LibreOffice-Suite-Math/C2/Markup-Language-for-writing-formula-Formula-Formatting/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration | |
00:00 | LibreOffice Math குறித்த Spoken tutorial க்கு நல்வரவு. | |
00:04 | இந்த tutorial லில், பின் வருவனவற்றை கற்போம்: | |
00:08 | சூத்திரம் எழுத குறியிட்ட மொழி மற்றும் சூத்திரம் ஒழுங்கு செய்தல்: எழுத்துருக்கள், பக்க ஒழுங்கு, மற்றும் இடைவெளி | |
00:18 | போன tutorial இல் நாம் Math க்கு குறியிட்ட மொழியை அறிமுகம் செய்து கொண்டோம். | |
00:24 | இப்போது குறியிட்ட மொழி பற்றி மேலும் கற்போம். | |
00:28 | முதலில் ஒரு Writer ஆவணத்தை திறப்போம் மற்றும் Math செயல்பாட்டை Writer இல் அழைக்கலாம். | |
00:35 | Writer ஏற்கெனெவே திறந்து இருந்தால்,மேலே Insert menu வில் சொடுக்கி மற்றும் Object , சூத்திரம் ஆகியவற்றை முறையே சொடுக்குக. | |
00:46 | Writer திறந்து இல்லாவிடில் நாம் அதை Windows Start menu விலிருந்து துவக்கலாம். | |
00:55 | Elements window ஐ பயன்படுத்துதல் சூத்திரம் எழுத வெகு எளிதான வழியாகும். | |
01:01 | ஆனால் சூத்திர திருத்தியில் நேரடியாக குறியிட்ட மொழியை இடுவது சூத்திரம் எழுத வெகு வேகமான வழியாகும். | |
01:10 | சூத்திரத்துக்கு குறியிட்ட மொழி என்பது சூத்திரத்தை ஆங்கிலத்தில் நாம் படிக்கக்கூடிய அதேதான்! | |
01:18 | உதாரணமாக , ‘4 into 3’, என எழுத நாம் சூத்திர திருத்தி window வில் type செய்ய வேண்டியது ‘4 times 3’ என்பதே. | |
01:28 | அடுத்த உதாரணத்துக்கு போகு முன் இங்கே ஒரு வரியை நுழைக்கலாம். | |
01:36 | type செய்ய வேண்டிய குறி ‘newline’. Writer இன் சாம்பல் நிற பெட்டி இடத்தில் ஒரு புதிய வரி நுழைக்கப்படுவதை காணலாம். | |
01:46 | type செய்வோம்: ‘Some more example folmulae: newline’. | |
01:51 | தெளிவாக படிக்க Enter விசையை ஒரு முறை அழுத்தலாம். | |
01:57 | மேலும் எழுதுக: ‘x greater than equal to y’. | |
02:03 | இங்கே நாம் சூத்திரங்களை வரிசை எண்ணிடுகிறோம். | |
02:07 | ஆகவே type செய்யலாம் ‘1. x greater than equal to y new line’. Enter செய்க. | |
02:18 | Writer இன் சாம்பல் நிற பெட்டி புதுப்பிக்கப்பட்டதை கவனியுங்கள். மேலும் உள்ளடக்கங்கள் நடுவில் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன. | |
02:25 | அடுத்து எழுதலாம்: ‘a to the power of 2’. | |
02:30 | அதற்கு குறியானது: ‘2. 'a' arrow pointing upward 10’ new line’ பின் Enter செய்க. | |
02:42 | Writer இன் சாம்பல் நிற பெட்டியில் symbol மாறுவதை காண்க. | |
02:48 | இப்போது எழுதலாம்: ‘square root of 16 = 4’ | |
02:55 | Type செய்க: ‘3. sqrt ‘16’ முள் அடைப்பு குறிகளுக்குள் equals 4 new line’. Enter செய்க | |
03:06 | இந்த சூத்திரத்தை Writer இன் சாம்பல் நிற பெட்டியில் காண்க. | |
03:10 | சரி, இப்போது ‘a suffix n’ க்கு ஒரு summation symbol எழுதலாம். a1 + a2 + a3 so on + ‘an’ என்பதை குறிக்க. | |
03:28 | இதற்கு குறியீடு: ‘4. sum a underscore n new line’. Enter செய்க . | |
03:37 | இப்போது ஒரு function உடன் integral ஐ முயற்சி செய்யலாம். Integral f x d x என எழுத குறியீடு ‘5. int fx dx newline’. | |
03:54 | மேலும் Writer பரப்பில் integral symbol ஐ காண்க. | |
04:00 | இப்போது இந்த வேலையை சேமிக்கலாம்.மேலே File menu சென்று Save மீது சொடுக்கவும். | |
04:09 | ஆவணத்துக்கு Math example 1 என பெயரிடவும். | |
04:16 | இப்போது நாம் எழுதிய சூத்திரங்களை ஒழுங்கு செய்வதை பார்க்கலாம். | |
04:21 | அவை எல்லாமே நடுவில் இருக்கின்றன. மேலும் அவற்றின் இடையே அதிக இடைவெளி இல்லை. | |
04:28 | மேலே உள்ள Format menu வை இந்த ஒழுங்கு மாற்றங்களுக்கு பயன்படுத்தலாம். | |
04:35 | முதலில் எல்லா சூத்திரங்களையும் இடது பக்க ஒழுங்காக்கலாம். | |
04:40 | இதற்கு, Format menu வில் align ஐ தேர்ந்தெடுக்கலாம். | |
04:46 | தோன்றும் புதிய சாளரத்தில் Left தேர்வு செய்க. மற்றும் Ok button மீது சொடுக்கவும். | |
04:54 | சூத்திரங்கள் இப்போது இடது பக்க ஒழுங்குக்கு வந்துவிட்டதை காணலாம். | |
04:58 | Format menu வின் கீழ் ‘fonts' ஐ தேர்ந்தெடுத்து எழுத்துருக்கள் பாங்கை மாற்றலாம். | |
05:06 | இங்கே பல வகைகளை காணலாம்: | |
05:10 | நாம் மாறிகளுக்கு ஒரு வகை எழுத்துருவை அமைக்கலாம். function களுக்கு இன்னொரு வகை; எண்கள் மற்றும் உரைக்கு மற்றொரு வகை என அமைக்கலாம். | |
05:23 | எழுத்துரு பாங்கை மாற்ற Modify button ஐ அழுத்தி மற்றும் Variables வகையை தேர்ந்தெடுக்கவும். | |
05:34 | Arial Black ஐ பட்டியல் பெட்டியில் தேர்ந்தெடுத்து Ok button மீது சொடுக்கவும். | |
05:43 | மற்றும் இந்த எழுத்துருவை இங்கே Ok button ஐ சொடுக்கி சேமிக்கலாம். | |
05:50 | இப்போது Writer இன் சாம்பல் நிற பெட்டியில் எழுத்துரு மாற்றங்களை கவனிக்கவும். | |
05:56 | சூத்திரங்களின் எழுத்துரு அளவை அதிகரிக்க Format menu சென்று Font Size இல் சொடுக்கவும். | |
06:06 | அடிப்படை அளவை ‘18 point’ என அமைக்கலாம். OK மீது சொடுக்கவும் | |
06:15 | உரை, indexes அல்லது operators போன்ற மற்ற வகைகளின் ஒப்பீட்டு அளவை மாற்றவும் முடியும். | |
06:25 | நாம் செய்த அத்தனை எழுத்துரு அளவு மாற்ற செயல்களையும் Default button ஐ அழுத்தி நீக்கலாம். | |
06:32 | சூத்திரங்களில் எழுத்துரு அளவுகள் மாறுவதை கவனிக்கவும். | |
06:37 | அடுத்து, சூத்திரங்களுக்கு இடையே இடைவெளியை கவனிக்கலாம். | |
06:42 | Format menu மீது சொடுக்கி Spacing ஐ தேர்ந்தெடுக்கவும். | |
06:47 | spacing ஐ மாற்றலாம். line spacing மற்றும் root spacing இரண்டையும் 20 சதவிகிதம் மாற்றலாம். | |
06:56 | நாம் ஒவ்வொரு spacing பாங்கு மீது சொடுக்கும் போதும் நடுவில் உள்ள படம் அந்த spacing பாங்கின் இடத்தை காட்டுகிறது. | |
07:05 | மேலும் spacing பாங்கை வெவ்வேறு வகைகளிலும் மாற்றலாம். இதை செய்ய Category button ஐ அழுத்தவும். | |
07:16 | அல்லது நாம் செய்த மாற்றங்களை நீக்க Default button அழுத்தவும். | |
07:22 | இப்போது Ok button ஐ சொடுக்கலாம் . | |
07:25 | Writer இன் சாம்பல் நிற பெட்டியில் இடைவெளி மாறுவதை காணலாம். | |
07:30 | மேலும் ஒழுங்கு மாற்றங்கள் Elements window வில் கிடைக்கும். | |
07:36 | View menu விலிருந்து Elements window வை கொண்டு வருவோம். | |
07:40 | இங்கே, categories இன் இரண்டாம் வரியின் கடைசி சின்னத்தை சொடுக்கலாம் . | |
07:47 | கருவிக்குறிப்பு இங்கே ‘Formats’ என்று சொல்கிறது. | |
07:51 | இங்கே , நாம் கீழொட்டுக்கள், மேலொட்டுக்கள், பக்க ஒழுங்குகள், matrix, புதிய வரிகள் மற்றும் இடைவெளிகளை அமைக்கலாம். | |
08:03 | ஐந்தாம் உதாரணத்தில் 5 என்ற எண்ணுக்குப்பின் நாம் ஒரு ஒரு நீண்ட இடைவெளியை அமைக்கலாம்.‘5.’ க்கு அடுத்து சொடுக்கவும். | |
08:13 | Elements window இலிருந்து Formats> Long Gap மீது முறையே சொடுக்கவும். | |
08:20 | நீண்ட இடைவெளிக்கு குறியீடு ‘tilde’ எழுத்துருவாகும். சிறிய இடைவெளிக்கு ‘Tiray’. | |
08:29 | 5 என்ற எண்ணுக்குப்பின்னால் பெரிய இடைவெளியை காணுங்கள். | |
08:33 | இப்படியாகத்தான் நாம் சூத்திரங்களை ஒழுங்கு செய்ய இயலும். | |
08:38 | Math தரும் எல்லா ஒழுங்குகளையும் சும்மா முயற்சி செய்து எப்படி இருக்கிறது என காணுங்கள். | |
08:44 | சரி, உங்களுக்கு ஒரு பயிற்சி: | |
08:47 | Writer சாளரத்தில், பின் வரும் சூத்திரங்களை குறியிட்டு எழுதுங்கள். | |
08:53 | தேவையானால் Elements window ஐ பயன்படுத்தலாம். | |
08:57 | Summation of x to the power of 2 | |
09:02 | Sin to the power of x plus cos to the power of x = 1 (Elements window வில் Functions category ஐ பயன்படுத்துக.) | |
09:15 | முன் பயிற்சியில் தொடர்ந்து எழுதவும் Summation from 1 to n of x. | |
09:23 | (Operators category வகையை பயன்படுத்தி summation இன் வீச்சை மட்டுப்படுத்தவும்.) | |
09:29 | எழுத்துருவை Arial ஆக்கவும்; அளவை 18 point ஆக்கவும். | |
09:35 | symbolகள் நடுவில் இன்னும் இடைவெளியை உருவாக்கவும். | |
09:40 | இத்துடன் LibreOffice Math இல் குறியிட்ட மொழி மற்றும் சூத்திரம் ஒழுங்கு செய்தல் குறித்த tutorial முடிவுக்கு வருகிறது. | |
09:49 | சுருங்கச் சொல்ல கீழ் வருவனவற்றை கற்றோம்: | |
09:52 | சூத்திரங்களை எழுத குறியிட்ட மொழி , சூத்திரத்தில் இவற்றை ஒழுங்கு செய்தல்: எழுத்துருக்கள், பக்க ஒழுங்கு, மற்றும் இடைவெளி | |
10:01 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | |
10:14 | இந்த திட்டம் http://spoken-tutorial.org ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது | |
10:19 | மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro. | |
10:23 | இந்த நிரலின் மொழியாக்கம் கடலூர் திவா; பதிவாக்கம்.... | |
10:33 | கலந்து கொண்டமைக்கு நன்றி. |