LibreOffice-Suite-Calc/C2/Working-with-Cells/Tamil
From Script | Spoken-Tutorial
VISUAL CUE | NARRATION |
00:00 | LibreOffice Calc இல் Cell களை கையாளுவது குறித்த Spoken tutorial க்கு நல்வரவு! |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது: |
00:08 | ஒரு spreadsheet இல் எப்படி எண்கள், உரை, எழுத்தில் எண்கள், தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை உள்ளிடுவது. |
00:16 | உரையாடல் பெட்டி மூலம் எப்படி Cell களை ஒழுங்கு செய்வது, |
00:19 | cell கள் மற்றும் தாள்கள் நடுவில் எப்படி உலாவுவது. |
00:23 | வரிகள், பத்திகள், மற்றும் தாள்களில் உள்ள உருப்படிகளை எப்படி தேர்ந்தெடுப்பது. |
00:29 | நாம் Ubuntu 10.04 ஐ நம் இயங்குதளமாகவும் LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4 ஐயும் பயன்படுத்துகிறோம். |
00:39 | cellகளில் தரவை உள்ளிடுவது எப்படி என்று முதலில் தெரிந்து கொள்ளலாம். |
00:43 | நம் “personal finance tracker.ods” file ஐ திறப்போம். |
00:49 | நீங்கள் எந்த cell லிலும் அதில் சொடுக்கியபின் விசைப்பலகையால் உரையை உள்ளிடலாம். |
00:59 | முன்னிருப்பாக உரை இடது பக்கம் ஒழுங்கு செய்யப்படும். தேவையானால் இதை Formatting Bar இல் உள்ள alignment கீற்றுகளில் எதையும் சொடுக்கி மாற்றிக்கொள்ளலாம். |
01:08 | இதை செயல் நீக்குவோம். |
01:11 | இப்போது spreadsheet இல் “A1” க்கான cell இல் சொடுக்குவோம். |
01:15 | நீங்கள் தேர்ந்தெடுத்த cell முன்னிலைப்படுத்தப்பட்டதை காணலாம். |
01:20 | இங்கு நாம் ஏற்கெனெவே பத்தி தலைப்புகளை டைப் செய்து விட்டோம். |
01:24 | “Items” என்ற தலைப்பின் கீழ் ஒன்றன் கீழ் ஒன்றாக சில உருப்படிகளின் பெயரை டைப் செய்வோம். அவை “Salary”, “House rent”, “Electricity bill”, “Phone bill”, “Laundry” மற்றும் “Miscellaneous”. |
01:38 | ஒரு cell இல் எண்ணை டைப் செய்ய அந்த cell இல் சொடுக்கி எண்களை உள்ளிடவும். |
01:43 | ஒரு negative எண்ணை உள்ளிட ஒரு கழித்தல் குறியை முன்னால் உள்ளிடலாம் அல்லது அதை அடைப்புக்குறிகளுக்குள் எழுதலாம். |
01:53 | முன்னிருப்பாக, எண்கள் வலது ஒழுங்கு செய்யப்பட்டவை; negative எண்கள் முன் ஒரு கழித்தல் குறி இருக்கும். |
02:01 | மாற்றங்களை செயல் நீக்குவோம். |
02:04 | இப்போது “SN” என்று நம் “personal finance tracker.ods” spreadsheet இல் Serial Number தலைப்பின் கீழ் ஒவ்வொரு உருப்படிக்கும் ஒன்றன் கீழ் ஒன்றாக வரிசை எண்கள் வேண்டும். |
02:17 | ஆகவே “A2” ஐ குறிக்கும் செல்லில் சொடுக்கி எண்களை 1,2,3 என ஒன்றன் கீழ் ஒன்றாக உள்ளிடுவோம். |
02:27 | வரிசை எண்களை தானியங்கியாக உள்ளிட cell “A4”இல் சொடுக்குவோம். கீழே வலது பக்கம் ஒரு சிறிய கருப்பு பெட்டி காணப்படும். அதை பிடித்து “A7” வரை இழுக்கவும். பின் சொடுக்கி button ஐ விட்டுவிடவும். |
02:42 | நீங்கள் cellகள் “A5” முதல் “A7” வரை மீதி வரிசை எண்களால் நிரப்பப்படுவதை காணலாம். |
02:51 | உருப்படிகளின் வரிசை எண்களை உள்ளிட்ட பின் “Cost” எனும் தலைப்பின் கீழ் இப்போது ஒவ்வொன்றின் விலையையும் உள்ளிடலாம். |
02:59 | “C3” ஐ குறிக்கும் cell இல் சொடுக்கி “House rent” இன் செலவை “Rupees 6000” என எழுதவும். |
03:07 | இப்போது எண்ணுக்கு முன்னால் ரூபாய்க்கான சின்னம் வர வேண்டும் என்று நினைத்தால் என்ன செய்வது? |
03:11 | சரி, “Electricity bill” க்கு “Rupees 800” என்று எழுத வேண்டும் என்று கொள்வோம். cell C4 இல் வலது சொடுக்கு சொடுக்கி பின் “Format Cells” தேர்விலும் சொடுக்கவும். |
03:23 | இது “Format Cells” உரையாடல் பெட்டியை திறக்கிறது. |
03:27 | முதல் கீற்று “Numbers”. அது ஏற்கெனெவே தேர்ந்து எடுக்கப்படவில்லை என்றால் அதை சொடுக்குங்கள். |
03:32 | ”Category” இன் கீழ் Number, Percent, Currency, Date, Time மற்றும் பல வகைகளை காணலாம். |
03:41 | அதில் Currency ஐ தேர்ந்தெடுக்கலாம். |
03:44 | இப்போது Format தேர்வில் கீழ் அம்புக்குறியை சொடுக்கவும். இது உலகில் உள்ள பல்வேறு கரன்சி சின்னங்களை காட்டுகிறது. |
03:53 | நாம் மேலே scroll செய்து INR Rupees English India என தேர்வு செய்வோம். முன்னிருப்பாக, Rupee 1234 தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும். |
04:04 | நீங்கள் வலது பக்கத்தில் ஓரிடத்தில் அதன் முன் தோற்றத்தை காணலாம். |
04:10 | தேர்வுகளின் கீழ் எத்தனை தசம இடங்கள் வேண்டும், முன்னால் எத்தனை பூஜ்யங்கள் இருக்கலாம் என்று தேர்ந்தெடுக்கலாம். |
04:20 | நாம் மேலும் மேலும் பூஜ்யங்களை சேர்க்க ஒழுங்கில் தேர்வு Rupees 1,234 decimal zero zero என்று மாறி இரண்டு தசாம்ச பாங்கை காட்டுகிறது. |
04:35 | முன் பார்வை இடத்தில் இந்த மாறுதல்களை காணலாம். |
04:40 | ஒவ்வொரு ஆயிரத்தையும் பிரிக்க காற்புள்ளியை சேர்க்க Thousands separator பெட்டியில் சொடுக்கவும். உடனே முன்பார்வை இடத்தில் மாற்றத்தை காணலாம். |
04:50 | Font கீற்றில் சொடுக்கி எழுத்துருக்களையும் மாற்றலாம். அங்கே பல்வேறு தேர்வுகள் உள்ளன: எழுத்துரு, அதன் வகை, மற்றும் அளவு. |
05:00 | Font Effects மற்றும் மற்ற கீற்றுக்களை சோதித்து அவை என்ன செய்கின்றன என்று மேலும் கற்கவும். |
05:05 | Alignment - ஒழுங்கு கீற்றைப் பற்றி இன்னொரு tutorial இல் பின்னால் கற்போம். |
05:11 | OK மீது சொடுக்குவோம். |
05:15 | நாம் 800 என type செய்து Enter செய்வோம். 800 என்ற எண் Rupees 800 என்று 2 தசாம்ச இடங்களுடன் தோன்றுவதை காணலாம். |
05:26 | இப்போது , cell கள் C5 முதல் C7 வரை தேர்ந்தெடுக்கலாம். CTRL விசையை அழுத்திக்கொண்டு cell G2 ஐயும் கூட தேர்ந்தெடுப்போம். தேர்ந்தெடுத்த எல்லா cell களும் முன்னிலையாகி உள்ளதை காணலாம். |
05:39 | முன்னிலையாகி உள்ள எந்த செல்லிலும் வலது சொடுக்கி Format Cells ஐ தேர்ந்தெடுப்போம். |
05:46 | முன் போலவே தேர்வுகளை அமைத்து OK இல் சொடுக்கலாம். |
05:51 | இப்போது, நாம் மற்ற செலவினங்களை ஒன்றன் கீழ் ஒன்றாக type செய்யலாம். “Rupees 600” “Phone bill” க்கு, ”Rupees 300” “Laundry” கட்டணத்துக்கு மற்றும் “Rupees 2000” “Miscellaneous” செலவாக. |
06:06 | “Accounts” தலைப்பில் நாம் மாத சம்பளமாக “Rupees 30000” என எழுதுவோம். |
06:13 | Calc இல் தேதியை உள்ளிட cell ஐ தேர்ந்தெடுத்து தேதியை type செய்க. |
06:18 | நீங்கள் தேதியின் பாகங்களை முன் சாய் கோடு அல்லது hyphen ஆல் பிரிக்கலாம். அல்லது 10 October 2011 என உரையாகவும் எழுதலாம். |
06:27 | Calc பல தேதி ஒழுங்குகளை உணர்ந்து கொள்கிறது. |
06:32 | மாறாக நாம் செல்லில் வலது சொடுக்கி “Format Cells” தேர்வை செய்யலாம். |
06:38 | வகையில் “Date” தேர்வு செய்யவும். மற்றும் “Format” இன் கீழ் தேவையான ஒழுங்கை தேர்ந்தெடுக்கவும். நான் 12, 31, 1999 என் தேர்வு செய்கிறேன். முன்பார்வை களத்தில் எப்படி இருக்கிறது என காண்போம். |
06:51 | மேலும் ஒழுங்கு குறியீடு கீழே MM, DD மற்றும் YYYY என காட்டப்படுகிறது. தேவையானபடி இதை மாற்றிக்கொள்ளலாம். |
07:02 | நான் DD, MM மற்றும் YYYY என type செய்கிறேன். முன்பார்வை களத்தில் மாற்றத்தை கண்டு பின்
OK. ஐ சொடுக்குவோம். |
07:12 | Calc இல் நேரத்தை உள்ளிட, cell ஐ சொடுக்கி நேரத்தை type செய்யவும். |
07:18 | நீங்கள் நேரத்தின் பாகங்களை colon களால் பிரிக்கலாம். உதாரணமாக 10 colon 43 colon 20. |
07:24 | மாறாக நாம் செல்லில் வலது சொடுக்கி “Format Cells” தேர்வை செய்யலாம். |
07:31 | வகையில் “Time” தேர்வு செய்யவும். மற்றும் “Format” இன் கீழ் தேவையான ஒழுங்கை தேர்ந்தெடுக்கவும். நான் 13, 37, 46. என தேர்வு செய்கிறேன். முன்பார்வை களத்தில் எப்படி இருக்கிறது என காணலாம். |
07:43 | மேலும் ஒழுங்கு குறியீடு கீழே HH:MM:SS என காட்டப்படுகிறது. தேவையானபடி இதை மாற்றிக்கொள்ளலாம். நான் HH:MM என டைப் செய்கிறேன். |
07:57 | முன்பார்வை இடத்தில் மாற்றங்களை காணுங்கள். OK மீது சொடுக்கவும். |
08:03 | மாற்றங்களை செயல் நீக்குவோம். |
08:06 | உரை எண்கள் மற்றும் தேதிகளை Calc இல் எழுத கற்றோம். இப்போது spreadsheet க்குள் cell இலிருந்து இன்னொரு cell, மற்றும் தாளிலிருந்து தாளுக்கு எப்படி உலாவுவது என்று காணலாம். |
08:17 | முதலில் spreadsheet க்குள் cell இலிருந்து இன்னொரு cell க்கு எப்படி போவது என்று காணலாம். |
08:23 | நீங்கள் ஒரு குறிப்பிட்ட cell ஐ சொடுக்குவதன் மூலம் அதற்குள் போகலாம். |
08:29 | நீங்கள் அந்த cell முன்னிலைப்படுத்தப்பட்டதை காணலாம். |
08:32 | ஒரு குறிப்பிட்ட cell ஐ அணுக இன்னொரு வழி அதன் குறிப்பை கொண்டு. |
08:38 | “Name Box” க்கு வலது பக்கம் இருக்கும் சிறு கருப்பு அம்புக்குறியை சொடுக்கவும். |
08:43 | இப்போது நீங்கள் போக நினைக்கும் செல்லுக்கான குறிப்பை type செய்து “Enter” செய்யவும். |
08:49 | நீங்கள் “Name box” இலும் சொடுக்கலாம். இருக்கும் செல்லுக்கான குறிப்பை நீக்கிவிட்டு போக நினைக்கும் செல்லுக்கான குறிப்பை type செய்து “Enter” செய்யவும். |
08:58 | spreadsheet இல் cell களுக்கு நடுவே உலாவுவதை பார்க்கலாம். |
09:03 | உலாவலில் முதல் வழி cursor ஐ பயன்படுத்துதல். |
09:09 | cursor இன் குவிப்பை மாற்ற, அதை குவிப்பு இருக்க வேண்டிய cell க்கு நகர்த்தி இடது சொடுக்கி button ஐ அழுத்தவும். |
09:18 | இது குவிப்பை புதிய cell க்கு கொண்டுபோகும். |
09:22 | இது இரண்டு cell கள் அதிக தூரத்தில் உள்ளபோது மிகவும் பயனாகும். |
09:28 | cell கள் நடுவில் உலாவ இன்னொரு வழி - “tab” விசையை அழுத்த குவிப்பு அந்த வரியின் அடுத்த cell க்கு போகும். |
09:35 | ”Shift + tab” ஐ அழுத்த குவிப்பு அந்த வரியின் முந்தைய cell க்கு போகும். |
09:39 | “Enter” ஐ அழுத்த குவிப்பு அந்த பத்தியின் அடுத்த cell க்கு போகும். |
09:42 | “Shift + Enter” ஐ அழுத்த குவிப்பு அந்த பத்தியின் முந்தைய cell க்கு போகும். |
09:46 | அடுத்து Calc இல் spreadsheet களின் தாள்களுக்கு இடையே விசைப்பலகை மூலம் உலாவுவதை பார்க்கலாம். |
09:53 | செயலில் உள்ள sheet க்கு அடுத்த வலது பக்க sheet க்கு போக,“Control” ஐயும் “Page Down” விசையையும் ஒரே நேரத்தில் அழுத்தவேண்டும். |
10:00 | செயலில் உள்ள sheet க்கு அடுத்த இடது பக்க sheet க்கு போக,“Control” ஐயும் “Page Up” விசையையும் ஒரே நேரத்தில் அழுத்தவேண்டும். |
10:08 | நீங்கள் sheet கள் நடுவே cursor பயன்படுத்தியும் உலாவலாம். |
10:13 | மேலும் விவரங்கள் “Working with Sheets” tutorial இல் உள்ளன. |
10:19 | நீங்கள் அதிக அளவில் sheet களை உருவாக்கியிருந்தால் சில sheet கீற்றுகள் திரையின் கீழுள்ள கிடைமட்ட scroll bar இல் மறைக்கப்பட்டு இருக்கலாம். |
10:28 | அப்படியிருந்தால், sheet கீற்றுகளின் கீழ் இடது பக்கம் உள்ள நான்கு button களால் அவற்றை காட்சிக்கு கொண்டு வர முடியும். |
10:36 | மாற்றங்களை செயல் நீக்குவோம். |
10:39 | தொடர்ந்து சில cellகளை cursor ஆல் தேர்வு செய்ய, முதலில் ஒரு cell இல் சொடுக்குவோம். |
10:45 | இப்போது இடது சொடுக்கி button ஐ அழுத்தி பிடிக்கவும். |
10:48 | cursor ஐ திரையில் நகர்த்தி தேவையான cell களின் தொகுதி முன்னிலை படுத்தப்பட்ட பின் இடது சொடுக்கி button ஐ விட்டுவிடவும். தேந்தெடுத்த cell கள் முன்னிலை படுத்தப்பட்டு இருக்கும். |
11:00 | ஒன்றுக்கு மேற்பட்ட அடுத்தடுத்துள்ள பத்திகளையோ வரிகளையோ தேர்ந்தெடுக்க நினைத்தால் அந்த குழுவில் முதல் பத்தி அல்லது வரியில் சொடுக்கவும். |
11:09 | இப்போது “Shift” விசையை அழுத்தி பிடிக்கவும். |
11:12 | அந்த குழுவில் கடைசி பத்தி அல்லது வரியில் சொடுக்கவும். |
11:15 | ஒன்றுக்கு மேற்பட்ட, அடுத்தடுத்து இல்லாத பத்திகளையோ வரிகளையோ தேர்ந்தெடுக்க நினைத்தால் அந்த குழுவில் முதல் பத்தி அல்லது வரியில் சொடுக்கவும். |
11:23 | இப்போது “Control” விசையை அழுத்தி பிடிக்கவும். “Control” விசையை அழுத்தியவாறே தேவையான பத்திகள் அல்லது வரிகளை சொடுக்கவும். |
11:31 | ஒன்றுக்கு மேற்பட்ட அடுத்தடுத்துள்ள sheet களை தேர்ந்தெடுக்க நினைத்தால் sheet கீற்றில் தேவையான முதல் sheet இல் சொடுக்கவும். |
11:39 | இப்போது தேவையான கடைசி sheet க்கு cursor ஐ நகர்த்தவும். |
11:43 | “Shift” விசையை அழுத்தி பிடித்து sheet கீற்றில் சொடுக்கவும். |
11:48 | இந்த இரு sheet களுக்குள் உள்ள எல்லா கீற்றுகளும் வெள்ளையாக ஆகிவிடும். அதாவது தேர்ந்தெடுக்கப்பட்டுவிடும். |
11:56 | நீங்கள் இப்போது செய்யும் எந்த செயலும் தேர்ந்தெடுத்த எல்லா sheet களிலும் செயலாகும். |
12:01 | ஒன்றுக்கு மேற்பட்ட, அடுத்தடுத்து இல்லாத sheet களை தேர்ந்தெடுக்க நினைத்தால் sheet கீற்றில் தேவையான முதல் sheet இல் சொடுக்கவும். |
12:08 | இப்போது cursor ஐ மூன்றாம் sheet கீற்றுக்கு நகர்த்தவும். |
12:12 | “Control” விசையை அழுத்தி பிடித்து sheet கீற்றில் சொடுக்கவும். |
12:16 | தேர்ந்தெடுத்த sheet களின் கீற்றுகள் வெள்ளையாக ஆகிவிடும். நீங்கள் இப்போது செய்யும் எந்த செயலும் தேர்ந்தெடுத்த sheet களில் செயலாகும். |
12:24 | LibreOffice Calc குறித்த Spoken Tutorial இத்துடன் நிறைவடைகிறது. |
12:30 | சுருங்கச்சொல்ல நாம் கற்றது: |
12:33 | Calc இல் எப்படி எண்கள், உரை, எழுத்தில் எண்கள், தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை உள்ளிடுவது. |
12:40 | உரையாடல் பெட்டி மூலம் எப்படி Cell களை ஒழுங்கு செய்வது. |
12:43 | cell கள் மற்றும் sheet கள் இடைவில் எப்படி உலாவுவது, |
12:47 | வரிகள் பத்திகள் மற்றும் sheet களில் எப்படி உருப்படியை தேர்ந்தெடுப்பது |
12:52 | முழுமையான பயிற்சி: |
12:55 | “Spreadsheet Practice.ods” ஐ திறக்கவும். |
12:58 | “Serial Numbers” இன் கீழ் 1 முதல் 5 வரை வரிசை எண்களை ஒன்றன் கீழ் ஒன்றாக type செய்யவும். |
13:04 | விசைகள் மூலம் cell களுக்கு இடையே நகரவும். |
13:09 | serial number கீழே உள்ள எல்லாவற்றையும் தேர்ந்தெடுக்கவும். |
13:13 | தேதி மற்றும் நேரத்துக்கு ஒரு பத்தியை உருவாக்கவும். |
13:16 | Format Cells உரையாடல் பெட்டி தேர்வு மூலம் அவற்றில் சில தரவை உள்ளிடவும். |
13:21 | *கீழ் வரும் தொடுப்பில் உள்ள விடியோவை காணவும். |
13:24 | *இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது. |
13:27 | *இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள். |
13:32 | Spoken Tutorial திட்டக்குழு |
13:35 | * spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
13:38 | *இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது |
13:41 | *மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org |
13:48 | *ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும் |
13:52 | *இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
14:00 | *மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
14:11 | *தமிழில் கடலூர் திவா. நன்றி கூறி விடை பெறுவது --------------------------(name of the place) இலிருந்து -----------------------(name of the recorder) வணக்கம். |