Spoken-Tutorial-Technology/C2/Guidelines-for-recording-and-narration/Tamil
Time | Narration |
---|---|
00.00 | Spoken Tutorial ஐ பதிவு செய்வதற்கும் பேசுவதற்க்குமான வழிமுறைகள் குறித்த tutorialக்கு நல்வரவு. |
00.07 | முன்னதாக http://www.spoken-tutorial.org தளத்தில் கிடைக்கும் Spoken Tutorial இன் அறிமுகத்தைக் கேட்கவும். |
00.17 | tutorial உருவாக்கம் script எழுதுவதன் மூலம் ஆரம்பிக்கிறது |
00.21 | பதிவு செய்யும்முன் அந்த Script மதிப்பிடப்பட வேண்டும். |
00.24 | Script மதிப்பிடப்பட்டு அனுமதிக்கப்பட்ட பின்னரே tutorial ஐ பதிவு செய்ய வேண்டும் |
00.29 | ஒரு tutorial ஐ பதிவுசெய்தல் ஒரே சமயம் இரு நடவடிக்கைகளைக் கொண்டது. ,
Narration மற்றும் Screen casting |
00.36 | கீழ்க்கண்டவை பதிவு செய்யும் முன்னர் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் |
00:43 | ஒரு laptop பயன்படுத்துகையில் battery charge செய்து, power chord ஐ disconnect செய்யவும். இல்லை எனில் ரீங்காரங்கள் அல்லது எதிரொலிகள் கேட்கும். |
00:51 | பதிவு செய்யும் முன் fan ஐ switch off செய்யவும். |
00:54 | இது வெளியிலிருந்து வரும் இரைச்சலையும் நீக்க உதவும். |
00.57 | வெளி இரைச்சலோடு ஒரு tutorial ஐப் பார்ப்போம்.
இதை செய்து காட்ட சில fileகளைச் சேமித்திருக்கிறேன். |
01.16 | நீங்கள் head phone ஐ பயன்படுத்தவில்லை எனில் முனுமுனுக்கும் இரைச்சல் தெளிவாக இருக்காது/கேட்காது . |
01.22 | mobile களை அணைக்கவும் .
Silent mode லும் தொந்தரவாக இருக்கும் . |
01.28 | உதாரணமாக ஒரு cell phone silent mode இல் இருக்கையில் பார்ப்போம். |
01.41 | சிறந்த spoken tutorial ஐ உருவாக்க நிசப்தமான studio தேவையில்லை . |
01.50 | பறவைகள், போக்குவரத்து போன்ற வெளியிலிருந்து வரும் ஒலிகளைத் தடுக்க ஜன்னல்கள், கதவுகளை மூடினால் போதும். |
01.53 | கார் ஒலி உதாரணத்தைப்பார்ப்போம்.
இந்த tutorial க்குச் சில வழிகாட்டுதல்களை முன் வைப்போம். Terminal font பெரிது என்பதை உறுதி செய்யவும்.குறைந்த பட்சம் 20 point பயன்படுத்தவும். |
02.15 | சிறிய மற்றும் பெரிய fontகளுக்கு உதாரணங்களைப் பார்ப்போம்.
சிறிய font video வின் தரத்தை மோசமாக்கும். |
02.31 | பெரிய fonts உடன் கூடிய ஒரு வீடியோவை இப்போது காணலாம்.
பதிவுசெய்யும்போது போது font இருக்கவேண்டிய முறையை இது காட்டுகிறது.. |
02.46 | குறைந்த பட்சம் 24 point font அளவை slideகளில் பயன்படுத்தவும்.
17 pt. என்னும் beamer command மூலம் செயல்படுத்தப்படும் 32 point font அளவைப் பயன்படுத்துகிறேன். |
03.01 | பெரிதாக்கப்படாத windowகள் –அவற்றை ஒன்றன் மீது ஒன்றாக வைக்கவும்.
இது ஒரு window விலிருந்து இன்னொன்றுக்கு எளிதாக மாற்ற அனுமதிக்கும். |
03.10 | உங்களால் window selection ஐ எளிதாகக் காண முடியும்.
பெரிதாக்கப்பட்ட windowகளைப் பயன்படுத்தினால் இதைக் காண்பது கடினம். |
03.18 | நான் பதிவு செய்யும் நடப்பு tutorial க்கு windowகளை ஒன்றன்மீது ஒன்றாக வைக்கும் முறையில் வைத்துள்ளேன்.
இது windowகளுக்கிடையே மாறுவதற்கும், windowகளை தேர்வதற்க்கும் எளிதாக இருப்பதைக் காணலாம். இது PDF file, இது internet browser மேலும் இது உதாரண folder. |
03.46 | latex குறித்த இந்த tutorial இல் இப்போது பார்க்கிற மாதிரியான வித்தியாசமான முறையில் கூட நீங்கள் windowகளை மாற்றி வைக்கலாம் .
இது terminal, இது editor மற்றும் இது pdf file. பதிவு செய்கையில் செய்யவேண்டியதைக் குறித்த வழிக்காட்டுதலை இப்போது முன் வைப்போம் . |
04.05 | உங்கள் வாயிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் மைக்கை நிலை நிறுத்தவும். .
இது ஒலி அளவை சீராக வைக்கும். |
04.11 | இந்த விதியை நீங்கள் பின்பற்றாவிட்டால் என்ன நடக்கும் என்பதைக் காணலாம். அதை அருகில் கொண்டு வருகிறேன்.
இப்போது நம்மால் சத்தமாய்க் கேட்க முடிகிறது. பதிவு செய்கையில் mic input உடன் உள்ள headset ஐ பயன்படுத்தவும். இல்லை எனில் குரலில் எதிரொலிகளோ சீரற்ற முனுமுனுப்புகளோக் கேட்கலாம் |
04.51 | இப்போது உச்சரிப்பு குறித்துக் கூற விரும்புகிறேன்.
தெளிவாகப் பேசவும், இயல்பாகவும் உச்சரிப்பில் எந்த அழுத்தத்தையும் வலியத் திணிக்காமலும் பேசவும். |
05.00 | ஒரு செயற்கையான உச்சரிப்பு மாதிரியைப்பார்ப்போம்; of the basic function to create a new file go to the menu .
பதிவு முழுவதும் ஒரே தொனியில் பெற ஒரே முறையில் முழு tutorial ஐயும் பதிவு செய்யவும். . சில செயல்பாடுகளினால் நீண்ட தாமதம் ஏற்பட்டால், screen casting software இல் உள்ள pause feature பயன்படுத்தவும். இது தேவையற்ற காட்சிகளைக் குறைக்கும். |
05.34 | யாராலும் முதல்முறையிலேயே பதிவு செய்தலை சரியாகச் செய்ய முடியாது, ஆகவே இரு நிமிடங்கள் கொண்ட ஒரு உதாரணப் பதிவை செய்ய பரிந்துரைக்கிறேன்.
spoken tutorial குழுவிடம் கருத்துக்கு இதைச் சமர்ப்பிக்கவும். அங்கீகரிக்கப்பட்ட பின்னரே கடைசி பதிவுசெய்தலைச் செய்யலாம். |
05.50 | narrationக்கான வழிக்காட்டுதல் குறித்த மேலதிகத் தகவல்களுக்கு, இந்த wiki பக்கத்திற்குச்செல்லவும். |
05.56 | screen castingக்கான வழிக்காட்டுதல் குறித்தும் கற்றதை உறுதி செய்யவும்.
பதிவு செய்ய நாம் பரிந்துரைப்பது இலவச திறந்த மென்பொருட்களான. *linux ல் Record my desktop * windows ல் Camstudio |
06.15 | record my desktop பயன்படுத்துவது குறித்து அறிய http://www.spoken-tutorial.org.
தளத்துக்குச் செல்லவும் record my desktop பயன் படுத்துவது குறித்த tutorial ஐ இங்கே காணலாம். |
06.33 | windows ல் camstudio, குறித்து அறிய இங்கே செல்லவும்.
இது பல மொழிகளிலும் கிடைக்கிறது. |
06.44 | சுய சரிபார்த்தலுக்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள checklist ஐ காணவும் |
06.51
ஒரு முழுமையான spoken tutorial தரப் பரிசோதனை ஒரு புதிதாய்க் கற்பவர் Spoken Tutorial Admn. Team பின்னர், ஒரு வல்லுநர் மூலம் செய்யப்படுகிறது. | |
07.04 | ஒரு புதிதாய்க் கற்பவர் குறிப்பிட்ட foss க்குப் புதியவராக இருப்பவர்.
புதிதாய் கற்பவர் tutorial இல் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் மூலம் பயிற்சியைச் சோதனை செய்வார். . புதிதாய்க் கற்பவர் பிழைகளைச் சந்தித்தால் அவை tutorial ஐ உருவாக்கியவர் மூலம் சரி செய்யப்படும். |
07.22 | spoken tutorial admin குழு
அளவுருக்களான audio ன் தரம், video ன் தரம் ஆகியன நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் உள்ளனவா என சோதிக்கிறது |
07.34 | Spoken Tutorial Admn. குழு checklistல் கொடுக்கப்பட்ட கட்டளை விதிகளைச்சோதிக்கும்.
வல்லுநரோ இந்தப் checklist ன்அடிப்படையில் சோதிப்பார். |
07.45 | வல்லுநர் மாற்றங்களை அறிவுறுத்தினால் படைப்பாளி மாற்றங்களை ஒருங்கிணைத்து tutorial ஐக் கற்கச் சிறப்பானதாக மாற்றுகிறார். . |
07.54 | இந்த tutorial இல் பதிவு செய்யும் முன்னர், பதிவு செய்கையில்,மற்றும் பதிவு செய்த பின்னர் செய்ய வேண்டியதையும், tutorial உருவானதும் சோதிக்கும் முறையையும், மதிப்பீடு செய்வதையும் குறித்துப் பார்த்தோம். |
08.06 | பதிவு செய்வதற்கும் பேசுவதற்க்குமான வழிமுறைகள் குறித்த இந்த tutorial இத்துடன் நிறைவடைந்தது . |
08.12 | IIT-Bombay ஆல் மேம்படுத்தப்பட்ட SPOKEN TUTORIAL PROJECT.... Talk to a Teacher projectஇன் ஓர் அங்கமாகும். |
08.19 | http://spoken-tutorial.org இதை ஒருங்கிணைக்கிறது. |
08.25 | இந்திய அரசாங்கத்தின் ICT, MHRD, மூலம் National Mission on Education அமைப்பு இதற்கு ஆதரவளிக்கிறது. . |
08.34 | மேலதிகத் தகவல்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro. |
08.38 | இந்த tutorialக்கு தமிழாக்கம் Geetha Sambasivam குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி. |