GChemPaint/C3/Features-of-GChem3D/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம். ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) ல் GChem3D ன் அம்சங்கள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது,
00:10 Menu bar, File வகை formatகள்
00:13 பல்வேறு மாதிரி வகைகள் மற்றும்
00:15 பின்புல நிறத்தை எவ்வாறு மாற்றுவது.
00:18 இங்கே நான் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் பதிப்பு 12.04.
00:24 ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) பதிப்பு 0.12.10.
00:29 GChem3D பதிப்பு 0.12.10
00:34 இந்த டுடோரியலை தொடர உங்களுக்கு ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) பற்றி தெரிந்திருக்க வேண்டும்
00:38 இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும்.
00:44 ஒரு புதிய ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) விண்டோவை திறந்துவைத்துள்ளேன்.
00:47 Templates கீழிறங்கு பட்டியலைப் பயன்படுத்தி, காட்சி பகுதியில் Adenosine அமைப்பை ஏற்றுகிறேன்.
00:53 file ஐ சேமிக்க tool bar ல் Save ஐகான் மீது க்ளிக் செய்க.
00:58 Save as dialog box திறக்கிறது.
01:02 GChem3D ல் இந்த file ஐ காண, இது .mol, .mdl மற்றும் .pdb போன்ற formatகளில் சேமிக்கப்பட வேண்டும்
01:11 Adenosine.pdb என file பெயரை டைப் செய்க
01:15 Desktop ல் file ஐ சேமிக்க Desktop ல் க்ளிக் செய்க.
01:18 Save பட்டன் மீது க்ளிக் செய்க.
01:21 GChemPaint விண்டோவை மூடுகிறேன்.
01:25 இப்போது GChem3D அப்ளிகேஷன் பற்றி கற்போம்.
01:29 சினாப்டிக் பேக்கேஜ் மேனஜரை (Synaptic Package Manager) பயன்படுத்தி ஜிகெம்பெய்ண்டின் (GChemPaint) ஒரு பயன்பாட்டு மென்பொருளாக GChem3D ஐ நிறுவலாம்.
01:38 சினாப்டிக் பேக்கேஜ் மேனஜரை (Synaptic Package Manager) க்கு செல்க.
01:40 Quick filter box ல் டைப் செய்க gchempaint.
01:44 GChemPaint பயன்பாடுகளின் மொத்த நிறுவலுக்கு gcu-plugin, libgcu-dbg மற்றும் gcu-bin ஐ நிறுவுக.
01:55 அனைத்து fileகளையும் நான் ஏற்கனவே நிறுவியுள்ளேன்
01:59 GChem3d என்பது ஒரு முப்பரிமாண மூலக்கூறு அமைப்பு காட்சிபடுத்தி (3 dimensional molecular structure visualizer).
02:04 இது ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) ன் ஒரு பயன்பாட்டு அம்சமாகும்.
02:07 ஜிகெம்பெய்ண்டில் வரையப்பட்ட அமைப்புகளை GChem3D ல் காணலாம்
02:12 GChem3D ஐ திறக்க Dash Home ல் க்ளிக் செய்க.
02:15 தோன்றும் search bar ல் டைப் செய்க gchem3d.
02:20 Molecules viewer ஐகான் மீது க்ளிக் செய்க.
02:24 GChem3d Viewer விண்டோ Menubar மற்றும் காட்சி பகுதியை கொண்டுள்ளது.
02:30 GChem3D ல் வேலைசெய்வதற்கு தேவையான அனைத்து கட்டளைகளையும் Menubar கொண்டுள்ளது.
02:36 திறந்துள்ள file ன் உள்ளடக்கத்தை காட்சி பகுதி காட்டுகிறது.
02:40 ஒரு file ஐ திறக்க, File ஐ தேர்ந்தெடுத்து Open மீது க்ளிக் செய்க.
02:46 Open dialog box திறக்கிறது.
02:49 நீங்கள் திறக்க நினைக்கும் file ஐ தேர்ந்தெடுக்கவும்.
02:52 Desktop ல் உள்ள Adenosine.pdb ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
02:57 இப்போது Open பட்டன் மீது க்ளிக் செய்க.
02:59 காட்சி பகுதியில் file காட்டப்படுகிறது.
03:02 காட்சியை ஒரு படமாக சேமிக்க கற்போம்.
03:05 File ல் க்ளிக் செய்து Save As Image க்கு செல்க.
03:10 Save as image dialog box திறக்கிறது.
03:12 அடியில் Width மற்றும் Height parameterகளை காண்க.
03:17 படத்தின் முன்னிருப்பு அளவு Width 300 pixelகள் மற்றும் Height 300 pixelகள்.
03:24 மேல் கீழ் அம்புகளை பயன்படுத்தி மதிப்புகளை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம்.
03:29 இப்போது File type தேர்வு.
03:31 GChem3D பல்வேறு file formatகளை ஆதரிக்கிறது.
03:35 கீழிறங்கு பட்டியலில் VRML, PDF, PNG போன்ற பல File வகைகள் உள்ளன.
03:45 எந்த file வகையும் குறிப்பிடவில்லை எனில், file பெயரில் இருந்து file வகையை நிர்ணயிக்க GChem3d முயலுகிறது.
03:52 அது வெற்றியடையவில்லை எனில், முன்னிருப்பாக File வகை VRML பயன்படுத்தப்படும்.
03:58 அமைப்பை VRML file format ல் சேமிப்போம்.
04:03 VRML document ஐ தேர்ந்தெடுக்கவும்.
04:07 file பெயரை Adenosine என டைப் செய்க.
04:11 Desktop ல் file ஐ சேமிக்க Desktop மீது க்ளிக் செய்க.
04:14 Save பட்டன் மீது க்ளிக் செய்க.
04:17 இப்போது VRML File வகை என்றால் என்ன என காண்போம்.
04:22 VRML என்பது .wrl நீட்சியுடன் உள்ள ஒரு text file format.
04:28 3D பலகோண பண்புகளான (polygon properties) 'உச்சிகள்(vertices)', 'விளிம்புகள் (edges)', 'மேற்பரப்பு நிறம் (surface color)' போன்றவற்றை குறிப்பிடலாம்.
04:35 gzip ஆக compress ஆகும் எளிய உரையில் VRML fileகள் உள்ளன.
04:40 பொருட்கள் (objects) மற்றும் காட்சிகளை (scenes) 3D மாதிரி ப்ரோகிராம்கள் (modelling programs) இதில் சேமிக்கின்றன.
04:45 சேமிக்கப்பட்ட file ஐ திறப்போம்.
04:48 Adenosine.wrl file மீது ரைட்-க்ளிக் செய்க. Open with Text Editor தேர்வை தேர்வு செய்க.
04:55 அந்த அமைப்பின் அனைத்து தகவல்களையும் Text editor காட்டுகிறது.
05:01 இப்போது Page Setup க்கு செல்வோம்.
05:04 GChem3d அச்சடிக்கும்போது 300 dpi பிரிதிறனை (resolution) பயன்படுத்துகிறது.
05:09 Page Setup properties ஆனது ஜிகெம்பெய்ண்ட் ல் உள்ளதுபோன்றதே.
05:14 அதுபற்றி ஏற்கனவே இந்த தொடரில் ஜிகெம்பெய்ண்ட் டுடோரியல்களில் பார்த்துள்ளோம்
05:19 இந்த விண்டோவை மூடுகிறேன்.
05:21 இப்போது View menu க்கு செல்வோம்.
05:25 View menu ஐ தேர்ந்தெடுக்கவும்
05:27 நான்கு மாதிரி வகைகளைப் பயன்படுத்தி GChem3D ஒரு மூலக்கூறைக் காட்டுகிறது அவை:
05:32 Balls and sticks Space filling
05:35 Cylinders மற்றும் Wireframe.
05:39 Balls and sticks ஆனது முன்னிருப்பு மாதிரி.
05:42 இந்த மாதிரியை பயன்படுத்தி பல பிணைப்பு மற்றும் நடப்பு பிணைப்பு நிலைகளை காணலாம்.
05:48 Space Filling மீது க்ளிக் செய்க. வித்தியாசத்தைக் காண்க.
05:53 Space Filling மாதிரி மூலக்கூறுகளை சிறிய வடிவில் காட்டுகிறது.
05:58 Cylinders மாதிரி அமைப்பை உருளைவடிவ குழாய்களின் வடிவில் காட்டுகிறது.
06:03 Wireframe மாதிரி வரிவடிவ அமைப்பை காட்டுகிறது.
06:08 Balls and sticks க்க திரும்ப வருவோம்.
06:11 இப்போது Background color க்கு வருவோம்.
06:14 முன்னிருப்பு பின்புல நிறம் “கருப்பு”.
06:17 View menuஐ தேர்ந்தெடுத்து, Background color க்கு செல்க.
06:21 ஒரு துணைmenu திறக்கிறது.
06:23 துணைmenu ன் கடைசியில் Custom color ஐ தேர்ந்தெடுக்கவும்.
06:26 Background color' விண்டோ திறக்கிறது.
06:30 நமக்கு வேண்டிய நிறத்தை தேர்ந்தெடுக்க பல்வேறு புலங்களை இந்த விண்டோ கொண்டுள்ளது.
06:35 Hue ஐ பயன்படுத்தி, பின்புல நிறத்தை மாற்றலாம்.
06:39 மேல்கீழ் அம்புகளை க்ளிக் செய்து. மதிப்புகளின் மாற்றத்தையும் நிறவட்டத்தின் இயக்கத்தையும் கவனிக்க.
06:45 Saturation ஐ பயன்படுத்தி, நிறத்தின் செறிவை மாற்றலாம்.
06:51 Value ஐ பயன்படுத்தி, அதே நிறத்தின் பல்வேறு சாயல்களை பெற RGB கலவையை மாற்றலாம்.
06:59 இங்கே eyedropper ஐகான் உடன் முன்பார்வை பெட்டி (Preview box) உள்ளது.
07:04 eyedropperஐகான் மீது க்ளிக் செய்க.
07:07 விருப்பமான நிறத்தை தேர்ந்தெடுக்க நிறவளையத்தில் எங்கேனும் க்ளிக் செய்க.
07:11 Ok பட்டன் மீது க்ளிக் செய்க. திரையில் பின்புல நிறம் மாறுகிறது.
07:18 நாம் கற்றதை சுருங்க காண்போம்.
07:20 இந்த டுடோரியலில் நாம் கற்றது
07:23 பல்வேறு Menuகள், File வகை formatகள்
07:26 மாதிரி வகைகள் மற்றும் பின்புல நிறத்தை எவ்வாறு மாற்றுவது.
07:30 இங்கே உங்களுக்கான பயிற்சி
07:33 1. ஜிகெம்பெய்ண்ட் ல் இருந்து ஒரு சக்கரைடை (Saccharide) ஏற்றி file ஐ .mdl format ல் சேமிக்கவும்.
07:39 2. Molecules viewer ல் அமைப்பை திறக்கவும்.
07:42 3. படத்தை PNG மற்றும் PDF file வகைகளில் சேமிக்கவும்.
07:46 4. பல்வேறு பின்புல நிறங்களை முயற்சிக்கவும்.
07:49 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What_is_a_Spoken_ Tutorial
07:53 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
07:56 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
08:01 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
08:06 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
08:10 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
08:17 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
08:22 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08:29 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro]
08:35 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst