GIMP/C2/An-Image-For-The-Web/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 17:12, 24 February 2014 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration


00.23 GIMP tutorial க்கு நல்வரவு.
00.25 வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.
00.31 GIMP ஒரு சக்திவாய்ந்த Image manipulation program.
00.35 இந்த tutorialலில் GIMP பற்றியும் அதன் சிறப்பம்சங்களையும் காண்போம்
00.39 இணையத்திற்கு ஒரு படத்தை தயாரிப்பதை சுருக்கமாக செய்து காட்டுகிறேன்
00.43 மேல்வரும் tutorialகளில் விரிவான விளக்கத்தைத் தருகிறேன்
00.48 ஒரு படத்தை திறக்க, அந்த படத்தை tool boxக்கு இழுத்து விடுகிறேன்.
00.53 அது இங்குள்ளது!
00.55 அந்த படத்தை பார்க்கலாம்.
00.57 இணையத்திற்கு இந்த படத்தை தயாரிக்க விரும்புகிறேன்.
01.02 இதனுடன் நான் செய்யக்கூடியதைப் பார்க்கலாம்.


01.04 முதலில் இந்த படம் சாய்ந்துள்ளது. எனவே அதை சற்று சுழற்ற வேண்டும்.
01.09 பின் இந்த பகுதியை நீக்க crop செய்கிறேன் - ஒரு நபரின் பின்னால்.
01.16 நான் செய்யும் மூன்றாவது விஷயம் மேலும் நிறம் மற்றும் contrastஐ கொண்டுவருவது.
01.22 இந்த படம் கிட்டத்தட்ட 4000 pixels அகலம் கொண்டு அதிகமாக இருப்பதால் அதை மறுஅளவாக்க விரும்புகிறேன்
01.31 பின் அதை கூர்மையாக்கி JPEG படமாக சேமிக்கிறேன்.
01.38 சுழற்றுதலுடன் ஆரம்பிக்கலாம்.


01.40 படம் சாய்ந்திருப்பது வெளிப்படையாக தெரியும் பகுதியை பெரிதாக்குகிறேன். அதை இங்கே காணலாம்.
01.49 இவ்வாறு Space ஐ அழுத்துதல் மற்றும் cursor ஐ நகர்த்துதல் மூலம் படத்தை சுற்றி நகரலாம்.
01.56 இப்போது இங்கே சொடுக்கி Rotate tool ஐ தேர்கிறேன்
02.00 Rotate toolல், graphic வேலைக்காக மதிப்புகளுக்கு சில Optionகள் முன்னிருப்பாக அமைந்துள்ளன. அவை புகைப்பட வேலைக்காக அல்ல.
02.09 இங்கே Direction... Normal(Forward)க்கு அமைந்துள்ளது. அதை Corrective(Backward)க்கு அமைக்கிறேன்
02.14 சிறந்த Interpolation உள்ளதா என சோதிக்கிறேன். அது சரி.
02.17 Preview ல் Image க்கு பதில் Grid ஐ தேர்கிறேன்.
02.22 sliderஐ நகர்த்துவதன் மூலம் grid வரிகளை அதிகரிக்கிறேன். அதை விரைவில் காண்பீர்கள்.
02.30 இப்போது படத்தில் சொடுக்கலாம். படத்தின் மீது ஒரு gridஐ பெறலாம்.
02.36 இந்த grid நேராக உள்ளது
02.38 அதை சுழற்றலாம். GIMP... Corrective modeல் அதே திசையில் படத்தை சுழற்றும். எனவே பின் மீண்டும் grid நேராக இருக்கும்
02.51 செய்துகாட்டுகிறேன். இவ்வாறு grid ஐ சுழற்றுகிறேன்.
02.56 உறுதிசெய்ய படத்தின் மற்ற பகுதிகளை சோதிக்கிறேன்.
03.00 எனக்கு பார்க்க நன்றாக உள்ளது.
03.02 இப்போது Rotate buttonஐ சொடுக்குகிறேன்.
03.06 படம் ஏறத்தாழ 10 mega-pixels ஆக இருப்பதால் இது சிறிது நேரம் எடுக்கும்
03.13 இது முடிந்தது!
03.14 படம் சுழற்றப்பட்டுள்ளது.
03.16 முழுப்படத்தையும் பார்க்கலாம். Shift + Ctrl + E... படத்திற்க்கு திரும்ப அழைத்து செல்லும்.
03.22 அடுத்த படி Cropping.
03.25 இங்கே சொடுக்கி Crop tool ஐ தேர்கிறேன்.
03.28 படத்தின் aspect ratio ஐ 3:2 என வைக்க விரும்புகிறேன்.
03.33 அதற்கு இங்கே Fixed Aspect ratio ஐ சோதித்து 3:2 என இடுகிறேன்.
03.39 பெட்டியை விட்டு வெளியேற வெறுமனே சொடுக்குகிறேன்.
03.43 இப்போது croppingஐ ஆரம்பிக்கலாம்.
03.45 இந்த நபரின் கால்களை சேர்க்க விரும்புகிறேன. ஆனால் படத்தின் இந்த பகுதியை நீக்குகிறேன்.
03.52 இந்த இடத்தில் ஆரம்பிக்கிறேன். அந்த பகுதியைத் தேர்ந்தெடுக்க இடது mouse buttonஐ அழுத்தி மேல்நோக்கி இடப்பக்கமாக இழுக்கிறேன்.
04.01 aspect ratio நிலையானது என்பதைக் காண்க.
04.06 இப்போது எவ்வளவு தூரம் இழுக்க வேண்டும் என தீர்மானிக்க வேண்டும்.
04.12 இது போதும் என நினைக்கிறேன்.
04.18 ஓரங்களை சோதிக்கலாம்.
04.21 இந்த பகுதியை நீக்கிவிட்டோம். இங்கே ஒருவர் அமர்ந்துள்ளார்.


04.28 படத்தில் இருக்க அந்த நபருக்கு தேவையான இடம் இங்கே உள்ளது என நினைக்கிறேன்.
04.35 இது நன்றாக இருப்பதால் அதை அப்படியே விட்டுவிடுகிறேன்.
04.41 மேலே இங்கே ஜன்னல்கள் உள்ளன.
04.44 அவை ஜன்னல்கள் என படத்தில் தெரிய போதுமானதாக உள்ளது.
04.50 ஆனால் இங்கே கால் பகுதியில் தேவையான இடம் இல்லை என நினைக்கிறேன்.
04.54 எனவே படத்தை சொடுக்கி கீழே சற்று இழுக்கிறேன்.
04.58 இப்போது நன்றாக உள்ளதென நினைக்கிறேன்.
05.01 ஆனால் இப்போது போதுமான ஜன்னல்கள் தெரியவில்லை. அமர்ந்துள்ள நபரும் ஓரத்திற்கு அருகில் உள்ளார்.
05.08 எனவே படத்தை சற்று பெரிதாக்கலாம்
05.11 இங்கே நாம் பிரச்சனையில் உள்ளோம். ஒருவேளை இதை நீங்கள் காணலாம்.
05.18 சுழற்றுதலின் போது இது நடந்தது.
05.21 இங்கே transparent ஆக சிறு பகுதி உள்ளது.


05.25 அதை நான் சேர்க்க விரும்பவில்லை
05.33 எனவே Crop toolக்கு வருவோம்.
05.35 இங்கே மேலும் இடம் தேவை; எனவே இதை மேலே இழுக்கிறேன்.
05.38 மிகவும் தூரம் இல்லை
05.40 இது போதும் என நினைக்கிறேன்
05.44 இப்போது படத்தின் மீது சொடுக்கவும். crop மற்றும் rotate செய்யப்பட்ட படம் உள்ளது.
05.50 Shift + Ctrl + E... முழு பார்வைக்கு கொண்டுவரும்.
05.56 அடுத்த படி சிறிது நிறங்கள் மற்றும் contrast ஐ சேர்ப்பது
06.02 இங்கே பல வழிகள் உள்ளன. color levelsஐயும் நான் பயன்படுத்தலாம் - அது இங்குள்ளது, curves அல்லது சில sliders.
06.11 ஆனால் நான் layers உடன் இதை செய்ய முயற்சிக்கிறேன்.
06.18 இங்கே நான் வெறுமனே இந்த layer ன் பிரதியை எடுக்கிறேன்.
06.23 layer mode ஐ Overlay என மாற்றுகிறேன்.
06.30 இது மிகவும் திடமான effectஉடன் இருப்பதைக் காணலாம். எனக்கு அந்த அளவுக்குத் தேவையில்லை
06.36 எனவே எனக்கு நன்றாக உள்ளது என தெரியும் வரை opacity slider ஐ குறைக்கிறேன்.
06.42 அநேகமாக இன்னும் கொஞ்சம்.
06.46 சரி, இது போதும் என நினைக்கிறேன்.
06.50 இங்கே mouse ல் வலது சொடுக்கி channel list சென்று 'Flatten image' அல்லது 'Merge visible layers' என சொல்லாத வரை இதை என்னால் மாற்றமுடியும்
07.01 பின் அனைத்து மாற்றங்களும் நிரந்தரமாகிவிடும்.
07.03 இங்கே History சென்று பின் historyஐ undo செய்தல் நீங்கலாக.
07.10 ஆனால் அதை பின்னர் பார்ப்போம்
07.13 அடுத்த படி மறுஅளவாக்குதல்.
07.16 Image menu ல் சொடுக்கி Scale Image optionஐ தேர்கிறேன்.
07.27 இங்கே 800 pixels என இடுகிறேன்.


07.32 பின் height ன் மதிப்பை தானாக பெறுகிறேன்.
07.36 இந்த இணைப்பை நீக்கும்போது, மறுஅளவாக்கும்போது படம் சீர்குலையலாம்.
07.44 Interpolation
07.45 Cubicஐ தேர்ந்தெடுக்க நினைக்கிறேன். இங்கே உயர்மட்ட layer செங்கல் கட்டிடங்களுடன் சில art effects கொடுப்பதை கண்டேன். இது வித்தியாசமானது. அதை சோதிக்க வேண்டும்.
08.02 இப்போது Scaleல் சொடுக்கவும்
08.04 முடிவைக் காணலாம்
08.08 Shift + Ctrl + E முழு படத்தைக் கொடுக்கும்
08.13 1 ஐ அழுத்தும்போது, 100% zoomஐ பெறுகிறேன்.
08.19 இப்போது ஏதேனும் கவன தொந்தரவு அல்லது சிதறல்கள் இருக்கிறதா என பார்க்க படத்தை முழுதும் பார்க்கலாம். அனைத்தும் சரியாக உள்ளதென நினைக்கிறேன்.
08.32 அடுத்த படி கூர்மையாக்குவது.
08.35 என் lensஉம் camera உம் நன்றாக உள்ளது. ஆனால் படம் மீது வேலைசெய்துள்ளோம். எனவே இது சிறிது கூர்மையாக்கப்பட வேண்டும்.
08.49 Filtersஐ தேர்கிறேன்
08.53 Enhance ல் சொடுக்கி Sharpening ல் சொடுக்குக. மிகச்சிறந்த கூர்மையாக்கும் tool ஆன Unsharp mask ஐயும் பயன்படுத்தலாம். ஆனால் இப்போதைக்கு Sharpening போதுமானது
09.06 இந்த tool அடிப்படையாக ஒரே ஒரு தேர்வைக் கொண்டுள்ளது அது sharpness slider. இது மாற்றக்கூடியது. இம்மாதிரி படத்திற்க்கு இது போதும்.
09.16 இது கூர்மையாக்கப்படாத படம். இந்த sliderஐ இழுக்கும்போது, மேலும் மேலும் படம் கூர்மையாகிறது. இதை அதிகம் நகர்த்தினால் வேடிக்கையான effect ஐ பெறலாம்.
09.31 இந்த படத்திற்க்கு இந்த மதிப்பு சரி என நினைக்கிறேன்.


09.38 தலைமுடி இப்போது தெளிவாக உள்ளது. ஆனால் இங்கே சில சிதறல்களைக் காணலாம்
09.46 எனவே சிறிது குறைக்கலாம். இப்போது இது நன்றாக உள்ளது.
09.52 படத்தில் சிதறல்கள் இருப்பதை விட soft effects க்கு போக விரும்புகிறேன்.


10.00 அவை தான் நீங்கள் படத்தை manipulate செய்திருப்பதற்கான சாட்சி.
10.06 எனவே முடிவைக் காண்போம்.
10.09 இது நன்றாக உள்ளது.


10.11 கடைசி படி படத்தை சேமிப்பது.
10.15 File க்கு சென்று Save As ல் சொடுக்கி உண்மை file extension ‘tif’ ஐ ‘jpg’ என மாற்றுவோம்
10.29 Save buttonஐ சொடுக்குவோம்.
10.32 JPEG ஆல் பல layerகளுடன் படத்தை கையாள முடியாது என ஒரு எச்சரிக்கையை பெறுகிறோம். சரி. எனவே அவற்றை export செய்ய வேண்டும்.
10.44 இந்த படத்திற்க்கு 85% என்பது சிறந்த சரியான மதிப்பு என நினைக்கிறேன்.
10.53 இந்த படத்தை JPEG படமாக இங்கே சேமித்துள்ளேன்.
11.01 இதை முழுத்திரையிலும் பார்க்கலாம்.
11.04 GIMPன் முதல் tutorial அவ்வளவுதான். பின்வரும் tutorialகளில், காணப்போவது GIMPஐ set up செய்வது, draw மற்றும் convert செய்வது tools மேலும் பல.
11.17 உங்கள் கருத்துகளை அனுப்ப மின்னஞ்சல்... info@meetthegimp.org
11.25 மேலும் விவரங்களுக்கு http://meetthegimp.org


11.31 இந்த tutorial லில் உங்களுக்கு பிடித்தவை, எங்களிடமிருந்து எதிர்பார்ப்பவை மேலும் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்
11.41 இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்து IIT Bombay லிருந்து பிரியா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Priyacst, Ranjana