LibreOffice-Suite-Calc/C2/Basic-Data-Manipulation/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:36, 29 November 2012 by Chandrika (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
TIME NARRATION
00:00 LibreOffice Calc – தரவு கையாளலின் அடிப்படை குறித்த Spoken tutorial க்கு நல்வரவு!
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்றுக்கொள்ளப்போவது:
00:09 சூத்திரங்களின் அடிப்படைக்கு அறிமுகம்.
00:12 பத்திகளால் அடுக்குதல்.
00:15 தரவை வடிகட்டுதலின் அடிப்படை
00:17 இங்கே உபுன்டு லீனக்ஸ் பதிப்பு 10.04 ஐ இயங்குதளம். மற்றும் LibreOffice Suite version 3.3.4
00:27 LibreOffice Calc இல் பயன்படுத்தப்படும் அடிப்படை சூத்திரங்களுடன் இந்த tutorial ஐ துவக்கலாம்.
00:35 சூத்திரங்கள் ஒரு விடையை காண பல எண்களையும் variable களையும் கொண்ட சமன்பாடு.
00:41 சமன்பாட்டை பூர்த்தி செய்ய variable கள் cell இடங்களில் தரவை கொண்டு இருக்கின்றன.
00:47 அடிப்படை கணித செயல்கள் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியன.
00:56 முதலில் நாம் நம் “Personal-Finance-Tracker.ods” file ஐ திறக்கலாம்.
01:02 “personal finance tracker.ods” file இல் நாம் எப்படி “Cost” தலைப்பில் உள்ள எல்லா செலவையும் கூட்டுவது என்று காணலாம்.
01:13 “Miscellaneous” இன் கீழ் நாம் இன்னொரு தலைப்பை “SUM TOTAL” என கொடுக்கலாம்.
01:19 மற்றும் A8 cell இல் சொடுக்கி வரிசை எண் “7” என தரலாம்.
01:25 இப்போது மொத்த செலவை காட்ட வேண்டிய “C8” cell ஐ சொடுக்குவோம்.
01:32 எல்லா செலவையும் கூட்ட நாம் இதை type செய்வோம்: “is equal to SUM” மேலும் அடைப்புக்குறிகளுக்குள் கூட்ட வேண்டிய பத்திகளின் வீச்சை - அதாவது ”C3 colon C7” என எழுதுவோம்.
01:44 விசைப்பலகையில் “Enter” விசையை அழுத்தவும்.
01:47 நீங்கள் “Cost” இன் கீழுள்ள எல்லாம் கூட்டப்பட்டதை காணலாம்.
01:51 இப்போது Calc இல் கழித்தல் செய்வோம்.
01:55 “House Rent” , “ Electricity Bill” செலவு நீங்கலாக எவ்வளவு என்று A9 குறிக்கும் செல்லில் காண A9 cell ஐ முதலில் சொடுக்குவோம்.
02:06 இப்போது இந்த cell இல் type செய்வோம்: “is equal to” மற்றும் அடைப்புக்குறிகளுக்குள் செல்களின் குறிப்பை அதாவது “C3 minus C4”.
02:17 விசைப்பலகையில் “Enter” விசையை அழுத்தவும்.
02:20 நாம் குறிப்பிட்ட இரண்டு cell களின் மதிப்பு கழிக்கப்பட்டு விடை cell எண் A9 இல் காட்டப்படுவதை காணலாம்.
02:29 மாற்றங்களை செயல் நீக்குவோம்.
02:32 இதே போல பல வேறு cell களில் தரவு பெருக்கப்படலாம் அல்லது வகுக்கப்படலாம்.
02:37 இன்னொரு அடிப்படை செயல் எண்களின் சராசரியான “Average” காணல்.
02:43 இது எப்படி செய்யப்படுகிறது என்று பார்க்கலாம்.
02:45 “SUM TOTAL” cell க்கு கீழே “Average” என தலைப்பு கொடுக்கலாம்.
02:50 இங்கே மொத்த செலவின் சராசரியை காட்ட வேண்டும்.
02:55 ஆகவே “C9” cell இல் சொடுக்கலாம்.
02:58 இப்போது type செய்யலாம்:“is equal to” Average மற்றும் அடைப்புக்குறிகளுக்குள் Cost
03:04 விசைப்பலகையில் “Enter” விசையை அழுத்தவும்.
03:07 நீங்கள் “Cost” பத்தியின் சராசரி காட்டப்படுவதை காணலாம்.
03:11 மாற்றங்களை செயல் நீக்குவோம்.
03:15 அதேபோல, நீங்கள் ஒரு கிடைமட்ட வரியில் உள்ளவற்றின் சராசரியையும் காணலாம்.
03:20 மேலும் சூத்திரங்கள் மற்றும் operator கள் குறித்து மேல்மட்ட tutorial களில் காண்போம்.
03:25 இப்போது Calc spreadsheet. இல் எப்படி தரவை “Sort” செய்வது என்று பார்க்கலாம்.
03:30 Sorting என்னும் அடுக்குதல் sheet இல் தெரிகின்ற செல்களை எந்த விருப்பமான வழியிலும் அமைக்கிறது.
03:35 Cal இல் நீங்கள் தரவை மூன்று விதிகள் வரை பயன்படுத்தி அடுக்கலாம்; அவை ஒன்றன் பின் ஒன்றாக செயல் படுத்தப்படும்.
03:43 ஒரு குறிப்பிட்ட விஷயத்தை நீங்கள் தேடும்போது இது மிகவும் பயனாகும். மேலும் நீங்கள் தரவை முன்னால் வடிகட்டிவிட்டால் இன்னும் சக்தி வாய்ந்ததாகும்.
03:51 “Costs” தலைப்பில் மேல்நோக்கு வரிசையில் தரவை அடுக்க வேண்டும் என்று கொள்வோம்.
03:57 முதலில் “Cost” என்னும் cell இல் சொடுக்கி அடுக்க வேண்டிய செல்களை முன்னிலை படுத்தலாம்.
04:03 இப்போது இடது சொடுக்கி button ஐ அழுத்திக்கொண்டு பத்தியில் “2000” என்று சொல்லும் கடைசி செல் வரை இழுக்கவும்.
04:12 இது நாம் அடுக்க வேண்டிய பத்தியை தேர்ந்தெடுக்கிறது.
04:15 இப்போது menu bar இல் “Data” தேர்வு iமீது சொடுக்கி பின் “Sort” மீது சொடுக்கவும்.
04:21 அடுத்து “Current Selection” ஐ தேர்ந்தெடுக்கவும்.
04:24 நீங்கள் ஒரு உரையாடல் பெட்டி தோன்றுவதை காணலாம். அதில் கீற்றுகள் “Sort criteria” மற்றும் “Options” என உள்ளன.
04:31 “Sort criteria” கீற்றில் “Sort by” புலத்தில் “Cost” ஐ சொடுக்கவும்.
04:37 “Cost” ஐ ஏறு வரிசையில் அடுக்க அதை அடுத்துள்ல “Ascending” தேர்வை சொடுக்கவும்.
04:44 இப்போது “OK” button ஐ சொடுக்கவும்.
04:47 நீங்கள் பத்தி ஏறுவரிசையில் அடுக்கப்பட்டதை கண்டீர்கள்.
04:51 அதேபோல இறங்கு வரிசைக்கு “Descending” பின் “OK” button ஐ சொடுக்கவும்.
04:59 மாற்றங்களை செயல் நீக்குவோம்.
05:02 பல பத்திகளை அடுக்க முதலில் அவற்றை தேர்ந்தெடுத்துவிட்டு பின் sort தேர்வுகளை அமைக்க வேண்டும்.
05:09 serial numbers மற்றும் cost இரண்டையும் அடுக்க வேண்டுமெனில்,
05:14 முன் செய்தது போல இந்த இரண்டையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
05:18 இப்போது menu bar இல் “Data” தேர்வில் சொடுக்கி பின் “Sort” மீது சொடுக்க வேண்டும்.
05:24 தோன்றும் உரையாடல் பெட்டியில் முதலில் “Sort by” புலத்தில் “Cost” ஐ தேர்ந்தெடுக்கவும்.
05:30 பின் “Then by” புலத்தில் “SN” ஐ தேர்ந்தெடுக்கவும்.
05:35 இரண்டின் அருகிலும் இருக்கும் “ Descending” தேர்வை சொடுக்கி “OK” button ஐ சொடுக்கவும்.
05:43 நீங்கள் இரண்டு தலைப்புகளிலும் கீழிறங்கும் வரிசையில் எல்லாம் அடுக்கப்படுவதை காண்கிறீர்கள்.
05:47 மாற்றங்களை செயல் நீக்குவோம்
05:49 இப்போது LibreOffice Calc இல் எப்படி தரவை வடிகட்டுவது என்று காணலாம்.
05:53 ஒரு வடிப்பி என்பது ஒரு நிபந்தனை பட்டியல்; அதை ஒவ்வொரு உள்ளீடும் காட்டப்படும் முன் சந்திக்க வேண்டும்.
06:00 spreadsheet இல் வடிப்பி செயலை காட்ட நாம் “Item” என் பெயரிட்ட செல்லில் சொடுக்குவோம்.
06:07 இப்போது menu bar இல் “Data” தேர்வையும் பின் “Filter” ஐயும் சொடுக்குவோம்.
06:12 துள்ளும் மெனுவில் “AutoFilter” தேர்வை சொடுக்குவோம்.
06:16 நீங்கள் தலைப்புகளில் அம்புக்குறிகள் தோன்றுவதை காணலாம்.
06:20 “Item” என் பெயரிட்ட செல்லில் அம்புக்குறியை சொடுக்குவோம்.
06:24 இப்போது நீங்கள் “Electricity Bill” தொடர்பான தரவை மட்டும் காட்ட விரும்பினால்...
06:29 “Electricity Bill” தேர்வில் சொடுக்கவும்.
06:34 நீங்கள் sheet இல் “Electricity Bill” தொடர்பான தரவு மட்டும் காட்டப்படுவதை காணலாம்.
06:40 மற்ற தேர்வுகள் வடிக்கட்டப்பட்டு விட்டன.
06:43 மீண்டும் எல்லா தரவுகளையும் காண ”Item” cell இல் உள்ள அம்புக்குறியை சொடுக்கி மற்றும் “All” மீது சொடுக்கவும்.
06:52 இப்போது முன்னால் எழுதிய எல்லாத்தரவுகளையும் காண முடிகிறது.
06:59 “AutoFilter” தவிர இன்னும் இரண்டு தேர்வுகள் உள்ளன. அவை “Standard Filter” மற்றும் “Advanced Filter”, இவற்றைக்குறித்து இந்த தொடரில் பின்னால் பார்க்கலாம்.
07:11 இத்துடன் LibreOffice Calc மீதான இந்த Spoken Tutorial முடிகிறது.
07:15 சுருங்கச்சொல்ல நாம் கற்றது:
07:18 சூத்திரங்களின் அடிப்படைக்கு அறிமுகம்,
07:21 பத்திகளாக அடுக்குவது,
07:23 தரவை பில்டர் செய்வது.
07:26 *கீழ் வரும் தொடுப்பில் உள்ள விடியோவை காணவும்.
07:30 *இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது.
07:33 *உங்கள் இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள்.
07:37 Spoken Tutorial திட்டக்குழு
07:40 *spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
07:43 *இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
07:47 *மேலும் அதிக தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org
07:53 *ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
07:58 *இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08:06 *மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
08:16 *மூல பாடம் DesiCrew Solutions. தமிழில் கடலூர் திவா. நன்றி கூறி விடை பெறுவது --------------------------(name of the place) இலிருந்து -----------------------(name of the recorder) வணக்கம்.

Contributors and Content Editors

Chandrika, Priyacst