Git/C2/Basic-commands-of-Git/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:01 Gitல் அடிப்படை commandகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:05 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது, Git repository மற்றும் Gitன் சில அடிப்படைcommandகள் .
00:13 இந்த டுடோரியலுக்கு, நான் பயன்படுத்துவது, Ubuntu Linux 14.04, Git 2.3.2 மற்றும் 'gedit' Text Editor.
00:23 உங்களுக்கு விருப்பமான editorரை பயன்படுத்தலாம்.
00:27 இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, terminalலில் Linux command களை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
00:33 இல்லையெனில், அதற்கான Linux டுடோரியலுக்கு எங்கள் வளைதளத்தை பார்க்கவும்.
00:40 இப்போது, Git repository பற்றி காண்போம்.
00:44 Git repository என்பது ஒரு folder, அதில் நம் project-ன் தகவல்கள் அனைத்தும் சேமிக்கப்படும்.
00:50 அது ஒரு local machine அல்லது remote machine என எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.
00:55 Git repositoryக்கும், சாதாரண folderக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால்
01:00 சாதாரண folderலில், files, directories மட்டுமே இருக்கும்.
01:04 ஆனால், Git repositoryல் file மற்றும் directoryகளின் மொத்த வரலாறும் இருக்கும்.
01:11 இப்போது, நம் கணினியில், ஒரு Git repositoryயை எப்படி உருவாக்குவது என பார்ப்போம்.
01:17 Terminal-லை திறக்க, Ctrl+Alt+Tkeys-யை ஒன்றாக அழுத்தவும்.
01:22 என் கணினியில், Git repositoryக்கு ஒரு directoryயை, என் home directory-யில் உருவாக்குகிறேன்.
01:28 நீங்கள், உங்கள் கணினியில், எங்கு வேண்டுமானாலும் directoryயை உருவாக்கலாம்.
01:33 Terminalலில் முன்னிருப்பாக, நாம் home directoryல் உள்ளோம்.
01:37 டைப் செய்க: mkdir space mywebpage, பின் Enterஐ அழுத்தவும்.
01:44 இப்போது, home directory-யில், mywebpage என்கிற directory-யை உருவாக்கிவிட்டோம்.
01:49 இந்த directoryனுள் செல்ல, டைப் செய்க:cd space mywebpage , பின்Enter அழுத்தவும்.
02:00 mywebpage directoryயை, Git repository ஆக மாற்ற, டைப் செய்க: git space init, பின் Enterஐ அழுத்தவும்.
02:08 Initialized empty Git repository என்கிற செய்தியை காண்பீர்கள்.
02:13 Git தொடங்கிவிட்டது என்பதை இது குறிக்கும்.
02:17 நம் கணினியில் Git repository உருவாக்கப்பட்ட path இது தான்.
02:24 அதன் பிறகு, dotgit என்ற hidden folder, mywebpage folderலில் உருவாக்கப்படும்.
02:32 அந்த hidden folderரை பார்க்க, டைப் செய்க: Is space hyphen a, பி்ன் Enterஐ அழுத்தவும்.
02:39 அது dotgit folderரை காண்பிக்கும். அதை நீக்கினால், மொத்த repositoryயும் அழிந்துவிடும்.
02:47 அதனால் இந்த dotgit folderஉடன் கவனமாக இருக்க வேண்டும்.
02:51 இப்போது, Gitக்கு ஓரு identityஐ பொருத்த வேண்டும்.
02:55 Email address ஐ பொருத்த, டைப் செய்க: git space config space hyphen hyphen global space user dot email space priya[dot]spoken@gmail.com, பி்ன்Enter அழுத்தவும்.
03:12 இங்கு, நான், priya[dot]spoken[at]gmail[dot]comஐ பயன்படுத்தி இருக்கிறேன்.
03:18 உங்கள் சொந்த, email முகவரியை பயன்படுத்தவும்.
03:21 Username-ஐ பொருத்த, டைப் செய்க:git space config space hyphen hyphen global space user dot name space Priya, பி்ன் Enter அழுத்தவும்.
03:37 Priya என, username-ஐ, பயன்படுத்துகிறேன். நீங்கள், உங்கள் பெயரை பயன்படுத்தவும்.
03:43 நாம் பொருத்தும் பெயரும், email addressம், Gitல் வேலை செய்யும் நபரின் அடையாளம் ஆகும்.
03:51 அடுத்து, commit messageஐ கொடுப்பதற்க்கு, getit text editorஐ configure செய்கிறேன்.
03:57 டைப் செய்க: Git space config space hyphen hyphen global space core dot editor space gedit, பின் Enter அழுத்தவும்.
04:09 இப்போது, Git'க்கு, gedit configure ஆகிவிட்டது.
