Linux-Old/C2/Ubuntu-Desktop-14.04/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:00 | உபுண்டு டெஸ்க்டாப் பற்றிய ஸ்போகன் டுடோரியலுக்கு நல் வரவு! |
0:04 | இந்த டுடோரியலைக் கொண்டு நாம் க்னோம் என்விரான்மென்ட் பற்றி அறிமுகம் செய்து கொள்வோம்! |
0:12 | இதற்கு நான் உபுண்டு 10.10 ஐ பயன்படுத்துகிறேன். |
0:19 | நீங்கள் இப்போது பார்ப்பது உபுண்டு டெஸ்க்டாப். |
0:24 | மேலே இடது பக்க மூலையில் மெய்ன் மெனுவை பார்க்கலாம். |
0:31 | இதை திறக்க நீங்கள் ஆல்ட்+ எப்1 ஐ அழுத்தலாம் அல்லது அப்ளிகேஷன்ஸ் க்கு போய் அதை சொடுக்கலாம். |
0:40 | எல்லா நிறுவிய அப்ளிகேஷன்ஸ் உம் இந்த மெனுவில் வகைப்படுத்தி உள்ளன. |
0:48 | இந்த அப்ளிகேஷன்ஸ் மெனுவில் சில முக்கியமானவற்றை அறிமுகம் செய்து கொள்வோம். |
0:55 | நாம் அப்ளிகேஷன்ஸ் > ஆக்சசரீஸ் >கால்குலேட்டர் க்கு போவோம். |
1:04 | கால்குலேட்டர் நாம் கணித, விஞ்ஞான, வர்த்தக கணக்குகளை போட உதவுகிறது. |
1:12 | இதை திறப்போம். கால்குலேட்டர் மீது சொடுக்குங்கள். |
1:18 | சில எளிய கணக்குகள் போட்டு பார்க்கலாம். |
1:22 | ஐந்து இண்டு எட்டு என டைப் அடித்து சமம் குறியை சொடுக்குங்கள். |
1:32 | சமம் குறியை சொடுக்காமல் என்டர் விசையையும் தட்டலாம் |
1:39 | மூடு பட்டனை பயன்படுத்தி கால்குலேட்டரை மூடலாம். |
1:46 | இப்போது இன்னொரு பயன்பாட்டை பார்க்கலாம். |
1:50 | மீண்டும் அப்ளிகேஷன்ஸ் போய் ஆக்சசரீஸ் போகலாம் |
1:59 | ஆக்சசரீஸ் இல் டெக்ஸ்ட் எடிட்டர் ஐ திறக்கலாம். |
2:09 | இப்போது திரையில் தெரிவது ஜிஎடிட் உரை திருத்தி. |
2:16 | இப்போது கொஞ்சம் உரை எழுதி சேமிக்கலாம். “ஹலோ வேர்ல்ட்” என எழுதலாம். |
2:28 | இதை சேமிக்க நான் கண்ட்ரோல் + எஸ் ஐ அழுத்தலாம் அல்லது பைல்ஸ் க்கு போய் சேவ் இல் சொடுக்கலாம். நான் பைல்ஸ் க்கு போய் சேவ் இல் சொடுக்குகிறேன். |
2:45 | இப்போது ஒரு சிறிய உரையாடல் பெட்டி திறந்துள்ளது. இது பைலின் பெயரையும் எங்கே சேமிக்க வேண்டும் என்றும் கேட்கிறது. |
2:56 | பெயருக்கு ஹெலோ டாட் டெக்ஸ்ட் என்றும் சேமிக்க இடத்திற்கு டெஸ்க்டாப் ஐ தேர்ந்தெடுத்தும் உள்ளிடுகிறேன். பின் சேவ் பட்டனை அழுத்துகிறேன் |
3:15 | இப்போது ஜிஎடிட் ஐ மூடிவிட்டு பைல் டெஸ்க்டாப்பில் சேமிக்கப்பட்டுள்ளதா என்று சோதிக்கலாம். இதை மூடலாம். |
3:24 | ஹெலோ டாட் டிஎக்ஸ்டி பைல் டெஸ்க்டாப்பில் தெரிகிறது. |
