GChemPaint/C2/View-Print-and-Export-structures/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration
|
---|---|
00:02 | வணக்கம். ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) ல் அமைப்புகளை பார்த்தல், அச்சடித்தல் மற்றும் export செய்தல் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. |
00:09 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது |
00:11 | பார்வை தேர்வுகள் |
00:13 | பெரிதாக்கும் காரணி, பக்கத்தை அமைத்தல் |
00:15 | அச்சு முன்பார்வை |
00:17 | ஒரு ஆவணத்தை அச்சடித்தல் |
00:19 | SVG மற்றும் PDF formatகளில் படத்தை export செய்தல். |
00:24 | இங்கே நான் பயன்படுத்துவது |
00:26 | உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் பதிப்பு. 12.04 |
00:30 | ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) பதிப்பு 0.12.10 |
00:35 | இந்த டுடோரியலை பின்தொடர, உங்களுக்கு, |
00:40 | ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) வேதியியல் அமைப்பு திருத்தி பற்றி தெரிந்திருக்க வேண்டும். |
00:43 | இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும். |
00:48 | ஒரு புதிய ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) அப்ளிகேஷனைத் திறக்க, Dash home ல் க்ளிக் செய்க. |
00:53 | தோன்றும் Search bar ல் டைப் செய்க GChemPaint. |
00:58 | GChemPaint ஐகான் மீது க்ளிக் செய்க. |
01:01 | முதலில் ஏற்கனவே இருக்கும் ஒரு file ஐ திறப்போம். |
01:05 | toolbar லிருந்து Open a file ஐகான் மீது க்ளிக் செய்க . |
01:09 | fileகள் மற்றும் folderகள் கொண்ட ஒரு விண்டோ திறக்கிறது. |
01:12 | பட்டியலில் “pentane-ethane” என்ற file ஐ தேர்ந்தெடுக்கவும். |
01:16 | Open பட்டன் மீது க்ளிக் செய்க. |
01:19 | பார்வை தேர்வுகள் பற்றி முதலில் கற்போம். |
01:23 | View menu க்கு செல்க. |
01:25 | View menu ல், Full Screen மற்றும் Zoom என்ற இரு தேர்வுகள் உள்ளன. |
01:31 | Zoom தேர்வை தேர்ந்தெடுப்போம். |
01:33 | பெரிதாக்கும் காரணி களின் பட்டியலுடன் ஒரு துணைmenu திறக்கிறது. |
01:38 | பட்டியலில் கீழே வந்து Zoom to % ஐ தேர்ந்தெடுப்போம் |
01:43 | zoom factor உடன் ஒரு dialog box திறக்கிறது. |
01:47 | zoom factor ன் முன்னிருப்பு மதிப்பு காட்டப்படுகிறது. |
01:51 | இங்கே தேவைக்கேற்ப Zoom factor ஐ அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம் |
01:57 | கீழ் அல்லது மேல் அம்பு முக்கோணத்தை க்ளிக் செய்து அளவு மாறுவதை கவனிக்கவும். |
02:03 | Apply மீது க்ளிக் செய்து பின் OK மீது க்ளிக் செய்க. |
02:07 | பொருத்தப்பட்ட zoom factor உடன் அமைப்புத் தோன்றுகிறது. |
02:11 | அடுத்து ஒரு பக்கத்தை எவ்வாறு அமைப்பது என்பதைக் கற்போம். |
02:15 | File menu ல், Page Setup க்கு சென்று அதன் மீது க்ளிக் செய்க. |
02:20 | Page Setup விண்டோ திறக்கிறது. |
02:23 | இந்த விண்டோ இரு tabகளை கொண்டுள்ளது - Page மற்றும் Scale. |
02:29 | Page tab... Paper, Center on Page மற்றும் Orientation போன்ற புலங்களைக் கொண்டுள்ளது. |
02:36 | Paper புலத்தில், முன்னிருப்பு பேப்பர் அளவை அமைக்கலாம். |
02:41 | Change Paper Type பட்டன் மீது க்ளிக் செய்வோம். |
02:44 | Page Setup dialog box திறக்கிறது. |
02:48 | இங்கே 3 தேர்வுகள் உள்ளன - Format for, Paper size மற்றும் Orientation. |
02:55 | Format for புலத்தில் உங்கள் முன்னிருப்பு printer ஐ தேர்ந்தெடுக்கவும். |
03:00 | நான் என் முன்னிருப்பு printer ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
03:03 | Paper size புலம் வெவ்வேறு பேப்பர் அளவுகளுடன் ஒரு கீழிறங்கு பட்டியலைக் கொண்டுள்ளது. |
03:09 | A4 ஐ நான் தேர்ந்தெடுக்கிறேன் |
03:11 | இந்த புலத்திற்கு கீழே A4 அளவின் பரிமாணம் காட்டப்படுகிறது. |
03:17 | தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பேப்பர் அளவுக்கும் இந்த பேப்பர் அளவு பரிமாணங்கள் காட்டப்படுகிறது என்பதைக் கவனிக்கவும். |
03:24 | orientation புலத்தில் 4 ரேடியோ பட்டன்கள் உள்ளன - |
03:29 | Portrait, Landscape, |
03:31 | Reverse portrait, மற்றும் Reverse landscape. |
03:35 | முன்னிருப்பாக Portrait தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. |
