GChemPaint/C2/Overview-of-GChemPaint/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | வணக்கம் ஜிகெம்பெயிண்ட் (GChemPaint) க்கான கண்ணோட்டம் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது, |
00:10 | ஜிகெம்பெயிண்டை அதன் அனைத்து பயன்பாட்டு fileகளுடன் நிறுவுதல் |
00:15 | ஜிகெம்பெயிண்ட் மற்றும் அதன் பயன்பாட்டு மென்பொருட்களின் menubar ஐ காணுதல் |
00:20 | ஜிகெம்பெயிண்ட் பயனர் கையேட்டை காணுதல் |
00:23 | வெவ்வேறு ஜிகெம்பெயிண்ட் பயன்பாட்டு மென்பொருள்களை பயன்படுத்துதல். |
00:27 | மேலும் ஜிகெம்பெயிண்ட் மற்றும் Jmol அப்ளிகேஷனுக்கு இடையேயான தொடர்பை காணுதல் |
00:33 | ஜிகெம்பெயிண்ட் ஐ பயன்படுத்தி வரையக்கூடிய பல்வேறு அமைப்புகளை சற்று காணுதல். |
00:39 | இந்த டுடோரியலுக்காக நான் பயன்படுத்துவது |
00:41 | உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் பதிப்பு 12.04. |
00:45 | ஜிகெம்பெயிண்ட் பதிப்பு 0.12.10. |
00:50 | ஜிகெம்கால்க் (GChemCalc) பதிப்பு 0.12.10. |
00:55 | ஜிகெம்3டி (GChem3D) பதிப்பு 0.12.10. |
01:00 | ஜிகெம்டேபுள் (GChemTable) பதிப்பு 0.12.10. |
01:05 | Jmol அப்ளிகேஷன் பதிப்பு 12.2.2. |
01:10 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய தேவையானவை |
01:13 | உயர்நிலை பள்ளி வேதியியல் பற்றிய அறிவு மற்றும் |
01:15 | இணைய இணைப்பு. |
01:19 | ஜிகெம்பெயிண்ட் என்றால் என்ன என காண்போம். |
01:22 | ஜிகெம்பெயிண்ட் என்பது க்ணோம்-2 (Gnome-2) டெஸ்க்டாப் க்கான இருபரிமாண வேதியியல் அமைப்பு திருத்தி. |
01:28 | இது அதன் பயன்பாட்டு அம்சங்களாக ஜிகெம்கால்க் , ஜிகெம்3டி மற்றும் ஜிகெம்டேபுள் ஐ கொண்டுள்ளது. |
01:35 | ஜிகெம்பெயிண்ட் லினக்ஸ் இயங்குதளத்திற்கு மட்டும் கிடைக்கிறது. |
01:39 | ஜிகெம்பெயிண்ட் Gnome Chemistry Utils ல் உள்ளடங்கியது |
01:44 | ' ஜிகெம்பெயிண்ட்' மற்றும் அதன் பயன்பாட்டு fileகளை உபுண்டு லினக்ஸ் இயங்குதளத்தில் சினாப்டிக் பேக்கேஜ் மேனஜரை (Synaptic Package Manager) பயன்படுத்தி நிறுவ முடியும். |
01:53 | சினாப்டிக் பேக்கேஜ் மேனஜர் (Synaptic Package Manager) பற்றிய மேலும் தகவல்களுக்கு |
01:56 | எங்கள் இணையத்தளத்தில் உள்ள லினக்ஸ் தொடரை கவனிக்கவும். |
02:02 | சினாப்டிக் பேக்கேஜ் மேனஜர் (Synaptic Package Manager) விண்டோவில் பின்வரும் பயன்பாட்டு file களை சோதிக்கவும். |
02:07 | gchempaint |
02:09 | libgcu0 |
02:11 | gcu-plugin |
02:13 | libgcu-dbg |
02:16 | gcu-bin. |
02:19 | இப்போது பயனர் கையேடு (User Manual) பற்றி காண்போம். |
02:22 | பயனர் கையேடு ஜிகெம்பெயிண்ட் (GChemPaint) மற்றும் அதன் பயன்பாடுகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை சுருக்கமாக விளக்குகிறது. |
02:28 | இந்த இணைப்பில் ஜிகெம்பெயிண்ட் பயனர் கையேடை வழங்குகிறது. http://gchemutils.nongnu.org/paint/manual/index.html |
02:34 | ஜிகெம்பெயிண்ட் மற்றும் அதன் அனைத்து பயன்பாடுகளின் menubarகள் உபுண்டு டெஸ்க்டாப் menubar ல் தோன்றும். |
02:43 | இது ஜிகெம்பெயிண்ட் ன் tool box ஆகும். |
02:46 | வெவ்வேறு அமைப்புகளை வரைய நாம் பல்வேறு toolகளை பயன்படுத்துவோம். |
02:51 | Tool box நடப்பு தனிமத்தை மாற்ற ஒரு உள்ளடங்கிய தனிமவரிசை அட்டவணையைக் கொண்டுள்ளது. |
02:57 | இங்கே tool box ல் வெவ்வேறு toolகளை பயன்படுத்தி வரையப்பட்ட வெவ்வேறு அமைப்புகள் உள்ளன. |
03:03 | இந்த தொடர் டுடோரியல்களில் இந்த toolகளை பயன்படுத்தி எவ்வாறு வெவ்வேறு அமைப்புகளை வரைவது என்பதை நான் விளக்குவேன். |
03:10 | இப்போது ஜிகெம்பெயிண்டின் பயன்பாட்டு மென்பொருள் பற்றி விளக்குகிறேன். |
03:15 | இது Chemical Calculator விண்டோ. |
03:19 | search bar ல் “C3H8” என டைப் செய்து Enter ஐ அழுத்துகிறேன். |
03:25 | இந்த விண்டோ தகவல்கள் மற்றும் Propane ன் Isotropic pattern ஐ காட்டுகிறது. |
03:32 | இது GChem3D விண்டோ. |
03:35 | ஜிகெம்பெயிண்ட் ல் வரையப்பட்ட இருபரிமாண அமைப்புகளின் முப்பரிமாண மாதிரிகளை காட்டுகிறது. |
03:41 | ஜிகெம்பெயிண்டின் புதிய பதிப்பில் மூலக்கூறுகளின் 3D rendering மேம்படுத்தப்பட்டுள்ளது. |
03:47 | இது GChemTable விண்டோ. |
03:49 | இது தனிமங்களின் தனிமவரிசை அட்டவணை மற்றும் அதன் போக்குகளை கொண்டுள்ளது. |
03:54 | ஜிகெம்பெயிண்டில் மற்றொரு தனித்துவ அம்சம் உள்ளது. |
03:58 | ஜிகெம்பெயிண்டில் வரையப்பட்ட இருபரிமாண அமைப்புகளை Jmol அப்ளிகேஷனில் முப்பரிமாண அமைப்புகளாக காண முடியும். |
04:06 | முப்பரிமாணத்தில் அமைப்புகளை காண, ஜிகெம்பெயிண்ட் fileகளை .mol format ல் சேமிக்க வேண்டும். |
04:21 | Jmol அப்ளிகேஷனுக்கு சுருக்கமான அறிமுகம். |
04:25 | இது ஒரு கட்டற்ற மூலக்கூறு காட்சிபடுத்தி |
04:29 | வேதியியல் அமைப்புகளின் முப்பரிமாண மாதிரிகளை உருவாக்கவும் பார்க்கவும் பயன்படுகிறது |
04:34 | புரதங்கள் (proteins) மற்றும் பெருமூலக்கூறுகளின் (macromolecules) இரண்டாம் அமைப்புகளைக் காண பயன்படுகிறது. |
04:40 | மேலும் தகவல்களுக்கு, எங்கள் வலைத்தளத்தில் Jmol அப்ளிகேஷன் தொடரை காணவும். |
04:47 | ஜிகெம்பெயிண்ட் தொடரில், பின்வரும் அற்புதமான அம்சங்களை கற்போம் - |
04:52 | Templateகள் மற்றும் Residueகளை பயன்படுத்துதல் |
04:56 | மூலக்கூறுகள் மற்றும் பிணைப்புகளை உருவாக்குதல் |
05:01 | வாசனை மூலக்கூறு அமைப்புகள் (Aromatic Molecular structures) |
05:06 | ஆர்பிட்டால் மேற்படிவு (Orbital overlap) |
05:10 | உடனிசைவு அமைப்புகள் (Resonance Structures) |
05:14 | முப்பரிமாண அமைப்புகளை காணுதல் |
05:18 | தனிமவரிசை அட்டவணையின் போக்குகளை காணுதல். |
05:23 | சுருங்கசொல்ல. |
05:25 | இந்த டுடோரியலில் நாம் கற்றது, |
05:27 | ஜிகெம்பெயிண்டை அதன் அனைத்து பயன்பாட்டு fileகளுடன் நிறுவுதல் |
05:32 | ஜிகெம்பெயிண்ட் மற்றும் அதன் பயன்பாட்டு மென்பொருட்களின் menubar ஐ காணுதல் |
05:36 | ஜிகெம்பெயிண்ட் பயனர் கையேடை பயன்படுத்துதல் |
05:39 | ஜிகெம்பெயிண்ட் பயன்பாட்டு மென்பொருட்களை பயன்படுத்துதல் |
05:43 | மற்றும் ஜிகெம்பெயிண்ட் மற்றும் Jmol அப்ளிகேஷனுக்கு இடையேயான தொடர்பு. |
05:48 | மேலும் ஜிகெம்பெயிண்டில் வரையக்கூடிய பல்வேறு அமைப்புகள் குறித்தும் சற்று பார்த்தோம். |
05:54 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
05:59 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
06:03 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
06:07 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
06:10 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
06:16 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
06:20 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
06:26 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
06:31 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |