Digital-Divide/D0/Getting-to-know-computers/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 கணினியை பற்றி அறிந்துக்கொள்வதற்கான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது
00:09 ஒரு கணினியின் வெவ்வேறு பாகங்கள்.
00:11 அந்த பாகங்களை இணைக்கவும் கற்க போகிறோம்.
00:15 பொதுவாக, இருவகை கணினிகள் உள்ளன
00:18 டெஸ்க்டாப்(desktop) அல்லது பெர்சனல் கம்ப்யூட்டர்(personal computer) மற்றும் லேப்டாப்(laptop)
00:23 தற்போது, டேப்லெட் பிசிக்கள் (tablet PCs) அல்லது சுருக்கமாக டேப்(tabs)களும், மிக பிரபலமாக உள்ளன.
00:31 ஒரு கணினியின் செயல்பாடுகள்.
00:33 ஒரு கணினி அதன் அளவு எதுவாக இருந்தாலும் ஐந்து முக்கியமாக செயல்படுகளை செய்கிறது-
00:40 இது உள்ளீட்டின் மூலம் டேடா(Data) அல்லது இன்ஸ்ட்ரக்ஷன்களை(Instructions) ஏற்கிறது.
00:45 இது டேடாவை(data) பயனருக்கு தேவையானபடி செயல்படுத்துகிறது
00:50 இது டேடாவை(data) சேமிக்கிறது
00:52 இது வெளியீட்டு வடிவில் முடிவைத் தருகிறது
00:56 இது கணினியின் உள்ளே உள்ள அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது.
01:01 ஒரு கணினியின் அடைப்படை அமைப்பு இந்த வரைப்படத்தில் காட்டப்படுகிறது.
01:08 இன்புட் யூனிட்(Input Unit) , சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் (Central Processing Unit)
01:11 'அவுட்புட் யூனிட்(Output Unit)
01:14 ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் கணினியினுள் டேடா(data) மற்றும் ப்ரோக்ராம்களை(program) உள்ளிட இன்புட் யூனிட்(Input unit) உதவுகிறது
01:23 கீபோர்ட்(keyboard), மெளஸ்(mouse), கேமரா(Camara)மற்றும் ஸ்கேனர் (scaner) ஆகியவை சில உள்ளீட்டு சாதனங்கள் ஆகும்
01:31 சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட்(Central Processing Unit) ... அரித்மடிக்(arithmatic) மற்றும் லாஜிகல்(logical) செயல்பாடுகள் போன்றவற்றை செயல்படுத்துகிறது
01:38 மற்றும் டேடா(data)' மற்றும் இன்ஸ்ட்ரக்ஷன்களை(instructions) சேமிக்கிறது
01:41 பொதுவாக, சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் (Central Processing Unit)அல்லது சிபியூ(CPU) பார்க்க இவ்வாறு இருக்கும்.
01:48 இதில் யூனிட்க்கு முன்னும் பின்னும் பல போர்ட்டுகள்(ports) உள்ளன
01:53 அவற்றை பற்றி இன்னும் சற்று நேரத்தில் காண்போம்.
01:57 இது டேடா(data) மற்றும் இன்ஸ்ட்ரக்ஷன்களை(instructions) எடுத்து, அவற்றை செயல்படுத்தி வெளியீடு அல்லது முடிவுகளைத் தருகிறது.
02:05 செயல்பாடுகளை செயலாக்கும் பணி ப்ராசசிங்(processing) எனப்படும்
02:11 அந்த வெளியீடு... டேடா(data) மற்றும் இன்ஸ்ட்ரக்ஷன்களுடன்(instructions) ஸ்டோரேஜ் யூனிட்டில்(storage unit) சேமிக்கப்படுகிறது.
02:18 டேடா விலிருந்து முடிவை உருவாக்கும் செயல்பாட்டை ஆதரிக்கும் யூனிட் அவுட்புட் யூனிட்(output unit) ஆகும்
02:26 மானிடர்(monitor) மற்றும் ப்ரின்டர்(printer) ஆகியவை சில வெளியீட்டு சாதனங்கள்.
02:33 பொதுவாக, ஒரு டெஸ்க்டாப் கணினியில் 4 முக்கிய பாகங்கள் இருக்கும்
02:38 மானிடர்(monitor), சிபுயூ(CPU)
02:40 கீபோர்ட்(keyboard) மற்றும் மெளஸ் (mouse)
02:43 கேமரா(camara), ப்ரிண்டர்(printer) அல்லது ஸ்கேனரையும்(scaner) கணினியுடன் இணைக்கலாம்.
02:50 இது மானிடர்(monitor) அல்லது கணினி திரை எனப்படும்.
02:55 இது ஒரு தொலைக்காட்சி திரை போன்று இருக்கும்
02:57 இது கணினியின் ஒரு காட்சி பிரிவு ஆகும்.
03:02 இது கணினியின் பயனர் இடைமுகத்தைக் காட்டுகிறது
03:05 வெவ்வேறு ப்ரோகிராம்களை(program) திறந்து... கீபோர்ட் மற்றும் மெளஸை பயன்படுத்தி கணினியுடன் தொடர்பு கொள்ள முடியும்.
03:13 கீபோர்ட் என்பது டெக்ஸ்ட்(Text), கேரக்டர்கள்(characters) மற்றும் மற்ற கமேண்டுகளை(commands) கணினியினுள் உள்ளிட வடிவமைக்கப்பட்டது
03:21 இதுதான் கணினி மெளஸ்.
03:24 பொதுவாக, இதில் அழுத்தக்கூடிய இரு பட்டன்களும் ஒரு ஸ்க்ரால் பட்டன்(scroll button) இடையிலும் இருக்கும்.
03:31 இடது மெளஸ் பட்டனை அழுத்துவது பெரும்பாலான செயல்களை செயல்படுத்துகிறது.
03:35 வலது மெளஸ் பட்டனை அழுத்துவது, ஷார்டகட்ஸ்(shortcuts) போன்ற நிலையில்லாத பல செயல்பாடுகளை செயல்படுத்துகிறது.
03:43 ஸ்ரால் பட்டனை உருட்டுவதன் மூலம் மேலும் கீழும் ஸ்க்ரால் செய்ய மெளஸ் வீல் (mouse wheel) பயன்படுகிறது
03:49 கீபோர்ட் தவிர கணினியுடன் தொடர்புகொள்ள மற்றொரு வழி கணினி மெளஸ் ஆகும்
03:57 இப்போது சிபுயூ(CPU) வின் பல்வேறு பகுதிகளைக் காண்போம்
04:02 சிபியூவின் முன்பக்கம் உள்ள முக்கியமான பட்டன் பவர் ஆன்(Power on) ஸ்விட்ச் (switch) ஆகும்.
04:08 கணினியை இயக்க இந்த ஸ்விட்சை (switch) அழுத்த வேண்டும்.
04:14 தேவையெனில் கணினியை மீள்துவக்க 'ரீசெட்(reset) பட்டனும் நமக்கு உதவுகிறது.
04:21 மேலும் முன்பக்கம் 2 அல்லது அதற்குமேற்பட்ட USB போர்ட்டுகள் மற்றும் ஒரு DVD/CD-ROM ரீடர்-ரைட்டர்(reader-writer) ஆகியவையும் உள்ளன
04:30 கணினியுடன் பென்ட்ரைவ்களை இணைக்க USB போர்ட்டுகள் உதவுகின்றன
04:35 ஒரு CD அல்லது DVD ஐ ரீட் அல்லது ரைட் (read or write) செய்ய DVD/CD-ROM ரீடர்-ரைட்டர்(reader-writer) பயன்படுகிறது
04:43 இப்போது கணினியின் பின் புறத்தைக் காண்போம்
04:48 பின் புறத்தில் இருக்கும் போர்ட்டுகள்(ports), கணினியின் மற்ற சாதனங்களுடன் சிபுயூ(CPU)வை இணைக்க பயன்படுகிறது
04:55 இது கேபிள்களை(cables) பயன்படுத்தி செய்யப்படுகிறது
04:58 சிபியூ(CPU) வின் உள்ளே பல பாகங்கள் உள்ளன
05:02 கணினி செயலில் இருக்கும்போது, இந்த அனைத்து பாகங்களும் வேலைசெய்து வெப்பத்தை உண்டாக்கும்.
05:08 பின்னால் இருக்கும் மின்விசிறி... பாகங்களின் வெப்பத்தைத் தணிக்க தேவையான காற்றோட்டத்தைத் தருகிறது.
05:14 மற்றபடி, அதிகமான வெப்பம் சிபியூவை(CPU) சேதப்படுத்தலாம். சிலசமயம் டேடாவை(data) இழக்கவும் நேரிடலாம்.
05:21 இதுதான் குளிர்விக்கும் மின்விசிறியின் பெட்டி
05:23 இது சிபியூ(CPU) வின் வெப்பத்தை சாதாரண நிலையில் வைத்து அதிக வெப்பமாதலை தடுக்கிறது.
05:30 பவர் சப்ளே யூனிட்(Power Supply Unit), பிஎஸ்யூ(PSU) எனவும் அழைக்கப்படும் இது கணினிக்கு மின்சாரத்தை வழங்குகிறது.
05:37 இப்போது, வெவ்வேறு பாகங்களை சிபியூவுக்கு(CPU) எவ்வாறு இணைப்பது என கற்போம்
05:42 காட்டப்படுவது போல அனைத்து பாகங்களையும் மேசை மீது வைக்கவும்.
05:46 காட்டப்படுவது போல அனைத்து கேபிள்களையும் மேசைமீது வைக்கவும்.
05:51 முதலில், மானிட்டரை(monitor) சிபியூ(CPU) உடன் இணைக்கலாம்
05:55 காட்டப்படுவதுபோல பவர் கேபிளை(power cable) மானிட்டருடன் இணைக்கவும்.
06:00 இப்போது மற்றொரு முனையை பவர் சப்ளை சாக்கெட்டுடன்(power supply socket) இணைக்கவும்.
06:04 இதுதான் சிபியூ(CPU)வின் பவர் கேபிள்(power cable).
06:08 காட்டப்படுவது போல இதை சிபியூ(CPU) உடன் இணைக்கவும்.
06:11 பின் இதை ஒரு பவர் சப்ளை சாக்கெட்டுடன்(power supply socket) இணைக்கவும்
06:14 அடுத்து காட்டப்படுவதுபோல கீபோர்ட் கேபிளை(keyboard cable) சிபியூ(CPU) உடன் இணைப்போம்.
06:19 கீபோர்டின் போர்ட் பொதுவாக ஊதா நிறத்தில் இருக்கும்.
06:23 பச்சை நிறத்தில் இருக்கும் போர்ட்டுடன் மெளஸை இணைக்கலாம்.
06:28 மாற்றாக USB கீபோர்ட் மற்றும் மெளஸை ஏதேனும் USB போர்ட்டுகளுடனும் இணைக்கலாம்
06:35 மீதமுள்ள USB போர்ட்டுகளை பென் ட்ரைவ்(pen drive), ஹார்ட் டிஸ்க்(hard disk) போன்றவற்றை இணைக்கவும் பயன்படுத்தலாம்.
06:42 இது ஒரு LAN கேபிள்.
06:44 இது ஒரு LAN போர்ட்.
06:46 கணினியை இணையத்துடன் இணைக்க அணுமதிக்கும் இது ஒரு ஒயர்டு கனெக்ஷன்
06:52 LAN கேபிளின் மற்றொரு முனை ஒரு மோடம்(modem) அல்லது ஒரு wi-fi ரெளட்டருடன்(router) இணைக்கப்படுகிறது
06:58 wi-fi இணைப்பை கட்டமைப்பது குறித்து மற்றொரு டுடோரியலில் கற்பீர்கள்.
07:03 LAN போர்ட் செயல்பட்டு செயல்பாட்டை பெறும்போது LED விளக்கு ஒளிரும்.
07:10 சிபியூவில்(CPU) மற்ற பல தொடர் போர்ட்டுகள் இருப்பதைக் காணலாம்
07:15 இவை PDAகள், மோடம்(modem) அல்லது மற்ற தொடர் சாதனங்களை இணைக்கப் பயன்படுகின்றன
07:21 சிபியூவில்(CPU) சில இணை போர்ட்டுகள் இருப்பதையும் காணலாம்
07:25 இவை ப்ரிண்டர்(printer), ஸ்கேனர்(scaner) போன்ற மற்ற சாதனங்களை இணைக்கப் பயன்படுகின்றன.
07:31 இப்போது ஆடியோ ஜேக்களை(audio jacks) காண்போம்
07:34 இளஞ்சிவப்பு நிற போர்ட் ஒரு மைக்ரோபோனை(micro phone) இணைக்க உதவுகிறது
07:38 நீலநிற போர்ட்' லைன் இன்னை(line in), இணைக்க உதவுகிறது. உதாரணமாக- ஒரு ரேடியோ(radio) அல்லது டேப்(tap player) ப்ளேயரில் இருந்து.
07:45 பச்சை நிற போர்ட் ஹெட்போன்/ஸ்பீக்கர்(head phone/speaker)' அல்லது லைன் அவுட்டை(line out) இணைக்கப்ப பயன்படுகிறது
07:51 இப்போது நம் அனைத்து சாதனங்களையும் இணைத்துவிட்டோம் , கணினியை இயக்கலாம்.
07:57 முதலில், மானிடர்(monitor) மற்றும் சிபியூ(CPU) வின் பவர் சப்ளே பட்டனை (power supply button) இயக்கலாம்
08:03 இப்போது மானிட்டரின்(monitor) பவர் ஆன் பட்டனை(power on button) அழுத்தவும்
08:07 பின் சிபியூ(CPU) வின் முன் உள்ள பவர் ஆன் பட்டனை (power on button) அழுத்தவும்
08:12 பொதுவாக, உங்கள் கணினி இயங்க துவங்கும் போது கருப்புத் திரையில் சில வார்த்தைகளை காணலாம்.
08:18 இது BIOS சிஸ்டம்(system). இது காட்டுவது
08:22 கணினியின் சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் (central processing unit) பற்றிய தகவல்
08:25 கணினியின் மெமரி(memory) பற்றிய தகவல்
08:28 ஹார்ட் டிஸ்க் ட்ரைவ்கள்(hard disk drives) மற்றும் ஃப்ளாப்பி டிஸ்க் ட்ரைவ்கள்(floppy disk drives) பற்றிய தகவல்'.
08:33 கணினி இயங்க ஆரம்பித்தவுடன் சிபியூவுக்கு(CPU) அதன் முதல் கட்டளையை தரும் மென்பொருள் BIOS ஆகும்
08:41 இயங்குதளத்தை ஏற்றும் மொத்த செயல்முறை... கணினியை பூட் (boot) செய்தல் எனப்படும்
08:48 அனைத்து முக்கிய சோதனைகளும் முடிந்தவுடன், இயங்குதளத்தின் இடைமுகத்தைக் காணலாம்
08:54 நீங்கள் உபுண்டு லினக்ஸ்(Ubuntu Linux) பயனராக இருந்தால், இந்த திரையைக் காண்பீர்கள்.
08:58 விண்டோஸ்(windows) பயனராக இருந்தால், இந்த திரையைக் காண்பீர்கள்
09:02 இப்போது சுருக்கமாக ஒரு லேப்டாப்(laptop) பற்றி காண்போம்
09:06 லேப்டாப்கள்(laptops) கையடக்கமான மற்றும் கச்சிதமான கணினிகள் ஆகும்
09:09 ஒருவரின் மடி மீது வைத்து பயன்படுத்தக்கூடிய அளவிற்கு ஒரு லேப்டாப் சிறியதும் சுமைகுறைந்ததும் ஆகும்.
09:16 எனவேதான் இது 'லேப்டாப் அல்லது மடிகணினி எனப்படுகிறது
09:18 டெஸ்க்டாப் கணினி போன்றே பெரும்பாலும் ஒரே மாதிரியான பாகங்கள் இதிலும் உள்ளன. பின்வருவன உட்பட
09:23 ஒரு டிஸ்ப்ளே(display), ஒரு கீபோர்ட்(keyboard),
09:25 சாதனத்தை சுட்டிக்காட்டவும் வழிசெலுத்தவும் உதவும் ஒரு டச்பேட்(touchpad)
09:29 ஒரு CD/DVD ரீடர்-ரைட்டர் மற்றும்
09:32 ஒரே யூனிட்டினுள் உள்ளமைக்கப்பட்டுள்ள மைக்(mic) மற்றும் ஸ்பீக்கர்கள்(speaker)
09:36 இதிலும் ஒரு LAN போர்ட் மற்றும் USB போர்ட்டுகள் உள்ளன
09:40 ப்ரொஜக்டரை' லேப்டாப் உடன் இணைக்க உதவும் ஒரு வீடியோ போர்ட்டும் உள்ளது
09:46 சுலபமாக கண்டுபிடிக்கக்கூடிய வகையில் மைக் மற்றும் ஹெட்ஃபோன்களுக்கு முறையான ஐகான்களுடன் கூடிய ஆடியோ ஜேக்ஸ் உள்ளன.
09:53 இது லேப்டாப்பில் உள்ளடங்கிய குளிர்விக்கும் மின்விசிறி
09:57 இது லேப்டாப்பை அதிக வெப்பமாதலில் இருந்து பாதுகாக்கிறது.
10:01 லேப்டாப் ஒரு AC அடாப்டர்(adapte)r வழியே மின்சாரத்தைப் பெறுகிறது. இதில் ஒரு ரீசார்சபிள் பேட்டரி (rechargable battery) உள்ளது
10:09 அதனால் இது தூக்கிச்செல்லக்கூடியதும் மின்சாரம் இல்லாமல் பயன்படுத்தக்கூடியதும் ஆகும்.
10:16 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில்
10:20 டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப்பின் வெவ்வேறு பாகங்கள் பற்றியும்
10:23 டெஸ்க்டாப்பின் வெவ்வேறு பாகங்களை எவ்வாறு இணைப்பது பற்றியும் கற்றோம்
10:28 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
10:31 இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது
10:34 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
10:37 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
10:42 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
10:46 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
10:52 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
10:56 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11:01 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும்
11:06 இந்த டுடோரியலுக்கு அனிமேஷன் மற்றும் 3D மாடலிங் ஆர்த்தி
11:11 தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana