LibreOffice-Suite-Base/C2/Introduction/Tamil
From Script | Spoken-Tutorial
Visual Cues | Narration |
---|---|
00:00 | LibreOffice Base குறித்த Spoken tutorial க்கு நல்வரவு |
00:04 | இந்த டுடோரியலில் நாம் கற்பது LibreOffice Base என்றால் என்ன? |
00:10 | Base ஐ பயன்படுத்த முன் தேவைகள் என்ன; |
00:12 | Base ஆல் என்ன செய்யலாம் ? |
00:14 | relational data base இன் அடிப்படைகள், புதிய database உருவாக்குதல், ஒரு table ஐ உருவாக்குதல். |
00:21 | LibreOffice Base என்பது LibreOffice suite இன் database frontend. |
00:26 | Base என்பது Microsoft Access க்கு ஒப்பானது. |
00:30 | Base பயன்படுத்தவும் வினியோகிக்கவும் விலையில்லா திறந்த மென்பொருள். |
00:37 | Base ஐ பயன்படுத்த முன் தேவைகளை காணலாம். |
00:41 | அடுத்து வருவன Microsoft Windows க்கான கணினி தேவைகள். |
00:46 | Microsoft Windows 2000 (Service Pack 4 அல்லது மேலும்), XP, Vista, அல்லது Windows 7;Pentium-compatible PC 1.5 Gb வரை வன்வட்டு இடம்; |
01:02 | Ubuntu Linux க்கான கணினி தேவைகள் இவை: |
01:06 | Linux kernel பதிப்பு 2.6.18 அல்லது மேலும்; Pentium-compatible PC |
01:15 | Windows, Linux இரண்டுக்குமே நிறுவலுக்கு 256 Mb RAM தேவை (பரிந்துரைப்பது 512 Mb RAM ) |
01:24 | கணினி தேவைகள் குறித்த முழு விவரங்களுக்கு இந்த இணையதளத்திற்க்கு செல்லவும். |
01:30 | நீங்கள் Java Runtime Environment ஐயும் நிறுவ வேன்டும். இதை கீழ் காணும் தொடுப்பில் இருந்து download செய்யலாம். http://www.java.com/en/download/index.jsp. |
01:38 | நடுவிலுள்ள சிவப்பு 'Free Java Download' என்று சொல்லும் button ஐ சொடுக்கவும். |
01:44 | file download ஆனதும் அதை இரட்டை சொடுக்கு சொடுக்கி நிறுவல் வழிகாட்டலை அனுசரிக்கவும். |
01:52 | LibreOffice Base நிறுவலை இப்போது காணலாம்: |
01:56 | நீங்கள் LibreOffice Suite ஐ முழு நிறுவல் தேர்வுடன் நிறுவி இருந்தால், |
02:03 | நீங்கள் LibreOffice Base ஐ திரையில் இடது கீழ் மூலையில் உள்ள Start menu ஐ அழுத்தி அணுகலாம். |
02:12 | All Programs இல் சொடுக்கி பின் LibreOffice Suite இல் சொடுக்கவும். |
02:21 | நீங்கள் LibreOffice Suite ஐ இன்னும் நிறுவவில்லை எனில், |
02:24 | Base ஐ அதிகாரபூர்வ வலைத்தளமான http://www.libreoffice.org க்கு சென்று 'Download LibreOffice' என்னும் பச்சை பொத்தானை சொடுக்கி நிறுவலாம். |
02:37 | விவரமான நிறுவல் வழிகாட்டி LibreOffice Suite இன் துவக்க tutorial இல் உள்ளது. |
02:43 | 'Base' ஐ நிறுவ நிறுவலின் போது 'Complete' எனும் தேர்வை செய்ய மறக்காதீர். |
02:50 | சரி, அடுத்த விஷயத்தை பார்க்கலாம். |
02:54 | LibreOffice Base ஐ கொண்டு என்ன செய்யலாம்? |
02:58 | Base ஐக்கொண்டு நீங்கள் data வை ஒழுங்கு செய்து சேமிக்கலாம். |
03:03 | data ஐ உள்ளீடு செய்யலாம், data வை form மூலம் காணலாம். |
03:08 | queriesகளால் தகவலை பெறலாம். |
03:12 | அழகான அச்சிட தயாரான report களை உருவாக்கலாம். |
03:17 | Base , நீங்கள் database களை மேலாள உதவுகிறது. |
03:21 | database என்பது ஒரு கொத்து data , forms, queries மற்றும் report களை கொண்டது. |
03:29 | உதாரணமாக, Base ஐக்கொண்டு Customer database களை மேலாளலாம்; |
03:37 | விற்பனை orderகள், மற்றும் invoiceகளை கண்காணிக்கலாம்; மாணவர்களின் grade database களை பராமரிக்கலாம், ஒரு நூலக database ஐ உருவாக்கலாம். |
03:46 | இப்போது சில database களின் அடிப்படைகளை காண்போம். |
03:51 | ஒரு database இல் data சேமிக்கப்பட்டு table களாக இருக்கிறது. |
03:56 | table களில் data தனித்தனியாக வரிகள் column களில் சேமிக்கப்படும். |
04:03 | எங்கு table கள் column களில் ஒன்றுக்கொன்று உறவு வைத்துள்ளதோ அத்தகைய database ஒரு relational database எனப்படும். |
04:15 | ஒரு நூலகத்துக்கான எளிய Database ஐ காணலாம். |
04:20 | புத்தகங்களின் தொகுப்பே நூலகம். |
04:23 | நூலக உறுப்பினர்களுக்கு books தரப்படும். |
04:28 | ஒரு புத்தகத்துக்கு தலைப்பு, ஆசிரியர், வெளியீட்டாளர், வெளியிட்ட வருடம் மற்றும் விலை உண்டு. |
04:37 | இவை characteristics அல்லது attributes எனப்படும். |
04:42 | ஒரு நூலக உறுப்பினருக்கு பெயர், தொலைபேசி எண், முகவரி ஆகியன உண்டு. |
04:48 | நூலகம் அதன் உறுப்பினர்களுக்கு மட்டுமே புத்தகங்களை தருகிறது. |
04:54 | இப்போது எப்படி நாம் இந்த data வை வரிகள், column களாக தனித்தனி table களாக சேமிக்க முடியும் என்று பார்க்கலாம். |
05:02 | ஒவ்வொரு புத்தகத்தின் தகவலும் ஒரு books table இல் ... |
05:08 | அதன் attributes column களாக சேமிக்கப்படலாம்: book title, author, publisher, year of publication மற்றும் price. |
05:19 | ஒவ்வொரு புத்தகத்தையும் uniqueஆக அடையாளம் காண ஒரு BookId column ஐ சேர்க்கலாம். |
05:27 | இப்படியாக ஒரே தலைப்பில் இரண்டு books இருக்க முடியும். |
05:33 | அதே போல, ஒரு உறுப்பினர்கள் table யில் Name, Phone போன்ற column கள் இருக்கலாம். |
05:40 | மேலும் unique ஆக Member Id column உறுப்பினரை தனியாக அடையாளம் காண <pause> |
05:47 | மூன்றாவதாக BooksIssued table மூலம் உறுப்பினர்களுக்கு கொடுத்த புத்தகங்களை பின் தொடரலாம். |
05:55 | இந்த table தரப்பட்ட புத்தகம், உறுப்பினர், கொடுத்த தேதி, திருப்ப வேண்டிய தேதி, உண்மையில் திருப்பிய தேதி, வரவு வைக்கப்பட்டதா இல்லையா ஆகியவற்றை பின் தொடரலாம். |
06:09 | இந்த table களுக்கு இடையே data வை ஒன்றிணைத்து தொடர்பு ஏற்படுத்தலாம். |
06:16 | இது 'relational databases' ஐ மேலாள உதவுகிறது. |
06:22 | relational databases குறித்து மேம்பட்ட விவரங்களுக்கு எம் மற்ற tutorials களை இங்கு சென்று பாருங்கள்: http://spoken-tutorial.org |
06:35 | சரி, நாம் லைப்ரரி என பெயரிட்ட நமது முதல் Base Database ஐ உருவாக்கலாம். |
06:43 | புதிய Database ஐ உருவாக்க, Base program ஐ துவக்குவோம். |
06:50 | பின், திரையின் கீழ் இடது மூலையில் உள்ள Start menu ஐ சொடுக்கவும். பின் All Programs, பின் LibreOffice Suite கடைசியாக LibreOffice Base. |
07:08 | database வழிகாட்டி pop-up windowவாக தோன்றுகிறது. |
07:13 | புதிய Database ஐ உருவாக்க Next button ஐ சொடுக்கவும். |
07:18 | அடுத்து வரும் window வில் Finish button ஐ சொடுக்கவும். |
07:23 | இது Save As window வை காட்டுகிறது. |
07:26 | நாம் ஒரு library Database ஐ கட்டுமானம் செய்வதால் "Library" என File Name text பெட்டியில் எழுதுவோம். |
07:36 | பின் Save button மீது சொடுக்கவும். |
07:39 | இப்போது துவக்கியாயிற்று. |
07:42 | அடுத்து, data வை சேமிக்க table களை உருவாக்குவோம். |
07:46 | புதிய table ஐ உருவாக்க, இடது பக்கம் உள்ள database பட்டியலில் tables சின்னத்தை சொடுக்கவும். |
07:54 | வலது பலகத்தில் Tasks list இல் 'create table in Design View' மீது சொடுக்க இன்னொரு window திறக்கிறது. |
08:05 | இங்கு 'BookId' என முதல் column யில் Field Name கீழ் எழுதவும். |
08:13 | Tab விசையை தட்டி Field Type column க்குச் செல்லவும். |
08:18 | BookId ஒவ்வொரு புத்தகத்துக்கும் வித்தியாசமாக இருக்குமாகையால் கீழிறங்கும் பட்டியலில் Field Type ஐ Integer என தேர்ந்தெடுக்கவும். |
08:30 | கீழே உள்ள தொகுதியில் Field Properties ஐ மாற்றவும். |
08:36 | AutoValue ஐ No இலிருந்து Yes க்கு மாற்றுக. |
08:41 | இந்த field இப்போது ஒவ்வொரு புத்தகத்தையும் unique ஆக காணும். |
08:46 | அதாவது இந்த field இல் இருப்பவை Primary விசை எனப்படும். |
08:51 | BookId புலத்தின் இடது பக்கம் மஞ்சள் விசை குறி இருப்பதை காணுங்கள். |
08:58 | இப்போது field களின் பெயர்களுக்கு Field Types தேர்ந்தெடுப்பது பற்றி காணலாம். |
09:05 | Field Types.. text, integer, numeric, decimal அல்லது date என இருக்கலாம். |
09:13 | text ஐ பயன்படுத்துவது பொது தகவல் உள்ள புலங்களில். உதாரணமாக, பெயர், தலைப்பு, முகவரி. |
09:22 | Integer, numeric, decimal ஆகியவற்றை எண்கள் மட்டும் உள்ள புலங்களில் பயன்படுத்தலாம். |
09:33 | உதாரணமாக numeric ஐ விலை குறித்த தகவலுக்கும், Integer ஐ வருடங்களுக்கும் பயன்படுத்தவும். |
09:39 | மற்ற field களை இப்போது உருவாக்கலாம். |
09:43 | Title.... Field type Text..... Author.... |
09:52 | Field type Text .... Published Year... |
10:00 | Field type Integer |
10:05 | Publisher |
10:09 | Field type Text |
10:11 | Price |
10:14 | Field type Numeric |
10:18 | Length ஐ 5 எனவும், Decimal places 2 எனவும் மாற்றவும். |
10:25 | Format example button ஐ சொடுக்கவும். |
10:30 | இது Field Format window வை திறக்கும். |
10:33 | Currency ஐ Category பட்டியலிலும் INR ஐ Format பட்டியலிலும் தேர்வு செய்க. |
10:42 | Decimal places க்கு Rs. 1234.00 என கொடுக்க இரண்டு இடங்களாகும். |
10:54 | மொத்த நீளம் ஐந்து என்பது Decimal placesஉடன் சேர்த்து என்பதை கவனிக்கவும். |
11:02 | OK button ஐ சொடுக்கவும். இப்போது Books table க்கு எல்லா column களையும் உருவாக்கிவிட்டோம். |
11:11 | table ஐ சேமிக்கலாம். |
11:14 | File menu ல் Save சின்னத்தை சொடுக்கவும். |
11:20 | table name text பெட்டியில் 'Books' என Type செய்யலாம். |
11:25 | database ‘library’ சேமிக்கப்பட்ட அதே இடத்தில் இது சேமிக்கப்படுவதை காணலாம். ஏனெனில் table கள் தரவுத்தளத்தின் பகுதியாகும். |
11:36 | ok button ஐ சொடுக்கவும். |
11:39 | அடுத்த tutorial லில் Books table யில் data ஐ சேர்ப்போம். மேலும் உறுப்பினர்கள் மற்றும் BooksIssued table களை உருவாக்கலாம். |
11:49 | இத்துடன் இந்த டுடோரியல் முடிவுக்கு வருகிறது. |
11:54 | சுருக்கமாக சொல்ல பின் வருவனவற்றை கற்றோம்: |
11:58 | LibreOffice Base என்றால் என்ன? |
12:01 | Base ஐ பயன்படுத்த முன் தேவைகள், |
12:03 | நீங்கள் Base ஆல் என்ன செய்யலாம்? Relational database அடிப்படைகள், |
12:08 | புதிய database உருவாக்குதல், ஒரு table ஐ உருவாக்குதல், |
12:13 | அடுத்து இந்த tutorial தொடரில் பார்க்க இருப்பது table கள் மற்றும் தொடர்புகள். |
12:18 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
12:24 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
12:32 | இந்த திட்டம் Spoken Tutorial.org ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது. http://spoken-tutorial.org. |
12:38 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
12:44 | தமிழாக்கம் கடலூர் திவா. |
12:54 | நன்றி. |