3:30 | ஆகவே நம் பைல் வெற்றிகரமாக சேமிக்கப்பட்டுள்ளது. |
3:35 | இந்த பைலின் மீது இரட்டை சொடுக்கி அதை திறக்கிறேன். |
3:40 | வாவ்! நமது உரை பைல் நாம் எழுதிய உரையுடன் திறந்துவிட்டது. |
3:44 | இன்டர்நெட் இல் ஜிஎடிட் உரை திருத்தி குறித்து நிறைய விஷயங்கள் கிடைக்கின்றன. |
3:50 | இந்த பொருள் குறித்து இதே தளத்தில் ஸ்போக்கன் டுடோரியல் கிடைக்கும்.. |
4:00 | இந்த உரை திருத்தியை மூடிவிட்டு அக்சசரிஸ் இலிருந்து இன்னொரு அப்ளிகேஷனை பார்க்கலாம். டெர்மினல். |
4:12 | ஆகவே நாம் மீண்டும் அப்ளிகேஷன்ஸ் > ஆச்சசரீஸ் சென்று பின் டெர்மினல் க்கு போகலாம். |
4:19 | டெர்மினலுக்கு கமாண்ட் லைன் என்றும் பெயர் உண்டு. இங்கிருந்து நாம் கணினிக்கு கமாண்ட் கள் பிறப்பிக்கலாம். |
4:25 | உண்மையில் இது கூயி யை விட சக்தி வாய்ந்தது. |
4:30 | டெர்மினல் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள ஒரு எளிய கமாண்டை உள்ளிடுவோம். |
4:36 | எல்எஸ் என தட்டச்சுவோம். பின் என்டர் ஐ அழுத்துவோம். |
4:41 | இப்போது உள்ள டிரக்டரியில் உள்ள அனைத்து பைல்களும் டிரக்டரிகளும் பட்டியல் இடப்படுவதை காணலாம். |
4:48 | இங்கு நம் ஹோம் டிரக்டரியில் உள்ள பைல்களும் டிரக்டரிகளும் காணப்படுகின்றன. |
4:55 | இந்த ஹோம் டிரக்டரி என்பது என்ன என்று பின்னால் காணலாம். |
5:01 | டெர்மினல் பற்றி பின்னால் இதே தளத்தில் வேறு ஒரு டுடோரியலில் காணலாம். இப்போதைக்கு இது போதும். |
5:17 | டெர்மினலை மூடுவோம். |
5:20 | அடுத்து வேறு பயன்பாடான பயர்பாக்ஸ் வலை உலாவிக்கு போகலாம். அதை திறக்கலாம். |
5:27 | அதை திறக்க அப்ளிகேஷன்ஸ் > இன்டர்நெட் > பயர்பாக்ஸ் வெப் ப்ரௌசர் க்கு போகலாம். இதன் மீது சொடுக்கலாம் |
5:36 | பயர்பாக்ஸ் உலகளாவிய வலைப்பின்னலை அணுக உதவுகிறது. இப்போது பயர்பாக்ஸ் திறந்துவிட்டதை காணலாம். |
5:43 | ஜிமெய்ல் தளத்துக்கு செல்வோம். அதற்கு அட்ரஸ் பாருக்கு போக வேண்டும் அல்லது எப் 6 ஐ அழுத்தலாம். எப் 6 ஐ அழுத்துகிறேன் |
5:53 | அட்ரஸ் பாருக்கு போய் விட்டேன். பேக் ஸ்பேஸ் விசையை அழுத்தி அதை துடைத்துவிட்டேன். |
6:00 | டபுள்யு டபுள்யு டபுள்யு டாட் ஜிமெய்ல் டாட் காம் என உள்ளிடுகிறேன். என்டர் விசையை அழுத்துகிறேன். |
6:04 | நான் டைப் செய்யும் போது பயர்பாக்ஸ் சில சாத்தியக்கூறுகளை கொடுக்கலாம். |
6:09 | கொடுக்கும் பரிந்துரை சரியாக இருந்தால் அதை தேர்ந்தெடுக்கலாம். அல்லது நீங்கள் முழு முகவரியை உள்ளிடலாம். |
6:15 | பயர்பாக்ஸ் வலைத்தளத்துக்கு நேரடியாக செல்லலாம் அல்லது யூசர் நேம், பாஸ்வேர்ட் கேட்கலாம். |
6:22 | இப்போது யூசர் நேம், பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே போகலாம். |
6:36 | ஜிமெய்ல் வலைப்பக்கம் திறந்துவிட்டதை காணலாம். இப்போது இதை மூடிவிட்டு அடுத்ததுக்கு போகலாம். |
6:45 | இப்போது ஆபீஸ் மெனுவுக்கு போகலாம். அதாவது அப்ளிகேஷன்ஸ் > ஆபீஸ். |
6:53 | இந்த ஆபீஸ் மெனுவில் மேலும் வேர்ட் ப்ராசசர், ஸ்ப்ரெட் ஷீட் மற்றும் ப்ரசெண்டேஷன் ஆகியவை உள்ளன. |
7:03 | இந்த பொருள் குறித்து இணைய தளங்களில் ஏராளமான தகவல்கள் உள்ளன. |
7:07 | எதிர் காலத்தில் இதே ஸ்போக்கன் டுடோரியல் பக்கங்களிலும் அவற்றை காணலாம். |
7:12 | அடுத்து சவுண்ட் அன்ட் விடியோ மெனுவை பார்க்கலாம். |
7:21 | இதில் ஒரு முக்கிய அப்ளிகேஷன் உள்ளது. மூவி ப்ளேயர். இது விடியோ மற்றும் பாடல்களை இயக்க பயன்படுகிறது. முன்னிருப்பாக இது ஓபன் பார்மேட் விடியோ பைல் களை மட்டுமே இயக்கும். |
7:35 | ஒரு மாதிரி பைல் ஐ என் பென் சாதனத்தில் இருந்து இயக்கி காட்டுகிறேன். யூஎஸ்பி வாயிலில் என் பென் சாதனத்தை சொருகுகிறேன். அது திறக்கப்பட்டு விட்டது. |
7:48 | அது தானாக திறக்கவில்லை என்றால் நீங்கள் டெஸ்க்டாபிலிருந்து அதை அணுகலாம். |
7:53 | கீழே இடது மூலையில் உள்ள சின்னத்தின் மீது சொடுக்குங்கள். இப்போது டெஸ்க்டாப் மட்டுமே தெரியும். மீண்டும் இதன் மீது சொடுக்க டெஸ்க்டாப் மற்றும் திறந்துள்ள பைல்கள் எல்லாம் தெரியும். |
8:08 | விண்டோஸ் விசையையும் D விசையையும் அழுத்திக்கூட டெஸ்க்டாபுக்கு போகலாம். முன் பதிப்பு உபுண்டுவில் இது கண்ட்ரோல் ஆல்ட் D ஆக இருந்தது. பதிப்புக்கு பதிப்பு இது மாறக்கூடும் என்பதை நினைவில் கொள்க. இப்போது விண்டோஸ் விசையையும் D விசையையும் அழுத்தலாம். |
8:37 | இங்கு டெஸ்க்டாப்பில் என் பென் சாதனம் இருப்பதை காணலாம். |
8:42 | இதை இரட்டை சொடுக்கு சொடுக்கு திறக்கலாம். |
8:46 | உபுண்டு ஹ்யுமானிடி டாட் ஒஜிவி என்ற நகர் படத்தை இப்போது தேர்ந்தெடுக்கிறேன். |
8:57 | இதோ இருக்கிறது இதை இரட்டை சொடுக்கு சொடுக்கி திறக்கிறேன். |
9:09 | இது மூவி ப்ளேயரை முன்னிருப்பாக திறக்கிறது. இதை மூடுவோம் |
