LibreOffice-Suite-Math/C2/Derivatives-Differential-Equations-Integral-Equations-Logarithms /Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:46, 29 November 2012 by Chandrika (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Visual Cues Narration
00:01 LibreOffice Math குறித்த Spoken tutorial க்கு நல்வரவு.
00:05 இந்த tutorial லில், Derivatives மற்றும் வகைக்கெழு -Differential – சமன்பாடுகள், தொகையீடு- Integral - சமன்பாடுகள் மற்றும் Logarithmகள் உள்ள சூத்திரங்கள் ஆகியவற்றை எழுதுவதை கற்போம்.
00:17 இதற்கு , நாம் முதலில் போன டுடோரியலில் உருவாக்கிய ஒரு உதாரண Writer ஆவணத்தை திறக்கலாம் - Math example1.odt.
00:29 இப்போது நாம் ஆவணத்தின் கடைசி பக்கத்துக்கு ஸ்க்ரால் செய்து செல்வோம். Control Enter ஐ அழுத்தி ஒரு புதிய பக்கத்துக்கு செல்வோம்.
00:37 இப்போது type செய்யலாம்: “Derivatives and Differential சமன்பாடுகள்: ” Enter விசையை இரு முறை அழுத்தலாம்.
00:45 இப்போது Math ஐ Insert>Object>Formula menu வழியாக அழைப்போம்.
00:54 நாம் மேலே போகு முன் எழுத்துரு அளவை 18 புள்ளிகள் ஆக்குவோம்
01:00 விளிம்பு ஒழுங்கை இடது என அமைப்போம்.
01:03 மற்றும் ஒவ்வொரு உதாரணத்துக்கும் பின் newlines மற்றும் வெற்று வரிகளை சேர்ப்போம். அப்போதுதான் நன்றாக பார்க்க முடியும்.
01:11 இப்போது நாம் எப்படி Derivativeகள் மற்றும் differential சமன்பாடுகளை எழுதுவது என்று கற்போம்.
01:19 இந்த சூத்திரங்கள் அல்லது சமன்பாடுகளை எழுத Math எளிய வழிகளை தருகிறது.
01:25 அவற்றை நாம் வெறும் பின்னங்களாக கருதலாம். மேலும் ‘over’ என்னும் குறியீட்டை பயன்படுத்தலாம்.
01:33 உதாரணமாக, ஒரு total derivative, df by dx, ஐ எழுத சூத்திர திருத்தி சாளரத்தில் குறியீடு 'df over dx'
01:50 அடுத்து, ஒரு பகுதி derivative க்கு நாம் ‘partial’ என்னும் சொல்லை பயன்படுத்தலாம். மேலும் குறியீடு இப்படி காண்கிறது: del f over del x.
02:02 நாம் ‘partial’ என்னும் சொல்லை பயன்படுத்தினால் கூடவே முள் அடைப்புக்குறிகளை இட வேண்டும்.
02:08 Writer இன் சாம்பல் நிற பெட்டியில் பகுதி derivative க்கு del குறி உள்ளதை கவனிக்கவும்.
02:14 இங்கே இன்னொரு உதாரணம் : Newton இன் இரண்டாம் இயக்க விதி.
02:21 இது உந்தம் மற்றும் விசையின் இடையே உள்ள உறவை விவரிக்கிறது.
02:26 F is equal to m a.
02:30 இதை நாம் சாதாரண differential சமன்பாடாக எழுதலாம்: F of t is equal to m into d squared x over d t squared.
02:45 கவனிக்க, நாம் பல்வேறு தொகுதிகளின் வரிசையை காட்ட முள் அடைப்புக்களை பயன்படுத்தி இருக்கிறோம்.
02:56 சமன்பாடு திரையில் உள்ளது போல தோன்றுகிறது.
03:01 இதோ differential சமன்பாடுக்கு இன்னொரு உதாரணம்.
03:05 Newton இன் குளிர்வு விதி
03:08 t என்னும் நேரத்தில் ஒரு பொருளின் வெப்ப அளவு theta of t எனில் நாம் ஒரு differential சமன்பாட்டை எழுதலாம்.
03:18 d of theta over d of t is equal to minus k into theta minus S
03:30 இங்கே S என்பது சூழ்நிலையின் வெப்ப அளவு.
03:35 Writer இன் சாம்பல் நிற பெட்டியில் சமன்பாட்டை கவனிக்கவும்.
03:39 இப்போது நம் வேலையை சேமிப்போம்.File க்கு சென்று Save இல் சொடுக்குவோம்.
03:45 இப்போது Integral சமன்பாடுகளை எபப்டி எழுதுவது என காணலாம்.
03:50 Writer இன் சாம்பல் நிற பெட்டிக்கு வெளியே மூன்று முறை மெதுவாக சொடுக்கி இன்னொரு புதிய பக்கத்துக்கு போகலாம்.
03:58 பின் Control Enter ஐ அழுத்தலாம்.
04:03 Type செய்க “Integral equations: ”
04:06 மற்றும் இரு முறை Enter செய்க .
04:11 இப்போது , Math ஐ Insert>Object>Formula menu வழியாக அழைப்போம்.
04:17 எழுத்துரு அளவை 18 புள்ளிகள் ஆக்குவோம்.
04:22 மற்றும் பக்க ஒழுங்கை இடது என ஆக்குவோம்.
04:25 ஒரு integral குறியை ஐ எழுத சூத்திர திருத்தி சாளரத்தில் “int” என குறியீடு செய்ய வேண்டும்.
04:35 ஆகவே, x-அச்சில் a, b என்ற இடைவெளியில் உண்மையான variable x இன் function f கொடுக்கப்பட்ட போது definite integral எழுதப்படும் முறை Integral from a to b f of x dx.
04:58 integral குறியை காட்ட நாம் பயன்படுத்திய குறியீடு ‘int’ .
05:04 limits a மற்றும் b ஐ காட்ட , நாம் பயன்படுத்திய குறியீடு ‘from’ மற்றும் ‘to’.
05:13 Writer இன் சாம்பல் நிற பெட்டியில் சூத்திரத்தை கவனிக்க.
05:17 அடுத்து நாம் ஒரு உதாரணமாக ஒரு cuboid இன் கொள்ளளவை கணக்கிட double integral சூத்திரம் எழுதலாம்.
05:26 சூத்திரம் திரையில் தெரிகிறது.
05:30 நீங்கள் காண்பது போல் double integral க்கு குறியீடு ‘i i n t’. அவ்வளவே!
05:38 அதே போல ஒரு cuboid இன் கொள்ளளவை கணக்கிட triple integral சூத்திரம் எழுதலாம்.
05:46 அதற்கு குறியீடு ‘i i i n t’.
05:52 integral இன் எல்லையை குறிக்க நாம் கீழ் ஒட்டு குறியீட்டையும் பயன்படுத்தலாம்.
06:00 கீழ் ஒட்டு குறியீட்டை பயன்படுத்த, Math அந்த வரியுருவை integral இன் கீழ் வலது பக்கம் வைக்கிறது.
06:06 ஆகவே Math இல் integral சூத்திரங்களும் சமன்பாடுகளும் வழி இருக்கிறது.
06:13 இப்போது logarithmகள் உள்ள சூத்திரங்களை எழுதுவதை பார்க்கலாம்.
06:19 இவற்றை ஒரு புதிய Math gray box அல்லது Math object. இல் எழுதலாம்.
06:24 Type செய்க: ‘Logarithms: ‘ மற்றும் இரு முறை Enter செய்க
06:29 Math ஐ மீண்டும் அழைப்போம்.
06:35 மற்றும் எழுத்துரு அளவை 18 point ஆக்குவோம்.
06:39 மற்றும் அவற்றை இடது ஒழுங்கு செய்வோம்.
06:42 logarithm பயன்படுத்தும் ஒரு எளிய சூத்திரம் Log 1000 to the base 10 is equal to 3.
06:52 குறியீட்டை இங்கே கவனிக்கவும்.
06:55 இங்கே இன்னொரு உதாரணம் : Log 64 to the base 2 is equal to 6.
07:03 இப்போது இந்த இயற்கை logarithm க்கு integral பிரதிநிதியை காணலாம்.
07:10 t இன் இயற்கை logarithm is equal to the integral of 1 by x dx from 1 to t.
07:20 மற்றும் இதன் குறியீடு திரையில் தோன்றுவதைப்போல இருக்கிறது.
07:25 நம் உதாரணங்களை சேமிப்போம்.
07:29 உங்களுக்கு ஒரு பயிற்சி.
07:31 பின் வரும் derivative சூத்திரத்தை எழுதுக:
07:35 d squared y by d x squared is equal to d by dx of ( dy by dx).
07:47 அளவு மாற்றக்கூடிய அடைப்புக்குறியை பயன்படுத்தவும்.
07:51 பின் வரும் integral ஐ எழுதவும்:
07:53 Integral with limits 0 to 1 of {square root of x } dx.
08:04 அடுத்து, ஒரு double integral ஐ பின் வருமாறு எழுதவும்:
08:09 Double integral from T of { 2 Sin x – 3 y cubed + 5 } dx dy
08:23 மற்றும் இந்த சூத்திரத்தை பயன்படுத்தி:
08:25 log x to the power of p to the base b is equal to p into log x to the base b;
08:35 log 1024 to the base 2 ஐ தீர்க்கவும்.
08:41 உங்கள் சூத்திரங்களை ஒழுங்கு செய்யவும்.
08:43 இத்துடன் LibreOffice Math இல் Differential, Integral சமன்பாடுகள் மற்றும் logarithmகள் எழுதுதல் குறித்த இந்த டுடோரியல் முடிவுக்கு வருகிறது.
08:52 சுருங்கச்சொல்ல நாம் எழுதக்கற்றது: Derivatives மற்றும் Differential சமன்பாடுகள்
08:58 Integral சமன்பாடுகள் மற்றும் Logarithmகள் உள்ள சூத்திரங்கள்
09:02 Spoken Tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் அங்கமாகும்.
09:06 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:13 இந்த திட்டம் http://spoken-tutorial.org ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது
09:18 மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro.
09:24 இந்த நிரலின் மூலம் Desicrew Solutions; தமிழில் மொழியாக்கம் கடலூர் திவா; குரலுடன் பதிவாக்கம்....,
09:31 கலந்து கொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Chandrika