GIMP/C2/Drawing-Tools/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:23 GIMP tutorial க்கு நல்வரவு. வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.
00:30 இந்த drawing toolகளை விரிவாக காணலாம்
00:37 முதலாவது drawing tool... pencil. இது மிக கடினமான முனைகளுடன் வேலை செய்கிறது.
00:44 இங்கே நேரான கோட்டை வரைந்துள்ளேன். படத்தை பெரிதாக்குகிறேன் எனில், ஒவ்வொரு pixelலும் கருப்பிலோ வெள்ளையிலோ இருப்பதைக் காணலாம்.
01:01 வரைதலுக்கு paint brush ஐ தேர்ந்தெடுக்கும்போது, மிருதுவான முனையுள்ள கோட்டை பெறுகிறோம் .
01:08 மீண்டும் பெரிதாக்கும்போது, pencilல் வரையும் போது சிதறலுடன் கடினமான கோட்டைக் காணலாம்.
01:17 paint brush ல் வரையும் போது மென்மையான கோட்டைப் பெறுகிறேன்.
01:29 இங்கே pencil க்கு வருவோம்.
01:32 pencil ஓரங்களில் மிக கூர்மையாக உள்ளதையும் paint brush மிருதுவாக உள்ளதையும் காண்க.
01:40 ஆனால் இங்கே சிதறலை காண முடியாது.
01:44 இது trick of the eye எனப்படும்
01:47 இதை பெரிதாக்கும் போது இங்கே இது anti-aliest என காணலாம்.
01:53 இதுதான் pencil க்கும் paint brushக்கும் இடையேயான முக்கிய வேறுபாடு.
01:59 மற்றபடி அவையும் அவற்றின் தேர்வுகளும் கிட்டத்தட்ட ஒன்றே.
02:13 இப்போது paint brush உடன் ஆரம்பிக்கலாம்.
02:16 tool box ல் paint brush tool ல் சொடுக்கி அதற்கான தேர்வுகளை பெறலாம்.
02:25 layer modes ஐ போன்றே modes உள்ளன. பார்ப்பது போல multiply அல்லது overlay மற்றும் பல.
02:40 Opacity slider இங்கே உள்ளது. இதை பயன்படுத்துவதன் மூலம் காட்சித்தன்மை மற்றும் கோட்டின் நிறத்தை கட்டுப்படுத்தலாம்
02:50 25% என மதிப்பை மாற்றுகிறேன். இப்போது நான் வரையும்போது கருப்புக்கு பதிலாக லேசான சாம்பல் நிறக்கோட்டைப் பெறுகிறோம்.
03:02 இந்த கோட்டின் குறுக்கே புது கோட்டை இடும் போது நிறம் திடமாவதைக் காணலாம். ஆனால் புது கோட்டை மேலே இடும் போது மட்டுமே இது நடக்கிறது.
03:22 இந்த பகுதியை பெரிதாக்கி பெரிய brush ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
03:26 இப்போது ஒரு கோட்டை வரையும் போது அது சாம்பல் நிறம்.
03:30 இரண்டாம் கோட்டை வரைகிறேன். இந்த இரு கோடுகளுக்கும் வெட்டும் பகுதி அடர் சாம்பலாக உள்ளது.
03:36 இங்கே இப்போது மூன்றாவது கோட்டை வரைகிறேன். வெட்டும் இடம் மேலும் அடர் சாம்பலாகிறது. ஆனால் அதே கோட்டில் வரையும் போது அது கருமையைப் பெறவில்லை..
03:48 எனவே இது கோட்டிலிருந்து கோட்டுக்கு மட்டுமே வேலைசெய்கிறது. சாம்பலில் ஒரு இடத்தை எளிமையாக வரைய முடியும். இதை நிரப்பும் போது கவனமாக பார்க்க வேண்டியதில்லை.
04:15 இங்கே Incremental என்ற தேர்வை காணலாம் .
04:20 Incrementalஐ தேர்ந்தெடுக்கும்போது, மேலும் திடமான effect ஐ பெறுகிறோம்.
04:29 brushகளின் தேர்வுகளுக்கு செல்வோம். இங்கே இந்த brush க்கான spacing 20% இருப்பதைக் காணலாம்
04:45 Brushகள் அடிப்படையில் ஒரு stamp ஆகும். அது ஒரே pattern ஐ திரும்பத்திரும்ப பதிக்கிறது.
04:54 இங்கே பெரிதாக்கும் பொது brushன் அளவில் 20%க்கு பின், இந்த brush ன் அடுத்த பதிவு உள்ளதைக் காணலாம்
05:07 இங்கே ஒவ்வொரு brush உம் ஒன்றன்ம் மீது ஒன்றாக உள்ளது.
05:19 Incremental தேர்வை தேர்வு நீக்கும் போது brushன் ஒவ்வொரு பதிவையும் காணலாம், ஆனால் ஒன்றன் மீது ஒன்றாக இல்லை. இரண்டாம் கோட்டை ஆரம்பிக்க வேண்டும்..
05:34 incremental ஐ தேர்வு செய்யும் போது, மேலும் மேலும் வரையலாம்.
