GIMP/C2/Sketching/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:44, 10 March 2014 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration


00.23 GIMP tutorial க்கு நல்வரவு. வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.


00.41 இன்று புதிதாக ஒன்றைக் காட்டப்போகிறேன்.
00.44 Joseph ன் ஒரு புது video உள்ளது. இன்று அவர் sketch effects ஐ பயன்படுத்தி ஒரு படத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதைக் காட்டபோகிறார்.


00.55 Joseph இன்று gimp 2.4 ஐ பயன்படுத்தி sketch effect ஐ எவ்வாறு உருவாக்குவது என காட்டபோகிறார்.
01.06 sketch effect ஐ காட்ட layers உடன் வேலை செய்ய போகிறேன்.
01.14 அடுத்தபடியாக இந்த layerகளை பெயர்மாற்ற போகிறேன், அதனால் எந்த layer ல் நான் வேலை செய்கிறேன் என்பது குறித்து தெரிய வரும்.
01.23 எனவே மேல் layer ஐ தேர்கிறேன். Filters க்கு சென்று, Blur, Gaussian blur.
01.36 சில கோடுகளை காணும் ஒரு இடத்தை அடைய preview ன் உதவியுடன் படத்தில் சுற்றி நகர்கிறோம்
01.45 இங்கே Blur Radius மிக முக்கியமானது.
01.48 30 blur radius மற்றும் 5 blur radius ஐ பயன்படுத்தி பெறும் வித்தியாசங்களைக் காட்ட இரண்டு previewகளை உருவாக்கியுள்ளேன்.


01.59 இந்த படத்துக்கு blur radius ஐ 15 என அமைத்து Ok ல் சொடுக்குக.
02.08 இப்போது மேல் layer ல் நல்ல blur ஐ பெற்றுள்ளோம்.
02.12 எனவே அடுத்து நாம் செய்ய வேண்டியது நிறங்களை தலைகீழாக மாற்றுவது.
02.18 எனவே colours க்கு சென்று, Invert.
02.21 tool boxக்கு மீண்டும் சென்று, மேல் layerஐ தேர்ந்து அதன் opacity ஐ 50% என அமைக்கவும்.
02.28 நல்ல சாம்பல் நிற படத்தை பெறுகிறோம்.
02.31 இப்போது மேல் layer மீது வலது சொடுக்கி Merge Visible Layer ல் merge ல் சொடுக்கி இந்த இரு layerகளையும் ஒன்றாக சேர்க்கவும்
02.40 அடுத்த படியாக படத்தில் contrast ஐ அதிகரிக்க விரும்புகிறேன். அதை செய்ய Levels Tool ஐ தேர்கிறேன்.
02.48 நீங்கள் பார்ப்பது போல இந்த படத்தில் பல தகவல்கள் மையத்தில் உள்ளன.
02.54 sliders ஐ அந்த மதிப்புக்கு நகர்த்த வேண்டும்
03.01 இப்போது மைய slider ஐ இடதுபக்கம் நகர்த்தவும். அதன்மூலம் படத்தை சற்று வெள்ளையாக பெறலாம்.
03.13 பின் Okல் சொடுக்குக.
03.16 இப்போது அந்த கோடுகள் வெளிவர ஆரம்பித்திருப்பதைக் காணலாம். ஆனால் படத்தில் இன்னும் சில நிறங்கள் உள்ளன.
03.23 எனவே colours சென்று, Desaturate பின் Luminosity தேர்வை தேர்க. இப்போது கருப்பு வெள்ளை படத்தைப் பெற்றிருக்கிறோம்.


03.32 இப்போது மீண்டும் Levels Tool ஐ தேர்ந்து படத்தில் மேலும் contrast ஐ பெற slider ஐ சரிசெய்யவும்.


03.47 படத்தில் நல்ல contrast பெறும்படி sliders ஐ சரிசெய்க.
03.56 இது நன்றாக உள்ளதென நினைக்கிறேன்.
04.00 இப்போது நல்ல sketch effect உடன் படத்தை பெற்றுள்ளோம்.
04.07 இந்த படத்துக்கு ஓரங்கள் அமைக்க வேண்டும்.
04.11 எனவே புது layerஐ உருவாக்கி, white என பெயரிடுக. layer fill type ஐ white என தேர்க. தற்காலிகமாக opacity ன் மதிப்பை குறைக்கிறேன். அதனால் படத்தின் ஊடே காணலாம்.
04.27 இப்போது rectangle selection tools ஐ tool box லிருந்து தேர்ந்து படத்தினுள் தோராயமான தேர்வை வரைக.


04.38 செவ்வகத்தை சரிசெய்க.
04.42 செவ்வகத்தை சரிசெய்வதை முடித்தவுடன், இடது மூலைக்கு சென்று Toggle Quick Mask ஐ சொடுக்குக. edit செய்யக்கூடிய கருப்பு வெள்ளை ஓரங்களை பெறுகிறோம்.
04.55 சில சுவாரசியமான effects ஐ உருவாக்க filters ஐ பயன்படுத்தலாம், எனவே Filters க்கு சென்று, Distorts, Waves.


05.06 இந்த பெட்டியில் சில சுவாரசியமான ஓரங்களை உருவாக்க பல தேர்வுகள் இருப்பதைக் காணலாம்.
05.18 sliders ஐ சரிசெய்கிறேன். அதனால் சிறிய அலையைப் பெறலாம்.
05.30 அது நன்றாக உள்ளது.
05.32 இப்போது சற்று blur ஐ சேர்க்க விரும்புகிறேன்.
05.34 எனவே Filters க்கு செல்க. ஆனால் சில வித்தியாசமான effect ஐ பயன்படுத்த வேண்டும் என நினைக்கிறேன்.
05.41 எனவே Noise க்கு சென்று Spread ஐ தேர்கிறேன். Horizontal ஐ 22 க்கு அமைக்கிறேன்.


06.02 எனவே இப்போது toggle quick mask button க்கு சென்று அதை சொடுக்குக.
06.09 இங்கே விளிம்பு பகுதி இருப்பதைக் காணலாம். அதாவது ஒரு தேர்வு செய்துள்ளோம்.
06.17 இப்போது அந்த layer க்கு ஒரு layer mask ஐ சேர்த்து முழு opacity க்கு வெள்ளையால் அதை நிரப்பபோகிறேன். படத்தில் ஒரு தேர்வு உள்ளது, தேர்வினுள் கருப்பு நிறத்தை இழுத்து நம் பகுதியை முழுதும் transparent ஆக்கலாம்.
06.39 Select க்கு சென்று, None, தற்காலிகமாக transparent செய்த layer க்கு சென்று opacity ஐ 100% ஆக அதிகரிக்கலாம்.
06.53 அதன் பின் ஓரங்களின் நிறத்தை மாற்ற விரும்பினால், colour dialog சென்று, ஒரு நிறத்தை தேர்ந்து layerக்கு இழுக்கவும். வித்தியாசமான நிற layer ஐ பெறுவோம்.
07.10 அது நல்ல sketch effect ஆக இருந்தது. இந்த video க்காக Joseph க்கு நன்றி.
07.17 அங்கே என்ன நடந்தது என பார்ப்போம்.
07.22 இங்கே ஓர் படத்தை தயாரித்துள்ளேன். இங்கே கருப்பிலிருந்து வெள்ளைக்கு சாம்பல் gradient உள்ளது. ஒரு பகுதி கருப்பு - வெள்ளையுடனும் நிரப்பப்படுகிறது.
07.37 முதல் படியாக ஏற்கனவே layer ஐ இரண்டாக்கியுள்ளேன்.
07.45 இப்போது படத்தை தலைகீழ் நிறமாக்க விரும்புகிறேன், எனவே colours க்கு சென்று, Invert.
07.53 இப்போது இந்த படம் மிக சரியான எதிர்மறையாக இருப்பதைக் காணலாம். opacity ஐ 50% ஆக குறைக்கிறேன்.
08.06 முழு படமும் சாம்பலாக உள்ளது. இது ஏனெனில் கருப்பின் பாதியும் வெள்ளையின் பாதியும் சாம்பலைத் தருகிறது.
08.19 இங்கே கருப்பின் பாதியும் வெள்ளையின் பாதியும் சாம்பலைத் தருகிறது.


08.28 எனவே அடுத்த படி இந்த layer ஐ blur ஆக்குவது.
08.33 எனவே Filters சென்று, Blur, Gaussian Blur.


08.40 இங்கே இந்த சங்கிலியை விடுவித்துள்ளேன். அதனால் vertical blur ஐ மட்டும் மாற்ற முடியும் horizontal blur ஐ அல்ல. ஏனெனில் படம் மிகவும் குழப்பம் அடைந்து விடும்.
08.55 எனவே இதுவே நான் விரும்பிய முடிவு. Ok ல் சொடுக்குகிறேன்.
09.01 இப்போது அடர் சாம்பல் மற்றும் லேசான சாம்பல் கோடுகளைக் காண்க.
09.06 இங்கே இந்த கோடுகள் foreground blur ன் விளைவு ஆகும்.


09.18 இங்கே பெரிதாக்கி opacityஐ மேம்படுத்தும்போது இங்கே கருப்பு வெள்ளையையும் அவற்றிற்கிடையே ஒரு gradientஐயும் காண்க.
09.32 மற்ற layer ல் கருப்பு மற்றும் வெள்ளை உள்ளது. இப்போது இது மிகசரியான எதிர்மறை அல்ல.
09.44 எனவே opacity ஐ குறைக்கவும். இப்போது ஒரு பக்கம் அடர் சாம்பலும் அடுத்த பக்கம் மிதமான சாம்பலும் இருப்பதைக் காணலாம்..
10.00 இங்கே இது மிதமான சாம்பல். இங்கேயும்.
10.05 ஆனால் முதலில் கண் பார்வையின் மாயத்தை காண்போம்.
10.10 இங்கே இது கண்டிப்பாக இங்கே இதை விட கருமையாக இருக்கிறது. எனவே colour picker ஐ தேர்ந்து... இங்கே இது red blue greenக்கு 128, 128, 128 என காணலாம். 50% சாம்பல். இது மிதமான சாம்பல். இங்கே இது 127,127,127. 50% சாம்பல்.


10.43 இங்கே அடிப்படையில் ஒரே நிறமான சாயல்கள் சற்று உள்ளன. இந்த பக்கம் 127 உள்ளது. இந்த பக்கம் 128 உள்ளது.
10.57 225 ஐ 2 ஆல் வகுத்தோமானால் தசம புள்ளி இல்லையெனில் 127 அல்லது 128 ஐ பெறுகிறோம்.


11.15 இப்போது இந்த layerகளை ஒன்றுசேர்க்க வேண்டும்.
11.19 எனவே Layer க்கு சென்று, Merge down.
11.29 எனவே இங்கே Joseph ... அவர் படத்தில் கொண்டுள்ள colour level பெறுக. இப்போது இந்த sliderகளை இழுத்து கருப்பை திடமாகவும் சாம்பலை வெள்ளையாகவும் மாற்றுக.
11.56 variable thicknessன் கோட்டைக் காணலாம். இந்த sliderகளை இடப்பக்கமாக இழுத்தால் மேலும் நெருக்கமாகின்றன.
12.12 எனவே முழு படத்தையும் காண்போம், Shift + Ctrl + E. முன்னர் வைத்திருந்த color fills மற்றும் gradientக்கு பதிலாக கோடுகள் உள்ளதைக் காணலாம்.
12.25 இது புரிந்திருக்கும் என நம்புகிறேன். இதை செய்ய முயற்சிக்கவும்.
12.31 சில படங்கள் இந்த effectல் மிக நன்றாக இருக்கும்
12.37 Joseph ன் படம் மிக வேடிக்கையாக இருந்தது. எனக்கு பிடித்திருக்கிறது.


12.44 இந்த வாரம் GIMP tutorial லில் புதிய பகுதியை ஆரம்பிக்கிறேன்.
12.48 home page க்கு சென்று கீழே அங்கே வலப்பக்கம் photo group at 23HQ.com ஐ காணலாம்.
13.00 இங்கே நான் காட்டும் உங்களின் பல படங்கள் உள்ளன. வாராவாரம் அவற்றில் ஒன்றை எடுத்து அதை பற்றி கொஞ்சம் சொல்கிறேன். இன்று இங்கே இதை எடுக்கிறேன்.
13.13 இது Mainzelmann ஆல் fireworks ல் உருவாக்கப்பட்டது. இந்த படத்தில் white balance மற்றும் நிறம் பற்றி கருத்து கேட்கிறார். இது பார்க்க மதிப்புடையது என நினைக்கிறேன்.
13.28 நான் கருத்தளித்தேன். ஆனால் அது Germanல் மட்டும் இருந்தது.
13.32 சரி அதைப் பார்ப்போம்.
13.35 இந்த படம் வெறுமனே ஒரு இணையத்தளத்திலிருந்து இழுத்து இங்கே tool box ல் விடப்பட்டது. பின் GIMP இந்த படத்தை இணையத்திலிருந்து திறக்கிறது.


13.48 வானம் சற்று கருமையாக்கப்பட வேண்டும் என நினைக்கிறேன்.
13.53 கீழே இங்கே உள்ள கட்டிடங்கள் நன்றாக உள்ளன. அது படத்திலேயே இருக்க வேண்டும். ஆனால் வானம் இங்கே கிட்டதட்ட கருப்பாக இருக்க வேண்டும் இது போன்ற உண்மையான கருப்பு அல்ல. அநேகமாய் இந்த புகை மேகங்களில் கொஞ்சம் இங்கேயே சேமிக்கப்படும்.
14.13 எனவே Curves Tool ஐ தேர்ந்து நாம் செய்யக்கூடியதைக் காண்போம்.
14.24 இங்கே இந்த படத்தில் அதிகமாக வெள்ளை நிறம் இருப்பதைக் காணலாம்.
14.31 இந்த படத்தில் exposure நன்றாக உள்ளது. histogramல் மதிப்புகளும் நன்றாக பகிரப்பட்டுள்ளன. இங்கே கருப்பு உள்ளது. அது உண்மையான கருப்பு இல்லை என காணலாம்.
14.48 இதை இங்கே சற்று கருப்பாக்கலாம்.
14.56 எனவே இந்த கருப்பு புள்ளியை இது வரை இழுக்கிறேன்.
15.01 கருப்பு புள்ளி கருப்பின் வரையறை ஆகும். இப்போது இது கருப்பு எனலாம்.
15.12 எனவே இப்போது இந்த வானவேடிக்கை மேலும் முக்கியமானதாக இருப்பதைக் காணலாம். histogramன் இந்த பகுதியை மேலும் கருமையாக்க விரும்புகிறேன்.


15.26 எனவே இங்கே ஒரு புள்ளியை வைத்து வளைவை கீழே இழுக்கிறேன்.
15.33 இங்கே கட்டிடத்திற்கு சற்று இடம் விட வேண்டும்.
15.41 இது கட்டிடத்தின் முக்கிய பகுதி என நினைக்கிறேன்.
15.52 எனவே வளைவை இங்கே கீழே இழுக்கிறேன். இன்னும் அங்கே கட்டிடம் இருப்பதைக் காணலாம்.
16.07 இப்போது இங்கே இந்த இடம் கருப்பாக உள்ளது இது வெள்ளையாக உள்ளது. அநேகமாய் இது இப்போது மேலும் வெள்ளையாய் உள்ளது. எனவே இதை சற்று கீழே இழுக்க வேண்டும்.
16.25 வினோதமாய் சிலவற்றை முயற்சிப்போம்.
16.32 இல்லை அது வேலை செய்யவில்லை.
16.35 புள்ளிகளை இழுப்போம்.
16.39 இதை முன்னர் முயற்சிக்கவில்லை. எனவே சற்று சோதிக்கிறேன்.
16.51 இது வேலை செய்கிறது என நினைக்கிறேன்.
16.54 முதலில் படத்தை மேலும் வெப்பமாக்க பார்த்தேன் ஆனால் இப்போது நிறங்கள் நன்றாக வந்துள்ளன.
17.03 இந்த படத்துக்கு இவ்வளவுதான் என நினைக்கிறேன்.
17.07 மேலும் தகவல்களுக்கு http://meetthegimp.org க்கு செல்க. கருத்துக்களை அனுப்ப விரும்பினால் info@meetthegimp.org க்கு அனுப்பவும்
17.22 இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Gaurav, Priyacst, Ranjana