ExpEYES/C2/Electro-Magnetism/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | வணக்கம். Electromagnetic induction குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் செய்து காட்டப்போவது: Electromagnetic induction, Coilகளின் mutual induction, சுற்றும் காந்தத்தினால் தூண்டப்படும் voltage ஊசலாடும் pendulumன் Resonance, மற்றும் நமது சோதனைகளுக்கு, circuit diagramகள். |
00:26 | இங்கு நான் பயன்படுத்துவது: ExpEYES பதிப்பு 3.1.0, Ubuntu Linux OS பதிப்பு 14.10 |
00:35 | இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, ExpEYES Junior interface பற்றி தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும். |
00:47 | Electro-magnetic Inductionஐ செய்து காட்ட தொடங்குவோம். |
00:52 | இந்த சோதனையில், 3000 சுற்றுகள் கொண்ட coil wireகள், ground (GND) மற்றும் A1உடன் இணைக்கப்படுகின்றன. |
01:00 | காந்தத்தின் தாக்கத்தை காட்ட, 5mm விட்டம் மற்றும், 10mm நீளம் கொண்ட ஒரு காந்தம் பயன்படுத்தப்படுகிறது. இது தான், circuit diagram. |
01:11 | Plot windowவில் முடிவைக் காண்போம். |
01:15 | Plot windowவில் ஒரு horizontal trace தோன்றும். ஒரு காகிதத்தை சுருட்டி, அதை coilயினுள் புகுத்தவும். |
01:23 | சுருட்டப்பட்ட காகிதத்தினுள், ஒரு காந்தத்தை போட்டு, அதை மேலும் கீழும் நகர்த்தவும். |
01:29 | induced voltage, பிடிக்கப்பட்டு, திரையில் தோன்றும் வரை, செயல்முறையை, திரும்பச் செய்யவும். |
01:35 | Plot windowவில், Experiments பட்டனை க்ளிக் செய்யவும். |
01:39 | Select Experiment பட்டியல் தோன்றும். EM Inductionஐ க்ளிக் செய்யவும். |
01:46 | Electromagnetic Induction மற்றும் Schematic என்று இரண்டு புது windowகள் தோன்றும். Schematic window , circuit diagramஐ காட்டும். |
01:56 | Electromagnetic Induction windowவில், Start Scanning பட்டனை க்ளிக் செய்யவும். Horizontal trace , waveஆக மாறும். |
02:05 | காந்தத்தின் நகர்வுடன், voltageன் periodic scanning, ஒன்றிப் பொருந்தும் போது, இது நிகழும். |
02:12 | நகரும் காந்தத்தினால், coilலில், voltage தூண்டப்படுகிறது என்பதை இது குறிக்கும். |
02:18 | அடுத்து, இரண்டு coilகளின் mutual inductionஐ செய்து காட்டுகிறேன். |
02:23 | இந்த சோதனையில், A2, SINEஉடன் இணைக்கப்படுகிறது. ஒரு coil வழியாக, SINE, ground(GND)உடன் இணைக்கப்படுகிறது. |
02:31 | மேலும், ஒரு coil வழியாக, A1, ground(GND)உடன் இணைக்கப்படுகிறது. இதுவே, circuit diagram. |
02:37 | Plot windowவில் முடிவைக் காண்போம். |
02:40 | A1 ஐ க்ளிக் செய்து, CH1க்கு இழுக்கவும். A1, CH1 க்கு ஒதுக்கப்படுகிறது. |
02:47 | A2 ஐ க்ளிக் செய்து, CH2க்கு இழுக்கவும். A2, CH2க்கு ஒதுக்கப்படுகிறது. |
02:55 | Applied waveform மற்றும் induced waveformஐ காண, msec/div sliderஐ நகர்த்தவும். |
03:02 | மாறுகின்ற காந்தத்திடல், induced voltageஐ தூண்டுகிறது. Secondary coilலில், எந்த induced voltageயும் நீங்கள் காண முடியாது. |
03:12 | Axis நெடுகிலும், இரண்டு coilகளையும் ஒன்றுக்கொன்று அருகே வைக்கவும். Axis நெடுகிலும், சிறிது ferromagnetic பொருளை புகுத்தவும். |
03:20 | Secondary coilலில், voltageஐ தூண்ட, ஒரு screw driverஐ புகுத்தியுள்ளோம். |
03:26 | CH1ஐ க்ளிக் செய்து, FITக்கு இழுக்கவும். CH2ஐ க்ளிக் செய்து, FITக்கு இழுக்கவும். |
03:34 | வலது பக்கத்தில், A1 மற்றும் A2ன், voltageஉம், frequencyஉம் தெரியும். Secondary coilன், induced voltageயினால், A1 மற்றும் A2ன், voltageகளுக்கு இடையே வேறுபாடு தெரியும். |
03:47 | அடுத்து, DC motor மற்றும் coilகளை பயன்படுத்தி, சுற்றும் காந்தத்தினால், தூண்டப்படும் voltageஐ செய்து காட்டுவோம். |
03:56 | இந்த சோதனையில், ஒரு coil வழியாக, A1, ground(GND)உடன் இணைக்கப்படுகிறது. DC motor வழியாக, SQR2, ground(GND)உடன் இணைக்கப்படுகிறது. |
04:06 | DC motorன் மேல், 10mm விட்டம் மற்றும், 10mm நீளம் கொண்ட ஒரு நிலை காந்தம், ஏற்றப்படுகிறது. ஒரு coil வழியாக, A2, ground(GND)உடன் இணைக்கப்படுகிறது. |
04:18 | இதுவே, circuit diagram. |
04:20 | Plot windowவில் முடிவைக் காண்போம். |
04:23 | Setting Square wavesன் கீழ், frequencyன் மதிப்பை 100Hzக்கு அமைக்கவும். SQR2 check-boxஐ க்ளிக் செய்யவும். |
04:34 | A1 ஐ க்ளிக் செய்து, CH1க்கு இழுக்கவும். A1, channel CH1க்கு ஒதுக்கப்படுகிறது. |
04:41 | A2 ஐ க்ளிக் செய்து, CH2க்கு இழுக்கவும். A2, channel CH2க்கு ஒதுக்கப்படுகிறது. |
04:47 | Waveformஐ பெற, msec/div sliderஐ நகர்த்தவும். Waveformஐ சரி செய்ய, volt/div sliderஐ நகர்த்தவும். |
04:57 | CH1 ஐ க்ளிக் செய்து, FITக்கு இழுக்கவும். CH2 ஐ க்ளிக் செய்து, FITக்கு இழுக்கவும். |
05:05 | வலது பக்கத்தில், voltage மற்றும் , frequencyஐ காணலாம். இரண்டு மாறுகின்ற waveformகளின், voltageஉம், frequencyஉம் கிட்டத்தட்ட ஒன்றிப்போவதை கவனிக்கவும். |
05:16 | இது ஏனெனில், காந்தம் சுற்றும் போது, coilஐ சுற்றி இருக்கும் காந்தப்புலம் , துருவங்களுக்கு இடையே மாறிக்கொண்டிருக்கும். |
05:24 | காந்தத்தின் சுற்றுதல், coilலில், மாறுகின்ற induced emfஐ விளைவிக்கிறது. |
05:31 | அடுத்து, ஊசலாடும் pendulumவுடன் சோதனை செய்வோம். |
05:34 | தூண்டப்பட்ட காந்தப்புலமுடன் ஒரு pendulum ஊசலாடும் போது, அது driven pendulum எனப்படும். |
05:41 | இந்த சோதனையில், ஒரு coil வழியாக, SQR1, ground(GND)உடன் இணைக்கப்படுகிறது. |
05:47 | Pendulumஆக, ஒரு காகிதத் துண்டு வைக்கப்பட்டு, அதன் முன் பட்டன் காந்தங்கள் தொங்கவிடப்படுகின்றன. இதுவே, circuit diagram. |
05:58 | Plot windowவில் முடிவைக் காண்போம். |
06:01 | SQR1 check boxஐ க்ளிக் செய்யவும். |
06:05 | Experiments பட்டனை க்ளிக் செய்யவும். Select Experiment பட்டியல் தோன்றும். Driven Pendulumஐ தேர்ந்தெடுக்கவும். |
06:15 | இரண்டு windowக்கள் தோன்றும்- அவை Driven Pendulumன் Schematic, மற்றும் EYES Junior: Driven Pendulum. |
06:23 | EYES Junior: Driven Pendulum windowவின் மேல், sliderஐ நகர்த்தவும். Sliderஐ நகர்த்தினால், pendulum ஊசலாடும். |
06:33 | "2.6 Hz" ல் இருந்து "2.9Hz"க்கு இடையே, அதிகபட்ச amplitudeஉடன் pendulum ஊசலாடும். இது ஏனெனில், resonant frequencyயும், natural frequencyயும் ஒன்றாக இருக்கும் |
06:47 | சுருங்கசொல்ல, |
06:49 | இந்த டுடோரியலில் நாம் செய்து காட்ட கற்றது: Electromagnetic induction, Coilகளின் Mutual induction, சுற்றும் காந்தத்தினால் தூண்டப்படும் voltage ஊசலாடும் pendulumன் Resonance, மற்றும் நமது சோதனைகளுக்கு, circuit diagramகள். |
07:09 | பயிற்சியாக, பின்வருவதை செய்து காட்டவும்: ஒரு electromagnetஐ எப்படி செய்வது, காந்தத்துடன் கூடிய ஒற்றை coilலின் mutual induction, சோதனைகளுக்கு, circuit diagramகள். |
07:22 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கி காணவும். |
07:30 | ஸ்போகன் டுடொரியலை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும். |
07:37 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது |
07:44 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |