Git/C2/Branching-in-Git/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:01 Gitல் Branching குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:05 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Branching, branch ஐ உருவாக்குவது, மற்றும் branch களுக்கு இடையே மாறுவது.
00:15 இந்த டுடோரியலுக்கு, நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 14.04, Git 2.3.2 மற்றும் 'gedit' Text Editor.
00:25 உங்களுக்கு விருப்பமான editorரை பயன்படுத்தலாம்.
00:29 இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, terminalலில் Linux command களை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
00:36 இல்லையெனில், அதற்கான Linux டுடோரியல்களுககு எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும்.
00:42 branching பற்றி கற்போம்.
00:44 ஒரு projectல் பொதுவாக, புது moduleகளை உருவாக்க, அல்லது, bugஐ சரி செய்ய, branches பயன்படுத்தப்படுகின்றன.
00:52 Main projectஐ தொந்தரவு செய்யாமல், projectன் புது moduleகளுடன் வேலை செய்ய இது உதவுகிறது.
00:58 Gitன் முன்னிருப்பான branch, master ஆகும்.
01:02 புது moduleகளை உருவாக்க, வேறுபட்டbranchகளை பயன்படுத்தலாம்.
01:06 பிறகு, அது master branchஉடன் சேர்க்கப்படும்.
01:11 உதாரணத்திற்கு, இந்த வரைப்படம், master மற்றும் new-module branchகளை கொண்ட ஒரு repositoryஐ காட்டுகிறது.
01:18 master branchல், C1, C2 மற்றும் C3 என சில commitகள் உள்ளன.
01:25 பிறகு, C3 commitல், branch 'new-module' ஒன்று உருவாக்கப்படுகிறது.
01:30 C4, C5மற்றும் C8 என்பன new-module branchன், commitகள் ஆகும்.
01:36 அதே சமயம், master branchல், commitகள் C6மற்றும் C7 உருவாக்கப்படுகின்றன.
01:43 இங்கு, new-module branch, master branchஐ தொந்தரவு செய்யவில்லை என்பதைக் காணலாம்.
01:49 new-module தயார் ஆகிய பிறகு, அதை master branchவுடன் சேர்த்து விடுவோம்.
01:55 இந்த டுடோரியலில், branch எவ்வாறு வேலை செய்கிறது என காட்டுகிறேன். அடுத்த டுடோரியலில் Merging பற்றி காண்போம்.
02:03 Terminalஐ திறக்க, Ctrl+Alt+Tஐ ஒன்றாக அழுத்தவும்.
02:07 நாம் முன்னர் உருவாக்கிய, Git repository mywebpageக்கு செல்வோம்.
02:13 டைப் செய்க:cd space mywebpage , பின் Enterஐ அழுத்தவும்.
02:19 செயல் விளக்கத்திற்கு, html fileகளையே தொடர்ந்து பயன்படுத்துகிறேன். உங்களுக்கு விருப்பமான எந்த file வகையையும் பயன்படுத்தலாம்.
02:28 Git log ஐ சரி பார்க்க, டைப் செய்க: git space log space hyphen hyphen oneline , பின் Enterஐ அழுத்தவும்.
02:37 முதலில், நமது repositoryயில் ஏதேனும் branch உள்ளதா என சரி பார்க்கலாம்.
02:43 டைப் செய்க: git space branch, பின் Enterஐ அழுத்தவும்.
02:48 முன்னர் கூறியது போல, அது முன்னிருப்பு branch, 'master', ஐ காட்டும்.
02:53 இப்போது, "new-chapter" என்ற branchஐ உருவாக்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம்.
02:57 டைப் செய்க: git space branch space new-chapter, பின் Enterஐ அழுத்தவும்.
03:04 branch listஐ காண, டைப் செய்க: git space branch, பின் Enterஐ அழுத்தவும்.
03:12 இங்கு, பட்டியலில், branch "new-chapter"ஐ காணலாம்.
03:16 master branchஉடன் asterisk symbol லையும் காணலாம்.
03:20 தற்போது, நாம், master branchல் வேலை செய்கிறோம் என்பதை இது குறிக்கும்.
03:25 "new-chapter" branchக்கு செல்ல, டைப் செய்க: git space checkout space new-chapter, பின் Enterஐ அழுத்தவும்.
03:36 branch பெயரை சரி பார்க்க, டைப் செய்க: git space branch, பின் Enterஐ அழுத்தவும்.
03:42 நாம் "new-chapter" branchல் உள்ளோம் என்பதை asterisk குறிக்கிறது.
03:49 அடுத்து, செயல்விளக்க நோக்கத்திற்கு story.html என்ற html fileஐ உருவாக்கி, அதை commit செய்கிறேன்.
03:57 டைப் செய்க: gedit space story.html space ampersand, பின் Enterஐ அழுத்தவும்.
04:05 முன்னர் சேமித்து வைத்திருந்த, writer documentலிருந்து, சில codeகளை, copy - paste செய்கிறேன்.
04:12 fileஐ சேமித்து மூடவும்.
04:15 எந்த ஒரு, fileஐயும், சேர்க்கும் போதோ அல்லது நீக்கும் போது, commit செய்ய நினைவில் கொள்க.
04:21 staging areaவிற்கு fileஐ சேர்க்க, டைப் செய்க: git space add space story.html, பின் Enterஐ அழுத்தவும்.
04:31 நமது வேலையை commit செய்ய, டைப் செய்க: git space commit space hyphen m space இரட்டை மேற்கோள்களில் “Added story.html in new-chapter branch”, பின் Enterஐ அழுத்தவும்.
04:47 "new-chapter" branchன், Git logஐ சரி பார்க்க, டைப் செய்க: git space log space hyphen hyphen oneline, பின் Enterஐ அழுத்தவும்.
04:57 “Added story.html in new-chapter branch” என்ற நமது சமீபத்திய commitஐ இங்கு காணலாம்.
05:04 இப்போது, சில வேலைகளை செய்ய, master branchக்கு திரும்பி செல்ல வேண்டும் என வைத்துக் கொள்வோம்.
05:10 ஆதலால், டைப் செய்க: git space checkout space master, பின் Enterஐ அழுத்தவும்.
05:18 Git log ஐ சரி பார்க்க , டைப் செய்க: git space log space hyphen hyphen oneline, பின் Enterஐ அழுத்தவும்.
05:27 இங்கு, commit “Added story.html in new-chapter branch” ஐ காண முடியாது.
05:34 ஏனெனில், அந்த commit, "new-chapter" branchக்கு மட்டுமே சொந்தமானது.
05:39 folder contentஐ சரி பார்க்க, டைப் செய்க: ls, பின் Enterஐ அழுத்தவும்.
05:45 இங்கு, story.html fileஐயும் காண முடியாது.
05:49 அடுத்து, history.html fileலில் சில மாற்றங்களை செய்யலாம்.
05:55 fileஐ திறக்க, டைப் செய்க: gedit space history.html space ampersand, பின் Enterஐ அழுத்தவும்.
06:05 சில வரிகளை சேர்க்கவும்.
06:08 fileஐ சேமித்து மூடவும்.
06:10 இவ்விடத்தில், நமது வேலையை commit செய்ய, டைப் செய்க: git space commit space hyphen am space இரட்டை மேற்கோள்களில் “Added chapter two in history.html”, பின் Enterஐ அழுத்தவும்.
06:26 இதுவரை, நாம் master branch ல் வேலை செய்தோம்.
06:30 இப்போது, new-chapter branchல், இந்த commit வந்துள்ளதா என சரி பார்க்கலாம்.
06:36 new-chapter branchக்கு செல்ல, டைப் செய்க: git space checkout space new-chapter, பின் Enterஐ அழுத்தவும்.
06:46 Git log ஐ சரி பார்க்க , டைப் செய்க: git space log space hyphen hyphen oneline , பின் Enterஐ அழுத்தவும்.
06:55 இங்கு,commit “Added chapter two in history.html”ஐ காண முடியாது. ஏனெனில், அது, master branchல் உள்ளது.
07:04 story.html fileலில் சில வரிகளை சேர்க்கலாம். டைப் செய்க: gedit space story.html space ampersand, பின் Enterஐ அழுத்தவும்.
07:16 Writer documentலிருந்து சில வரிகளை சேர்க்கிறேன்.
07:20 fileஐ சேமித்து மூடவும்.
07:22 Git statusஐ சரி பார்க்க, டைப் செய்க: git space status, பின் Enterஐ அழுத்தவும்.
07:29 இந்நிலையில், நமது வேலையை commit செய்யவில்லை என்பதைக் கவனிக்கவும்.
07:33 commit செய்யாமல் branchக்கு வர முயற்சித்தால், என்ன நடக்கும். இது, ஒரு errorஐ காட்டும்.
07:41 master branchக்கு திரும்பிச் செல்ல முயற்சிப்போம். டைப் செய்க: git space checkout space master, பின் Enterஐ அழுத்தவும்.
07:51 மாற்றங்களை commit செய்யாமல், branchகளுக்கு திரும்பி வர முடியாது, என்பதை இந்த error காட்டுகிறது.
07:59 ஒரு வேளை, இந்நிலையில், மாற்றங்களை commit செய்வது, அவசியமில்லாமல் போனால் என்ன செய்வது? அதை stashing மூலம் கையாளலாம்.
08:08 பின்வரும் டுடோரியல்களில், stashing பற்றிக் கற்போம்.
08:13 இப்போதைக்கு, இந்த branchலிருந்து கட்டாயமாக வெளிவர, hyphen hyphen force flagஐ பயன்படுத்துவோம்.
08:19 டைப் செய்க: git space checkout space hyphen hyphen force space master, பின் Enterஐ அழுத்தவும்.
08:28 மறுபடியும், new-chapter branchக்கு சென்று, மாற்றங்கள் புறக்கணிக்கப்பட்டதா என சரி பார்க்கலாம்.
08:36 டைப் செய்க: git space checkout space new-chapter, பின் Enterஐ அழுத்தவும்.
08:42 story.html fileஐ திறக்க, டைப் செய்க: gedit space story.html space ampersand, பின் Enterஐ அழுத்தவும்.
08:54 இங்கு, நமது மாற்றங்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டன என்பதைக் காணலாம். geditஐ மூடவும்.
09:01 அடுத்த டுடோரியலில், new-chapter branch உடன், master branchஐ சேர்க்கக் கற்போம்.
09:07 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்து விட்டோம்.
09:12 சுருங்கசொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது: Branching, branch ஐ உருவாக்குவது, மற்றும் master branch க்கும், புது branchக்கும் இடையே மாறுவது.
09:23 பயிற்சியாக- "chapter-two" என்ற branch ஐ உருவாக்கவும்.
09:28 chapter-two branchக்கு செல்லவும்.
09:31 சில commitகளை செய்யவும்.
09:33 master branchக்கு திரும்பவும்.
09:36 master branchல், "branch chapter-two"ன், commitகளை காண முடியாது என்பதை Git logஐ பார்த்து, புரிந்து கொள்ளவும்.
09:44 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
09:52 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
09:59 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
10:03 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
10:15 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst