C-and-C++/C2/Nested-If-And-Switch-Statement/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:05, 6 December 2013 by Dr.T.Vasudevan (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:01 C மற்றும் C++ ல் Nested if மற்றும் Switch statements குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:07 இதில் nested if statement மற்றும் switch statement ஐ பயன்படுத்துவதைக் கற்போம்.
00:13 சில உதாரணங்களின் உதவியுடன் இதை செய்யலாம்.
00:17 இதை பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது,
00:20 Ubuntu இயங்குதளம் version 11.10
00:24 gcc மற்றும் g++ Compiler version 4.6.1
00:30 முதலில் nested if மற்றும் switch statementஐ உதாரணங்களுடன் எழுதுவதைக் கற்போம்.
00:36 program ஐ ஏற்கனவே எழுதியுள்ளேன்
00:39 அதைக் காண்போம்
00:40 இந்த programல், integersன் வீச்சை சோதிக்க கற்போம்.
00:45 நம் file பெயர் nested-if.c என்பதைக் கவனிக்க
00:50 இப்போது codeஐ விவரிக்கிறேன்.
00:52 இது நம் Header file.


00:54 இது நம் main function.


00:56 main functionனுள் இரு integer variableகள் 'x மற்றும் y'ஐ declare செய்துள்ளோம்.
01:02 இங்கே 0 லிருநது 39க்குள் ஒரு எண்ணை உள்ளிடச் சொல்லி பயனரைக் கேட்போம்.
01:08 y ன் மதிப்பை உள்ளீடாக பயனரிடமிருந்து பெறுவோம்.
01:12 இது நம் if condition
01:14 இங்கே y/10 ஆனது 0க்கு சமமா என சோதிப்போம்
01:19 condition உண்மையெனில்
01:20 அச்சடிப்பது "you have entered the number in the range of 0 to 9.
01:25 இது else-if condition.
01:28 இங்கே y/10 ஆனது 1க்கு சமமா என சோதிப்போம்
01:32 condition உண்மையெனில்.
01:34 அச்சடிப்பது you have entered the number in the range of 10 to 19.
01:39 இந்த else if condition ல் அந்த எண்... 20 லிருந்து 29 க்குள் இருக்கிறதா என சோதிப்போம்.
01:45 இங்கே அந்த எண் 30 லிருந்து 39 க்குள் இருக்கிறதா என பார்ப்போம்.
01:51 இது நம் else condition.


01:53 மேற்சொன்ன அனைத்து conditionகளும் பொய் எனில்
01:55 அச்சடிப்பது number not in range.
01:58 இது நம் return statement
02:01 இப்போது programஐ இயக்குவோம்.
02:03 Ctrl+Alt+T விசைகளை ஒருசேர அழுத்தி terminal windowஐ திறக்கவும்.
02:12 இயக்க எழுதுக “gcc” space “nested-if.c” space hyphen “-o” space “nested”. Enter செய்க
02:23 எழுதுக dot slash “nested”. Enter செய்க
02:28 பார்ப்பது Enter a number between 0 to 39.
02:32 12 ஐ தருகிறேன்
02:34 காட்டும் வெளியீடு:
02:35 you have entered the number in the range of 10 to 19.
02:40 மற்றொரு எண்ணைத் தருவோம்.
02:42 மீண்டும் இயக்குவோம். மேல் அம்புக்குறியை அழுத்தி enter செய்க.
02:48 இம்முறை 5 என தருகிறேன்.
02:50 காணும் வெளியீடு:
02:52 you have entered the number in the range of 0 to 9.
02:56 இந்த conditionன் இயக்கத்தை மற்றொரு வழியிலும் செய்யலாம்.
03:00 'switch statement ஐ பயன்படுத்துவதன் மூலம்
03:02 இதை பார்க்கலாம்.
03:05 அதே program ஐ switch பயன்படுத்திக் காண்போம்.
03:08 ஏற்கனவே programஐ திறந்துவைத்துள்ளேன்.


03:10 text editorக்கு திரும்பி வருவோம்
03:13 இதை முன் programல் விளக்கியுள்ளேன்.
03:16 எனவேSwitch statementsக்கு செல்கிறேன்


03:20 இங்கே, உள்ளீடு அதாவது y ஐ 10 ஆல் வகுப்போம். முடிவு variable x ல் சேமிக்கப்படுகிறது.
03:28 அதாவது ஈவு x ல் சேமிக்கப்படும்.
03:32 ஈவு கொண்டு அந்த எண்ணின் வீச்சைக் கண்டறியலாம்.
03:36 இங்கே, சோதிக்கப்பட வேண்டிய variable x என switch command க்கு சொல்கிறோம்.
03:41 இது case 0 . case 0 பூர்த்தியடைகிறது எனில்.
03:45 அச்சடிப்பது you have entered the number in the range of 0 to 9.
03:51 case பூர்த்தியடைகிறது எனில் loop ஐ விட்டு வெளியேற break ஐ சேர்க்கிறோம்.
03:55 ஒவ்வொரு முறையும் loop ஐ break செய்ய வேண்டும்.
03:58 ஏனெனில் ஒரு நேரத்தில் ஒரு condition மட்டுமே உண்மையாக இருக்கும்.
04:03 இது “case 1” . “case 1” என்பது x ன் மதிப்பு 1” எனில்


04:08 அச்சடிப்பது you have entered the number in the range of 10 to 19.
04:12 இது “case 2” .
04:14 இங்கு அச்சடிப்பது you have entered the number in the range of 20 to 29.
04:20 இது case 3. இங்கே அந்த எண் 30லிருந்து 39க்கு இருக்கிறதா என சோதிக்கிறோம்.
04:26 இது default case. மேலுள்ள எந்த case உம் பூர்த்தியடையவில்லை எனில் என்ன செய்யவேண்டும் என Default case குறிப்பிடுகிறது.
04:36 இங்கே வீச்சில் இல்லாத எண்ணை அச்சடிப்போம்.


04:39 இது நம் return statement.
04:41 programஐ இயக்குவோம்.


04:43 terminalக்கு வருவோம்.
04:46 எழுதுக :gcc space switch.c space -o space switch. Enter செய்க
04:55 எழுதுக :./switch. Enter செய்க


05:00 Enter a number between 0 to 39. 35 ஐ கொடுக்கிறேன்
05:06 காட்டப்படும் வெளியீடு,“you have entered the number in the range of 30 to 39”.
05:10 இப்போது program ஐ C++ல் இயக்குவதைக் காணலாம்.
05:16 text editorக்கு வருவோம்.
05:18 நம் fileபெயர் nested-if.cpp என்பதைக் கவனிக்க
05:23 இங்கே logic மற்றும் செயல்படுத்துதல் ஒன்றே
05:27 இதுபோன்ற சிறு மாற்றங்கள் உள்ளன:
05:30 header file... stdio.h இருந்த இடத்தில் iostream
05:35 இங்கே using statementஐ சேர்த்துள்ளோம்.
05:39 Using namespace std
05:41 printf மற்றும் scanf இருந்த இடத்தில் cout மற்றும் cin function.
05:46 மீதி code நம் C program போலவே உள்ளதைக் காணலாம்.
05:51 codeஐ இயக்கலாம்.
05:53 terminalக்கு வருவோம்.
05:56 எழுதுக : g++ space nested-if.cpp space -o space nested1. Enter செய்க.
06:07 எழுதுக: ./nested1. Enter செய்க
06:11 enter a number between 0 and 39. 40ஐ தருகிறேன்.
06:16 காணும் வெளியீடு: “number not in range”
06:20 இப்போது C++ ல் switch program க்கு வருவோம்
06:24 text editorக்கு வருவோம்.
06:27 இங்கேயும் logic மற்றும் செயல்படுத்துதல் ஒன்றே.
06:31 header file... iostream என காண்கிறோம்
06:34 இங்கே using statement உள்ளது.
06:37 cout மற்றும் cin functionஐ மாற்றியுள்ளோம்

.

06:41 மீதி code நம் switch.c program போன்றதே
06:45 இயக்குவோம்.
06:46 terminalக்கு வருவோம்.
06:48 எழுதுக : g++ space switch.cpp space -o space switch1. Enter செய்க
06:58 எழுதுக ./switch1. Enter செய்க
07:02 Enter a number between 0 and 39.
07:05 25ஐ தருகிறேன்.
07:09 காணும் வெளியீடு:
07:11 “you have entered the number in the range of 20 to 29”
07:15 இப்போது நம் slideகளுக்கு வருவோம்.
07:18 switch மற்றும் nested-if statementஐ ஒப்பிட்டுப் பார்ப்போம்.


07:23 Switch statement... expressionன் முடிவின் படி மதிப்பிடப்படுகிறது.
07:28 expressionன் முடிவு உண்மையாக இருந்தால் மட்டுமே Netsed-if statement இயக்கப்படுகிறது.
07:34 switch ல் variableன் பல மதிப்புகளை caseகளாக பயன்படுத்துகிறோம்.
07:39 nested-ifல் variableன் ஒவ்வொரு மதிப்புக்கும் conditional statement ஐ எழுத வேண்டும்.
07:45 Switch statement... integer மதிப்புகளை மட்டும் சோதிக்கிறது
07:50 Nested if... integer மற்றும் பின்ன மதிப்புகளையும் சோதிக்கும்.
07:55 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
07:58 சுருங்கசொல்ல.
08:00 இந்த tutorial லில் கற்றது, nested if statement.
உதாரணமாக: else if( y/10 equals to 0) 
08:08 switch statement.

உதாரணமாக. Switch(x)

08:12 nested-if மற்றும் switch statementகளுக்கிடையேயான வேற்றுமைகள்


08:16 பயிற்சியாக,
08:17 ஊழியரின் வயது 20 லிருந்து 60க்குள் இருக்கிறதா என சோதிக்க ஒரு program எழுதுக.
08:23 இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial
08:29 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
08:33 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
08:42 மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
08:49 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

08:58 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
09:04 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Dr.T.Vasudevan, Priyacst