LibreOffice-Suite-Writer/C2/Viewing-and-printing-a-text-document/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:56, 29 November 2012 by Chandrika (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:00 அச்சடித்தல் மற்றும் ஆவணங்களை காணல் குறித்த LibreOffice Writer இன் Spoken tutorial க்கு நல்வரவு.
00:06 இந்த tutorial இல் கீழ் காண்பனவற்றை கற்போம்:
00:10 ஆவணங்களை காணல்.
00:12 ஆவணங்களை அச்சடித்தல்.
00:13 இங்கு நாம் Ubuntu Linux 10.04 ஐ நம் operating system ஆகவும் லீப்ரே Office Suite பதிப்பு 3.3.4 ஐயும் உபயோகிக்கிறோம்.
00:24 ஆகவே LibreOffice Writer இல் பல்வித காணல் தேர்வுகளை கற்பதுடன் நம் tutorial ஐ ஆரம்பிக்கலாம்.
00:31 Writer இல் அடிப்படையாக காணும் விதம் இரண்டு.
00:36 அவை “Print Layout” மற்றும்“Web Layout”.
00:39 “Print Layout” தேர்வு ஆவணம் அச்சடிக்கப்படும் போது எப்படி இருக்கும் என்பதை காட்டுகிறது.
00:45 “Web Layout” தேர்வு ஆவணம் வலை உலாவியில் காணும் போது எப்படி இருக்கும் என்பதை காட்டுகிறது.
00:50 HTML ஆவணங்களை தயாரிக்கும் போது இது மிகவும் பயனாகிறது. மேலும் திருத்தங்கள் செய்ய முழுத்திரை பாங்கில் ஆவணத்தை காணவும் இது வசதியாக இருக்கிறது.
01:00 “Print Layout” தேர்வை அணுக “View” தேர்வில் சொடுக்கி, பின் “Print Layout” தேர்வு மீது சொடுக்கவும்.
01:08 “ Web Layout” தேர்வை அணுக “View” தேர்வில் சொடுக்கி, பின் “ Web Layout” தேர்வு மீது சொடுக்கவும்.
01:19 இந்த தேர்வுகள் மட்டுமில்லாது நாம் ஆவணத்தை முழுத்திரை பாங்கிலும் காணலாம்.
01:26 menu bar இல் “View” தேர்வு மீது சொடுக்கி பின் “Full screen” தேர்வு மீது சொடுக்கவும்.
01:32 இந்த முழுத்திரை பாங்கு ஆவணங்களை திருத்தவும் projector மூலம் அவற்றை காண்பிக்கவும் பயனாகும்.
01:39 இந்த முழுத்திரை பாங்கில் இருந்து வெளியேற, விசைப்பலகையில் “Escape” விசையை தட்டவும்.
01:44 ஆவணம் முழுத்திரை பாங்கில் இருந்து வெளியேறுவதை காணலாம்.
01:49 இப்போது View menu வில் “Print Layout” தேர்வு மீது சொடுக்கலாம்.
01:53 மேலே போகுமுன் Insert >> Manual Break மூலம் ஒரு புதிய பக்கத்தை ஆவணத்தில் உள்நுழைக்கலாம். Page break தேர்வை தேர்ந்தெடுத்து சொடுக்கவும்.
02:04 பின் “OK” ஐ சொடுக்கவும்.
02:06 இன்னொரு tutorial இல் இது குறித்து மேலும் காணலாம்.
02:11 ஆவணத்தை காண இன்னொரு தேர்வு “Zoom” எனப்படும்.
02:17 menu bar இல் “View” தேர்வு மீது சொடுக்கி பின் “Zoom” மீது சொடுக்கவும்.
02:22 ஒரு “Zoom and View Layout” உரையாடல் பெட்டி நம் முன்னே தோன்றுகிறது.
02:27 “Zoom factor” மற்றும் “View layout” என்ற தலைப்புகள் உள்ளன.
02:34 “Zoom factor” நடப்பு ஆவணத்தின் அணுகல் அளவை கட்டுப்படுத்துகிறது. இது அடுத்து திறக்கும் அதே வகையான எல்லா ஆவணங்களுக்கும் கூட நடைமுறையாகும்.
02:43 இதில் பல நல்ல தேர்வுகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக காணலாம்.
02:48 “Optimal” optionஐ சொடுக்க ஆவணத்தின் சீரான காட்சி கிடைக்கிறது.
02:55 “Fit width and height” தேர்வு ஆவணத்தை கணினித் திரையின் முழு நீள அகலத்தையும் பயன்படுத்தி காட்டுகிறது. ஆகவே இது ஒரு சமயத்தில் ஒரு பக்கத்தை காட்டுகிறது.
03:05 இது ஒரு ஆவணத்தின் பல பக்கங்களை ஒரே நேரத்தில் கண்டு திருத்துவதை எளிதாக்குகிறது.
03:11 அடுத்த தேர்வு Fit to Width. இது ஆவணத்தை திரையின் முழு அகலத்தில் காட்டுகிறது.
03:17 100% view பக்கத்தை அதன் முழு அளவில் காட்டுகிறது.
03:23 அடுத்து நமக்கு கிடைக்கும் முக்கியமான தேர்வு “Variable”.
03:28 இந்த variable புலத்தில் ஆவணத்தை காட்ட நாம் விரும்பும் zoom அளவை உள்ளிடலாம்.
03:35 உதாரணமாக, மதிப்பை “75%” என “Variable” புலத்தில் இட்டு “OK” button ஐ சொடுக்கலாம்.
03:43 இது போல நாம் ஆவணங்களை காணவோ திருத்தவோ நமக்கு தோதான அளவுக்கு zoom அளவை மாற்றிக்கொள்ளலாம்.
03:51 உரையாடல் பெட்டியில் காணும் இன்னொரு அம்சம் “View layout”
03:56 “View layout” தேர்வு உரை ஆவணங்களுக்கு மட்டுமே.
03:59 இது zoom அளவை குறைக்கும். இது பலவித அமைப்புகளில் ஆவணம் எப்படி தோன்றுகிறது என்றறிய பயனாகிறது.
04:07 இதில் “Automatic” மற்றும் “Single page” தேர்வுகள் உள்ளன. இதனால் பக்கங்களை ஒன்றன் பக்கத்தில் ஒன்றாகவோ அல்லது ஒன்றன் கீழ் ஒன்றாகவோ காணவும் இயலும்.
04:18 உதாரணமாக, “Fit width and height” தேர்வை “Zoom factor” கீழ் தேர்வு செய்யின் “View layout” தேர்வில் “Single page” தேர்வு மீது சொடுக்கவும். பின் “OK” button ஐ சொடுக்கவும். பக்கங்கள் ஒன்றன் கீழ் ஒன்றாக காண்கின்றன.
04:36 இப்போது “Automatic” தேர்வு மீது சொடுக்கவும். பின் “OK” button ஐ சொடுக்கவும்.
04:42 பக்கங்கள் ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக காண்கின்றன.
04:48 Writer Status Bar இல் உள்ள மூன்று கட்டுப்படுத்திகளும் கூட ஆவணத்தின் zoom மற்றும் காணல் அமைப்பு ஐ மாற்றமுடியும்.
04:56 காணல் அமைப்பு சின்னங்கள் பின் வருமாறு: ஒரே பத்தி பாங்கு, காணல் பாங்கு (பக்கங்கள் ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக) புத்தகப் பாங்கு (திறந்த புத்தகம் போல இரண்டு பக்கங்கள்)
05:11 Zoom slider ஐ வலது பக்கம் இழுக்க ஒரு பக்கத்தில் zoom செய்கிறோம். இடது பக்கம் இழுக்க அதிக பக்கங்களை பார்க்கிறோம்.
05:20 LibreOffice Writer இல் “அச்சடித்தல்” ஐ கற்கும் முன் “Page preview” பற்றி தெரிந்து கொள்ளலாம்.
05:28 “File” மீது சொடுக்கி “Page Preview” மீதும் சொடுக்கவும்.
05:32 நடப்பு ஆவணம் page preview பாங்கில் காணும் போது “Page Preview” bar தெரிகிறது.
05:38 இது அடிப்படையில் உங்கள் ஆவணத்தை அச்சடித்தால் எப்படி இருக்கும் என்று காட்டுகிறது.
05:44 நம் resume.odt file ஐ அச்சடித்தால் எப்படி இருக்கும் என்று காணலாம்.
05:50 பக்க முன்னோட்ட tool bar இல் பல தேர்வுகள் இருக்கின்றன.
05:55 “Zoom In”, “Zoom Out”, “next page”, “Previous page” மற்றும் “Print” ஆகியன அவை.
06:03 LibreOffice Writer இல் ஆவணங்களை எப்படி காண்பதென்றும் Page Preview ஐயும் அறிந்த பின், இப்போது LibreOffice Writer இல் “Printer” எப்படி வேலை செய்கிறது என காணலாம்.
06:15 printer என்பது சுருங்கச்சொல்ல ஆவணத்தை அச்சடிக்க உதவும் கருவி.
06:21 இப்போது Print ஐ அணுக பலவித தேர்வுகளை காணலாம்.
06:26 “Tools” -> “Options” மீது சொடுக்கவும்.
06:32 “LibreOffice Writer“ பக்கக்திலுள்ள அம்புக்குறியை சொடுக்கி “Print” ஐ சொடுக்கவும்.
06:38 ஒரு உரையாடல் பெட்டி திரையில் தெரிகிறது. தேர்ந்தெடுக்க பல தேர்வுகள் உள்ளன.
06:43 ஆகவே நாம் முன்னிருப்பை அப்படியே வைத்துக்கொண்டு “OK” button ஐ சொடுக்குவோம்.
06:49 இப்போது, முழு ஆவணத்தை நேரடியாக அச்சடிக்க , tool bar இல் “Print File Directly” சின்னத்தின் மீது சொடுக்கவும்.
06:56 இதுவே விரைவு அச்சடித்தல்.
07:00 எந்த ஆவணத்தையும் அச்சடித்தலில் இன்னும் அதிக கட்டுப்பாடு வேண்டுமானால் “Print” தேர்வுக்குப்போய் முன்னிருப்பு அமைப்புகளை தேவையான படி திருத்த வேண்டும்.
07:07 menu bar இல் “File” menu இல் சொடுக்கி “Print” இல் சொடுக்கவும்.
07:13 “Print” உரையாடல் பெட்டி திரையில் தோன்றுகிறது.
07:17 இங்கே General Tab இல் “Generic Printer” என தேர்வு செய்வோம்.
07:22 “All pages” தேர்வு ஆவணத்தின் எல்லா பக்கங்களையும் அச்சடிக்க.
07:28 சில தொடர் பக்கங்களை மட்டும் அச்சடிக்க “Pages” தேர்வில் சொடுக்கி வரும் புலத்தில் பக்க எண் வீச்சை தரவும். எ-கா “1-3” என இங்கு எழுதலாம். இது ஆவணத்தின் முதல் மூன்று பக்கங்களை மட்டுமே அச்சடிக்கும்.
07:44 ஆவணத்தின் பல பிரதிகளை அச்சடிக்க வேண்டுமானால், “Number of copies” புலத்தில் எத்தனை என உள்ளிடுக. இங்கு “2” என உள்ளிடுவோம்.
07:54 இப்போது உரையாடல் பெட்டியில் “Options” tab ஐ சொடுக்குவோம்.
08:00 ஒரு தேர்வு பட்டியல் திரையில் தெரிகிறது. இதிலிருந்து ஆவணத்தை தேர்ந்தெடுத்து அச்சடிக்கலாம்.
08:07 “ Print in reverse page order” என்று ஒரு செக் பாக்ஸ் தெரிகிறது.
08:12 இந்த தேர்வு பெரிய ஆவணங்களை அச்சடிக்கையில் திரட்ட பயனாகிறது.
08:16 ஆகவே அதன் எதிரில் உள்ள பெட்டியில் குறியிடுவோம்.
08:19 pdf ஆவணத்தையும் அச்சடிக்கலாம்.
08:26 “dot odt” ஆவணத்தை “dot pdf” file ஆக மாற்றுவது குறித்து ஏற்கெனெவே கண்டுள்ளோம்.
08:34 “pdf” file ஐ ஏற்கெனவே desktop இல் சேமித்து உள்ளதால், நாம் அதன் மீது இரு முறை சொடுக்கி திறக்கலாம்.
08:41 இப்போது “File” தேர்வில் சொடுக்கி பின் “Print” தேர்வில் சொடுக்கலாம்.
08:47 முன்னிருப்பு அமைப்பை அப்படியே வைத்துக்கொண்டு “Print Preview” button இல் சொடுக்குவோம்.
08:52 திரையில் அதன் முன்னோட்டத்தை காணலாம்.
08:56 அச்சடிக்க முன்னோட்ட பக்கத்தில் “Print this document” சின்னத்தில் சொடுக்குக.
09:04 இத்துடன் LibreOffice Writer இன் spoken tutorial முடிவுக்கு வருகிறது.
09:09 சுருங்கச்சொல்ல நாம் கற்றது:
09:11 ஆவணங்களை காண்பது,
09:13 ஆவணங்களை அச்சடித்தல்.
09:16 முழுமையான பயிற்சி:
09:18 “This is LibreOffice Writer” என Writer இல் உரை எழுதவும்.
09:23 “Full screen” தேர்வை பயன்படுத்தி முழுத்திரையில் ஆவணத்தை காண்க.
09:29 zoom தேர்வை பயன்படுத்தி “optimal” மற்றும் “Variable” பாங்கில் ஆவணம் எப்படி தெரிகிறது என காணவும். “variable” மதிப்பை “50%” என அமைத்து ஆவணத்தை காணவும்.
09:41 ஆவணத்தின் “Page preview” ஐ காணவும். ஆவணத்தின் இரண்டு பிரதிகளை பக்கத்தில் விளிம்புகளுடன் அச்சடிக்கவும்.
09:49 இதன் video இங்கே கிடைக்கிறது: http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial
09:52 இது Spoken Tutorial திட்டத்தை சுருக்கமாக சொல்கிறது.
09:55 இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள்.
10:00 spoken tutorial களை பயன்படுத்தி நாங்கள் செய்முறை வகுப்புகள் நடத்துகிறோம்.
10:08 மேலும் அதிக தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும்.
10:12 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
10:15 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:23 www.spoken-tutorial.org இதை ஒருங்கிணைக்கிறது
10:30 மேற்கொண்டு விவரங்கள் இந்த வலைத்தளத்தில் கிடைக்கும்,
10:32 spoken-tutorial.org/NMEICT-Intro
10:42 கலந்து கொண்டமைக்கு நன்றி. தமிழில் நிரலாக்கம் கடலூர் திவா. நன்றி கூறி விடை பெறுவது --------------------------(name of the place) இலிருந்து -----------------------(name of the recorder) வணக்கம்.

Contributors and Content Editors

Chandrika, Priyacst