LibreOffice-Suite-Impress/C2/Inserting-Pictures-and-Objects/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:00 | Impress ல் படங்கள் மற்றும் பொருட்களை உள்நுழைத்தல் குறித்த tutorial க்கு நல்வரவு! |
00:06 | இங்கு நாம் கற்கப்போவது: presentation இல் படங்களையும் பொருட்களையும் உள் நுழைப்பது. |
00:12 | படங்களையும் பொருட்களையும் ஒழுங்கு செய்வது. |
00:15 | presentation க்கு உள்ளே/ வெளியே Hyperlink களை உருவாக்குவது. அட்டவணைகளை உள் நுழைப்பது. |
00:20 | இங்கு பயனாவது Ubuntu Linux 10.04 மற்றும் LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4 |
00:29 | வலை உலாவியின் முகவரி பெட்டியில் திரையில் காணும் URL ஐ type செய்க. |
00:34 | ஒரு படம் காண்கிறது |
00:37 | படத்தின் மீது வலது சொடுக்கி, Save Image As ஐ சொடுக்குக. |
00:41 | ஒரு உரையாடல் பெட்டி திறக்கும். |
00:43 | Name புலத்தில், ‘opensource -bart.png’ என ஏற்கெனெவே காண்கிறது. |
00:51 | சேமிக்கும் இடமாக Desktop ஐ தேர்ந்து, Save buttonஐ சொடுக்குகிறேன். |
00:59 | முன் சேமித்த presentation ‘Sample-Impress’ ஐ திறப்போம். |
01:04 | இப்போது presentation இல் படத்தை உள் நுழைப்பதை பார்க்கலாம். |
01:09 | Main menu வில் முறையே Insert, Picture மீது சொடுக்குக. |
01:14 | From File தேர்வை சொடுக்குக. |
01:17 | உரையாடல் பெட்டி திறக்கும். |
01:19 | பெற வேண்டிய படத்தின் அடைவை தேர்க. |
01:23 | Desktop அடைவை தேர்ந்தெடுக்கிறேன். |
01:26 | உள் நுழைக்க படத்தை தேர்ந்தெடுத்த பின் Open button ஐ சொடுக்குக. |
01:31 | படம் slide உள் நுழைந்தது. |
01:35 | மாற்றங்களை நீக்குவோம். |
01:37 | படத்தை நுழைக்க இன்னொரு வழியை பார்க்கலாம். |
01:41 | ‘Overview’ என தலைப்பிட்ட slide க்கு அடுத்து புதிய slide ஐ முறையே Insert, Slide மீது சொடுக்கி உருவாக்கவும். |
01:50 | Title உரைப்பெட்டி மீது சொடுக்குக; தலைப்பை ‘Open source Funny’ என மாற்றுக. |
01:56 | மையத்தில் 4 சின்னங்களுடன் உள்ள சின்ன பெட்டி Insert கருவிப்பட்டை. |
02:03 | இந்த கருவிப்பட்டையில் Insert Picture மீது சொடுக்குக |
02:08 | படத்தை தேர்ந்தெடுத்து Open button ஐ சொடுக்குக. |
02:12 | நுழைத்த படம் ஏறத்தாழ முழு slide ஐயும் நிரப்புகிறது. |
02:17 | அதை சொடுக்கி, தோன்றும் கட்டுப்பாடு புள்ளிகள் மூலம் படத்தின் உருவம், அளவு இவற்றை மாற்றலாம். |
02:27 | அதே போல் சார்ட்கள், நகர் படங்கள் போன்றவற்றையும் presentation இல் உள்நுழைக்கலாம். |
02:35 | இவற்றை ஆராய்ந்து பாருங்கள். |
02:38 | இப்போது hyperlink ஐ பார்க்கலாம். |
02:41 | Hyper link களை உருவாக்கி ஒரு slide இலிருந்து இன்னொன்றுக்கு போகலாம், presentation இல் ஒரு ஆவணத்தையோ, வலைப்பக்கத்தையோ திறக்கலாம். |
02:49 | presentation இன் உள்ளே hyperlink உருவாக்குவதை பார்க்கலாம். |
02:54 | Overview slide க்கு அடுத்து புதிய slide ஐ உள்நுழைக்கவும். |
03:02 | தலைப்பில் சொடுக்கி type செய்க: ‘Table of Contents’ |
03:07 | Body உரைப்பெட்டி மீது சொடுக்குக; வரும் slide களின் தலைப்புகளை இப்படி டைப் செய்க: |
03:14 | Open Source Funny, The Present Situation, Development up to present, Potential Alternatives, Recommendation |
03:24 | ‘Development up to present’ உரையை தேர்க. |
03:28 | முறையே Insert, Hyperlinkமீது சொடுக்குக |
03:31 | hyperlink உரையாடல் பெட்டி திறக்கும். |
03:34 | இடது பலகத்தில், ‘document' மீது சொடுக்கி, ‘Target in document’ புலத்தின் வலப் பக்க button ஐ சொடுக்குக. |
03:48 | இந்த presentation இல் உள்ள ஸ்லைட்களின் பட்டியல் திறக்கிறது. |
03:53 | பட்டியலிலிருந்து ‘Development upto present’ என தலைப்பிட்ட slide ஐ தேர்க. |
03:58 | Apply button, பின் பட்டியலின் Close button மீதும் சொடுக்குக. |
04:04 | மீண்டும் Apply button, பின் Hyperlink உரையாடல் பெட்டியின் Close button மீதும் சொடுக்குக. |
04:12 | slide இல் எங்காவது சொடுக்கலாம். |
04:14 | இப்போது சொடுக்கியை உரை மீது வைக்க அது சுட்டுவிரலாவதை காணலாம். |
04:20 | ஹைப்பர் லிங்க் உருவாக்கம் வெற்றி அடைந்தது! |
04:24 | இந்த hyper link மீது சொடுக்க, பொருத்தமான slide க்கு போகிறோம். |
04:29 | ஒரு ஆவணத்துக்கு hyperlink செய்ய, Table of Contents slide க்கு செல்வோம். |
04:35 | இன்னொரு வரி சேர்க்கலாம் External document |
04:40 | உரையை தேர்ந்தெடுத்து, Insert, Hyperlinkமீது சொடுக்குக. |
04:45 | இடப் பலகத்தில், documentஐ தேர்க. |
04:48 | ஆவணத்தின் Path புலத்தின் வலப் பக்க அடைவு சின்னத்தை சொடுக்குக. |
04:55 | hyper link செய்ய ஆவணத்தை தேர்க. |
04:58 | Writer பயிற்சிகளில் உருவான resume.odt ஐ தேர்ந்தெடுத்து Open button ஐ சொடுக்குக. |
05:07 | Apply button, பின் Hyperlink உரையாடல் பெட்டியின் Close button ஐ சொடுக்குக. |
05:14 | slide இல் எங்காவது சொடுக்கலாம். |
05:17 | சொடுக்கியை உரை மீது வைக்க அது சுட்டுவிரலாவதை காணலாம். |
05:22 | ஹைப்பர் லிங்க் உருவாக்கம் வெற்றி அடைந்தது! |
05:26 | hyper link மீது சொடுக்க பொருத்தமான ஆவணத்துக்கு போகிறோம். |
05:31 | இப்போது resume.odt க்கு கொண்டு செல்கிறது. |
05:36 | வலைப்பக்கத்துக்கு Hyper link செய்வது அதே போல. |
05:40 | presentation இன் இறுதியில் புதிய ஸ்லைடை நுழைக்கலாம். |
05:43 | தலைப்பை ‘Essential Open Source Software’ என மாற்றலாம். |
05:48 | Body உரைப்பெட்டியில் type செய்க: Ubuntu Libre Office. |
05:53 | உரையின் இரண்டாம் வரியை தேர்ந்தெடுத்து முறையே Insert, Hyperlink இல் சொடுக்குக. |
06:00 | இடப் பக்க பலகத்தில், Internet ஐ தேர்க. |
06:03 | Hyperlink type இல் Web ஐ தேர்க. |
06:07 | Target புலத்தில் type செய்க ‘www.libreoffice.org’ |
06:16 | Apply button, பின் Hyperlink உரையாடல் பெட்டியின் Close button மீதும் சொடுக்குக. |
06:23 | slide இல் எங்காவது சொடுக்கலாம். |
06:26
|
சொடுக்கியை உரை மீது வைக்க அது சுட்டுவிரலாவதை காணலாம். |
06:32 | ஹைப்பர் லிங்க் உருவாக்கம் வெற்றி அடைந்தது! |
06:37 | hyper link மீது சொடுக்க பொருத்தமான வலைப்பக்கத்துக்கு போகிறோம். |
06:44 | கடைசியாக, தரவுகளை பத்தி, வரிகளாக அமைக்க அட்டவணைகள் பயன்படுகின்றன. |
06:49 | LibreOffice Impress இல் அட்டவணையை நுழைப்பதை காணலாம். |
06:54 | Slides பலகத்தில் ‘Development up to the present’ தலைப்பிட்ட slide ஐ தேர்க. |
07:00 | Tasks பலகத்தில் Layout தொகுதியில் Title and 2 Content சின்னத்தை தேர்க. |
07:07 | இடப் பக்க உரைப்பெட்டியில் உரையை தேர்க. |
07:14 | எழுத்துரு அளவை 26 என ஆக்கவும். |
07:17 | வலப்பக்க உரைப்பெட்டியில் மத்தியிலுள்ள Insert toolbar இல் ‘Insert Table’ மீது சொடுக்குக |
07:25 | முன்னிருப்பு பத்திகள் எண்ணிக்கை 5, வரிகள் எண்ணிக்கை 2. |
07:33 | நாம் இதை பத்திகள் 2, வரிகள் 5 என மாற்றலாம். |
07:41 | OK button ஐ சொடுக்குக. |
07:44 | உரையை படிக்க தோதாக அட்டவணையை நீட்டுவோம். |
07:49 | அட்டவணையில் தரவெழுதலாம். |
07:51 | Implementation Year % |
07:56 | 2006 10% |
07:59 | 2007 20% |
08:02 | 2008 30% |
08:05 | 2009 40% |
08:08 | இப்போது தலைப்பு உரை எழுத்துருவை தடிமனாக்கி, மையப்படுத்தலாம். |
08:17 | அட்டவணை நிறத்தை மாற்ற உரை அனைத்தையும் தேர்வு செய்க. |
08:22 | Tasks பலகத்தில் Table Design தொகுதியில் ஒரு அட்டவணை பாங்கை தேர்ந்தெடுக்கலாம். இதை தேர்ந்தெடுக்கிறேன். |
08:30 | அட்டவணையை இப்போது பார்க்கலாம். |
08:33 | இத்துடன் இந்த டுடோரியல் முடிவுக்கு வருகிறது. |
08:37 | சுருங்கச்சொல்ல நாம் கற்றது: படங்களை உள்நுழைத்தல், அவற்றை ஒழுங்கு செய்தல் |
08:43 | presentation க்கு உள்ளே, வெளியே Hyperlink களை உருவாக்குவது. அட்டவணையை நுழைப்பது. |
08:49 | முழுமையான பயிற்சி |
08:53 | புதிய presentation ஐ உருவாக்குங்கள். |
08:55 | 3 ஆம் slide இல் ஒரு படத்தை நுழையுங்கள். |
08:58 | 4 ஆம் slide இல், 2 வரிகள், மூன்று பத்திகள் கொண்ட அட்டவணையை உருவாக்குக. |
09:03 | அட்டவணையில் வரி 2, பத்தி 2 இல், type செய்க: ‘slide 3’ . இதை 3 ஆம் slide க்கு Hyperlink செய்க. |
09:14 | கீழ் வரும் தொடுப்பில் விடியோவை காணவும். |
09:17 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
09:20 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
09:25 | spoken tutorial களை பயன்படுத்தி spoken tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
09:30 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
09:34 | மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் எழுதவும். contact@spoken-tutorial.org |
09:41 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
09:46 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:53 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
10:05 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |