GIMP/C2/The-Curves-Tool/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:28, 5 March 2014 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration


00.25 GIMP tutorial க்கு நல்வரவு.
00.28 வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.
00.33 இப்போது இன்றைய tutorial உடன் ஆரம்பிக்கலாம்.
00.35 இது curves பற்றியது.
00.37 முதலில் tool box ல் Curves tool ஐ செயலாக்குகிறேன். பின் இந்த படத்தில் சொடுக்கலாம்.
00.44 Curves tool ல் ஒரு histogram இருப்பதைக் காணலாம். இங்கே சாம்பல் அளவீடுடன் இரு பட்டைகள் உள்ளன.


00.58 curves tool ல் தேர்ந்தெடுக்க preview, save, open போன்ற சில buttonகள் உள்ளன.
01.06 ஆனால் இப்போதைக்கு Curves tool ன் சாம்பல் அளவீடு பட்டையை காண்போம்.


01.11 இங்கே இந்த பட்டை... மூல படத்தின் வெவ்வேறு நிற வீச்சை காட்டுகிறது.
01.20 இந்த பட்டையில் சில pixels மிக கருமையாகவும் சில மிக வெள்ளையாகவும் மற்றும் சில கருப்பு வெள்ளைக்கு இடையும் உள்ளன.
01.33 இங்கே கிடைமட்ட பட்டை 256 வெவ்வேறு நிற சாயலைக் கொண்டுள்ளது
01.39 இந்த பட்டையின் ஆரம்ப புள்ளி zero. அது கருப்பு. கடைசி புள்ளி 255. அது வெள்ளை.
01.49 உதாரணமாக இங்கே இந்த 184... சாம்பல் நிறம்.


01.53 இந்த படம் பல நிறங்களைக் கொண்டுள்ளது. channel ஐ மாற்றுவதன் மூலம் பல்வேறு நிறங்களை இங்கே என்னால் காட்ட முடியும்.
02.01 colour channel ல் red ஐ தேர்ந்தெடுக்கலாம். படத்தில் சிவப்பு நிற சாயலைக் காணலாம்.
02.07 அதேபோல green மற்றும் blue க்கு மாற்றி அதனதன் நிறச்சாயல்களை பெறலாம்.
02.14 இந்த படத்தில் அதிகமான மதிப்புகளை கொண்ட green channel மேலாதிக்க channel ஆக இருப்பதால் இது மிக வியப்பாக இல்லை.
02.24 இப்போது reset channel ஐ சொடுக்குக.
02.27 ஒவ்வொரு சாயலின் மேலே histogram ன் வளைவானது luminosity ஐ கொண்ட pixel ன் எண்ணிக்கையாகும்.
02.38 இங்கே ஒரு பகுதி உள்ளது. அங்கு பட்டையின் மீது இந்த terminal மற்றும் இந்த terminal ல் கிட்டத்தட்ட சம எண்ணிக்கை கொண்ட pixels உள்ளன
02.49 இங்கே உயர்மட்ட நிற வீச்சு உள்ளதாக histogram காட்டுகிறது.


02.56 curves tool செயலில் இருக்கும்போது படத்தினுள் செல்க. mouse cursor ஒரு சிறு dropper ஆக மாறுகிறது. இங்கே சொடுக்கும்போது, histogram ல் கோடு அந்த புள்ளிக்கு நகருகிறது.
03.10 எந்த நிறசாயல் படத்தினுள் எங்குள்ளது என காண படத்தினுள் சொடுக்கி சுற்றி நகருக.
03.18 இப்போது இங்கே கிடைமட்ட பட்டையை பார்த்தோம்.
03.22 இது இங்கே வெளியீடு.
03.26 இங்கேயும் 256 பல்வேறு மதிப்புகள் உள்ளன. அவை இந்த படத்தை வடிவமைக்கிறது.
03.33 கிடைமட்ட பட்டை வளைவினுள் வைக்கப்படுகிற data ஐ கொண்டுள்ளது. செங்குத்து பட்டை வெளியே வைக்கப்படுகிற data ஐ கொண்டுள்ளது.
03.44 இடையில் graph க்கு குறுக்கே இருக்கும் இந்த கோடு translation function ஆகும்.
03.53 சாம்பலின் நடுப்பகுதியிலிருந்து translation curve க்கு போகும்போது, பின் இடப்பக்கம் செங்குத்து பட்டைக்கு போகும்போது சாம்பலின் நடுப்பகுதியை மீண்டும் தொடுகிறேன்.
04.04 விரும்பும்போது இந்த வளைவை இழுக்கலாம். இதை கீழே இழுக்கும்போது படம் சற்று கருமையாவதைக் காணலாம்.
04.13 இப்போது சாம்பலின் நடுப்பகுதியிலிருந்து மேலே வளைவுக்கு செல்லும் போது பின் இடப்பக்கம் செல்க, அடர் சாம்பலில் நிறுத்துகிறேன்.
04.23 இங்கே கீழ் பட்டை உண்மையான உள்ளீடு என்பதையும் செங்குத்து பட்டை curves tool ன் வெளியீடு என்பதையும் இங்கே பாருங்கள்.
04.34 இந்த வளைவை பல வழிகளில் மாற்றலாம், அதற்கு வரம்பு கிட்டத்தட்ட இல்லை.
04.43 ஒரு வரம்பு மட்டும் உள்ளது. அது... பின்னோக்கி வளைவை இழுக்க முடியாது. அதை செய்யும்போது curves tool ன் அந்த புள்ளி இழக்கப்படுகிறது.


04.53 ஆனால் படத்தில் பிரகாசமான pixels ஐ பார்க்க விரும்பவில்லை எனில், அதற்கு அனைத்து புள்ளிகளையும் கீழே இழுக்கலாம். பின் படம் கிட்டத்தட்ட கருப்பாகும்.
05.10 இந்த புள்ளியை சற்று மேலே இங்கே இழுக்கிறேன். பின் இங்கே சற்று பிரகாசமானதை காணலாம்.
05.17 சில வருடங்களுக்கு முன் பாணியில் இருந்த படங்கள் போன்று வரும் வரை சுற்றி இந்த Curves tool உடன் விளையாடலாம்.
05.28 reset button ஐ சொடுக்குவதன் மூலம் வளைவை மீள் துவக்கி உண்மை வளைவை பெறலாம்.


05.34 Linear Mode மற்றும் Logarithmic Mode போன்ற மேலும் சில Buttonகள் உள்ளன.
05.42 logarithmic mode ல் சிறிய மதிப்புகள் உயர்த்தப்படுகிறது.
05.49 இங்கே linear mode ல் இங்கே இந்த கோட்டிலிருந்து இந்த கோடு இரட்டை மதிப்பை கொண்டுள்ளது.
05.56 logarithmic mode ல் இந்த கோடு 1 ஆகலாம், இது 10, இது 100 மற்றும் இது 1000.
06.06 ஒவ்வொரு படியும் 10 மடங்கு அதிக மதிப்பை தருகிறது. இதில் linear mode ல் சிறிய pixels மறைக்கப்படுவதைக் காண்க.
06.17 இங்கே இந்த மூலையில் 250 க்கும் அதிகமான மதிப்புடைய pixels உள்ளது என சொல்ல முடியாது என காண்க.
06.27 ஆனால் logarithmic mode ல், படத்தின் முழு வீச்சுக்கும் pixels இருப்பதைக் காணலாம்.
06.40 பின் இங்கே Curve type என்ற button உள்ளது, இதுவரை இந்த tool ஐ நான் பயன்படுத்தியபோது , curve ... வளைவை பெற்றேன். ஆனால் curve type ஐ நான் மாற்றும் போது வளைவு மீது உண்மையில் வரைந்து சற்று வேடிக்கையான சிலதை பெறலாம் .
07.12 பின் save dialog மற்றும் open dialog button உள்ளன.
07.17 வளைவுகளை மாற்றுவதனுடன் முடிக்கும் போது பிற்கால பயன்பாட்டிற்கு அதை சேமிக்கலாம். விரும்பும்போது மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளலாம்
07.28 திருமணங்களை அதிகமாக படம் பிடிக்கும் ஒருவன் வெள்ளை ஆடைக்கு வெள்ளையில் அமைப்பைக் கொடுக்க நன்கு சீர்செய்யப்பட்ட ஒரு சிறப்பான பிரகாசமான shot curve ஐ வைத்திருப்பான்.
07.42 படத்தில் curves tool ஐ எவ்வாறு பயன்படுத்துவது.
07.47 படத்தின் அடர்ந்த பகுதியை மேலும் அடர்த்தியாக்க விரும்புகிறேன்.
07.52 மத்தியில் இருப்பதை அவ்வாறே விட்டுவிடுகிறேன். பிரகாசமான பகுதியை மேலும் பிரகாசமாக்க விரும்புகிறேன்.
08.00 இதை செய்ய ‘S’ curve ஐ பயன்படுத்துவேன் என நினைக்கிறேன்.
08.06 கீழ் பகுதியில் வளைவை சற்று கீழே இழுக்கிறேன். அடந்த பகுதி மேலும் அடர்த்தியாவதைக் காணலாம். பிரகாசமான பகுதிக்கு செல்கிறேன். வளைவை மேலே இழுத்து பிரகாசமான பகுதியை மேலும் பிரகாசமாக்குகிறேன்.
08.25 மேலும் பிரகாசம் பெற வளைவை சற்று மேலே இழுக்கலாம்.
08.39 OK ஐ சொடுக்கும் போது வளைவுகளின் மதிப்புகள் சேமிக்கப்படுகிறது.
08.44 இந்த செயல்முறையை மீண்டும் இங்கு செய்யும்போது, histogram மாறியிருப்பதைக் காணலாம்.
08.52 இங்கே இடையில் எந்த மதிப்புகளும் இல்லை. pixelகளும் இல்லை. logarithmic mode ஐ சொடுக்கும்போது, அங்கேயும் சில Pixelகளுக்கு மதிப்புகள் இல்லை.
09.04 ஒவ்வொரு முறையும் curves tool ஐ பயன்படுத்தும்போது, படத்தில் சில pixels ஐ இழக்கிறோம்.
09.12 எனவே எதிர்மறையாக செய்வதன் மூலம் வளைவு செயல்முறையை செயல்நீக்க முயற்சிக்க வேண்டாம். அதாவது வளைவை இங்கு மேல் இழுப்பதும் இங்கு கீழ் இழுப்பதும்.
09.24 OK ல் சொடுக்கவும். இப்போது இது மேலும் மேலும் மோசமாவதைக் காணலாம். முடிவில் படத்தில் colour banding இருக்கும்.
09.38 எனவே கவனிப்புடன் curves tool பயன்படுத்தி மாற்றத்தை உருவாக்கவும். இல்லையெனில் முடிவில் pixelகளை இழந்து ஒரு image colour bandings ஐ அதில் பெறுவீர்.
09.56 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
10.01 அடுத்த tutorial ஐ பார்க்க பரிந்துரைக்கிறேன்.


10.08 கருத்துகளை அனுப்ப விரும்பினால், info@meetthegimp.org க்கு வேண்டும். கருத்துகளை உங்களிடமிருந்து பெற விரும்புகிறேன்.
10.23 இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா.

Contributors and Content Editors

Priyacst, Ranjana