05:47 100% க்கு வருவோம்.
05:53 opacity மற்றும் incremental தேர்வுகளை முடித்துள்ளேன்.
05:57 100% உடன் opacityக்கு திரும்பலாம். மீண்டும் பூரண கருப்புடன் வரையலாம்.
06:07 100% ஐ விட opacity குறைவாக உள்ள போது மட்டுமே Incremental அர்த்தமுள்ளதாகும்.
06:15 Scale slider இங்கே pen ன் அளவை கட்டுப்படுத்துகிறது. 1க்கு குறைக்கும் போது, brush ன் சிறிய அளவைப் பெறுகிறோம்.
06:31 0.05 என brush ஐ அளவிடும்போது, மிக நுண்ணிய கோட்டை வரையலாம். 2 என அமைக்கும் போது அகலமான கோட்டைப் பெறுகிறேன்.
06:48 Scale அடிப்படையில் brush ன் விட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது. keyboard ல் square bracketகளுடனும் கட்டுப்படுத்தலாம்.
07:15 open square bracket ன் உதவியுடன் brush ன் அளவைக் குறைக்கலாம். close square bracket உடன் அளவை அதிகரிக்கலாம்.
07:32 brush கிட்டத்தட்ட மறைகிறது என காணலாம்.
07:38 எனவே நான் வரையும் இடத்தை விடாமல் அளவை சரிசெய்ய முடியும்.
07:51 GIMP மக்களில் யாரும் எதிர்பார்கிறார் எனில் slider ஐ 1க்கு அமைக்க ஒரு பட்டனை விரும்புகிறேன்.
08:03 எனவே scale தேர்வு முடிந்தது.
08:06 brush ஐ விரிவாக அடுத்த tutorialல் காணலாம்.
08:12 இங்கே pressure sensitivity என்ற தேர்வு உள்ளது. படத்தை edit செய்யும்போது இதை பயன்படுத்தலாம்.
08:30 opacity ஐ காணலாம்.
08:35 இப்போது அதிகமான அழுத்தம் இல்லாமல் நான் வரையும்போது, சாம்பல் நிறத்தில் ஒரு கோட்டைப் பெறுகிறோம். அழுத்தத்தை அதிகரிக்கும்போது கருமையான நிறத்தைப் பெறுகிறேன். அழுத்தத்தைக் குறைக்கும் போது லேசான நிறக் கோட்டைப் பெறுகிறோம்.
09:04 mask ஐ வரைகிறீர்கள் எனில் இந்த தேர்வு பயனுள்ளது.
09:09 இது முற்றிலும் பயனுள்ளது
09:17 அடுத்த தேர்வு hardness.
09:20 அதிக அழுத்தம் இல்லாமல் வரையும் போது, மென்மையான ஓரங்கள் உள்ளன.அழுத்தத்தை அதிகரிக்கும்போது, paint brush ஒரு pen போல வேலை செய்கிறது.
09:38 pencil tool ஐ தேர்ந்தெடுத்து வரையும்போது கடின ஓரங்களைப் பெறுகிறேன். tablet ஐ நன்கு அழுத்தினால் கடின ஓரங்களை உருவாக்கலாம்.
09:51 pressure sensitivity உடன் brush ன் அளவை மாற்ற முடியும்.
10:00 pressure sensitivity ஐ பயன்படுத்தி நிறத்தையும் மாற்றலாம்.
10:05 எனவே background நிறத்திற்கு மற்றொரு நிறத்தைத் தேர்கிறேன், இங்கே இது எப்படி உள்ளது?
10:12 எனவே இந்த சிவப்பு நிறத்தை தேர்வோம்.
10:15 foreground நிறத்திற்கு நல்ல பச்சையை தேர்வோம்.
10:21 தேர்ந்தெடுத்த நிறங்களுடன் குறைந்த அழுத்தத்தில் வரைய ஆரம்பிக்கும் போது பச்சையை பெறுகிறேன். அழுத்தத்தை அதிகரிக்கும் போது சிவப்பை பெறுகிறேன் . விடுவிக்கிறேன் எனில் பச்சை அல்லது பச்சை கலந்ததை மீண்டும் பெறுவோம்.
10:41 இடையில் பச்சைக்கும் சிவப்பிற்கும் இடையில் நிறம் மாறுகிறது.
10:49 கடைசி தேர்வு... use colour from gradient.
11:01 gradient ஐ தேர்ந்தெடுக்க File, Dialogs ... பின் Gradients க்கு செல்க.
11:18 இங்கே gradient.
11:20 இப்போது இந்த window ஐ பிடித்து இங்கே இழுக்கிறேன். இப்போது இங்கே gradient உள்ளது.
11:28 gradient ல் patternகளின் ஒரு பெரிய தேர்வு உள்ளது.
11:33 இதை தேர்ந்தெடுத்து இப்போது இங்கே செல்கிறேன்
11:42 இப்போது நான் வரையும் போது gradientன் pattern ல் வருகிறது.
11:48 gradients உடன் சிலவற்றை எழுதுகையில் அல்லது வேலை செய்கையில் இது முழுதும் வேடிக்கையாக இருக்கிறது.
12:02 குழாய் அல்லது அது போன்றவற்றால் செய்யப்பட்டது போல இது தோன்றுகிறது.
12:07 இவை gradient ன் தேர்வுகளாக இருந்தது.
12:11 brushகளை பயன்படுத்தும் அனைத்து toolகளுக்கும் இந்த தேர்வுகள் பொதுவானது
12:30 அதாவது pencil, paint brush, eraser மற்றும் சில கூடுதலான தேர்வுகளை கொண்ட airbrush .
12:50 Ink க்கு brush இல்லை. ஆனால் மற்ற பல தேர்வுகளை இது கொண்டுள்ளது.
12:55 Clone tool, Healing tool , Perspective clone tool..... மற்றும் blur, sharpen அல்லது dodge மற்றம் burn போன்ற toolகளும் brushesக்கான தேர்வுகளை கொண்டுள்ளன.
13:14 இப்போது pencil மற்றும் paint brushக்கு திரும்ப போகலாம்.
13:21 மீண்டும் இதை துடைக்கலாம்
13:24 இங்கே பயன்படுத்த சில நுணுக்கங்கள் உள்ளன.
13:29 முதலாவது ஒரு கோட்டை வரைவது பற்றியது.
13:33 ஒரு நேரான கோட்டை வரைய நான் முயற்சிக்கும் போது... இது சற்று கடினம்.
13:39 ஒரு click செய்து ஒரு புள்ளியை அமைத்து பின் shift key ஐ அழுத்தவும், ஒரு நேர்க்கோட்டைப் பெறுகிறேன்.
13:48 இங்கே ஒரு நேர்க்கோடு உள்ளது
13:51 அடுத்த நுணுக்கம், ஒரு புள்ளியை அமைத்து Shift + Ctrl ஐ அழுத்துக. இப்போது என் கோட்டின் சுழற்சி 15 degree க்கு அமைக்கப்படுகிறது.
14:05 எனவே வரையறுக்கப்பட்ட கோணத்துடன் என்னால் எளிதாக நேர்க்க கோடுகளை வரைய முடியும்.
14:20 எனவே இங்கே மிக சிறந்தது.
14:24 Shift key உடன் உங்களால் செய்யக்கூடிய சில உள்ளன.
14:29 அதற்கு gradient tool ஐ தேர்க.
14:37 தேர்ந்தெடுக்கப்பட்ட gradient உடன் ஒரு கோட்டை வரைக. பல்வேறு நிறங்களைப் பெறுகிறோம்.
14:45 சிறிய brush ஐ தேர்கிறேன். gradient tool ஐ தேர்வு நீக்குகிறேன். என் நிலையான நிறங்களைத் தேர்கிறேன்.
14:55 இப்போது Ctrl keyஐ அழுத்தும்போது, நான் வரைந்த கோட்டிலிருந்து நிறத்தை தேர்ந்தெடுக்கலாம். foreground நிறம் நீலம் போல மாறுவதைக் காணலாம்.
15:09 எனவே படத்துக்கு வெளியே ஏதேனும் இடத்தில் நன்றாக உள்ள ஒரு நிறத்தை எடுக்கலாம்.
15:17 படத்தில் ஏதேனும் ஒன்றில் வரைய விரும்பினால் உங்களுக்கு தேவையான நிறத்தை இது கொண்டுள்ளது.
15:25 வெறுமனே அதன்மீது ctrl click செய்க. அந்த குறிப்பிட்ட நிறம் உங்கள் palet ல் உள்ளது.
15:36 இது ஒரு சிறந்த நுணுக்கம்.
15:39 அடிப்படையில் eraser tool... pen அல்லது brush போன்றதே. ஏனெனில் இது அவற்றிற்கு எதிர்மறையானது.
15:52 eraser உம் வரையும். ஆனால் இது background நிறத்தைக் கொடுக்கிறது.
15:57 அதை இங்கே காணலாம்.
16:00 ஆனால் அதற்கு pressure sensitivity மற்றும் opacityஐ தேர்வு நீக்க வேண்டும்.
16:08 foreground நிறம் மற்றும் background நிறத்தை கருப்பு மற்றும் வெள்ளையாக மாற்றும் போது... வெள்ளையை foreground நிறமாக மாற்றவும். pen ஐ தேர்ந்தெடுக்கவும், eraser போன்று அதே effect ஐ பெறலாம்.
16:25 நிறத்தை மாற்றிய பிறகு அழிப்பது கருப்பாகிறது
16:41 X key ஐ அழுத்துவதன் மூலம் foreground மற்றும் background நிறத்தை மாற்றலாம்.
16:50 pencil, paint brush மற்றும் eraserஐயும் விரிவாக முடித்துவிட்டேன், .
16:59 மேலும் தகவல்களுக்கு http://meetthegimp.org க்கு செல்க. கருத்துக்களை அனுப்ப விரும்பினால் info@meetthegimp.org க்கு அனுப்பவும்
17:10 இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Gaurav, Priyacst, Ranjana