03:39 | அதை அவ்வாறே விட்டுவிட்டு Apply மீது க்ளிக் செய்க. |
03:43 | அடுத்து, விளிம்பு அளவுகள் உள்ளன. |
03:46 | Top margin, Left margin, Right margin மற்றும் Bottom margin. |
03:52 | இங்கே, தேவைக்கேற்ப விளம்புகளை சரிசெய்துகொள்ளலாம். |
03:56 | அடுத்த புலம் Unit. |
03:59 | Unit புலத்தில் inches, millimetres மற்றும் points ஐ அமைக்கலாம். |
04:05 | நாம் Unit ஐ மாற்றும் போது, விளிம்பின் அளவுகள் Unit க்கு ஏற்றவாறு தானாக மாறுவதைக் காண்க. |
04:14 | Center on page பற்றி கற்போம். |
04:17 | இங்கே இரு தேர்வு பெட்டிகள் உள்ளன Horizontally மற்றும் Vertically. |
04:22 | Horizontally தேர்வு பெட்டியில் குறியிடுவோம். |
04:26 | Preview பட்டனில் க்ளிக் செய்வதன் மூலம் நம் அமைப்பின் முன்பார்வையை காணலாம். |
04:33 | இங்கே முன்பார்வையைக் காணலாம். |
04:35 | முன்பார்வை விண்டோவை மூடலாம். |
04:38 | Orientation புலத்தில் பின்வருவனவற்றுக்கு ரேடியோ பட்டன்கள் உள்ளன |
04:43 | Portrait, Landscape, |
04:45 | Reverse portrait மற்றும் Reverse landscape |
04:49 | முன்னிருப்பாக, Portrait தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. |
04:53 | இப்போது, Landscape ரேடியோ பட்டனில் க்ளிக் செய்வோம் |
04:57 | பின் Preview பட்டனில் க்ளிக் செய்வோம். |
05:01 | இங்கே Landscape Orientation ன் முன்பார்வையைக் காணலாம். |
05:06 | மற்ற Orientation தேர்வுகளை நீங்களே செய்துபார்க்கவும். |
05:11 | Print பட்டனை க்ளிக் செய்தால், செய்யப்பட்ட மாற்றங்களுடன் file அச்சடிக்கப்படும். |
05:17 | அச்சடிப்பதற்கு முன் அமைப்பை தேவையானபடி அளவுமாற்றலாம். |
05:23 | அதற்கு Scale tab ல் உள்ள பல்வேறு தேர்வுகளை பயன்படுத்தலாம். |
05:28 | Scale tab ஐ நீங்களே ஆராய்ந்து அறியவும். |
05:32 | Page Setup விண்டோவை மூட Close பட்டன் மீது க்ளிக் செய்க. |
05:37 | அடுத்து, ஒரு படத்தை எவ்வாறு export செய்வது என காண்போம். |
05:41 | File menuக்கு சென்று, “Save as image” ஐ தேர்ந்தெடுக்கவும். |
05:44 | “Save as image” dialog box திறக்கிறது. |
05:48 | படத் தேர்வுகளின் ஒரு பட்டியலை File Type புலம் கொண்டுள்ளது. |
05:52 | படத்தை SVG, EPS, PDF, PNG, JPEG மற்றும் சில format களில் export செய்யலாம். |
06:04 | SVG image ஐ தேர்ந்தெடுப்போம். |
06:07 | “Pentane-ethane” என file பெயரைக் கொடுக்கவும் |
06:11 | Save பட்டன் மீது க்ளிக் செய்க. |
06:13 | இங்கே அந்த file SVG படமாக சேமிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். |
06:18 | அடுத்து அந்த படத்தை PDF ஆவணமாக export செய்வோம். |
06:23 | File menu க்கு சென்று, “Save as image” ஐ தேர்ந்தெடுக்கவும். |
06:27 | “Save as image” dialog box திறக்கிறது. |
06:31 | File Type ல், PDF document ஐ தேர்ந்தெடுக்கவும். |
06:35 | “Pentane-ethane” என file பெயரைக் கொடுக்கவும் |
06:39 | Save பட்டன் மீது க்ளிக் செய்க. |
06:41 | இங்கே அந்த file ஒரு PDF ஆவணமாக சேமிக்கப்பட்டிருப்பதைக் காண்க. |
06:46 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
06:51 | சுருங்க சொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது |
06:54 | பார்வை தேர்வுகள் |
06:56 | பெரிதாக்கும் காரணி, பக்கத்தை அமைத்தல் |
06:58 | அச்சு முன்பார்வை |
07:00 | ஒரு ஆவணத்தை அச்சடித்தல் மற்றும் |
07:03 | ஒரு படத்தை Export செய்தல். |
07:06 | பயிற்சியாக A5, B5 மற்றும் JB5 formatகளில் அமைப்புகளை அச்சடிக்கவும். |
07:12 | படங்களை EPS மற்றும் PNG formatகளில் export செய்யவும். |
07:18 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
07:22 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
07:25 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
07:30 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
07:35 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
07:39 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
07:46 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
07:51 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:59 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
08:04 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |