ExpEYES/C3/Characteristics-of-Sound-Waves/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம். ஒலி அலைகளின் பண்புகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் செய்து காட்டப்போவது: ஒலி அலைகளை எப்படி உருவாக்குவது, ஒலி மூலத்தின் frequency response, ஒலியின் velocity ஐ எப்படி கணக்கிடுவது ஒலி அலைகளின் Interference மற்றும் Beats, ஒலி மூலத்தின் கட்டாய அலைவுகள்
00:29 மேலும், நாம் காட்டுவது: Xmgrace plotகள், Fourier Transformகள் மற்றும் நமது சோதனைகளுக்கான , Circuit diagramகள்
00:38 இங்கு நான் பயன்படுத்துவது: ExpEYES பதிப்பு 3.1.0, Ubuntu Linux OS பதிப்பு 14.10
00:49 இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, ExpEYES Junior interface பற்றி தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும்.
01:01 முதலில், ஒலியை வரையறுப்பதிலிருந்து தொடங்குவோம். ஒலி என்பது அதிர்வாக பரவும், அழுத்தம் மற்றும் இடப்பெயர்ச்சி கொண்ட ஒரு கேட்கக் கூடிய எந்திரவியல் அலையாகும்.
01:13 அது பரவுவதற்கு ஒரு ஊடகம் தேவை. அந்த ஊடகம், காற்றாகவோ, நீராகவோ அல்லது எந்த உலோக மேற்பரப்பாகவோ இருக்கலாம்.
01:22 இந்த டுடோரியலில், ஒலி அலைகளின், பண்புகளை புரிந்து கொள்ள, பலவகைப்பட்ட சோதனைகளை நாம் செய்வோம்.
01:30 ஒலி அலைகளின் frequencyஐ காட்ட, ஒரு சோதனையை செய்வோம்.
01:35 இந்த சோதனையில், ground(GND), Piezo buzzer (PIEZO)உடன் இணைக்கப்படுகிறது. Piezo buzzer (PIEZO), SQR1உடன் இணைக்கப்படுகிறது.
01:44 Microphone (MIC), A1உடன் இணைக்கப்படுகிறது. இங்கு, Piezo buzzer (PIEZO) என்பது ஒலியின் ஒரு மூலமாகும். இதுவே, circuit diagram.
01:55 Plot windowவில் முடிவைக் காண்போம்.
01:59 Plot windowவில், Setting Square wavesன் கீழ், frequencyஐ 3500Hzக்கு அமைக்கவும்.
02:07 SQR1 check-boxஐ க்ளிக் செய்யவும். SQR1ன் frequency, 3500Hzக்கு அமைக்கப்படும். ஒரு digital ஒலி அலை உருவாக்கப்படும்.
02:20 Waveformஐ சரி செய்ய, frequency sliderஐ நகர்த்தவும்.
02:27 SQ1ஐ க்ளிக் செய்து, CH2க்கு இழுக்கவும். SQ1ன், input data, CH2க்கு ஒதுக்கப்படுகிறது. ஒரு square wave உருவாக்கப்படுகிறது.
02:40 Compressionகள் மற்றும் rarefactionகளை அமைக்க, msec/div sliderஐ இழுக்கவும்.
02:48 CH2 ஐ க்ளிக் செய்து, FITக்கு இழுக்கவும். வலது பக்கத்தில், SQ1ன், voltageஉம் frequencyயும் தெரியும்.
02:59 ஒலி அலைகளை அமைக்க, frequency sliderஐ நகர்த்தவும்.
03:04 Piezo buzzer உருவாக்கும் ஒலி அலை, கருப்பு நிறத்தில் இருக்கும்.
03:10 MICன் அருகிலோ, அல்லது தொலைவிலோ, Piezo buzzerஐ நகர்த்துவதன் மூலம், அலையின் amplitude அதற்கேற்றாற் போல் மாறும்.
03:19 இப்போது, Piezo buzzerன் frequency responseஐ காண்போம்.
03:24 Plot windowவில், EXPERIMENTS பட்டனை க்ளிக் செய்யவும். Select Experiment பட்டியல் தெரியும். பட்டியலில் இருந்து Frequency Responseஐ க்ளிக் செய்யவும்.
03:39 Audio Frequency response Curve மற்றும் Schematic என இரண்டு புதிய windowக்கள் திறக்கும். Schematic, சோதனையின் circuit diagramஐ காட்டும்.
03:52 Audio Frequency response Curve windowவில், START பட்டனை க்ளிக் செய்யவும்.
03:59 Piezo buzzerன், Frequency response, அமைக்கப்படும். Frequency response, 3700Hzல், அதிகபட்ச amplitudeஐ கொண்டிருக்கும்.
04:11 அதே windowவில், Grace பட்டனை க்ளிக் செய்யவும். Frequency response Curveஐ காட்டியபடி, Grace window திறக்கும்.
04:22 இப்போது, ஒலி மூலத்தின் velocityஐ கணக்கிடுவோம்.
04:27 Plot windowவில், EXPERIMENTS பட்டனை க்ளிக் செய்யவும். Select Experiment பட்டியல் தெரியும். பட்டியலில் இருந்து Velocity of Soundஐ க்ளிக் செய்யவும்.
04:41 EYES Junior: Velocity of Sound மற்றும்Schematic என இரண்டு புதிய windowக்கள் திறக்கும். Schematic, சோதனையின் circuit diagramஐ காட்டும்.
04:55 EYES Junior: Velocity of Sound windowவில், Measure Phase பட்டனை க்ளிக் செய்யவும்.
05:02 MICக்கும், Piezo buzzerக்கும் இடையே உள்ள தூரத்தை மாற்றுவதன் மூலம், வேறுபட்ட Phase மதிப்புகளை நாம் பெறலாம்.
05:11 வேறுபட்ட Phase மதிப்புகளை, பெற, Measure Phase பட்டனை க்ளிக் செய்யவும்.
05:16 அந்த வேறுபட்ட Phase மதிப்புகளில் இருந்து, 178 degrees மற்றும் 106 degreesஐ பயன்படுத்தி, ஒலியின் velocityஐ கணக்கிடுவோம்.
05:28 Piezo ஐ அருகிலும், மேலும், MICல் இருந்து, 2cm தள்ளி வைப்பதினாலும், இந்த மதிப்புகளை, பெறலாம்.
05:37 துல்லியமான முடிவுகளைப் பெற, MICஉம், Piezo buzzerஉம், ஒரே axisன் மேல் உள்ளனவா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
05:45 velocity of soundன் மதிப்பை கணக்கிட, கீழ்கண்ட formulaவை பயன்படுத்தவும். சோதனையில் இருந்து பெறப்பட்ட ஒலியின் velocity, 350 meter per second ஆகும்.
05:59 பயிற்சியாக, ஒலியின் wavelengthன் மதிப்பை கணக்கிடவும். Formula: λ= v/f(Lambda = v upon f).
06:09 இப்போது, நாம் செய்து காட்டப்போவது: Interference, Beats, Xmgrace plot மற்றும் இரண்டு ஒலி மூலங்களின் Fourier Transform .
06:20 சோதனைகளில்Grace plot களை காட்ட,
06:23 நீங்கள் பின்வருவனவற்றை, உங்கள் கணிணியில் நிறுவிவிட்டீர்களா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்: python-imaging-tk, grace, scipy மற்றும் python-pygrace .
06:34 இந்த சோதனையில், ஒலி மூலமாக, இரண்டு Piezo buzzerகள் பயன்படுத்தப்படுகின்றன.
06:41 இந்த சோதனையில், Piezo 1, SQR1க்கும், ground(GND)க்கும் இணைக்கப்படுகிறது. Piezo 2, SQR2க்கும், ground(GND)க்கும் இணைக்கப்படுகிறது. இதுவே, circuit diagram.
06:56 Plot windowவில் முடிவைக் காண்போம்.
07:00 Plot windowவில், frequencyஐ 3500Hzக்கு அமைக்கவும்.
07:06 SQR1 மற்றும் SQR2 check-boxகளை க்ளிக் செய்யவும். SQR1 மற்றும் SQR2ன் frequency, 3500Hzக்கு அமைக்கப்படுகிறது.
07:20 ஒரு digital ஒலி அலை உருவாக்கப்படுகிறது.
07:24 Wavesformஐ சரி செய்ய, frequency sliderஐ நகர்த்தவும்.
07:29 EXPERIMENTS பட்டனை க்ளிக் செய்து, Interference of Soundஐ தேர்ந்தெடுக்கவும். EYES: Interference of Sound window திறக்கும்.
07:39 Windowவின் கீழ், NS அதாவது number of samplesன் மதிப்பை, 1000க்கு மாற்றவும்.
07:48 SQR1' மற்றும் SQR2 check-boxகளை க்ளிக் செய்யவும். START பட்டனை க்ளிக் செய்யவும். Interferenceன் அமைப்பு தெரியும்.
08:00 இப்போது, Xmgrace பட்டனை க்ளிக் செய்யவும். Grace அமைப்புடன் ஒரு புது window திறக்கும்.
08:08 இப்போது, Beats அமைப்பை காட்டுவோம்.
08:11 EXPERIMENTS பட்டனை க்ளிக் செய்து, Interference of Soundஐ தேர்ந்தெடுக்கவும். EYES: Interference of Sound window திறக்கும்.
08:20 Windowவின் கீழ், SQR1 மற்றும் SQR2 check-boxகளை க்ளிக் செய்யவும்.
08:28 START பட்டனை க்ளிக் செய்யவும். Beats அமைப்பு தெரியும்.
08:33 இப்போது, Xmgrace பட்டனை க்ளிக் செய்யவும். Grace அமைப்புடன் ஒரு புது window திறக்கும்.
08:42 FFT ஐ க்ளிக் செய்யவும். Fourier Transformஉடன் புது window திறக்கும்.
08:49 Fourier Transform பற்றிய மேலும் விவரங்களுக்கு, இந்த இணைப்பை அணுகவும்.
08:55 குறைந்த frequency ஒலி அலையை காட்ட, ஒரு சோதனையை செய்வோம். இதுதான் circuit diagram.
09:03 EXPERIMENTS பட்டனை க்ளிக் செய்து, Interference of Soundஐ தேர்ந்தெடுக்கவும். EYES: Interference of Sound window திறக்கும்.
09:13 Windowவின் கீழ், SQR1'ன் மதிப்பை, 100க்கு அமைத்து, boxஐ check செய்யவும்.
09:21 START பட்டனை க்ளிக் செய்யவும். ஒரு குறைந்த amplitude அலை தெரியும்.
09:29 FFT ஐ க்ளிக் செய்யவும். Fourier Transformஉடன் புது window திறக்கும்.
09:34 சுருங்கசொல்ல,
09:36 இந்த டுடோரியலில் நாம் செய்து காட்ட கற்றது: ஒலி அலைகளை எப்படி உருவாக்குவது, ஒலி மூலத்தின் frequency response, ஒலி அலைகளின் velocityஐ எப்படி கணக்கிடுவது, ஒலி அலைகளின் Interference மற்றும் Beat அமைப்பு, ஒலி மூலத்தின் Forced oscillationகள்
09:56 மேலும், காட்டியது: Xmgrace plotகள், Fourier Transformகள் மற்றும் நமது சோதனைகளுக்கான , Circuit diagramகள்
10:04 பயிற்சியாக- ஒரு sound burstஐ பதிவு செய்யவும். குறிப்பு: ஒலி மூலத்திற்கு, ஒரு மணியை அடிக்கலாம் அல்லது கையைத்தட்டலாம். இதுவே, அதற்கான circuit diagram.
10:15 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கி காணவும்.
10:24 ஸ்போகன் டுடொரியலை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.
10:32 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது
10:40 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst