GIMP/C2/Colours-And-Dialogs/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration
|
00.23 | GIMP tutorial க்கு நல்வரவு. வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.
|
00.32 | இங்கே foreground and background colour dialog உள்ளது, 6 விதமான வழிகளில் நிறங்களைத் தேர்ந்தெடுக்கலாம். |
00.47 | முதல் வழியில், H, S, V, R, G, B என சில sliderகளைக் காணலாம். அவை முறையே hue, saturation,value,red, green,blue ஆகும்.
|
01.04 | இங்கே கருப்பை என் foreground நிறமாக தேர்கிறேன். Hue,Saturation,Value,red,green,blue ஆகியவற்றின் மதிப்புகள் zero என காணலாம். |
01.20 | Hue ன் மதிப்பை அதிகரிக்கும்போது ஏதும் மாற்றம் இல்லை. |
01.28 | கருப்பு கருப்பாகவே உள்ளது. ஏனெனில் மதிப்பு zero ஆகும். value slider ஐ அதிகரிக்கும்போது, ஒருவிதமான சாம்பல் நிறத்தைப் பெறுகிறோம். |
01.41 | மதிப்பு 0 ஆக இருக்கும்போது saturation ஐ அதிகரிக்கலாம். ஏதும் மாற்றம் இல்லை. |
01.50 | ஆனால் saturation ஐ அதிகரிக்கும் போது, மற்ற sliderகளில் நிறம் சற்று மாறுகிறது என்பதைக் காணலாம். |
01.59 | Hue ஐ இழுத்தால் ஏதும் நடக்கவில்லை, ஆனால் saturationஐ இழுக்கும்போது, value ன் நிறம் ஒருவகையான நீலமாகிறது.
|
02.12 | HSV system மூலம் ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்க விரும்பினால், பின் Saturation மற்றும் Value slider ஐ அதிகமாக்கவும். Hue slider ல் பலவித நிறங்களின் வானவில்லை பெறலாம். இந்த நிறங்களிலிருந்து தேர்ந்தெடுக்க முடியும். |
02.48 | இங்கே red,green மற்றும் blue sliderகளில் நிறங்கள் HSV sliderகளுக்கு ஏற்றவாறு மாறுவதை காணலாம். இது ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்க சுலபமாகிறது. |
03.03 | லேசான நிறம் வேண்டுமானால் saturation sliderஐ சரிசெய்க. திடமான நிறத்தின் நல்ல கலவை வேண்டுமானால் பின் அதற்கேற்றவாறு value slider ஐ மாற்றி ஒரு மதிப்பை red, green அல்லது blue slider ல் தேர்ந்தெடுக்கவும். |
03.23 | எனவே Hue, Saturation மற்றும் Value ஆகியவை புரிந்துகொள்ள எளிமையானவை அல்ல. ஆனால் நிறங்களை தேர்ந்தெடுக்க ஒரு நல்ல வழி. |
03.44 | ஒரு குறிப்பிட்ட நிறத்தை அமைக்க மட்டுமே இந்த dialog ஐ நான் பயன்படுத்துகிறேன். |
03.51 | உதாரணமாக எனக்கு துல்லியமான நடுத்தரமான சாம்பல் நிறம் வேண்டுமானல் பின் Value slider ஐ 50 வரை இழுக்கிறேன், எனவே value 0% மற்றும் 100%க்கு இடையில் வகுக்கப்படுகிறது. RGB sliderல் 127க்கு எண்களை அமைக்கிறேன். துல்லியமான நடுத்தரமான சாம்பல் நிறத்தைப் பெறுகிறோம். |
04.28 | இப்போது மற்ற dialogகளை காணலாம். |
04.33 | இந்த dialog... HSV colour model ஐ அடிப்படையாக கொண்டது. முதலில் உங்களுக்கு விருப்பமான நிறத்தை இந்த வட்டத்தில் தேர்ந்தெடுக்கவும். |
04.50 | பின் Value மற்றும் Saturation ஐ முக்கோணத்தில் தேர்க. |
05.02 | எனவே Hue தேர்ந்தெடுக்கப்படும்போது, அதே Hue க்கு முக்கோணத்தில் value மற்றும் Saturationன் மாறுபட்ட மதிப்புகளை இங்கே பெறலாம். |
05.22 | அடுத்த dialog இங்கே இருக்கும் இது போன்றதே. |
05.27 | இந்த dialogல் Hue ஐ தேர்ந்தெடுக்க ஒரு பகுதி உள்ளது, இந்த சதுரத்தில் முக்கோணத்தில் பெறும் அதே நிறத்தை பெறலாம். இப்போது இங்கே இந்த பகுதியில் இருந்து உங்கள் நிறத்தை தேர்ந்தெடுக்கலாம். அல்லது இங்கே hue ஐ மாற்றி உங்கள் புது நிறத்தை தேர்ந்தெடுக்கலாம். |
05.58 | இங்கே saturationக்கும் மாறலாம். |
06.02 | இவ்வாறு இழுப்பதன் மூலம் மதிப்பின் சேர்க்கையை தேர்ந்தெடுக்கலாம். Hue ஐயும் இவ்வாறு மாற்றலாம். |
06.12 | இங்கே திடமான நிறத்தைப் பெற value ஐ அமைக்க முடியும். அதற்கேற்றவாறு saturation மற்றும் Hue ஐ மாற்றுக. |
06.33 | இதே வழியில் red,green மற்றும் blueக்கும் இது வேலை செய்கிறது. |
06.40 | நிறங்களில் எனக்கு வேண்டிய blue ன் அளவை மாற்றலாம். பின் red மற்றும் greenன் அளவுகளுக்கும் அவ்வாறே செய்யலாம்.
|
06.55 | இந்த dialog முந்தையதைவிட நவீனமானது அல்ல. |
07.01 | அடுத்த dialog... water colour mixup ஆகும். |
07.10 | நிறக்குடுவையில் தூரிகையை தோய்ப்பதன் தீவிரத்தை இந்த slider சரிசெய்கிறது. |
07.18 | இந்த பெட்டியில் இருந்து ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்கலாம். |
07.32 | இது இங்கே முடிவு நிறமாக இருக்கும். |
07.37 | ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்கலாம். இந்த மஞ்சள். இப்போது இதற்கு சற்று நீலம் மற்றும் சற்று சிவப்பை சேர்க்கலாம். முடிவாக பெறுவது சேறு போன்ற நிறம். |
07.56 | அடிக்கடி இந்த dialog ஐ நான் பயன்படுத்துவதில்லை. |
08.02 | இந்த dialog நடப்பு நிறக்கலவையைக் காட்டுகிறது, நிறக்கலவையை வேறு எங்காவது அமைக்க முடியும். |
08.10 | graphic designing மற்றும் web designingக்கு மட்டுமே இது பயன்படுகிறது. இந்த dialog உடன் நான் பெரிதாக ஏதும் செய்யவில்லை. |
08.20 | இன்னும் சொல்ல மற்றொன்று உள்ளது. அது இங்கே printer colours. |
08.31 | இந்த dialog தொழில்முறை printers மற்றும் red,green மற்றும் blue ஆகியவற்றிற்கு பதிலாக Cyan, magenta மற்றும் Yellow ஐ பயன்படுத்தும் printers க்கு மட்டுமே பயனுள்ளது. ஏனெனில் அவை நிறங்களை கழிக்கின்றன. |
08.54 | சிவப்பு பச்சை மற்றும் நீலம் ஒன்றுகலந்து வெள்ளையாகிறது. அச்சடிக்கையில் Cyan, magenta மற்றும் Yellow ஐ zero க்கு அமைக்க, வெள்ளைத்தாள் அச்சடிக்கப்படுகிறது. |
09.11 | கருப்பு நிறத்தை அச்சடிக்க விரும்பினால் Cyan, magenta மற்றும் Yellow ஐ 100 க்கு அமைக்கலாம். பின் முழுதும் கருப்பு தாளை பெறலாம். |
09.37 | இந்த நிறங்கள், இந்த நிறங்கள் ஒளியிலிருந்து கழிக்கப்பட்டு cyan ஐ மட்டும் பிரதிபலிக்கிறது. |
09.46 | அவற்றை கலப்பதன் மூலம், ஒளியிலிருந்து மேலும் மேலும் கழிக்கலாம். அனைத்து நிறங்களையும் பெற்று அச்சடிக்கலாம். |
09.58 | அச்சடிக்கமுடியாத பார்க்ககூடிய சில நிறங்கள் உள்ளன. அதனால் உங்கள் முடிவு மாறுபடுகிறது. |
10.35 | நான்காவது slider k. அது குறிப்பது black. |
10.41 | blue உடன் குழப்பாமல் இருக்க black க்கு K என குறிக்கப்படுகிறது.
|
10.51 | என் background நிறமான வெள்ளையை சொடுக்கும்போது, ஏதும் மாறவில்லை என்பதைக் காணலாம். |
11.08 | நிறங்கள் ஒத்தவையே. ஆனால் Cyan slider குறைந்துவிட்டது மற்றும் K slider அதிகரித்துவிட்டது. |
11.18 | அதை மீண்டும் செய்வோம். |
11.20 | Y slider ஐ 40க்கும் , M ஐ 80 க்கும் C ஐ 20க்கும் இழுக்கவும். |
11.29 | இப்போது நிறத்தை தேர்ந்தெடுக்கும்போது M slider 75 எனவும், Y 26 எனவும் K 20 எனவும் பெறுகிறோம். |
11.41 | ஆனால் நிறம் மாறவில்லை என்பதைக் காணலாம். ஆனால் படத்தில் முன்னர் இருந்த cyan, magenta மற்றும் yellow ன் கலவை... magenta, yellow மற்றும் black என மாறியுள்ளது. |
11.59 | கருப்பு மை சற்று மலிவானது. எனவே இங்கே மாறா புள்ளிக்கு cyan, magenta மற்றும் yellowன் macky கலவைக்கு பதிலாக Magenta, Yellow மற்றும் Black ன் கலவை பயன்படுகிறது. |
12.22 | இப்போது நிறத் தேர்வின் 6 dialog களையும் பார்த்துவிட்டோம். |
12.28 | ஆனால் இந்த இரு colour swaps மீதி உள்ளன. |
12.32 | முன் உள்ள நிறம் என் foreground மற்றும் மற்றொன்று என் background நிறம். அதன் மீது சொடுக்கும்போது இங்கே நிறங்களை அமைக்க முடியும். |
12.46 | இந்த நிறங்களை உங்கள் படத்தில் அல்லது உங்கள் தேர்வில் தேவையானால் பின் அந்த பகுதியின் மேலே இந்த நிறங்களை இழுக்கவும். அந்த நிறத்துடன் அப்பகுதி நிரப்பப்படும்.
|
13.02 | இந்த colour swapsஐ tool boxல் வைக்கலாம். |
13.14 | File சென்று, Preferences பின் tool box. இங்கே foreground background colour ஐ காணலாம். brush மற்றும் நடப்பு படத்தையும் காணலாம். |
13.37 | பின்னர் இதை நீக்கிவிடுவேன். ஏனெனில் இது என் tool box ல் அதிக இடத்தை எடுக்கும். |
13.46 | colour swaps ன் மேல் வலது மூலையில் உள்ள இந்த சிறிய icon... foreground மற்றும் background நிறத்தை மாற்றுவதற்காக உள்ளது. |
13.56 | அதை X key ஐ அழுத்தியும் செய்யலாம். |
14.03 | கீழ் இடது மூலையில் உள்ள இந்த icon... foreground மற்றும் background நிறத்தை கருப்பு வெள்ளையாக மாற்றியமைப்பதற்காக உள்ளது. |
14.14 | இது ஒரு நல்ல சிறப்பம்சம். இது ஒரு colour picker. நீங்கள் விரும்பும் நிறத்தை திரையில் இருந்தோ அல்லது ஒரு இணையத்தளத்திலிருந்தோ தேர்ந்தெடுக்கலாம். |
14.31 | கடைசியாக நிறங்களை வரையறுக்க hex code இருக்கும் புலத்தைக் காணலாம் |
14.45 | நான் நிறத்தை மாற்றும்போது அந்த code எவ்வாறு மாறுகிறது என்பதைக் காணலாம். Hex code ல் தட்டச்சு செய்து நிறத்தையும் பெறலாம். அல்லது நிறத்தின் பெயரையும் தட்டச்சு செய்யலாம். |
15.06 | உதாரணமாக 'L' ஐ தட்டச்சு செய்க. அனைத்து நிறங்களையும் பெறலாம். lawn green, இது lawn green. எனவே இது விவரமான colour dialog. |
15.19 | அதிகமாக சொல்லி விட்டேன் என நினைக்கிறேன். இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
15.23 | இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி. |