Linux/C2/Simple-filters/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:00 | வணக்கம் நண்பர்களே, இந்த லீனக்ஸில் எளிய பில்டர்கள் ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
0:08 | இங்கு நாம் ஹெட், டெய்ல், ஸார்ட், கட், பேஸ்ட் ஆகியவற்றைப்பற்றி கற்போம். |
0:17 | இவை அனைத்தும் கமாண்ட் உரை மாற்றி கருவிகள். |
0:22 | டெர்மினலில் நீங்கள் ஹாஷ் ஐ கண்டால் இந்த கமாண்ட் களை செயலாக்க நீங்கள் ரூட் ஆக வேண்டும். |
0:29 | அதாவது கமாண்ட் இல் சூடொ சு அல்லது சு ரூட் சேர்க்க வேண்டும். டாலர் குறியை டெர்மினலில் கண்டால் நீங்கள் பயனாராகவே டெர்மினலை பயன்படுத்தலாம். |
0:38 | நீங்கள் உபுன்டுவின் முன்னிருப்பு நிறுவலை செய்திருக்கிறீர்கள், பைல்கள் சேமிக்கப்படும் பாதையை மாற்றவில்லை என கொள்கிறேன். |
0:46 | நான் இந்த டுடோரியலுக்கு 10.04 உபுன்டுவை பயன்படுத்துகிறேன். |
0:51 | இந்த மாட்யூலை நீங்கள் சரியாக பயன்படுத்த பின் வருவனவற்றை அறிந்திருக்க வேண்டும். சொடுக்கி - மௌஸ் -ஐயும் விசைப்பலகையும் கையாளுவது, ஒரு சாளரத்தை பெரிதாக்குவது, சிறிதாக்குவது. |
1:02 | நாம் ஹெட் கமாண்டின் பின்னால் ஒரு ஆஸ்கி பைல் பெயரை பயன்படுத்தி முன்னிருப்பாக முதல் பத்து வரிகளை காண்பிக்க வைக்கலாம். |
1:10 | ஒரு பைல் ஐ உருவாக்கலாம். இதை நேரடியாக காட்ட எஸ்கேப் விசையை அழுத்துகிறேன். |
1:17 | அப்ளிகேஷன் > ஆக்ஸசரீஸ் > டெக்ஸ்ட் எடிட்டர் போகலாம். |
1:24 | சில எண்களை இன்னொரு பைலில் எழுதி வைத்தி இருக்கிறேன். நேரத்தை மிச்சப்படுத்த.... |
1:30 | அதை பிரதி எடுத்து இங்கே ஒட்டுகிறேன். |
1:38 | பைல், சேவ் இல் சொடுக்கி... |
1:41 | நம்பர்ஸ் டாட் டிஎக்ஸ்டி என பெயர் கொடுத்து சேமிக்கிறேன். |
1:48 | பைல் ஐ மூடுகிறேன். |
1:53 | இப்போது அப்ளிகேஷன் > ஆக்ஸசரீஸ் > டெர்மினல் க்கு போகிறேன். |
2:01 | ம் உருவாக்கிய பைல் இங்கே இருக்கிறதா என்று பார்க்கலாம். |
2:05 | எல்எஸ் என டைப் செய்து என்டர் செய்கிறேன். |
2:09 | இதனால் நம் ஹோம் டிரக்டரியில் உள்ள எல்லா டிரக்டரிகளையும் பைல் களையும் பட்டியலாக பார்க்கிறோம். |
2:15 | இப்போது கேட் கமாண்ட் ஆல் நாம் உருவாக்கிய பைலின் உள்ளடக்கத்தை படிக்க முயற்சிக்கலாம். |
2:21 | கேட் என்யுஎம் … டேப் விசையை அழுத்த மீதி பெயர் தானாக உள்ளிடப்படும். என்டர் செய்கிறேன். |
2:29 | அதையே ஹெட் கமாண்ட் க்கு செய்யலாம். |
2:33 | ஹெட் என்யுஎம் … டேப் … என்டர் |
2:39 | இப்போது முதல் பத்து வரிகள் காட்டப்படுகிறன. |
2:43 | நாம் முதல் ஐந்து வரிகளை மட்டும் காண நினைத்தால் ஹெட் கமாண்ட் க்கும் பைல் பெயருக்கும் நடுவில் ஹைபன் என் 5 தேர்வை எழுத வேண்டும். |
2:52 | மேல் அம்புக்குறி விசையை அழுத்த முந்தைய கமாண்ட் வரும். மைனஸ் என் 5 எழுதி என்டர் செய்க. |
2:58 | இப்போது முதல் ஐந்து வரிகள் மட்டும் காட்டப்படும். |
3:02 | இப்போது ப்ரெசன்டேஷனுக்கு போகலாம். |
3:08 | பங்ஷன் விசை ஐந்து.... |
3:14 | ஹெட் கமாண்ட் செய்யும் அதே விஷயத்தை டெய்ல் கமாண்ட் தலைகீழாக செய்கிறது. அதாவது முன்னிருப்பாக கடைசி பத்து வரிகளை காட்டுகிறது. |
3:22 | ஆல்ட் டேப் அழுத்தி டெர்மினலுக்கு மாறுகிறேன். |
3:27 | டெய்ல் நம்ப்... டேப் என்டர். |
3:31 | நாம் கடைசி ஐந்து வரிகளை மட்டும் காண நினைத்தால் டெய்ல் கமாண்ட் க்கும் பைல் பெயருக்கும் நடுவில் ஹைபன் என் 5 தேர்வை எழுத வேண்டும். |
3:40 | ஹைபன் என் 5 என்டர் |
3:45 | ஸ்லைடுகளுக்கு போகலாம். |
3:50 | லாக் பைல் என்பது கணினியில் நடந்த நிகழ்ச்சிகளை பதிவு செய்கிறது. |
3:55 | ஆத்டாட் லாக் பைல் கணினியில் யார் யார் உள்நுழைந்தார்கள் வெளியேறினார்கள் என்ற தகவலை பதிவு செய்கிறது. |
4:01 | டெய்ல் கமாண்ட் இன் முக்கிய பயனுள்ள தேர்வு ஹைபன் எஃப் தேர்வு மூலம் லாக் பைலின் கடைசி பகுதியை தொடர்வதுதான். |
4:09 | லாக் கோப்பில் புதிய வரி எழுதப்பட்டால் அதை கடைசி வரியாக கொண்டு கடைசி பத்து வரிகள் காட்டப்படும். |
4:18 | டெர்மினலுக்கு போகலாம். |
4:21 | டெய்ல் ஹைபன் எஃப் பார்வோர்ட் ஸ்லாஷ் வார் பார்வோர்ட் ஸ்லாஷ் லாக் ஆத் dot லாக். |
4:31 | டெர்மினலை மறு அளவு செய்வோம். |
4:39 | இன்னொரு டெர்மினலை திறக்கலாம். அப்ளிகேஷன் > ஆக்ஸசரீஸ் > டெர்மினல் க்கு போகிறேன். |
4:46 | டெர்மினலை மறு அளவு செய்தால் ... |
4:52 | எப்படி டெய்ல் கமாண்ட் ஒரு லாக் பைலின் கடைசி வரியை தொடர்கிறது என்று ஒரே திரையில் பார்க்கலாம். |
5:00 | உங்களையே சு ஆக்க சு என உள்ளிடுங்கள்; என்டர். |
5:05 | ஒரு தவறான பாஸ்வேர்டை உள்ளிடுங்கள். |
5:08 | டெய்ல் இயங்கும் டெர்மினலில் புதிய லாக் பதிவு தோன்றுவதை பாருங்கள். |
5:15 | லாக் நுழைவு தோல்வி அடைந்த நேரமும் தேதியும் காட்டப்படுகிறது. |
5:23 | இதை உறுதி செய்ய டேட் என டைப் செய்து என்டர் செய்க. |
5:32 | இந்த டெர்மினலில் இருந்து வெளியேற எக்ஸிட் என டைப் செய்து உள்ளிடுக. |
5:36 | கண்ட்ரோல் சி என டைப் செய்தால் இந்த டெய்ல் கமாண்ட் இயக்கம் நின்றுவிடும். திரையை பெரிதாக்கிக்கொள்ளலாம். |
5:51 | முந்தைய உதாரணத்தில் நாம் ஆத் லாக் பைல் ஐ மட்டுமே பார்த்து இருக்கிறோம். |
5:57 | இவை லீனக்ஸில் அதிகம் பயன்படும் லாக் பைல்கள். |
6:01 | பிரச்சினைகள் ஏற்பட்டால் ஒரு லீனக்ஸ் சிஸ்டம் மேலாளர் தன் கணினியை சரி செய்ய இவற்றை காண்பார். |
6:12 | சார்ட் கமாண்ட் பெயருக்கு ஏற்றாற்போல் ஒரு பைல் ஐ மேல் நோக்கியோ கீழ் நோக்கியோ அடுக்கிக்கொடுக்கும். |
6:23 | சார்ட் நம்பர்ஸ் டாட் டெக்ஸ்ட். இது நம் நம்பர்ஸ் டாட் டெக்ஸ்ட் பைல் ஐ ஏறு வரிசையில் அடுக்கி கொடுக்கும். |
6:31 | ஒரு வினோதமான விஷயம் கவனித்தீர்களா? பத்து பதினொன்று பன்னிரண்டு ஆகியவை இரண்டுக்கு முன்னால் வருகின்றன. ஏனெனில் சார்ட் முதல் எண்ணை மட்டுமே பார்த்து அடுக்குகிறது. |
6:43 | இதை தவிர்க்க ஹைபன் என் ஐ சேர்க்க வேண்டும். சேர்த்து.. என்டர். |
6:53 | இப்போது சார்ட் முழு எண்னையும் பார்த்து அடுக்குகிறது. |
6:58 | இதையே இறங்கு வரிசையில் அடுக்க தேர்வு ஹைபன் ஆர் ஐ பயன்படுத்தலாம். |
7:09 | இந்த கோப்பில் சில எண்கள் மீண்டும் மீண்டும் வருகின்றன. இவற்றை தவிர்த்து மற்றதை காண தேர்வு ஹைபன் யு ஐ பயன்படுத்தலாம். |
7:17 | டெர்மினலுக்கு போகலாம். |
7:20 | மேல் அம்புக்குறி |
7:22 | யு என்டர், |
7:26 | முன்னே இரண்டு இரண்டு காட்டப்பட்டது இல்லையா? இப்போது ஒரே ஒரு இரண்டுதான் காட்டப்படுகிறது. |
7:38 | இப்போது ஒரு பைல் ஐ எப்படி ஒரு காலம் அடிப்படையில் பிரிப்பது என்று பார்க்கலாம். |
7:44 | ஒரு பைல் ஐ உருவாக்கி கீழ் கண்டபடி உள்ளிடுவோம். |
7:48 | அப்ளிகேஷன் > ஆக்ஸசரீஸ் > டெக்ஸ்ட் எடிட்டர் க்கு போகலாம். |
7:57 | டேடாவை இன்னொரு கோப்பில் எழுதி வைத்தி இருக்கிறேன். நேரத்தை மிச்சப்படுத்த அதை பிரதி எடுத்து இங்கே ஒட்டுகிறேன். கண்ட்ரோல் சி கண்ட்ரோல் வி. |
8:11 | பைல், சேவ், மார்க்ஸ்டாட் டெக்ஸ்ட். சேவ் ஐ சொடுக்கவும். |
8:21 | இங்கு இருக்கும் சிறப்பு எழுத்துக்களை கண்டுகொள்ளாதீர்கள். யாரும் என் மேல் குறைந்த மார்க் கொடுத்ததற்கு கேஸ் போடக்கூடாது இல்லையா? |
8:28 | இந்த பைல் ஐ மூடுவோம். |
8:33 | மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட் இன் இரண்டாம் காலம் அடிப்படையில் இதை பிரிக்கலாம். |
8:40 | டெர்மினலுக்கு போகலாம். |
8:42 | சார்ட் ஸ்பேஸ் மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட் ஸ்பேஸ் ஹைபன் டி[t] ஸ்பேஸ் மேற்கோள் குறிகளுக்கு நடுவே ஸ்பேஸ் பின்னர் ஸ்பேஸ். |
8:53 | இங்கே ஹைபன் டி என்பது டிலிமிடர், மேற்கோள் குறிகளுக்கு நடுவே உள்ள ஸ்பேஸ் அதன் பிரதிநிதி. |
9:02 | ஹைபன் கே என்பது அடுக்க வேண்டிய இரண்டாம் காலம் ஐ குறிக்கிறது. |
9:14 | என்டர் ஐ தட்டவும். |
9:20 | கேட் மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட் |
9:24 | இதுதான் ஒரிஜினல் பைல். இரண்டாம் காலம் அடிப்படையில் இதை பிரிக்க அவிர் மேலே போய்விட்டார். பாலா கீழே வந்துவிட்டார். |
9:43 | ஒரு கோப்பிலிருந்து சில தகவல்களை மட்டும் வெட்ட கட் கமாண்ட் பயனாகிறது. |
9:51 | மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட் இலிருந்து சில பெயர்களை இழுக்கலாம். |
9:55 | ஆல்ட் டேப் [tab] அடித்து டெர்மினலுக்கு போகலாம். |
9:58 | கட் ஸ்பேஸ் மார்க்ஸ்டாட்டெக்ஸ்ட் ஸ்பேஸ் ஹைபன் டி[D] ஸ்பேஸ் மேற்கோள் குறிகளுக்கு நடுவே ஸ்பேஸ்; அடுத்து ஸ்பேஸ். |
10:08 | இங்கே கட் கமாண்ட் யில் ஹைபன் டி[D] என்பது டிலிமிடர், மேற்கோள் குறிகளுக்கு நடுவே உள்ள ஸ்பேஸ் அதன் பிரதிநிதி. |
10:20 | ஹைபன் எஃப்2 என்பது இரண்டாம் காலம் ஐ குறிக்கிறது. என்டர் ஐ தட்டவும். |
10:31 | பேஸ்ட் கமாண்ட் பொருத்தமான அடுத்த வரிகளை வேறு கோப்பிலிருந்து சேர்க்கிறது. |
10:36 | இப்போது நம்பர்ஸ் டாட் டெக்ஸ்ட் ஐயும் மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட் ஐயும் பயன்படுத்தலாம். |
10:41 | டெர்மினலுக்கு போகலாம். |
10:43 | பேஸ்ட் நம்பர்ஸ் டாட் டெக்ஸ்ட் மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட்; என்டர். |
10:50 | இப்போது நம்பர்ஸ் டாட் டெக்ஸ்ட் இன் முதல் வரிகளுக்கு மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட் இன் முதல் வரி சேர்க்கப்பட்டது. |
10:57 | ரிடிரக்ட் விசையை பயன்படுத்தி இந்த வெளியீட்டை கான்கேட்பைல் டாட் டெக்ஸ்ட் என்ற பைல் க்கு அனுப்பலாம். |
11:06 | டெர்மினலுக்கு போகலாம். |
11:08 | மேல் அம்புக்குறி விசையை தட்டுக. ரிடிரக்ட் விசையை தட்டுங்கள். அது வல முனை அம்புக்குறியாகும். கான்கேட்பைல் டாட் டெக்ஸ்ட். என்டர் ஐ தட்டவும். |
11:18 | கேட் கான்கேட்பைல் டாட் டெக்ஸ்ட் |
11:22 | ஸ்லைடுக்கு போகலாம். |
11:25 | பேஸ்ட் கமாண்ட் எண்களை வரிசையாக டேப் ஆல் பிரிக்கப்பட்டு அச்சிட ஹைபன் எஸ் தேர்வை பயன்படுத்தலாம். |
11:34 | பேஸ்ட் ஹைபன் எஸ் |
11:39 | நம்பர்ஸ் டாட் டெக்ஸ்ட் |
11:43 | ஸ்லைடுகளுக்கு போகலாம் |
11:45 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
11:49 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ICT,MHRD மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:55 | மேற்கொண்டு விவரங்களுக்கு இங்கே செல்லுங்கள்: |
11:59 | இந்த மொழியாக்கம் செய்தது கடலூரில் இருந்து திவா. டப் செய்து இப்போது வந்தனம் கூறி விடை பெறுவது (name of the recorder) from --------------------------(name of the place) |