9:13 | மேலும் சில முக்கிய விஷயங்களை டெஸ்க்டாப்பில் பார்க்கலாம். |
9:18 | அதற்கு இப்போது ப்ளேசஸ் மெனுவுக்கு போகலாம்.இதில் நம் ஹோம் டிரக்டரி இருக்கிறது. |
9:27 | அதை திறக்கலாம். ஹோம் டிரக்டரியில் சொடுக்கலாம் |
9:29 | ஒவ்வொரு உபுண்டு பயனருக்கும் ஒரு ஹோம் டிரக்டரி இருக்கும். |
9:34 | இது நமது ஹோம். இங்கே நம்முடைய டிரக்டரிகள் பைல்கள் ஆகியவற்றை சேமித்து வைக்கலாம். |
9:42 | நம் அனுமதி இல்லாமல் மற்றவர்கள் இவற்றை பார்க்க முடியாது. இந்த பைல் அனுமதிகள் பற்றி மேலும் ஸ்போக்கன் டுடோரியல் தளத்தில் வேறு ஒரு டுடோரியலில் காணலாம். |
9:56 | நம் ஹோம் டிரக்டரியில் மற்ற டிரக்டரிகளை காணலாம். அவை டெஸ்க்டாப், டாகுமென்ட்ஸ், டவுன்லோட்ஸ், விடியோஸ் ஆகியன. |
10:08 | லினக்சில் எல்லாமே ஒரு பைல் ஆகும். டெஸ்க்டாப் ஐ இரட்டை சொடுக்கு செய்து திறக்கிறேன். |
10:16 | முன்னே நாம் சேமித்த ஹெலோ டாட் டிஎக்ஸ்டி பைல் இங்கே இருக்கிறது. |
10:25 | ஆகவே இந்த பைலும் டெஸ்க்டாப்பும் ஒன்றே! இந்த அடைவை இப்போது மூடலாம் |
10:31 | டெஸ்க்டாப்பில் ஒரே மாதிரி தீமை பார்த்து போரடித்துவிட்டதா? அதை மாற்றுவோம்! |
10:37 | அதற்கு சிஸ்டம்> ப்ரிபரன்சஸ்> அப்பியரன்சஸ் க்கு போகலாம். அதில் சொடுக்கலாம். |
10:44 | இங்கே தீம்ஸ் டாப் [tab] இல் பல முன்னிருப்பு தீம்கள் உள்ளன. நாம் கிளியர் லுக்ஸ் ஐ தேர்ந்தெடுக்கலாம். |
10:52 | அதை நாம் சொடுக்கிய உடனேயே நம் கணினியில் மாறுதல்கள் வந்துவிட்டன. |
10:58 | இடது கீழ் மூலையில் உள்ள டெஸ்க்டாப் சின்னத்தை சொடுக்கி அவற்றை தெளிவாக காணலாம். அதை மீண்டும் சொடுக்கி டிரக்டரிகளுக்கு போகலாம். |
11:10 | இந்த தீம்களுடன் விளையாடிப் பாருங்கள். கடைசியில் மூட க்ளோஸ் ஐ சொடுக்குங்கள். |
11:18 | இத்துடன் இந்த டுடோரியல் முடிவுக்கு வருகிறது. |
11:21 | இந்த டுடோரியலில் உபுண்டு டெஸ்க்டாப், மெய்ன் மெனு, உபுண்டு திரையில் தெரியும் மற்ற சின்னங்கள் பற்றி தெரிந்து கொண்டோம். |
11:31 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:41 | இது குறித்த மேற்கொண்டு விவரங்களுக்கு இங்கே செல்லுங்கள்: http://spoken-tutorial.org/NMEICT-Intro. |
11:47 | இந்த மொழியாக்கம் செய்தது கடலூரில் இருந்து திவா. டப் [dub] செய்து இப்போது வந்தனம் கூறி விடை பெறுவது காஞ்சிபுரத்தில் இருந்து பிரியா. |