C-and-C++/C3/Arrays/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:14, 11 December 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration


00.01 C மற்றும் C++ ல் Arraysக்கான spoken tutorial க்கு நல்வரவு.
00.07 இந்த tutorial லில் நாம் கற்கபோவது,
00.09 array என்றால் என்ன.
00.11 array ஐ Declare செய்வது.
00.13 array ஐ initialize செய்வது.
00.16 arrayக்கு சில உதாரணங்கள்
00.18 சில பொதுவான பிழைகள் அவற்றிற்கான தீர்வுகள்
00.22 இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது,
00.25 Ubuntu இயங்குதளம் version 11.04
00.30 gcc மற்றும் g++ Compiler version 4.6.1 .


00.36 Arrayக்கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்.
00.39 Array என்பது data அல்லது ஒரே data-type கொண்ட elementகளின் தொகுப்பு ஆகும்.
00.44 Array index 0லிருந்து ஆரம்பிக்கிறது.
00.48 முதல் element... index 0 ல் சேமிக்கப்படுகிறது.
00.52 மூன்று வகை arrayகள் உள்ளன:
00.55 Single dimensional array.
00.57 Two dimensional array மற்றும்
00.59 Multi-dimensional array.
01.01 இந்த tutorial லில் single dimensional array பற்றி விவாதிப்போம்.
01.06 single dimensional array ஐ declare செய்வதைக் காண்போம்.
01.09 அதற்கு Syntax:
01.11 data-type... arrayன் பெயர் பின் அளவு
01.16 உதாரணமாக, இங்கே 5 elementகளைக் கொண்ட star என்ற ஒரு integer array ஐ declare செய்துள்ளோம்
01.24 array index star 0 ல் ஆரம்பித்து star 4 வரை
01.29 ஒரு arrayஐ declare செய்வதைப் பார்த்தோம்


01.32 இப்போது ஒரு arrayஐ Initialize செய்வதைக் காணலாம்.
01.35 இதற்கு Syntax:
01.38 data-type, arrayன் பெயர் , அளவு..... is equal to elements


01.44 உதாரணமாக இங்கே அளவு 3 உடன் integer array star ஐ declare செய்துள்ளோம். அந்த array ன் elementகள் 1,2 மற்றும் 3
01.54 இங்கே index star 0 ல் ஆரம்பித்து star 2 வரை
01.59 இப்போது உதாரணங்களுக்கு வருவோம்
02.01 programஐ editorல் ஏற்கனவே எழுதிவைத்துள்ளேன்.
02.04 அதை திறக்கிறேன்.
02.06 நம் file பெயர் array.c என்பதை கவனிக்க .


02.10 இந்த programல், array ல் சேமிக்கப்பட்ட elementகளின் கூட்டுத்தொகையைக் கணக்கிடுவோம்
02.16 இப்போது இந்த code ஐ விளக்குகிறேன்
02.18 இது நம் header file.


02.20 இது நம் main function.


02.22 இங்கே, அளவு 3 உடன் array star ஐ declare மற்றும் initialize செய்துள்ளோம்
02.28 array ன் elementகள் 4, 5 மற்றும் 6
02.33 பின் ஒரு integer variable sum ஐ declare செய்துள்ளோம்
02.36 இங்கே array ன் element களை கூட்டி முடிவை sumல் சேமிக்கிறோம்.
02.41 4 index 0ல் சேமிக்கப்படும், 5 index 1ல் சேமிக்கப்படும் மற்றும் 6 index 2 ல் சேமிக்கப்படும் என்பதைக் கவனிக்கவும்
02.50 பின் sumஐ அச்சடிக்கிறோம்.
02.52 இது நம் return statement.
02.54 இப்போது Saveல் சொடுக்கவும்.
02.57 programஐ இயக்குவோம்.
02.59 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கவும்
03.09 compile செய்ய எழுதுக, gcc space array dot c space hypen o array பின் Enter ஐ அழுத்துக.
03.19 இயக்க எழுதுக, dot slash array. Enterஐ அழுத்துக
03.24 இங்கே வெளியீடு காட்டப்படுகிறது,
03.26 The sum is 15.
03.28 இப்போது நாம் சந்திக்கக்கூடிய சில பொதுவான பிழைகளைக் காணலாம்


03.32 programக்கு வருவோம்.
03.34 இங்கே வரி எண் 4 ல் curly bracketகளை மறக்கிறோம் எனில்.
03.39 Saveல் சொடுக்குவோம். நடப்பதைக் காண்போம்
03.42 terminalக்கு வருவோம்.
03.44 முன்பு போல compile செய்வோம்.
03.47 ஒரு பிழையைக் காண்கிறோம்
03.49 Invalid initializer மற்றும் Expected identifier or bracket before numeric constant.
03.56 இது ஏனெனில் arrayகளை curly bracketகளினுள் initialize செய்ய வேண்டும்.
04.01 நம் programக்கு வருவோம். இந்த பிழையை சரிசெய்வோம்.
04.04 இங்கே வரி எண் 4 ல் curly brackets ஐ இடுவோம்.
04.09 இப்போது Saveல் சொடுக்குக
04.12 இயக்குவோம். terminal க்கு வருவோம்
04.15 முன்பு போல compile செய்வோம். முன்புபோல இயக்குவோம்.


04.19 ஆம் இது வேலை செய்கிறது


04.21 இப்போது இதே program ஐ C++ல் இயக்குவோம்.
04.25 நம் programக்கு வருவோம்.
04.28 இங்கே சிலவற்றை மாற்றுகிறேன்.
04.30 முதலில் Shift , Ctrl மற்றும் S விசைகளை ஒருசேர அழுத்துக
04.38 இப்போது dot cpp extension உடன் file ஐ சேமிக்கவும். Saveல் சொடுக்குக
04.44 header file ஐ iostream என மாற்றுவோம்
04.49 இப்போது using statementஐ சேர்ப்போம்
04.55 ஒரு array ஐ declare மற்றும் initialize செய்வது C++ ல் ஒன்றே.
05.01 எனவே இங்கு எதையும் மாற்ற வேண்டியதில்லை.
05.04 இப்போது printf statement ஐ cout statementஆக மாற்றுவோம்.
05.09 format specifier மற்றும் back slash nஐ நீக்குக, இப்போது commaஐ நீக்கி இரு opening angle bracketகளை இடுக
05.17 இங்கே bracket ஐ நீக்குக. மீண்டும் இரு opening angle bracketகளை இட்டு இரட்டை மேற்கோள்களில் எழுதுக back slash n
05.26 இப்போது Saveல் சொடுக்குக.
05.29 இயக்குவோம். terminalக்கு வருவோம்.
05.32 compile செய்ய எழுதுக, g++ space array dot cpp space hyphen o space array1.
05.42 இங்கே array1 உள்ளது. ஏனெனில் நாம் file array dot c க்கான வெளியீட்டு parameter array ஐ overwrite செய்ய விரும்பவில்லை
05.51 இப்போது Enterஐ அழுத்துக.
05.54 இயக்க எழுதுக, dot slash array1. Enterஐ அழுத்துக
05.59 வெளியீடு காட்டப்படுகிறது, The sum is 15
06.02 இது நம் C code போன்று இருப்பதைக் காணலாம்
06.07 இப்போது மற்றொரு பொதுவான பிழையைக் காணலாம்.


06.10 programக்கு வருவோம்
06.12 இங்கே வரி எண் 7
06.14 star[1], star[2] மற்றும் star[3] என எழுதுகிறேன் எனில்
06.23 Saveல் சொடுக்குக.
06.24 இயக்குவோம். நம் terminalக்கு வருவோம்
06.28 promptஐ துடைக்கிறேன்.
06.30 முன்பு போல compile செய்வோம்.
06.33 முன்புபோல இயக்குகிறோம்.
06.36 எதிர்பாராத வெளியீட்டைக் காண்கிறோம்.


06.39 இது ஏனெனில் array index 0லிருந்து ஆரம்பிக்கிறது.
06.43 நம் programக்கு வருவோம். array index ஒன்றிலிருந்து ஆரம்பிப்பதை இங்கு காணலாம்.
06.49 எனவே இது ஒரு பிழையைத் தருகிறது. பிழையைச் சரிசெய்வோம்.
06.54 இங்கே 0ஐ இடுக. 1 மற்றும் 2. Saveல் சொடுக்குக
07.02 இயக்குவோம். நம் terminalக்கு வருவோம்
07.05 முன்புபோல compile செய்வோம். முன்புபோல இயக்குவோம்
07.09 ஆம் இது வேலைசெய்கிறது.
07.12 இப்போது, நம் slideகளுக்கு வருவோம்
07.14 சுருங்கசொல்ல
07.16 இந்த tutorial லில் நாம் கற்றது,


07.19 Arrays.
07.20 Single Dimensional Arrays ஐ declare செய்வது.
07.23 Single Dimensional Arrays ஐ initialize செய்வது.


07.26 உதாரணமாக int star[3]={4, 5, 6}
07.31 arrayன் elementகளை சேர்க்க, உதாரணமாக sum is equal to star 0 plus star 1 plus star 2
07.40 பயிற்சியாக,
07.41 ஒரு array ல் சேமிக்கப்பட்ட elementகளின் வித்தியாசத்தைக் கணக்கிட ஒரு program எழுதுக.


07.47 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
07.50 இது Spoken Tutorial திட்டத்தைச் சுருங்க சொல்கிறது
07.53 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
07.57 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
08.06 மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
08.13 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

08.25 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
08.30 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Pratik kamble, Priyacst