GIMP/C2/Rotating-And-Cropping-An-Image/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:22 Gimp tutorial க்கு நல்வரவு
00:24 இந்த படத்தை edit செய்ய ஆரம்பிக்கும் முன் உங்கள் உண்மை புகைப்படத்திற்கு RAW பயன்படுத்துவது குறித்து சற்று சொல்ல விரும்புகிறேன்.
00:33 இந்த படத்தை JPEG ல் எடுத்திருந்தேன் எனில், இதை encode செய்ய brightness க்கு 256 படிகளை கொடுத்திருப்பேன்
00:42 இது சற்று கருப்பு வெள்ளையாகவும், நீலம் மற்றும் பச்சை கலந்ததாகவும் இருந்தாலும் அடிப்படையில் இது gray மட்டுமே.
00:52 JPEG உடன் gray க்கான 256 வெவ்வேறு மதிப்புகள் உள்ளன
01:00 கருப்புக்கு Zero மற்றும் வெள்ளைக்கு 255.
01:05 இந்த படத்தில் வெள்ளை இல்லை. சற்று கருப்பு உள்ளது.
01:11 எனவே சிறு இடம் மட்டுமே இதற்கு பயன்படுத்தப்படுகிறது.
01:16 எவ்வளவு என்று பிறகு சொல்கிறேன்.
01:19 இந்த படத்தை RAW ல் எடுத்திருக்கிறேன். 12 bit data format ல் raw படங்களை என் camera சேமிக்கிறது.
01:27 இதுதான் மதிப்புகளை இட்ட பின் raw converter மூலம் வெளிவந்த படம். இங்கே gray க்கு 256 வெவ்வேறு மதிப்புகள் உள்ளன. இப்போது இந்த படத்தை edit செய்ய ஆரம்பிக்கலாம்.
01:42 இந்த படம்... முதல் படத்துடன் ஒப்பிடப்படுவதால் இதில் மேலும் தகவல்கள் சேமிக்கப்படுகின்றன.
01:47 எனக்கு நினைவிருக்கிறது இது முதல் படம். conversionக்கு பின் இதை நான் பெற்றேன்.
01:54 முதல் படத்தின் mood ஐ கொண்ட, ஒரு படத்தில் முடிவைக் காட்டும், post processing செய்வதற்கான நல்ல அடிப்படை இரண்டாவது படம் ஆகும். ஆனார் சுமாராக உள்ளது.
02:06 இப்போது GIMP ல் இரு படங்களையும் திறந்துள்ளேன், எனவே இரு படங்களை histogram ல் பார்க்கலாம்.
02:14 image dialog ல் histogram மறைந்துள்ளது,
02:17 ஆனால் image dialog ஐ அடைய 3 வெவ்வேறு வழிகள் உள்ளன, முதல் வழி tool bar ல் உள்ளது
02:33 இரண்டாம் வழி இங்கே Access the Image Menu ல் சொடுக்கி dialogs ல் சொடுக்குவது
02:40 மூன்றாவது வழி படத்தின் மீது வெறுமனே வலது சொடுக்கி dialog பின் histogram.
02:48 இங்கே முதல் படத்தின் histogram உள்ளது.
02:51 இதை சற்று பெரிதாக்கவும். இங்கே படத்தில் வெவ்வேறு நிறங்களின் வெவ்வேறு pixelகளின் பகிர்வைக் காணலாம்.
02:59 Digital image என்பது எண்களின் மூலம் வரைவது போன்றது.
03:03 படத்தை பெரிதாக்கும்போது பல சிறு கட்டங்களைக் காணலாம். ஒவ்வொரு கட்டமும் வெவ்வேறு நிறத்தை கொண்டது. இது pixel எனப்படும்.
03:14 ஒவ்வொரு நிறமும் ஒரு மதிப்பால் வரையறுக்கப்படுகிறது. color picker ன் உதவியுடன் இந்த மதிப்புகளைக் காட்டுகிறேன்.
03:26 colour pickerஐ பயன்படுத்தும்போது red, green மற்றும் blueன் மதிப்புகளைப் பெறுகிறேன்.
03:32 இந்த படத்தில் red ன் மதிப்பானது green மற்றும் blueன் மதிப்பை விட சற்று குறைவு.
03:38 Green உம் blue உம் கிட்டத்தட்ட ஒரே மதிப்பில் உள்ளன
03:43 எண்களால் வரைவது digital photography ஆகும்
03:46 இந்த படத்தில் இங்கே 0 முதல் 255 வரை எண்கள் உள்ளன, இங்கே முழுதும் கருப்பான பகுதி உள்ளது. ஆனால் இது நல்ல படத்தை கொடுக்கும் என நான் நினைக்கவில்லை.
04:00 படத்தின் உண்மை பகுதி இங்கே கிட்டத்தட்ட 80 லிருந்து ஆரம்பிக்கிறது என நினைக்கிறேன். படத்தின் பிரகாசமான பகுதி கிட்டத்தட்ட 200 ல் உள்ளது.
04:10 எனவே 0 முதல் 256 வரை இடம் உள்ளது, ஆனால் நாம் பயன்படுத்துவது 120 மட்டுமே. அது நாம் பயன்படுத்தும் data ன் பாதிக்கும் குறைவே.
04:23 அதனால் இங்கே படத்தின் ஏராளமான தகவல்கள் இழக்கப்படுகின்றன
04:29 இரண்டாம் படத்தின் histogram ஐ காணலாம்.
04:33 நாம் இங்கு பார்ப்பது போல முதலாவதுடன் ஒப்பிட்டதால் இந்த histogram களில் அதிக dataகள் உள்ளன. ஆனால் curve ன் அமைப்பு ஒரே மாதிரியானவை.
04:45 இந்த இரு histogramகளை ஒப்பிடுவோம்.
04:51 இரண்டாம் படத்தில் தகவல்கள் பரவியுள்ளது. எனவே இங்கே இரண்டாவது படத்தை முதலாவது போல compress செய்ய அந்த பிரச்சனையை நான் தீர்க்க வேண்டும்.
05:01 ஆனால் இது மேலும் பல தகவல்களை வைத்திருக்க வேண்டும். முதலாவது படத்தைப் போல இவ்வாறு மேலும் contrast ஐயும் வைத்திருக்க வேண்டும்.
05:11 இந்த படத்துடன் வேலை செய்ய ஆரம்பிப்பதற்கு முன், கடைசி tutorial ஐ நான் பதிவுசெய்த போது கண்டறிந்த gimp user interface பற்றி நான் சற்று காட்ட விரும்புகிறேன்.
05:23 image window ல் tab ஐ அழுத்தும்போது, இங்கே tool box மறைந்து படத்தை முடிந்தவரை பெரிதாக்க உதவுகிறது. என் தேவைக்கேற்ப tool box ஐ on மற்றும் off செய்யலாம்.
05:41 எனவே இங்கே நான் செய்வதை நானும் நீங்களும் நன்கு பார்க்கலாம்.
05:46 படத்தை edit செய்ய ஆரம்பிக்கும் முன் சில settings ஐ நான் மாற்ற வேண்டும்.
05:52 எனவே file, preference மற்றும் இங்கே window management சென்று இங்கே tool box க்கு keep above மற்றும் docksக்கும் keep above ஐ தேர்கிறேன். மீதி optionகளை இருப்பது போன்றே விட்டுவிடுகிறேன்.
06:11 OK ஐ அழுத்தியபின் GIMP அறிவித்தவாறே வேலைசெய்கிறது.
06:17 tool box லிருந்து tools ஐ தேர்ந்தெடுக்க முடியும். தேர்ந்தெடுத்த tool ன் அனைத்து option ஐயும் பெறலாம்.
06:25 படத்தின் மீது மீண்டும் சொடுக்கி tab ஐ பயன்படுத்தி tool box ஐ on மற்றும் off செய்யலாம்.
06:33 முதல் விஷயமாக படம் சரிமட்டமாக உள்ளதா என சோதிக்க வேண்டும்.
06:37 இந்த படத்தில், இங்கே மனிதன் உருவாக்கிய நம்பகமான அமைப்பு ஏதும் இல்லை, எனவே படம் நேராக உள்ளதா என சோதிக்க grid method ஐ நான் பயன்படுத்த முடியாது.
06:47 நீரின் மேற்பரப்பு ஒரு நல்ல குறிப்பு ஆகும்.
06:50 ஆனால் எல்லையை இங்கு நாம் காணவில்லை. நீரின் கோடுகளும் சற்று தவறாக வழிநடத்துகிறன.
06:57 இங்கே இது எல்லை இல்லை. ஆனால் ஆற்றில் வளைவு உள்ளது.
07:02 எனவே ruler ஐ அமைக்கவும் எல்லையை சோதிக்கவும் எனக்கு உண்மை குறிப்பு இல்லை.
07:08 என் கண்களை மட்டுமே நான் நம்ப வேண்டும். புகைப்படத்தில் ஏதேனும் செய்ய அது மோசமான வழி என்று நான் நினைக்க வில்லை.
07:16 இப்போது நான் rotate tool ஐ தேர்ந்து corrective backward க்கு பதில் normal forward ஐ தேர்கிறேன். preview ல் image ஐ அமைக்கிறேன். grid அல்ல.
07:30 சரி. படத்தில் சொடுக்கலாம்.
07:38 இங்கே மையத்தில் center of rotation என்ற ஒரு புள்ளி உள்ளது. அதை சுற்றி படம் சுழற்றப்படும்
07:46 இங்கே படத்தை சுழற்ற விரும்பும் கோணத்தை அமைக்க dialog உள்ளது.
07:52 படத்தை சுழற்றுவதுதில் உதவ இங்கே ஒரு slider உள்ளது. ஆனால் இதை கையாளுவது கடினம் என காணலாம். இந்த அளவுக்கு படத்தை சாய்க்க முடியும் என்று நான் நினைக்க வில்லை.
08:05 எனவே இங்கு zero க்கு செல்கிறேன். இப்போது படத்தை சுழற்ற இந்த பாணியைப் பயன்படுத்துகிறேன்.
08:14 படம் வலப்பக்கமாக சற்று சாய்ந்துள்ளது என நினைக்கிறேன். எனவே படத்தை இடப்பக்கமாக சுழற்ற வேண்டும். அதாவது இடஞ்சுழியாக. எனவே எதிர்மறை மதிப்புகளைத் தரவேண்டும்.
08:29 எனவே சரியான நேரான படத்தை பெறும்வரை angle ஐ மாற்றிக்கொண்டே இருக்கிறேன்
08:36 எனவே -0.25° க்கு angle ஐ அமைக்கிறேன்
08:43 இந்த window ஐ மேலே இழுத்து rotate ல் சொடுக்கி இந்த செயல்பாட்டின் முடிவிற்காக காத்திருக்கவும்.
08:50 அடுத்த படி cropping
08:54 படத்தில் கப்பல், நீர் மற்றும் இந்த பறவைகளை வைத்திருக்க விரும்புகிறேன்.
09:02 இந்த படத்தில் இங்கே இந்த புல், இங்கே இந்த பகுதி தேவையில்லை. மற்றும் என் படத்தில் இந்த ஆற்றின் கரை வேண்டும் என நான் நினைக்கவில்லை.
09:16 படத்தின் இந்த பகுதியை crop செய்வேன் என நினைக்கிறேன். ஏனெனில் பின்னர் படத்தின் மிக இருண்ட பகுதி எனக்கு வேண்டும்.
09:24 அதாவது பறவைகள் இங்கே, கப்பல் மற்றும் மரங்கள், கப்பலுக்கு பின் கரை, கடைசியாக நீர் மற்றும் வானம்.
09:35 படத்தின் இந்த பகுதி மிக இருண்டுள்ளது.
09:39 முடிந்தவரை ஆற்றின் பகுதியை சேர்க்க விரும்புவதால் படத்தின் இந்த பகுதியை பெரிதாக்க விரும்புகிறேன். ஆனால் கரையின் பகுதி ஏதும் இல்லை.
09:49 எனவே hot key Z ஐ அழுத்தி படத்தின் இந்த பகுதியை பெரிதாக்குகிறேன்.
10:00 இங்கே மற்றொரு பறவை பறக்கிறது.
10:02 எனவே இடப்பக்கம் சென்று...... ruler ஐ கரைக்கு அருகில் இழுத்து...... இங்கே விடுகிறேன்
10:09 Shift + ctrl + E அழுத்துக. இது படத்திற்கு திரும்ப அழைத்து செல்லும்.
10:15 இப்போது crop tool ஐ தேர்ந்து அதில் சில optionகளை அமைக்கலாம்.
10:20 எனக்கு fixed aspect ratio 2:1 வேண்டும்.
10:29 மேலும் உதவிக்கு preview ல் rule of thirds ஐ அமைக்கிறேன். இது சில உதவும் வரிகளை கொடுக்கும்.
10:37 இங்கே சேர்த்தவைகளைக் காணலாம்.
10:41 இங்கே பறவைகளின் கூட்டம் மற்றும் இங்கே ஒரு தனிப்பறவை உள்ளது.
10:47 இப்போது rulerகளை சொடுக்கலாம்.
10:51 படத்தின் கீழ்ப்பகுதியில் அங்கே நீர் உள்ளது. ஆனால் இதில் போதுமான நீர் இல்லை. மற்றும் வானம் அதிகமாக சேர்க்கப்படுகிறது.
11:01 மேலே இங்கே இந்த தனிப்பறவையை விட்டுவிடலாம். படத்தில் பறவைகளின் கூட்டம் இருப்பதை விரும்புகிறேன்.
11:09 இப்போது இதை சற்று கீழே இழுக்கிறேன. இது நன்றாக உள்ளது என நினைக்கிறேன்
11:14 வேலையை சோதிக்க rule of thirds ஐ தேர்கிறேன்.
11:19 என் கண் மிகவும் மோசம் இல்லை. ஏனெனில் படத்தை நீர் மரங்கள் மற்றும் வானம் என மூன்று வெவ்வேறு பகுதிகளாக பிரித்தேன்.
11:30 கப்பல் ஆர்வமுள்ளவைகளில் ஒன்று
11:34 பறவைகளின் கூட்டம் ஆர்வமுள்ளவைகளில் இரண்டாவது. இது படத்தின் ஒன்பதில் ஒரு பங்கு... நன்றாக உள்ளது.
11:42 இது வேலை செய்யும் என நினைக்கிறேன். எனவே crop செய்ய படத்தினுள் சொடுக்குகிறேன்.
11:49 படத்தை பெரிதாக்க tab மற்றும் shift + ctrl +E ஐ அழுத்தவும்.
11:55 படத்தை crop செய்வதுடன் நன்கு ஆரம்பித்துள்ளோம் என நினைக்கிறேன். இந்த படத்துடன் செய்ய மற்றவைகளை அடுத்த tutorialகளில் காட்டுகிறேன்.
12:05 இதை முடிக்கும் முன் படத்தை சேமிக்க வேண்டும். இதை சற்று முன்னரே கண்டிப்பாக செய்திருக்க வேண்டும்.
12:12 படத்தை Fog.xcf என சேமிக்கிறேன். ‘xcf’ என்பது GIMP ன் சொந்த file format extension. இது உதவிகரமான layersன் தகவல்கள், undo தகவல்கள் மற்றும் GIMPன் மேலும் பலவற்றை கொண்டுள்ளது.
12:29 உங்களிடமிருந்து பின்னூட்டம் பெற விரும்புகிறேன்.
12:32 உங்களுக்கு பிடித்தது, இன்னும் நன்றாக செய்திருக்கலாம் என தோன்றுவது ஆகியவற்றை info@meetthegimp.org மூலம் மின்னஞ்சல் செய்யவும்.
12:42 மேலும் தகவல்களுக்கு http://meetthegimp.org
12:47 இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Gaurav, Priyacst, Ranjana