GIMP/C2/Selective-Sharpening/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 10:08, 26 March 2014 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:21 Gimp tutorial க்கு நல்வரவு.
00:26 இன்று selective sharpening பற்றி காண்போம்.
00:31 camera ஐ விட்டுவெளிவரும் ஒவ்வொரு digital படமும் கூர்மையாக்கப்பட வேண்டும். ஏனெனில் அவை மிருதுவாக இருக்கும். குறிப்பாக raw imageகளை எடுக்கிறீர்கள் எனில் படத்தை கூர்மையாக்க camera ல் processor ஐ அனுமதிக்காதீர்.
00:48 GIMP ஐ பயன்படுத்தி நீங்களே செய்யும்போது கூர்மையாக்கலை கட்டுப்படுத்த முடியும். இன்றைய tutorial ல் அதை எவ்வாறு செய்வதென காட்டுகிறேன்.
01:02 இந்த படத்தை சற்று பார்க்கலாம்.
01:06 இந்த படத்தில் பின்புலத்தில் உள்ள கம்பி வலை பெரிய கூர்மையில்லாத பகுதி மற்றும் இந்த பூ சற்று கூர்மையாக உள்ளது.
01:17 எனவே இந்த பூவை சற்று மேலும் கூர்மையாக்க விரும்புகிறேன். பின்புலத்தை அவ்வாறே விடுகிறேன்.
01:25 ஆனால் ஏன் பின்புலத்தை நான் கூர்மையாக்க விரும்பவில்லை என்பதை காட்டுகிறேன்.
01:31 இப்போது இது கூர்மையாக இல்லை. சற்று கூர்மையாக்குவதில் தவறேதும் இல்லை.
01:37 எனவே tool bar ல் Filters ஐ சொடுக்கி sharpen tool ஐ தேர்ந்தெடுக்கிறேன். sharpness slider ஐ அதிகமாக்குகிறேன். பின்புலத்தின் அசல்தன்மை அழிக்கப்படுவதைக் காணலாம்.
01:52 ஆனால் இங்கே பார்த்தால்.... sharpen tool ஐ இங்கே எடுக்கிறேன்... slider ஐ உச்சக்கட்ட மதிப்புக்கு இழுக்கும்போது படம் கரைகிறது.


02:03 எனவே கூர்மையில்லாத பகுதிகள் அல்லது நிறங்களால் நிரப்பப்பட்ட பகுதிகள் மற்றும் ஏதும் இல்லாதவை.... படத்தை கெடுக்கிறது. இது நடப்பது ஏனெனில் படத்தில் உள்ள நிறங்கள் கூர்மையடைய கூர்மையாக்கம் தேவையில்லை.
02:21 எனவே படத்தை கெடுக்காத selectively sharpening முறை பற்றி சொல்கிறேன்.
02:29 selective sharpening ஐ செய்ய layerகளுடன் வேலை செய்கிறேன்.
02:35 இந்த முறை சுலபமாக background layer ஐ பிரதி எடுத்து அதை sharpen என்கிறேன்.
02:43 இப்போது sharpen layerக்கு ஒரு layer mask ஐ சேர்கிறேன். Gray scale copy of layer ஐ layer mask ஆக தேர்ந்து add option ஐ சொடுக்குகிறேன். எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதைக் காணலாம். ஏனெனில் layer mode... normal ல் உள்ளது.
03.07 ஆனால் உண்மை background layer ஐ தேர்வுநீக்கும்போது... படத்தின் பிரகாசமான பகுதிகள் மட்டும் தெரிகின்றன என்பதைக் காணலாம்.


03:19 Layer mask ல் white பிரகாசமான பகுதிகளை வெளிக்காட்டுகிறது என்றும் black மறைக்கிறது என்றும் நினைவிருக்கிறதா. இங்கே layer mask ன் அதிகமான பகுதி கருமையாக உள்ளதைக் காணலாம். எனவே அவை மறைந்துள்ளன. பிரகாசமான பகுதி மட்டும் இங்கு தெரிகிறது.
03:36 இப்போது layer maskல் sharpening algorithm ஐ பயன்படுத்தும்போது இந்த பூ மட்டும் கூர்மையாக்கப்படும்.
03:43 இந்த இலைப் பகுதியையும் கூர்மையாக்க விரும்புகிறேன்.
03:48 கூர்மையான படத்தில் ... பூவில் வெள்ளைப் பகுதி எனக்கு வேண்டாம். எனக்கு நல்ல விவரங்கள் மட்டும் வேண்டும்.
03:57 அதை செய்ய இரண்டாவது filter ஐ பயன்படுத்துகிறேன். அது Edge Detect.
04:04 இந்த algorithm... படத்தில் பிரகாசமான மற்றும் மங்கலாக பகுதிக்கு இடையே விளிம்புகளைத் தேடி... அங்கே வெள்ளைக் கோட்டை உருவாக்குவதன் முலம் மேம்படுத்த உதவுகிறது.
04:20 இங்கே இந்த தேர்வுகளை அவ்வாறே விட்டுவிடலாம். ஏனெனில் இந்த algorithmகளுக்கு இடையே பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. ஆனால் amount மதிப்பை 4 ஆக அதிகரித்து preview ல் காண்க.
04:41 இங்கே பின்புலத்தில் சற்று அமைப்பு உள்ளதை காணலாம். பிரகாசமான பகுதியில் தடித்த வெள்ளைக் கோடுகள் உள்ளன.
04:54 OK ல் சொடுக்கி படத்தில் algorithm பொருந்த காத்திருக்கவும்.


05:06 இது வேலைசெய்கிறது. இப்போது அனைத்து விளிம்புகளிலும் வெள்ளை வண்ணத்தீட்டலைப் பெறுகிறோம்.
05:15 1 ஐ அழுத்தி படத்தை பெரிதாக்குகிறேன். இங்கே பிரகாசமான அனைத்து பகுதிகளும் இப்போது வெள்ளை விளிம்பு மற்றும் வெள்ளை கோட்டைப் பெற்றிருப்பதைக் காணலாம். மற்ற அனைத்து பகுதிகளும் கிட்டத்தட்ட கருப்பாக உள்ளன.
05:43 Layer mask ஐ off செய்யும்போது.... background layer.... பூவின் விளிம்புகளை மட்டும் காண முடியும். அதாவது பிரகாசமான பகுதி தெரிகிறது.
05:57 பின்புல நிறம் மற்றும் பூவின் நிறத்தை பாதிக்காமல் பூவின் விளிம்புகளை இப்போது கூர்மையாக்கலாம்.
06:08 ஆனால் இது சேற்றுநிற பின்புலத்தில் ஒரு கூர்மையான கோடு போன்ற வித்தியாசமான effect ஐ கொடுக்கும்.
06:20 அதை தவிர்க்க இந்த layer ல் blur என்னும் மற்றொரு filter ஐ பயன்படுத்துகிறேன்.
06:28 layer mask ஐ தேர்ந்தெடுத்து... இந்த வெள்ளைக் கோட்டை சற்று அழிக்க gaussian blur ஐ பயன்படுத்துகிறேன். Horizontal blur radius ல் 8 வரை மதிப்பை அதிகரித்து ok ல் சொடுக்குகிறேன்.
06:46 filter முடிய காத்திருக்கவும். இப்போது சற்று மேலும் மிருதுவான பூவின் விளிம்பைக் காணலாம். படத்தில் மேலும் சற்று contrast வேண்டும் என நினைக்கிறேன்.
06:59 எனவே curves tool ஐ தேர்ந்தெடுத்து curves ஐ பெற படத்தினுள் சொடுக்குகிறேன். கருப்பை மேலும் கருப்பாக்க வளைவை சற்று கீழே இழுக்கிறேன். வெள்ளையை மேலும் வெள்ளையாக்க பிரகாசமான பகுதியை மேலே இழுக்கிறேன்.
07:15 Ok ல் சொடுக்குக. இப்போது கூர்மையாக்கல் தேவைப்படும் இடத்தில் தடித்த வெள்ளைக் கோடுகளும்... கூர்மையாக்கல் தேவைப்படாத இடத்தில் கருப்பு பகுதியும் உள்ளன.
07:30 நான் கருப்பு பகுதியிலும் வேலை செய்யலாம். ஆனால் அது எந்த effect உம் காட்டாது.
07:37 இப்போது இங்கே layer mask ஐ தேர்வு நீக்கி... முழு படத்தையும் காண Shift + Ctrl + E ஐ அழுத்துகிறேன்.
07:47 முழு படத்தையும் காண Shift + Ctrl + E என்பது இப்போது உங்களுக்கு தெரியும்.
07:51 உண்மை background layer ஐ செயல்நீக்கும் போது படத்தில் கிட்டத்தட்ட ஒன்றும் தெரியவில்லை.
07:57 White layer fill type உடன் ஒரு புது layer ஐ சேர்ப்பதன் மூலம் என நடக்கிறது என விளக்குகிறேன். ok ஐ அழுத்துக.
08.06 இப்போது கூர்மையாக்கப்பட வேண்டிய பகுதிகளைக் காணலாம்.


08:10 இப்போது இந்த படத்தை கூர்மையாக்கலாம், tool bar ல் filters ஐ சொடுக்கி enhance பின் sharpen ஐ தேர்ந்தெடுக்கவும்.
08:25 கூர்மையாக்கல் செய்யப்பட வேண்டிய பூவின் பகுதிக்கு செல்க. அதற்கு sharpen layer தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஏனெனில் வெள்ளை layer ஐ கூர்மையாக்க ஒன்றும் இல்லை.
08:37 எனவே sharpen layer ஐ தேர்ந்தெடுத்து... filter பின் re-show sharpen. இங்கே பூவைக் காண்கிறோம். இப்போது நல்ல கூர்மையாக்கப்பட்ட படத்தை பெறும்வரை sharpness slider ஐ அதிகரிக்க முடியும்.
08:55 பின் ok ஐ அழுத்தி algorithm வேலைசெய்ய காத்திருக்கவும்.
09:01 இது வேலைசெய்கிறது.
09:04 இப்போது அந்த கோடு மேலும் ஒளித்திறன் கொண்டிருப்பதைக் காணலாம்.
09:09 இந்த வெள்ளை layerஐ செயல்நீக்கி பின் முழுப்படத்தையும் காண்போம்.
09:16 sharpen layer ஐ செயல்நீக்குவோம். ஆனால் பெரிதாக்கும்போது எந்த மாற்றமும் தெரியவில்லை.
09:23 இப்போது படத்தைப் பெரிதாக்குகிறேன்.
09:27 இந்த effect ஐ நீங்கள் சரியாக பார்க்கவேண்டும் என நினைக்கிறேன்.
09:31 sharpen layer ஐ செயல்படுத்தும்போது கூர்மையாக்கப்பட்ட படத்தைக் காணலாம். அதை செயல்நீக்கும்போது படம் கூர்மையாக்கப்படவில்லை.


09:40 opacity sliderன் உதவியுடன் effect ன் அளவை நான் கட்டுப்படுத்த முடியும்.
09:47 இப்போது பின்புலத்தை சோதிக்கிறேன். அதற்கு நான் பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்பதைக் காணலாம்.


09:54 இப்போது கொஞ்சம் fine tuning அல்லது நுண்திருத்தம் செய்கிறேன்.


10:10 அதிகமாக கூர்மையாக்கப்பட்ட பகுதிகளையும் தேவையான அளவுக்கு கூர்மையாக்கப்படாதவைகளையும் காண படத்தைக் காண்கிறேன்.
10:20 பூவுக்கும் பின்புலத்திற்கும் இடையேயான விளிம்பு எந்த effect ஐயும் சேர்க்காமல் நன்றாக கூர்மையாக்கப்பட்டுள்ளது.
10:30 ஆனால் படத்தினுள் செல்லும்போது, இந்த பகுதி சற்று செயற்கையாக தெரிகிறது... இந்த பகுதி இங்கே அதிகமாக கூர்மையாக்கப்பட்டுள்ளது.
10:41 இந்த பூ மொட்டு இங்கே போதுமான அளவிற்கு கூர்மையாக இல்லை. ஏனெனில் edge detect algorithm க்கு விளிம்புகளை கண்டறிய முடியவில்லை.
10:52 ஆனால் நீங்கள் பார்ப்பது போல அங்கு சற்று விளிம்புகள் உள்ளன. Levels tool அல்லது curves tool ன் உதவியுடன் இந்த பகுதியை சற்று மேம்படுத்தி கொடுத்திருக்க வேண்டும்.
11:06 உங்கள் வேலையில் Sharpening எப்போது கடைசி படியாக இருக்க வேண்டும்.
11:11 சரி. அதற்கு பிறகு வருகிறேன்.
11:16 இப்போது இந்த பகுதியின் கூர்மையைக் குறைக்க வேண்டும்..
11:21 இது சுலபம், sharpen layer ஐ தேர்ந்தெடுத்துள்ளீர் என்பதை உறுதிபடுத்திக்கொள்க. brush tool ஐ தேர்ந்தெடுக்கவும்.


11:30 மிருதுவான விளிம்புள்ள ஒரு brush ஐ தேர்ந்தெடுக்கவும், scale slider ஐ இழுப்பதன் மூலம் இந்த வேலைக்கு ஏற்றவாறு brush ஐ பெரிதாக்கவும். இப்போது கருப்பு நிறத்தை தேர்ந்தெடுக்கவும். ஏனெனில் கருப்பு மறைக்கிறது வெள்ளை வெளிக்காட்டுகிறது.
11:53 brush ன் opacity slider ஐ 20% வரை இழுக்குவும்.
12:03 இங்கே brush ஐ நகர்த்தும்போது.... வரைய ஆரம்பிக்கவும், கூர்மை குறைந்துள்ளதைக் காணலாம்.
12:14 இங்கே சரியான என்ன நடக்கிறது என்பதை layer maskன் உதவியுடன் காட்ட முடியும்.


12:21 layer mask ஐ செயல்படுத்துகிறேன். வெள்ளைப்பகுதி மீது வரையும் போது அது கருப்பாக மாறுகிறது.
12:36 ஆனால் layer mask ஐ செயல்நீக்கும்போது... என் படத்தைப் பார்த்து என் செயல்பாட்டின் முடிவையும் காணமுடியும்.
12:47 இதை விரிவாக பின்னர் காண்போம்.
12:52 இப்போது இந்த பகுதியை இங்கு மேலும் கூர்மையாக்க வேண்டும்.
12:58 ‘x’ key ன் உதவியுடன் நிறங்களை மாற்றுகிறேன். வரைய ஆரம்பிக்கிறேன்.
13:06 நீங்கள் பார்ப்பதுபோல இந்த பகுதி கூர்மையாகவும் திடமாகவும் மாறுகிறது.
13:13 இது முற்றிலும் நன்றாக உள்ளது என நினைக்கிறேன். என் வேலையை சோதிக்க layer mask ஐ செயல்படுத்துகிறேன். நான் வரைந்த வெள்ளைப் பகுதியைக் காணலாம். இதை சற்று அதிகமாக செய்துள்ளேன்.
13:31 எனவே layerக்கு மீண்டும் சென்று X key ஐ அழுத்தி நிறத்தை மாற்றுகிறேன். நான் செய்த வேலையை மீண்டும் செய்கிறேன்.
13:43 இங்கே layerகளுடன் வேலைசெய்கிறோம். எனவே data ஐ இழக்கும் ஆபத்து ஏதும் இல்லை.
13:51 ஆனால் ஒரு விஷயம்... filter மூலம் உருவாக்கப்பட்ட edge data ஐ இப்போது நான் அழிக்க கூடும்.
14:00 ஆனால் அதை சுலபமாக மீட்கலாம்.


14:03 பூவின் கூர்மையாக்கப்பட வேண்டிய விளிம்பை இங்கே பெரிதாக்கியுள்ளேன்.
14:12 பார்ப்பதுபோல இங்கே விளிம்பு கூர்மையாக்கப்படுகிறது.
14:18 இந்த இரு நிறங்களுக்கு இடையேயான விளிம்பின் கருப்பான மற்றும் பிரகாசமான பகுதிக்கு இடையே பிரகாசமான மற்றும் கருப்பான கோட்டை பெறுவதில் sharpening உதவுகிறது.(right?)
14:30 கருப்பு பகுதியின் விளிம்பு கருப்பாக்கப்படுகிறது. பிரகாசமான பகுதி பிரகாசமாக்கப்படுகிறது.
14:37 Mask ஐ பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் விரும்பும் பகுதியில் மட்டும் effect ஐ வைக்கலாம்.
14:50 Sharpening பற்றிய மேலும் விரிவான மூலத்தை காட்டுகிறேன்..
14:56 Chris Markwa’s broadcastன் இணையதளம் tips from the top floor.(dot)com க்கு செல்க. அங்கே இடது பக்கம் Photoshop corner ஐ காணலாம்.
15:12 அங்கு Photoshop பற்றி பல broadcast ஐ வைத்துள்ளார். அவை கிட்டத்தட்ட GIMP க்கு பயனுள்ளதாக இருக்கும். சிலவற்றை எழுதிவைத்துள்ளார். broadcast ல் பேசுகிறார்... சில படங்களை உருவாக்கியுள்ளார். . நேரடியாக அந்த மூலத்தை இங்கே காட்ட அங்கிருந்து சிலவற்றை நான் எடுக்கிறேன்
15:44 இந்த tutorial ல் நாம் விவாதித்த sharpening effect பற்றி இங்கு காணலாம்.
15:52 Unsharp mask ஐயும் haloகளை தவிர்க்கும் செயல்முறை பற்றியும் விரிவாக கூறுகிறார்.
16:00 படத்தை கூர்மையாக்கும் பல தொழில்நுட்பங்களையும் காட்டுகிறார்.
16:05 ஆனால் நான் உங்களுக்கு காட்டியது இங்கே இந்த தளத்தில் இல்லை.
16:12 இந்த தளத்தில் நீங்கள் இருக்கும்போது பயிற்சியைக் காண கற்றுக்கொள்வதற்கு சில இடங்கள் இன்னும் இருக்கிறதா எனவும் சோதிக்கவும்.
16:23 இந்த tutorial லில் அவ்வளவுதான். கருத்துக்களை அனுப்ப விரும்பினால் info@meetthegimp.org க்கு எழுதவும்
16:35 மேலும் தகவல்கள் http://meetthegimp.org .
16:40 உங்களுக்கு இதில் பிடித்தது. இதை மேலும் நன்றாக செய்திருக்கலாம் என நீங்கள் நினைப்பது. எதிர்காலத்தில் நீங்கள் பார்க்க விரும்புவது ஆகியவற்றை எங்களுக்கு எழுதுங்கள்
16:51 இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst