரத்தை உண்பதை அவர்கள் பார்த்தால், அவர்களும் சரியாக உண்ண ஊக்குவிக்கப்படுவார்கள்.
03:48 ஆதலால், பெற்றோர்கள் குழதைகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
03:53 ஜங்க் உணவை வெகுமதியாக கொடுக்க்கக்கூடாது என்பதை பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
03:58 பெற்றோர்கள் பெரும்பாலும், சில நேரங்களில் ஜங்க் உணவை குழந்தைகளுக்கு வெகுமதியாக பரிசளிக்கின்றனர்.
04:05 எடுத்துக்காட்டாக: பள்ளிக்கூட பாடங்களை படிக்கவும், பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெறவும்.
04:12 இதனால், ஜங்க் உணவை உண்ணலாம் என்று குழந்தைகள் நினைக்கிறார்கள்.
04:18 அவர்கள் வளர வளர, இது ஒரு பழக்கமாக மாறுகிறது.
04:23 அதனால், ஜங்க் உணவை எப்போதும் வெகுமதியாக அளிக்காதீர்கள்.
04:29 சாப்பிடும் வேலையில், தொலைகாட்சி மற்றும் அலைபேசியை தவிர்ப்பதில் கவனமாக இருக்கவும்.
04:37 தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சாப்பிடும்பொழுது கவனச்சிதறல் ஏற்படுகிறது.
04:41 இதனால், பசிஆரியதை உணராமல், அதிகமாக உண்கிறோம்.
04:46 உணவில் பல்வேறு வகைகளை கொண்டு வர தாய் முயற்சி செய்ய வேண்டும்.
04:53 குழந்தையின் வழக்கமான உணவையே கவர்ச்சியாக செய்யலாம்.
04:58 அதிக வண்ணங்கள் சேர்த்து, சத்துக்கள் நிறைந்ததாக ஆகுக்குங்கள்.
05:02 பல்வேறு வகையான உணவிலிருந்து பொருட்களை எடுத்து, அதை இணைத்து உபயோகியுங்கள்.
05:08 ஒரு எடுத்துக்காட்டை கூறுகிறேன்.
05:11 வெறும் சாதத்திற்கு பதிலாக, அதில் பயிறு, காய்கறி மற்றும் முட்டையை சேர்க்கலாம்.
05:19 இப்படி செய்கையில், குழந்தைகள் வீட்டில் செய்த உணவை உண்ண ஆர்வம் காட்டுவார்கள்.
05:26 ஒரு உணவை செய்வதற்கு முன், குழந்தையின் விருப்பு வெறுப்புகளை நினைவில் கொள்ளுங்கள்.
05:31 அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பொருள் பிடிக்கவில்லையெனில், அதை வேறொரு உணவில் மாற்று வடிவில் சேர்த்துவிடுங்கள்.
05:39 எடுத்துக்காட்டாக, சில குழந்தைகள், காய்கறிககளை உண்ண மறுப்பார்கள்.
05:45 நீங்கள் காய்கறிகளை, தோசை, பராட்டா, கட்லெட் போன்றவற்றில் சேர்த்து கொடுக்கலாம்.
05:54 காய்கறிகளை நறுக்கியோ அல்லது கூழாக்கியோ சூப் வடிவில் கொடுக்கலாம்.
06:00 ஜங்க் உணவுக்கு பதிலாக சத்துள்ள உணவை கொடுங்கள்.
06:04 எடுத்துக்காட்டாக, வடை, சமோசா, அல்லது ஒரு biscuit பாக்கெட் 5-10 ருபாய்க்கு விற்கிறது.
06:13 அதே விலையில், நீங்கள் இரண்டு முட்டை அல்லது ஒரு கிளாஸ் பால் வாங்கலாம்.
06:19 கடைகளில் கிடைக்கும் சுவை கூட்டக்கூடிய பொடிகளை குழந்தைகளின் பாலில் சேர்க்காதீர்கள்.
06:26 இதற்கு பதிலாக, மஞ்சள் அல்லது கொட்டைகள் மற்றும் விதைகளின் பொடியை சேர்க்கலாம்.
06:33 Ketchup கள் மற்றும sauceகளுக்கு பதிலாக கொட்டைகள் மற்றும் விதைகளின் பொடியை பயன்படுத்தலாம்.
06:41 சிப்ஸ் மற்றும் அவல்பொரிக்கு பதிலாக வறுத்த வேர்கடலை மற்றும் பொட்டுக்கடலையை சாப்பிடலாம்
06:50 வேக வைத்த பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை மற்றும் சோளம் ஆகியவையும் எடுத்துக்கொள்ளலாம்.
06:58 சுத்திகரிக்கப்பட்ட மாவினால் செய்த பூரியை தவிர்க்கவும்..
07:02 மாறாக, முழு தானியங்கள், கம்பு, சோளம் ஆகியவற்றினாலான சப்பாத்தி அல்லது பாராட்டவை உண்ணலாம்.
07:11 சுத்திகரிக்கப்பட்ட கெட்ட கொழுப்படங்கிய தாவர எண்ணெய் போன்றவற்றிற்கு பதிலாக நல்ல கொழுப்பை எடுத்துக்கொள்ளுங்கள்.
07:19 நல்ல கொழுப்பிற்கான உதாரணங்கள், தேங்காய் எண்ணெய், சுத்தமான நெய் மற்றும் வெண்ணணை.
07:26 கொட்டைகள், விதைகள், முட்டை மற்றும் மீன்களில் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளன.
07:32 குளிர்பானங்களை தவிர்க்கவும்.
07:36 மாறாக, தண்ணீர், எலும்பிச்சை நீர், இளநீர், மோர் அல்லது பால் ஆகியவற்றை அருந்தலாம்.
07:44 குழந்தைகள் பழரசம் அருந்துவதை விட, பருவகால பழங்களை அப்படியே உண்ண பழக்கப்படுத்துங்கள்.
07:51 பழ ரசங்கள் மற்றும் சர்க்கரை பானங்களை 2 வயதிற்கு குறைவான உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது.
07:58 நாளொன்றுக்கு, காபி மற்றும் தேநீரை அருந்துவது குறைவாக இருக்க வேண்டும்.
08:04 5-9 வயது குழந்தைகளுக்கு, அரை கப் அல்லது 100 ml கொடுக்கலாம்.
08:12 குமர பருவத்தினருக்கு, 1 கப் அல்லது 200 ml கொடுக்கலாம்.
08:18 5 வயதிற்கு குறைவாக உள்ள குழந்தைகளுக்கு காபி மற்றும் தேநீர் முற்றுலுமாக தவிர்க்கப்பட வேண்டும்.
08:26 குழந்தைகள் மற்றும் குமர பருவத்தினர், carbonated பானங்கள் மற்றும் உற்சாக பானங்களை முற்றுலுமாக தவிர்க்க வேண்டும்
08:33 வாரத்தில் ஒரு முறை மட்டுமே ஜங்க் உணவு சாப்பிட கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்.
08:40 சரியான பொருட்ககளை கொண்டு வீட்டில் செய்த உணவு, வெளியில் கிடைக்கும் ஜங்க் உணவை விட மிகவும் ஆரோக்கியமானதாகும்.
08:47 ஒரு பழக்கத்தை ஏற்படுத்த நாட்கள் ஆகலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
08:52 ஆதலால், குழந்தைகளுக்கு ஆரோக்யமான உணவை தேர்ந்தெடுக்க இளம் வயதிலிருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும்.
08:59 இத்துடன் இந்த டுட்டோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம்.

இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஆர்த்தி. நன்றி

Contributors and Content Editors

Arthi