04:14 இங்கு, 'global' flag optional ஆகும்.
04:18 Global flag பற்றி மேலும் அறிய slideகளுக்கு வருவோம்
04:22 ஒரே கணினியில், பல repositoryகளை உருவாக்கலாம்.
04:26 Hyphen hyphen global flagஐ பயன்படுத்தினால், அதே setting, கணினியில் உள்ள எல்லா repositoryகளிலும் செயலாக்கப்பட்டுவிடும்.
04:34 அதனால், எங்கு புது Git repository உருவாக்கினாலும், இந்த setting தானாகவே செயலாக்கப்பட்டுவிடும்.
04:42 ஒரு குறிப்பிட்ட repository-க்கு மட்டும் identity வேண்டுமென்றால், hyphen hyphen global flag-ஐ பயன்படுத்தக் கூடாது.
04:49 terminalலுக்கு திரும்பி வரவும்.
04:51 முன்னதாக அமைத்த identityயின் configuration விவரங்களை பார்க்கலாம்.
04:57 டைப் செய்க: Git space config space hyphen hyphen list, பின் Enterஐ அழுத்தவும்.
05:04 இங்கு editor name, email address மற்றும் username-ஐ பார்க்கலாம்.
05:10 செயல் விளக்கத்திற்கு, நான் html fileகளை பயன்படுத்துகிறேன்.
05:14 உங்களுக்கு விருப்பமான எந்த file வகையையும் பயன்படுத்தலாம். உதாரணமாக, text files அல்லது doc files.
05:22 terminalலுக்கு திரும்பி வரவும். promptஐ சுத்தம் செய்கிறேன்.
05:26 டைப் செய்க: gedit space mypage.html space ampersand.
05:34 நீங்கள் வேறு fileஐ பயன்படுத்தினால், அதன் பெயரைக் கொடுக்கவும்.
05:41 Promptலிருந்து வெளிவர, '&'(ampersand)ஐ பயன்படுத்துகிறேன். Enterஐ அழுத்தவும்.
05:47 Writer documentல் நான் முன்னதாக சேமித்து வைத்திருந்த சில codeகளை copy, paste செய்கிறேன்.
05:54 நீங்களும் அதே போல், சில தகவல்களை உங்கள் file-லில் சேர்க்கவும்.
05:58 fileஐ சேமிக்கவும்.
06:01 என்னிடம் code உள்ள html file உள்ளது.
06:06 கவனிக்கவும்: mypage.html வரும் இடங்களில் எல்லாம், உங்கள் file பெயரை கொடுக்கவேண்டும்.
06:14 Gitஐ '"mypage.html fileஐ பின் தொடர சொல்வோம்.
06:18 terminal-லுக்கு திரும்பி வந்து, டைப் செய்க: git space add space mypage.html. பின் Enterஐ அழுத்தவும்.
06:27 இப்போது Gitன் statusஐ சரி பார்த்துக் கொள்வோம். டைப் செய்க: git space status, பின் Enterஐ அழுத்தவும்.
06:36 new file: mypage.html என காண்பீர்கள். mypage.htmlன் மாற்றங்களை Git, பின்பற்றுகிறது என்பதை இது குறிக்கிறது.
06:48 இது tracking எனப்படும்.
06:51 Mypage.html fileலுக்கு திரும்பி வருவோம்.
06:55 இங்கு, இன்னும் சில code வரிகளை சேர்ப்போம்.
06:58 முன்னர் செய்தது போல, Writer file-ல் இருந்து, copy-paste செய்கிறேன்.
07:06 Fileஐ சேமித்து மூடவும்.
07:10 terminal-லுக்கு திரும்பி வந்து, Gitன் statusஐ சரி பார்க்க, டைப் செய்க git space status, பின் Enterஐ அழுத்தவும்.
07:21 changes not staged for commit என்றும், modified:mypage.html என்றும் காட்டுகிறது.
07:28 நாம் செய்த மாற்றங்கள், staging areaவில் சேர்க்கப்படவில்லை என்பதை இது குறிக்கும்.
07:34 Staging area பற்றி மேலும் அறிந்து கொள்ள, slideகளுக்கு திரும்பி வருவோம்.
07:39 Staging area என்பது ஒரு file. அது, நாம் commit, செய்ய வேண்டிய திருத்தங்களின், தகவல்களை, சேகரித்து வைக்கும்.
07:46 Commit செய்வதற்கு முன், file-ன் content, staging areaவிற்கு சேர்க்கப்பட வேண்டும்.
07:51 பின்வரும் டுடோரியல்களில், commit பற்றி மேலும் அறியலாம்.
07:56 பழைய Git version-னில், staging areaவிற்கு பதிலாக, index என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு இருக்கும்.
08:01 இப்போது file-ன் புதிய மாற்றங்களை, staging areaவிற்கு, சேர்க்க கற்போம்.
08:07 terminalலுக்கு திரும்பி வரவும். promptஐ சுத்தம் செய்கிறேன்.
08:11 டைப் செய்க:Git space add space mypage dot html, பின் Enterஐ அழுத்தவும்.
08:19 Git-ஐ சரி பார்க்க, டைப் செய்க : git space status, பின் Enterஐ அழுத்தவும்.
08:26 changes to be committed, என்ற தகவலைப் பார்க்கலாம்.
08:30 இதன் பொருள்- file, staging areaல் சேர்க்கப்படடு, commit ஆவதற்கு, தயாராக உள்ளது.
08:37 இப்போது, நாம் code-ஐ, இவ்விடத்தில், freeze செய்வோம்.
08:40 நம் வேலையில், ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்த பிறகு, அதை, repositoryயில் சேமிக்கலாம். இது commit எனப்படும்
08:49 ஒவ்வொரு commitடும், username, email-id, date, time, commit message ஆகிய தகவல்களோடு, சேமிக்கப்படுகிறது.
08:57 அடுத்து Commit செய்ய கற்போம். terminal-லுக்கு திரும்பி வந்து, டைப் செய்க: git space commit, பின் Enterஐ அழுத்தவும்.
09:07 Commit messageஐ பெற, getit text editor தானாக திறக்கும்.
09:13 முதல் வரியில், “initial commit”, என்ற commit messageஐ எழுதுகிறேன்.
09:18 எந்த பயனுள்ள தகவலையும், நீங்கள் எழுதலாம்.
09:22 இங்கு, hashவுடன் தொடங்கும் சில வரிகளைப் பார்க்கலாம். நீங்கள் அவற்றை நீக்கலாம், அல்லது அப்படியே விட்டு விடலாம்.
09:30 Hash வரிக்கு முன்போ அல்லது பின்போ, commit messageஐ எழுதவும்.
09:35 பிற்காலத்தில், இந்த commit messageஐ வைத்து, இந்த நிலை வரையில், நாம் என்ன செய்தோம் என்பதை கண்டறியலாம்.
09:41 Editorரை சேமித்து மூடுகிறேன்.
09:44 இங்கு சில விவரங்களைப் பார்ப்பீர்கள், உதாரணத்திற்கு -commit message -எவ்வளவு fileகளை மாற்றி இருக்கிறோம் -எவ்வளவு புகுத்தல்கள் செய்து இருக்கறோம் மற்றும் -file-ன் பெயர்.
09:56 இப்போது, git log command-ஐ பயன்படுத்தி, commit விவரங்களை அறிந்து கொள்வோம்.
10:00 டைப் செய்க: Git space log, பின் Enterஐ அழுத்தவும்.
10:06 நமது repository-யில் ஒரே ஒரு commit தான் இருக்கிறது.
10:09 அது ஒரு தனித்த id-ஐ காண்பிக்கும் - அது, commit hash அல்லது SHA-1 hash எனப்படும்.
10:16 SHA-1 hash பற்றி மேலும் தெரிந்து கொள்ள, slide-க்கு வருவோம்.
10:20 SHA-1 hash என்பது 40 alpha numeric characterகளை கொண்ட ஒரு தனித்த id ஆகும்.
10:25 Git, database-ல், எல்லா தகவல்களையும், hash value கொண்டு தான் சேமிக்கும்.
10:31 SHA-1 hashஐ வைத்து தான், Git commitsஐ, கண்டறிய முடியும்.
10:35 பின்வரும் டுடோரியல்களில், SHA-1 hashன் முக்கியத்துவத்தை, புரிந்து கொள்ள இயலும்.
10:41 terminal-லுக்கு திரும்பவும்.
10:45 இங்கு நாம் பார்ப்பது author name, email address, date, time மற்றும் நாம் முன்னர் கொடுத்த commit message போன்றவை.
11:00 சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது: -Git repository மற்றும் -Gitன் அடிப்படை commandகளாகிய, git, init, status, commit மற்றும் log.
11:14 பயிற்சியாக- உங்கள் கணினியில், ஒரு directoryஐ உருவாக்கி, அதை repository ஆக்கவும்.
11:20 ஒரு text file உருவாக்கி, அதில் சில விவரங்களை சேர்க்கவும்.
11:25 Git repositoryன் , staging areaவிற்கு, fileஐ சேர்க்கவும்.
11:29 File-ஐ repository-க்கு commit செய்யவும்.
11:32 Git log command-ஐ பயன்படுத்தி, commitன் விவரங்களை பார்க்கவும்.
11:35 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
11:43 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
11:54 இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது.
12:01 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
12:08 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst