PHP-and-MySQL/C4/User-Registration-Part-6/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:00 | Spoken Tutorial க்கு நல்வரவு. இது ஒரு update tutorial. முழு நீள video இல்லை. |
0:08 | என் register script குறித்து ஒருவர் சொன்னது username ஐ பயன்படுத்தி வேறு user register செய்துள்ளாரா என்பதை சோதிக்க வேண்டும் என்பது. |
0:19 | நம் form க்குத் திரும்பிப்போகலாம். இங்கே உங்கள் fullname ஐ டைப் செய்ய வேண்டும். username மற்றும் ஒரு password ஐ தேர்ந்தெடுக்கலாம். |
0:28 | இந்த மதிப்புகள் முன்னே இருந்தவை. இவற்றை நீக்கலாம். |
0:33 | நமக்குத்தேவை username ஐ தேர்ந்தெடுக்கும் போது ... |
0:37 | உதாரணமாக username "alex" உடன் register செய்கிறேன். database இல் இங்கே ஏற்கெனெவே username "alex" இருக்கிறது. |
0:47 | ஆகவே username ஐ நாம் சோதிக்க வேண்டும். |
0:50 | username ஏற்கெனெவே டேடாபேஸில் இருந்தால் user ஐ register செய்ய விட மாட்டோம். ஏனென்றால் ஒரே பெயர் இரு முறை வரக்கூடாது. |
1.01 | நான் இங்கு register செய்தால் ... password ஐ இட்டு username ஐ "alex" என எழுதினால்.... username "alex" ஏற்கெனெவே database இல் இருக்கிறது. |
1:13 | இப்போது register ஐ சொடுக்க... |
1:20 | வெற்றிகரமாக register ஆகிவிட்டது. |
1:23 | database ஐ பார்க்கலாம். இரண்டு username கள் alex என இருக்கின்றன. |
1:28 | இது log in இல் பிரச்சினை செய்யும். |
1:31 | அந்த பெயரின் முதல் நிகழ்வு log in ஆகும். மற்றது உதாசீனப்படுத்தப்படும். |
1:39 | ஆகவே இவரால் database க்கு login செய்யவே முடியாது. |
1:44 | ஆகவே இதை நீக்கலாம். |
1:48 | username ஏற்கெனெவே இருக்கிறதா என்பது சோதிக்கப்பட வேண்டும். |
1:53 | இது முகச்சுலபம். இதை செய்ய ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகள் உள்ளன. |
1:59 | நான் இருப்பதிலேயே சுலபமான செயல்திறன் மிக்க வழியை சொல்லுகிறேன். |
2:05 | முதலில் code ஐ database க்கு இணைக்க அமைக்க வேண்டும். |
2:12 | என் databaseஐ தேர்ந்தெடுப்பேன். இது submit button சோதிக்கப்பட்டவுடன் நிகழ வேண்டும். |
2:20 | ஆகவே, database க்கு அது இணைக்கிறது. உள்ளே போய்விட்டேன். |
2.26 | இதன் கீழே username ஐ சோதிக்க code ஐ ஆரம்பிக்கலாம். |
2:31 | இந்த சோதனையை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். நான் அதை இங்கே இட்டு மீதி script ஐ நிறுத்திவிடுவேன். |
2.39 | username கண்டு பிடிக்கப்பட்டால் அதை எங்கே வேண்டுமானாலும் வைக்கலாம். |
2:44 | உங்கள் website இல் இதற்கு ஒரு முழு பக்கம் இருக்கட்டும். die function மீதி code ஐ நிறுத்திவிடும். ஆகவே இதை நான் பரிந்துரைப்பதில்லை. |
2:53 | இருக்கும் அடுத்த statement இல் checks ஐ case செய்து வைத்துக்கொள்ளலாம். மேலும் script ஐ நிறுத்த வேண்டாம். |
3:00 | நாம் என்ன செய்ய முயல்கிறோம் என்று பொதுவாக புரிந்து விடும். |
3:06 | குறிப்பிட்ட username உள்ள record ஐ தேர்வு செய்ய ஒரு query ஐ type செய்ய வேண்டும். |
3:12 | ஆகவே சொல்வது "namecheck query"... variable "namecheck" மற்றும் இது ஒரு mysql query. |
3.21 | எளிதாக இருக்க "username" ஐ தேர்கிறேன். இது எல்லா data வையும் தேர்வு செய்யாது. |
3:27 | ஆகவே username ஐ users இலிருந்து தேர்வு செய்கிறேன். |
3:35 | அதுவே இங்கே நம் table name . |
3:39 | சொல்வது எங்கே username is equal to... இங்கே form ஐ submit செய்யும் பயனரின் username தேவை. அது "username" variable name ஆகும். |
3:50 | ஆகவே இங்கே வந்து "username" என்று type செய்தால் போதும். |
3:55 | இப்போது name "alex" என இருந்தால் database இல் username "alex" என்று இருக்கும் எல்லா record களையும் இது தேர்ந்தெடுக்கும். அதை சற்று நேரத்தில் பார்த்துவிடலாம். |
4:09 | இதை ஒரே ஒரு record உடன் சொன்னால் ... |
4:15 | உதாரணமாக username "Dale" என்றால் எந்த record உம் வராது. |
4:20 | ஆகவே username இல்லையானால் எந்த record உம் திரும்பாது. ஆகவே தேவையானது எத்தனை record கள் திரும்பின என சோதிக்க ஒரு function . |
4:29 | இதை ஒரு count variable ஐ உருவாக்கி செய்யலாம். அது "mysql num rows". |
4:36 | அது "namecheck" என்னும் உங்கள் query திருப்பும் records அல்லது இருக்கும் rows இன் எண்ணிக்கையை திருப்புகிறது. |
4:47 | ஆகவே இதை சோதிக்கலாம். எண்ணிக்கையை echo out செய்து பின் script ஐ கொல்லுவேன். |
4:53 | மீதி code execute ஆகாது. |
4:57 | register க்கு திரும்பிப்போகலாம். fullname "alex" என type செய்கிறேன். |
5:03 | Fullname, ஒரு username ஐ தேர்வோம். "Dale" என தேர்கிறேன். |
5:10 | password சோதிக்கப்படாது. ஆகவே அதை விட்டுவிடலாம். |
5:16 | இருந்தாலும் அதை இங்கே இட்டு Register ஐ சொடுக்குகிறேன். |
5:24 | zero திரும்புகிறது. |
5:28 | ஏனெனில் "Dale" data base இல் username ஆக இல்லை. |
5:32 | இருந்தாலும் "alex" என இட்டால்... அது சின்ன "a". |
5:39 | சிலது வருகிறது ... strip tags. அது case sensitivity உடன் வேலை செய்ய.... ஆகவே இது இன்னொரு குறிப்பு. |
5:49 | username ஐ கணக்கில் எடுத்துக்கொண்டால் சொல்வது... "str to lower" இங்கே... அது எப்போதும் lowercase ஆக மாற்றப்படுவதற்கு.... |
6:01 | நாம் செய்யப்போவது ... அதை கண்டுபிடிக்க வேண்டும் .... Register ஐ சொடுக்க... |
6:08 | திருப்பப்பட்ட மதிப்பு ஒன்று. |
6:12 | ஆகவே இங்கே நாம் சோதிப்பது - நாம் echo out செய்யும் variable, is not equal to zero,... பின் user க்கு சொல்ல வேண்டியது username ஏற்கெனெவே register ஆகிவிட்டது. |
6:25 | ஆகவே இங்கே ஒரு எளிய if statement மற்றும் நம் block ஐ உருவாக்கலாம். |
6:29 | பின் நாம் சொல்வது count doesn't equal zero, அதாவது இந்த username நிபந்தனையுடன் ஒரு record உடன் இருக்கிறது... |
6:40 | ... பின் script ஐ கொன்று விட்டு சொல்வது "Username already taken" அல்லது அது போன்ற ஏதும். இங்கே திரும்பி வந்து refresh செய்யலாம். |
6:50 | "alex" ஐ தேர்வோம். ஒரு password உள்ளிட்டு register ஐ சொடுக்கலாம். |
6:56 | "Username already taken" error எழுவதை காணலாம். |
7:00 | ... new name ஐ தேர்ந்து "Dale" ஐ type செய்தால் .. மற்றும் password மற்றும் register ஐ சொடுக்கலாம். database இல் வெற்றிகரமாக register ஆகிறது. ஏனெனில் இந்த username இருப்பில் இல்லை. |
7:15 | ஆகவே அத்துடன் விட்டுவிடலாம். register செய்யப்பட்ட user உள்ளே போக முடிகிறது. |
7:22 | ஒரு "str to lower" function ஐ சேர்த்தால் எல்லாம் எளிதாக முடிகிறது. |
7:29 | அல்லது இந்த "str to lower" function ஐ உங்கள் if statement இல் வைக்கலாம். |
7:32 | இருந்தாலும் எல்லா usernames ஐயும் lowercase க்கு மாற்றுவது நல்லதே. |
7:39 | இதை ஒரு login script இலும் சேர்க்க வேண்டும். user... login box இல் டைப் செய்யும் எதையுமே lowercase ஆக மாற்ற வேண்டும். |
7:48 | இத்துடன் விளையாடி பாருங்கள். அது error களை கண்டுபிடிக்க நல்ல வழி. |
7:53 | முயற்சி செய்து பாருங்கள். உதவி தேவையானால் மின்னஞ்சல் அனுப்புங்கள். Updates க்கு subscribe செய்யுங்கள். |
7:58 | பார்த்தமைக்கு நன்றி. இதற்கு தமிழாக்கம் கடலூர் திவா. குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி |