GIMP/C2/Comics/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration
|
00.18 | GIMP tutorial க்கு நல்வரவு. |
00.21 | வடக்கு ஜெர்மனி Bremenல் இருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது. |
00.27 | நான் எப்போதும் குறிப்பிட மறக்கும் சிலவற்றை ஆரம்பத்தில் செய்கிறேன். |
00.34 | எதையாவது படத்தில் செய்வதற்கு முன் அதை சேமிக்க எப்போதும் மறக்கிறேன். |
00.45 | எனவே File, Save as சென்று அதை |
01.05 | comic.xcf என சேமிக்கிறேன் |
01.12 | ‘xcf’ என்பது Gimp க்கான file format. அது layerகளின் அனைத்து தகவல்களையும் அந்த file ல் வைக்கிறது. |
01.22 | படத்தில் மேலும் வேலை செய்ய விரும்புகிறீர்கள் எனில் அதை Gimp ல் JPEG அல்லது tif அல்லது அதுபோல ஏதும் சேமிக்காதீர். |
01.30 | நீங்கள் விரும்பும் ஒவ்வொரு format க்கும் அங்கிருந்து நீங்கள் export செய்துகொள்ளலாம். ஆனால் மேலும் வேலையை அதனுடன் செய்ய விரும்பினால் XCF ஐ பயன்படுத்துக. |
01.45 | எனவே என்ன செய்வது? முதலாவதாக இந்த படத்தை சற்று தெளிவாக்க வேண்டும். |
01.59 | இங்கே இரு பிரச்சனைகள் உள்ளன, அந்த மனிதர் பின்னால் உள்ளார். |
02.15 | இரண்டாவதாக சில பொருட்கள் கீழே இங்கே உள்ளன. |
02.21 | இங்கே இந்த சிலை சிறப்பாக அமைந்துள்ளது. இது படத்தின் ஒரு corner point என நினைக்கிறேன். |
02.31 | எனவே முதலில் இங்கே இவற்றை நீக்குகிறேன். |
02.36 | எனவே படத்தை பெரிதாக்கி... Pen Tool ஐ தேர்ந்தெடுக்கவும். |
02.50 | Cloning Tool மூலம் செய்வது மிக சிறந்தது. இங்கே மிக துல்லியமாக வேலை செய்ய விரும்பவில்லை. ஏனெனில் முடிவு படத்தில் இந்த சிறிய விஷயங்கள் அனைத்தும் மறைந்துவிடும். |
03.05 | எனவே clone tool ஐ தேர்ந்தெடுக்கிறேன். pen ன் அளவை மாற்றுகிறேன். |
03.13 | இப்போது ஆரம்ப புள்ளியை பெற Ctrl மற்றும் click ஐ அழுத்துக. இப்போது வரைய ஆரம்பிக்கிறேன். |
03.24 | ஆனால் அதை ஆரம்பிக்கும் முன் Overlay mode ஐ Normal mode ஆக மாற்றுகிறேன், opacity ஐ 100 ஆகவும் மாற்றுகிறேன். இப்போது வரைய ஆரம்பிக்கலாம்.
|
03.42 | படம் சற்று மங்கலாக மேகம்போலாகிறது. எனவே வரைய மற்றொரு brush ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
03.57 | இப்போது இங்கே விளிம்பிற்கு சென்று வரைகிறேன். |
04.37 | எனவே அவர் மறைந்துவிட்டார் |
04.41 | இங்கே சில பொருட்கள் உள்ளன.
|
04.44 | இங்கே இந்த பூத்தொட்டி எனக்கு வேண்டும். ஆனால் மற்றவை அனைத்தும் வேண்டாம். |
05.03 | ஒரு சமயத்தில் இந்த பூத்தொட்டியின் விளிம்புகளை நான் கவனமாக பார்த்துக்கொள்வேன். |
05.24 | இந்த படத்தை இவ்வாறே விடுகிறேன் எனில் clone செய்ததன் தடங்களை நீங்கள் காணலாம். ஆனால் comic mode ஐ செயல்படுத்தும் போது அவை மறைந்துவிடும். |
05.43 | எனவே இப்போது இங்கே பூத்தொட்டியில் சற்று வேலை செய்யலாம். |
06.06 | இந்த புள்ளியிலிருந்து நான் clone செய்ய வேண்டும் என நினைக்கிறேன். |
06.26 | இது இந்த பெரிதாக்கிய படியில் பார்க்க ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. ஆனால் இது வேலை செய்யும் என நான் நினைக்கிறேன். |
06.34 | அடிப்படையில் comic படம் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. |
06.39 | முதலில் நிறங்கள் ஏதும் இல்லாமல் கருப்பு திட்டுக்கள் அல்லது அடர்ந்த திட்டுக்கள் உள்ளன். அது படத்திற்கு அமைப்பைக் கொடுக்கிறது. |
06.50 | பிறகு படத்தில் வடிவமைப்புகள் மற்றும் பொருட்களை வரையறுக்கும் கோடுகள் உள்ளன. |
06.57 | அதன் பின் நிறம் உள்ளது. இந்த திட்டுகளுடன் tutorial லில் உள்ளது போல ஆரம்பிப்போம் |
07.04 | அதற்கு |
07.15 | இந்த Layer ஐ இரண்டாக்கி அதை ink என்கிறேன். |
07.25 | Threshold tool ஐ தேர்ந்தெடுத்து படத்தினுள் சொடுக்குகிறேன். படத்தினுள் info window இழுக்கிறேன். |
07.37 | இங்கே படம் கருப்பு வெள்ளையாக இருப்பதைக் காண்க. |
07.43 | இந்த tool படத்தை கருப்பு வெள்ளையாக பிரிக்கிறது. |
07.48 | 82 ல் உள்ளதை விட pixel... குறைவானதாக இருந்தால்... சிவப்பு பச்சை மற்றும் நீலத்தின் சராசரி கலவை வெள்ளையாக இருக்கும். |
08.02 | Level... 82 ஐ விட குறைவானதாக இருந்தால் இது கருப்பாகும். |
08.14 | இப்போது இங்கே முதல் பிரச்சனையை சந்திப்போம். |
08.19 | விளைவு கிட்டத்தட்ட மிக கருப்பாகும் வரை இந்த slider ஐ இழுக்கும்போது... |
08.26 | இந்த மதிப்பு 129 ல் என் முகத்தின் இடப்பக்க பகுதி, தோள்பகுதி மற்றும் இந்த சிலை நன்றாக உள்ளது. |
08.40 | இங்கே இப்போது கண்கள் நன்றாக உள்ளன |
08.48 | இதில் மற்றொரு கண் நன்றாக உள்ளது. |
08.53 | இப்போது இந்த படத்திற்கு வேறு ink layer ஐ பயன்படுத்த வேண்டும். |
09.01 | எனவே இங்கே இதுபோன்ற குறைவான பகுதியில் இருந்து ஆரம்பிக்கலாம். மீண்டும் படத்தின் 100% க்கு செல்வோம். |
09.14 | இங்கே இதை இரண்டாக்குகிறேன். threshold tool ஐ தேர்ந்தெடுத்து... இந்த slider ஐ கீழே இழுக்கவும். |
09.29 | ஆனால் அதற்கு முன் மேல் layer ஐ மறைக்க வேண்டும். |
09.46 | முகத்தின் இந்த பகுதிக்கு இந்த மதிப்பு நன்று என நினைக்கிறேன். |
09.56 | இந்த layer ஐ ஒரு பிரதி எடுக்கிறேன். இதை செயல்படுத்திகிறேன். இப்போது இந்த layer ல் நான் வேலைசெய்கிறேன். |
10.08 | இங்கே மத்தியில் இருப்பதை நான் பார்க்கவேண்டும். |
10.13 | முகத்தின் இந்த பகுதி, இது மிக நன்றாக வேலை செய்கிறது என நினைக்கிறேன். எனவே படத்தை சுற்றி பார்க்கிறேன். |
10.23 | சிலையும் நன்றாக உள்ளது. |
10.26 | இங்கே இந்த படம் நல்ல ஒளித்திறனைக் கொண்டுள்ளது. என் கைக்கு பக்கத்தில் கோடுகள் மறைந்துள்ளன. இது optical illusion எனப்படும். |
10.41 | இது நன்றாக உள்ளது என நினைக்கிறேன். இது படத்தில் இருக்க வேண்டும். |
10.49 | இப்போது Threshold tool ஐ தேர்ந்தெடுத்து இங்கே கோடு தெரியும்படி செய்கிறேன். மேலும் சற்று ஒளித்திறனைப் பெற பிரகாசமான பகுதிகளைக் காணவும். எனவே இதை அதிகமாக்குகிறேன். |
11.08 | இது பரவாயில்லை. |
11.12 | இப்போது என் ink layer ன் மூன்று பிரதிகளைக் கொண்டுள்ளேன். |
11.17 | முதலாவது ink light. |
11.28 | மேல் layer... ink dark. |
11.34 | நடு layerஐ ink என பெயரிடுவோம். |
11.40 | இப்போது 3 layerகளையும் பார்த்து எதை அதிகமாக பயன்படுத்துவது என முடிவுசெய்வோம். |
11.49 | ink layer ஒரு நல்ல மூலம் என நினைக்கிறேன், ஏனெனில் இது மிக லேசாக உள்ளது. இது மிக அடர்ந்து உள்ளது. |
12.01 | எனவே இந்த layer ஐ அடியில் வைக்கிறேன். Dark layer மற்றும் light layer க்கு ஒரு layer mask ஐ சேர்க்கிறேன். |
12.12 | black layer mask ஐ full transparency உடன் சேர்க்கிறேன். |
12.18 | எனவே இங்கிருக்கும் அனைத்தும் மறைகிறது |
12.26 | Light layer ன் இந்த layer mask ல் வெள்ளையில் வரையும் போது, படம் அதில் வெளிக்காட்டப்படுகிறது. |
12.45 | எனவே இங்கே brush tool ஐ தேர்கிறேன். normal mode மற்றும் opacity 100% ஐ பயன்படுத்துகிறேன். |
12.55 | ஒரு கடினமான brush ஐ பயன்படுத்துவேன் என நினைக்கிறேன். Pressure sensitivity... Size ஆக இருக்க வேண்டும், எனவே மேற்பரப்பில் pen ஐ அழுத்தும்போது புள்ளி பெரிதாகும். |
13.20 | என் foreground நிறம் வெள்ளை. |
13.24 | எனவே ஆரம்பிக்கலாம் |
13.28 | முகத்தின் இடப்பகுதி பிரகாசமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். |
13.34 | படத்தை பெரிதாக்க 1 ஐ அழுத்துகிறேன். |
13.39 | இந்த brush மிக சிறியது என நினைக்கிறேன், எனவே இதை சற்று பெரிதாக்குகிறேன். |
13.53 | இது பரவாயில்லை. |
14.00 | ஆனால் அநேகமாய் இது மிக பிரகாசமாய் உள்ளது. |
14.05 | இது கருப்பு அல்லது வெள்ளையாக இருக்க வேண்டும். |
14.47 | எனவே இந்த நிறங்களை ‘X’ key ஐ அழுத்தி இடமாற்றுகிறேன். இதன் மீது மீண்டும் மீண்டும் வரைகிறேன். |
14.57 | ஆனால் இதை இங்கே நீக்கிவிட்டு அடுத்த layer ஐ அதன்மீது வைக்கலாம் என நினைக்கிறேன். |
15.14 | இப்போது அந்த பகுதிகள் மீதும் வடிவமைப்பு மீதும் அக்கறை செலுத்துவோம், எனவே கோடுகள் பற்றி மறக்க வேண்டும். இங்கே சற்று வடிவமைப்பைக் காண்போம். |
15.30 | இருப்பதை அவ்வாறே விட்டுவிடுவோம். |
15.34 | எளிமையாக மற்றொரு layer ஐ சேர்க்க முடியும். இப்போது வெள்ளை நிறத்துடன் கருப்பு பகுதிகளை வரைகிறேன். |
15.44 | இங்கே சற்று வெளிக்காட்ட முடியுமா என பார்ப்போம். |
15.51 | இது மிக அதிகம் என நினைக்கிறேன். |
15.56 | முகத்தை சற்று கருமையாக்க விரும்புகிறேன். |
16.08 | மேலும் இங்கேயும். |
16.19 | இதுவும் மிக கருமையாக உள்ளது என நினைக்கிறேன். |
16.31 | இங்கே செய்யவேண்டிய வேலை இன்னும் சில உள்ளன. ஆனால் இதை இங்கு இதற்கு விடுகிறேன். அடுத்த படியில் கோடுகளுடன் அதை நான் முடித்தபின் காண்போம். பின் இங்கே சரிசெய்ய முடியும். |
16.46 | இதை மேலும் பிரகாசமாக்க வேண்டும். |
16.49 | எனவே அங்கே edit ஐ காண்போம். |
16.53 | இந்த படியில் சில கோடுகளை நான் சேர்க்க வேண்டும். Background layer ஐ இரண்டாக்கி.... அதை மேலே வைத்து.... அதற்கு lines என பெயரிடுவதன் மூலம் இது செய்யப்படும். |
17.08 | வெவ்வேறு நிறங்களுக்கு இடையே கோடுகள் விளிம்புகளாக உள்ளன. |
17.15 | எனவே Filters ல், edge-detect செல்க, இங்கே Gaussians edge detect ன் வித்தியாசம் உள்ளது.
|
17.33 | இது தொடர்பான slider... Radius ஆகும். இந்த எண்ணிக்கையை குறைக்கிறீர்கள் எனில் கோடுகள் லேசானதாகும். |
17.45 | எண்ணிக்கையை அதிகரிக்கிறீர்கள் எனில் கோடுகள் அகலமாகும். படத்தில் மேலும் தகவல்களைப் பெறுவோம். |
17.56 | கிட்டத்தட்ட 10 ஐ தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். ஆனால் 30 க்கு செல்லமுடியும். பின் எங்கே சரியாக நிறுத்த வேண்டும் என்பதை முடிவு செய்யலாம். |
18.10 | 30 க்கு செல்லும்போது விளிம்புகள் இல்லை... ஆனால் பகுதிகள். 12 இதை இங்கே கொடுக்கும். |
18.27 | 10 ல் நிறுத்தலாம் என நினைக்கிறேன். |
18.37 | இந்த layer ன் layer mode ஐ Multiply க்கு அமைக்கிறேன். நிறத்தை அதிகரிப்பதற்கு படத்தில் பின்னர் வெள்ளையை குறைப்பேன். |
18.50 | இப்போது இதுவரை நாம் சரியாக பெற்றுள்ளோமா என சற்று சோதிப்போம். |
18.56 | எனவே இந்த lines layer ஐ செயல்படுத்தி செயல்நீக்குகிறேன். இங்கே lines layer ஐ செயல்படுத்தும் போது சற்று ஒளித்திறன் இருப்பதைக் காணலாம். |
19.08 | இப்போது dark ink layer ஐ செயல்நீக்குகிறேன். Light ink layer ஐ அப்படியே வைக்கிறேன். |
19.20 | என் dark ink layer உடன்... உள்ளே நான் வைத்திருக்க விரும்பிய வடிவமைப்பு lines layer ல் தெரிகிறது. |
19.30 | எனவே இந்த dark ink layer ஐ செயல்நீக்குகிறேன். |
19.42 | இங்கே இந்த layerகளை ஒன்றுசேர்க்கவேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன். |
19.50 | அதை இருந்தவாறே விட்டுவிடுகிறேன். அதனால் சிலவற்றை என்னால் மாற்ற முடியும். இது முடிவு படத்தில் இருக்கும். |
20.09 | நான் சொன்னவாறே அடுத்த படி... இங்கே white channel ஐ குறைக்க வேண்டும், levels tool மூலம் இது செய்யப்படும். 240 வரை level ஐ குறைக்கிறேன். |
20.28 | இந்த layer ஐ செயல்நீக்கும்போது.... சாம்பல்நிற background ஐ கொண்டிருப்பதையும் சற்று நிறத் தகவல்கள் அங்கு இருப்பதையும் காணலாம். |
20.40 | படத்தில் நிறத்தைக் கொண்டுவர background layer ஐ பிரதி எடுத்து.... அதற்கு Colour என பெயரிடுகிறேன். இதை மேலே வைப்போம். Layer mode ஐ Colour க்கு அமைப்போம். |
21.00 | ஆனால் இது பார்க்க நன்றாக இல்லை. எனவே mode ஐ மாற்ற வேண்டும். |
21.07 | இங்கே படத்தில் சற்று நிறம் வந்துவிட்டது. |
21.12 | ஆனால் எனக்கு மேலும் saturation வேண்டும். எனவே மீண்டும் background layer ஐ பிரதி எடுத்து... அதற்கு Saturation என பெயரிடுகிறேன். |
21.24 | Layer mode ஐ Saturation க்கு அமைக்கிறேன் . |
21.29 | இந்த saturation mode ஏற்கனவே வேலை செய்கிறது என நினைக்கிறேன். விளைவுகளும் மிக நன்றாக உள்ளது. |
21.38 | நிறத்தில் மேலும் எளிமை இருந்திருக்க வேண்டும். கை comic போல இல்லை. |
21.47 | இது எங்கிருந்து வருகிறது என பார்ப்பேன். |
21.51 | எனவே இப்போது இந்த slider களுடன் நான் விளையாட ஆரம்பிக்கலாம். |
21.58 | saturation ஐ குறைக்கும்போது, சற்று எளிமையைப் பெறுகிறோம், மிகவும் தண்ணீர் போன்ற நிறத்துடன் காணப்படுகிறது. எனவே இது ஒரு வித்தியசமான விளைவு. |
22.19 | இப்போது இங்கே layer களுடன் விளையாட ஆரம்பிக்கலாம். |
22.26 | எனவே இங்கே lines layer ஐ செயல் நீக்குகிறேன். இந்த விளைவு Lines layer யிடமிருந்து வரவில்லை என்பதையும் ஆனால் colour மற்றும் saturation layer களிடமிருந்து வருகிறது என்பதையும் காணலாம். |
22.39 | இப்போது சில சீரமைப்பு வேலைகளை செய்யலாம். ஏனெனில் இன்னும் இங்கே layerகள் உள்ளன. |
22.47 | முகத்தை லேசாக்க விரும்புகிறேன். எனவே என் ink light layer ஐ தேர்ந்தெடுக்கிறேன், வெள்ளை foreground நிறத்துடன் ஒரு brush ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
23.12 | படத்தை பெரிதாக்குகிறேன். |
23.18 | Brush ன் அளவைக் குறைக்கிறேன். சற்று அதிகமாக்குறேன். இப்போது இங்கே கண்ணை வரைகிறேன். |
23.34 | இது மிக அதிகம். |
23.50 | இது நன்றாக உள்ளது. |
23.54 | இப்போது இந்த பகுதியில் வரைகிறேன். |
24.00 | இது மிக அதிகம். |
24.03 | இங்கே இந்த பகுதிகளை மாற்றுவதன் மூலம்... படத்தில் உங்களால் செய்யக்கூடிய பல மாற்றங்கள் இருக்கக்கூடும் என்பதை கற்பனை செய்யலாம். |
24.47 | இது சரியாக உள்ளது. |
24.51 | இங்கே நீங்கள் பல மாற்றங்களை செய்யலாம். நான் சரியான பாதையில்தான் இருக்கிறேனா என்பது எனக்கு தெரியவில்லை. |
25.01 | ஆனால் இதுவரை எனக்கு பிடித்துள்ளது. |
25.06 | வேறு எதுவெல்லாம் செய்ய முடியும் என காணலாம். |
25.10 | முதலாவதாக lines ஐ விட வேறு layer ஐ பயன்படுத்தலாம்.
|
25.18 | எனவே lines ஐ செயல்நீக்குக. மிகவும் வித்தியாசமான நிறங்களைப் பெறுகிறேன். ஏனெனில் இப்போது மீண்டும் வெள்ளை background உள்ளது |
25.31 | எனவே மற்றொரு layer ஐ இங்கே சேர்க்கிறேன். வெள்ளைக்கு இதை அமைக்கிறேன். multiply mode ஐ பயன்படுத்துகிறேன். 240 grey என நிரப்புகிறேன்.
|
25.52 | இப்போது கிட்டத்தட்ட இங்கே lines ல் பெற்றதுபோன்ற அதே படத்தை பெற்றுள்ளேன். |
25.59 | அவற்றை செயல்படுத்துகிறேன். |
26.03 | கோடுகளின் தகவல்கள் வெளிவருகின்றன. ஆனால் இந்த comic விளைவு இன்னும் அங்குள்ளது. எது நன்றாக உள்ளது என நான் காண முடியும். |
26.21 | சில வித்தியாசமான நுணுக்கங்களை முயற்சிக்கலாம். |
26.30 | colour மற்றும் saturation layer ஐ இரண்டாக்கி அவற்றுடன் சிலவற்றை செய்யலாம். |
26.39 | இங்கே படத்தில் சில விவரங்களை வெளிகொண்டுவர முயற்சிப்போம். |
26.45 | எனவே செல்க Filters, Blur பின் Gaussian blur. |
26.53 | இங்கே எனக்கு நல்ல விளைவைக் கொடுக்கும் ஒரு மதிப்பை தேர்ந்தெடுக்கிறேன். |
27.08 | நிறங்கள் சற்று மிருதுவானதைக் காணலாம். |
27.18 | எனவே இதை saturation copy க்கும் செய்யலாம். |
27.24 | செல்க Filters, பின் Repeat Guassian Blur. |
27.29 | இப்போது உண்மையில் எளிமையான படத்தை எளிமையான நிறங்களுடன் பெற்றுள்ளேன். |
27.36 | எனவே மூல colour ஐ செயல்படுத்துகிறேன். இங்கே ஒரு வித்தியாசமான விளைவைப் பெறுகிறேன். |
27.44 | saturation blurred... மற்றும் colour blurred என இந்த Layerகளை மறுபெயரிடலாம்.
|
28.04 | Blurred saturation ஐ blur செய்யப்படாத colour உடன் இணைக்கிறேன் எனில், சற்று முற்றிலும் வித்தியாசமான சில நிறங்களை இங்கே பெறுகிறேன். |
28.16 | இது குறிப்பாக இங்கே மூக்கின் மீது இல்லாமல் இருந்தால் எனக்கு பிடித்திருக்கும். |
28.22 | எனவே மீண்டும் இதை செயல்படுத்துவோம். இங்கே இந்த விளைவு உள்ளது. |
28.29 | Blur ஐ குறைக்கிறோம் எனில் கூர்மையான தகவல்களை பெறுகிறோம் என்பதை கற்பனை செய்யலாம். |
28.37 | இது ஒரு உண்மை விளையாட்டு திடல். |
28.40 | இதை எவ்வாறு செய்வது, என்ன செய்வது, மற்றும் எதை செம்மைப்படுத்துவது என்பது போல பல சாத்தியங்கள் உள்ளன |
28.50 | உண்மையில் இது செய்ய மிக வேடிக்கையானது. |
29.09 | இந்த மூல tutorial ஐ உருவாக்கியவர் ஒரு மகத்தான வேலையை செய்துள்ளார். |
29.24 | இந்த படத்தின் இரண்டு பதிப்புகளும் எனக்கு பிடிக்கவில்லை. |
29.31 | இந்த வடிவமைப்பு... மலர்... இந்த சிலை... மற்றும் இந்த பானை இங்கே எனக்கு பிடித்துள்ளது |
29.40 | கை அருகிலும் முகத்திலும் உள்ள இந்த அனைத்து விவரங்களும் எனக்கு பிடிக்கவில்லை. இது மேலும் எளிமையாக இருக்கலாம். |
29.49 | blur செய்யப்பட்டத்தில்... முகத்திலும் கைக்கு அருகிலும் இருந்த விவரங்கள் எனக்கு பிடித்துள்ளது. ஆனால் முற்றிலும் blur ஆன இந்த மலர் எனக்கு படிக்கவில்லை. |
30.04 | எனவே இப்போது இந்த இரு படங்களையும் இணைக்கலாம். colour blurred உடன் ஆரம்பிக்கிறேன். ஏனெனில் saturation blurred ஐ விட இதன் ஒட்டுமொத்த தோன்றமும் எனக்கு பிடித்துள்ளது. |
30.20 | ஆனால் அனைத்து layer களையும் செயல்படுத்தி... saturation blurred மற்றும் colour blurred க்கு layer mask ஐ சேர்க்கிறேன். black layer mask ஐ full transparency உடன் சேர்க்கிறேன். |
30.37 | இப்போது saturation layer mask உடன் வேலைசெய்ய ஆரம்பிக்கிறேன். எனவே வெள்ளையை என் foreground நிறமாக தேர்ந்தெடுக்கிறேன். இங்கே paint brush ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
30.51 | இப்போது வரைய ஆரம்பிக்கிறேன். |
30.55 | படத்தில் எங்கு சற்று மேலும் எளிமை இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேனோ அந்த பகுதிகளின் மீது வரைகிறேன். |
31.04 | இது சற்று வித்தியாசமாக இருக்கும். ஏனெனில் இப்போது colour layer செயலில் உள்ளது. |
31.46 | எனவே இப்போது Shift+ctrl+A ஐ அழுத்துவதன் மூலம் அனைத்தையும் தேர்ந்தெடுக்கிறேன். Ctrl + C மூலம் பிரதிஎடுத்து, படத்தினுள் சென்று... Ctrl + V ஐ அழுத்துக. இந்த Floating Selection மீது சொடுக்குக. Ctrl + H அல்லது anchor layer உடன் இங்கே என் பிரதி உள்ளது. |
32.20 | எனவே இந்த layer mask ஐ கூட பிரதி எடுக்கலாம். இந்த படத்தை இங்கேயே விடுவேன் என நினைக்கிறேன். |
32.32 | இது முற்றிலும் நல்ல உதாரணம். கடைசியில் இந்த slider உடன் சற்று விளையாடலாம். |
32.54 | இதை திரும்ப நினைவுபடுத்திக் கொள்ளலாம். |
32.57 | முதலில் பட layer ஐ பிரதி எடுத்து ஒரு inked படத்தை threshold tool ஐ பயன்படுத்தி உருவாக்குக. |
33.05 | எந்த பகுதிகளில் கருப்பாக அல்லது அடர்த்தியாக இருக்க வேண்டும் என காண்க. |
33.10 | மீண்டும் மூல படத்தை பிரதி எடுக்கவும். ஒரு line layer ஐ edge detect filter ஐ பயன்படுத்தி உருவாக்குக. பின் layer mode ஐ multiply என அமைக்கவும். |
33.29 | levels tool ஐ பயன்படுத்தி இந்த layer ல் கிட்டத்தட்ட 240 சாம்பல் நிறத்திற்கு வெள்ளையை குறைக்கவும். |
33.42 | பின் மூலம் மூல படத்தை பிரதி எடுத்து ஒரு colour layer ஐ உருவாக்கவும். |
33.49 | colour mode ஐ colour என அமைக்கவும். |
33.56 | இறுதியாக மூல layer ஐ கடைசிமுறையாக பிரதிஎடுத்து ஒரு saturation layer ஐ உருவாக்கவும். இங்கே layer mode ஐ saturation என அமைக்கவும். இப்போது வெவ்வேறு layerகளின் அல்லது சில layerகளில் opacity உடன் விளையாடவும். |
34.20 | சுற்றி முற்றிலும் விளையாடவும். முடிவுகள் நன்கு கலந்தவையாக இருக்கும். ஆனால் சில அதிரடியாக இருக்கும். |
34.32 | மேலும் தகவல்களுக்கு http://meetthegimp.org க்கு செல்க. கருத்துக்களை அனுப்ப விரும்புனால் info@meetthegimp.org க்கு அனுப்பவும். |
34.49 | இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி. |