C-and-C++/C4/Function-Call/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | C மற்றும் C++ ல் Function calls குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது function call ன் வகைகளான |
00:13 | மதிப்பு மூலம் call செய்வது. reference மூலம் call செய்வது. |
00:16 | இதை ஒரு உதாரணத்தின் மூலம் செய்யலாம். |
00:19 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது உபுண்டு இயங்கு தளம் பதிப்பு 11.10 |
00:26 | gcc மற்றும் g++ Compiler பதிப்பு 4.6.1 |
00:31 | மதிப்பு மூலம் call செய்யும் functionகளின் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம் |
00:35 | இது function க்கு arguments ஐ அனுப்பும் ஒரு வழி ஆகும். |
00:40 | மதிப்பு மூலம் ஒரு variable ஐ அனுப்பும் போது... function க்கு அனுப்பும் முன் அது variable ஐ ஒரு பிரதி எடுக்கும். |
00:48 | function க்குள் arguments ல் செய்யப்பட்ட மாற்றங்கள் function ல் இருக்கும். |
00:54 | இது function க்கு வெளியில் எதையும் பாதிக்காது. |
00:58 | மதிப்பு மூலம் call செய்யும் function க்கு ஒரு program ஐ காண்போம். |
01:02 | Editor ல் ஏற்கனவே program ஐ எழுதி வைத்துள்ளேன். அதை திறக்கிறேன். |
01:08 | நம் file பெயர் callbyval.c என்பதைக் கவனிக்க |
01:13 | இந்த program ல் ஒரு எண்ணின் கனத்தைக் கணக்கிடுவோம். இப்போது code ஐ விளக்குகிறேன். |
01:19 | இது நம் header file |
01:21 | இங்கே ஒரு argument int x உடன் ஒரு function cube உள்ளது |
01:27 | இந்த function ல் x ன் கனத்தைக் கணக்கிட்டு x ன் மதிப்பைத் திருப்புவோம். |
01:33 | இது நம் main function. |
01:36 | இங்கே n ன் மதிப்பை 8 என கொடுப்போம். n ஒரு integer variable |
01:43 | பின் function cube ஐ call செய்வோம். |
01:45 | பின் n ன் மதிப்பையும் n ன் கனத்தையும் அச்சடிப்போம். |
01:49 | இது நம் return statement. |
01:52 | இப்போது program ஐ இயக்குவோம். |
01:54 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவைத் திறப்போம். |
02:02 | கம்பைல் செய்ய டைப் செய்க gcc space callbyval.c space hyphen o space val. எண்டரை அழுத்துக |
02:12 | இப்போது டைப் செய்க ./val (dot slash val). எண்டரை அழுத்துக |
02:16 | வெளியீடு Cube of 8 is 512 என காட்டப்படுகிறது |
02:23 | இப்போது reference மூலம் function ஐ call செய்வதைக் காண்போம். |
02:26 | நம் ஸ்லைடுகளுக்கு வருவோம். |
02:29 | இது function க்கு arguments ஐ அனுப்பும் மற்றொரு முறை ஆகும். |
02:33 | இந்த முறை... மதிப்பிற்கு பதில் argument ன் address ஐ பிரதி எடுக்கிறது.. |
02:39 | Function க்குள் argumentகளில் செய்யப்படும் மாற்றங்கள் வெளியேயும் அவற்றை பாதிக்கலாம். |
02:45 | இதில் argumentகளை pointer type யாக declare செய்ய வேண்டும். |
02:50 | Reference மூலம் function ஐ call செய்வதற்கான ஒரு உதாரணத்தைக் காணலாம். |
02:54 | நம் file பெயர் callbyref.c என்பதை கவனிக்க |
02:59 | இது நம் header file stdio.h |
03:03 | பின் function swap உள்ளது |
03:06 | இந்த function... variable களின் மதிப்பை இடமாற்றும். |
03:10 | a ன் மதிப்பு b ல் சேமிக்கப்படும். b ன் மதிப்பு a ல் சேமிக்கப்படும். |
03:15 | Function க்கு அனுப்பப்பட்ட arguments... pointer type என்பதைக் காண்க |
03:21 | இங்கே ஒரு integer variable t ஐ declare செய்துள்ளோம் |
03:25 | a ன் முதல் மதிப்பு t ல் சேமிக்கப்படுகிறது. |
03:28 | பின் b ன் மதிப்பு a ல் சேமிக்கப்படுகிறது. |
03:32 | பின் t ன் மதிப்பு b ல் சேமிக்கப்படுகிறது |
03:37 | இவ்வாறு மதிப்புகள் இடமாற்றப்படுகின்றன. |
03:40 | இது நம் main function. |
03:42 | இங்கே இரு integer variableகளை i மற்றும் j என declare செய்துள்ளோம். |
03:49 | பின் i மற்றும் j ன் மதிப்புகளை பயனரிடமிருந்து வாங்குகிறோம். |
03:53 | Ampersand i மற்றும் Ampersand j... i மற்றும் j ன் memory address ஐ தரும். |
03:59 | முதலில் இடமாற்றுதலுக்கு முன் மதிப்புகளை அச்சடிப்போம். |
04:04 | பின் function swap ஐ செய்வோம் |
04:06 | பின் இடமாற்றியபின் மதிப்புகளை அச்சடிப்போம். |
04:10 | இது நம் return statement. |
04:13 | இப்போது program ஐ இயக்குவோம் |
04:16 | நம் டெர்மினலுக்கு வருவோம். |
04:19 | கம்பைல் செய்ய டைப் செய்க gcc space callbyref dot c space hyphen o space ref. எண்டரை அழுத்துக |
04:29 | இப்போது டைப் செய்க dot slash ref. எண்டரை அழுத்துக |
04:33 | Enter the values என காண்கிறோம். நான் 6 ஐயும் 4 ஐயும் தருகிறேன் |
04:40 | காட்டப்படும் வெளியீடு, Before swapping 6 and 4 |
04:44 | After swapping 4 and 6 |
04:48 | இப்போது அதே Program ஐ C++ ல் எவ்வாறு இயக்குவது என காணலாம். |
04:53 | என்னிடம் அந்த code உள்ளது, அதை பார்ப்போம். |
04:57 | இது இரண்டாவது program... reference மூலம் function ஐ call செய்வது. |
05:01 | நம் file பெயர் callbyref.cpp என்பதைக் காண்க |
05:06 | code ஐ காண்போம் |
05:08 | இது நம் header file iostream |
05:12 | இங்கே std namespace ஐ பயன்படுத்துகிறோம் |
05:16 | Function ஐ declare செய்வது C++ லும் ஒன்றே. |
05:19 | இதில் argumentகளை ampersand x மற்றும் ampersand y என அனுப்புகிறோம். |
05:25 | இது x மற்றும் y ன் memory address ஐ தரும். |
05:29 | பின் மதிப்புகளை இடமாற்றுவோம். |
05:32 | மீதமுள்ள code நம் C code போன்றதே. |
05:36 | printf statement க்கு பதில் cout உம் scanf statement க்கு பதில் cin ம் இட வேண்டும் |
05:44 | இப்போது program ஐ இயக்குவோம். நம் டெர்மினலுக்கு வருவோம் |
05:48 | கம்பைல் செய்ய டைப் செய்க; g++ space callbyref.cpp space hyphen o space ref1, எண்டரை அழுத்துக |
06:00 | இப்போது டைப் செய்க dot slash ref1, எண்டரை அழுத்துக |
06:05 | இங்கே இது காட்டுவது: |
06:07 | Enter values of a and b |
06:10 | 4 மற்றும் 3 என தருகிறேன் |
06:13 | வெளியீடு காட்டப்படுகிறது |
06:15 | Before swapping a and b 4 and 3 |
06:19 | After swapping a and b 3 and 4 |
06:23 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
06:26 | நம் ஸ்லைடுகளுக்கு வருவோம். |
06:30 | சுருங்க சொல்ல நாம் கற்றது: |
06:32 | மதிப்பு மூலம் function ஐ call செய்வது. |
06:34 | Reference மூலம் function ஐ call செய்வது. |
06:38 | பயிற்சியாக, C++ ல் மதிப்பு மூலம் call செய்வதைப் பயன்படுத்தி ஒரு எண்ணின் கனத்தைக் கணக்கிட இதுபோன்ற ஒரு program எழுதுக. |
06:46 | கீழ்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
06:49 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது |
06:52 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
06:56 | ஸ்போகன் டுடோரியர் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
07:01 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
07:05 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
07:11 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
07:15 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:23 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
07:27 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |