Linux/C2/The-Linux-Environment/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:16, 29 November 2012 by Chandrika (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
0:00 இந்த லீனக்ஸ் என்விரான்மென்ட் மற்றும் அதை மாற்றுவது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் தரப்படும் உதாரணங்களை செய்து பார்க்க ஒரு இயங்கும் லீனக்ஸ் கணினி தேவை. ஆதர்சமாக உபுன்டு.
00:13 உபுன்டுவை எப்படி இயக்குவது என்றும் அதன் சில அடிப்படை கமாண்ட்களையும் கோப்பு அமைப்புகளையும் ஷெல் குறித்தும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
00:22 இவற்றை ஒரு முறை மீள்பார்வை இட வேண்டுமானால் இதே தளத்தில் உள்ள மற்ற ஸ்போகன் டிடோரியல்களை பாருங்கள்.
00:32 இந்த டுடோரியலை பதிவு செய்ய உபுன்டு 10 புள்ளி 10 பயன்பட்டது.
00:36 லீனக்ஸ் கீழ் மேல் நிலை எழுத்துக்களை தனியாக உணரும். மற்றபடி குறிப்பிட்டால் ஒழிய கமாண்ட்களில் கீழ் நிலை எழுத்துக்களே பயன்படும்.
00:46 லீனக்ஸ் என்விரான்மென்ட் என்பது ஆபரேடிங் சிஸ்டம் எப்படி உங்களுடன் உறவாடும் என்றும் உங்கள் கமாண்ட்களுக்கு எப்படி கீழ் படியும் என்றும் எப்படி உங்கள் செய்கைகளை புரிந்து கொள்ளும் என்றும் நிர்ணயிக்கிறது.
00:55 ஷெல் இன் அமைப்பை மாற்றுவதன் மூலம் லீனக்ஸை வெகுவாக நமக்கு வேண்டிய படி அமைத்துக்கொள்ளலாம்.
00:58 இதை எப்படி செய்வது என்று காணலாம்.
00:59 பொதுவாக ஷெல் இன் நடத்தையை ஷெல் வேரியபில்ஸ் நிர்ணயிக்கின்றன.
01:04 இந்த வேரியபில்ஸ் இரண்டு வகைப்படும். என்விரான்மென்ட் வேரியபில்ஸ். இன்டர்னல் வேரியபில்ஸ்.
01:12 என்விரான்மென்ட் வேரியபில்ஸ் பயனரின் முழு என்விரான்மென்ட்டிலும் கிடைக்கும்.
01:19 ஷெல் ஸ்க்ரிப்ட் இயக்குவது போன்ற ஷெல்லால் பிறப்பிக்கப்பட்ட சப் ஷெல்களிலும் இவை கிடைக்கும்.
01:24 உள்ளமை- லோகல் வேரியபில்ஸ் பெயருக்கு ஏற்றாற்போல் குறைந்த அளவில் கிடைக்கும்.
01:31 ஷெல் உருவாக்கிய சப் ஷெல்களுக்கு இவை கிடைக்கா.
01:36 இந்த டுடோரியலில் நாம் முக்கியமாக என்விரான்மென்ட் வேரியபில்ஸ் பற்றி பேசுவோம். முதலில் இவற்றின் வேல்யுகளை எப்படி காண்பது என பார்க்கலாம்.
01:48 நடப்பு ஷெல்லில் உள்ள எல்லா வேரியபில்களையும் காண ...
01:53 டெர்மினலில் டைப் செய்க: செட் ஸ்பேஸ் செங்குத்து கோடு மோர். என்டர் விசையை அழுத்தவும்.
02:00 நடப்பு ஷெல்லில் உள்ள எல்லா வேரியபில்களையும் காணலாம்,
02:04 உதாரணத்துக்கு: ஹோம் என்விரான்மென்ட் வேரியபிலை பாருங்கள். அதற்கு கொடுக்கப்பட்ட வேல்யுவையும் பாருங்கள்.
02:15 பட்டியலில் மேலும் காண என்டர் விசையை அழுத்தவும். வெளியேற க்யூ விசையை அழுத்தவும்.
02:21 வேரியபில்களின் பல பக்க பட்டியலை வெளியிடும் வகையில் செட் கமாண்டின் அவுட்புட் மோர் என்பதற்கு பைப்லைன் செய்யப்பட்டது.
02:38 என்விரான்மென்ட் வேரியபில்களையும் மட்டும் காண கமாண்ட் ஈஎன்வி.
02:45 டெர்மினலில் டைப் செய்க: ஈஎன்வி ஸ்பேஸ் செங்குத்து கோடு மோர். என்டர் விசையை அழுத்தி உள்ளிடுக.
02:52 உதாரணத்துக்கு, ஷெல் வேரியபில்களின்க்கு மதிப்பு ச்லாஷ் பின்[bin] ச்லாஷ் பாஷ் என்பதை கவனிக்கவும்.
03:00 மீண்டும் வெளியேற க்யூ விசையை அழுத்தவும்.
03:07 இப்போது லீனக்ஸில் இன்னும் முக்கியமான என்விரான்மென்ட் வேரியபில்களையும் காணலாம்.
03:11 நாம் மாதிரி இயக்கங்களுக்கு எல்லாம் நாம் பாஷ் ஷெல்லை பயன்படுத்துவோம்.
03:15 ஷெல்கள் ஒவ்வொன்றும் கொஞ்சம் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளன.
03:19 ஒரு வேரியபில் என்ன உண்மையில் வைத்துள்ளது என அறிய நாம் டாலர் குறியை முன்னே சேர்க்க வேண்டும். அத்துடன் எகோ கமாண்டை சேர்க்க வேண்டும்.
03:30 நாம் பார்க்கப்போகும் முதல் என்விரான்மென்ட் வேரியபில் ஷெல்.
03:35 அது நடப்பு ஷெல்லின் பெயரை வைத்துள்ளது.
03:37 ஷெல் வேரியபிளின் வேல்யுவை காண டெர்மினலில் டைப் செய்யவும். எகோ ஸ்பேஸ் டாலர் - மேல் நிலை எழுத்துக்களில் எஸ்ஹெச்இஎல்எல். என்டர் விசையை அழுத்தவும்.
03:55 ஸ்லாஷ் பின் ஸ்லாஷ் பாஷ். இதுவே நாம் பயன்படுத்தும் ஷெல் ஆகும்.
04:02 அடுத்த வேரியபில் ஹோம்.
04:05 சாதாரணமாக லீனக்ஸில் உள் நுழையும் போது அது நம்மை நம் யூசர் பெயரில் உள்ள ஒரு டிரக்டரியில் சேர்த்துவிடும்.
04:11 இந்த டிரக்டரி ஹோம் டிரக்டரி எனப்படும். அதுவே ஹோம் வேரியபில் இல் கிடைப்பது.
04:17 இதன் வேல்யுவை காண டெர்மினலில் எகோ ஸ்பேஸ் டாலர் - மேல் நிலை எழுத்துக்களில் ஹெச்ஓஎம்இ. என்டர் விசையை அழுத்தவும்.
04:29 அடுத்த என்விரான்மென்ட் வேரியபில்களின் பாத்[PATH]
04:32 செயலாக்க வேண்டிய கமாண்ட்களுக்காக ஷெல் தேட வேண்டிய டிரக்டரிகளின் நிச்சய பாதையே பாத் வேரியபில்களில் உள்ளது.
04:40 இதன் வேல்யுவை காணலாம்.
04:43 மீண்டும் டெர்மினலில் உள்ளிடுக. எகோ ஸ்பேஸ் டாலர் - மேல் நிலை எழுத்துக்களில் பிஏடிஹெச்[PATH]
04:51 என் கணினியில் அவை இப்படி உள்ளன.ச்லாஷ் யூசர் ச்லாஷ் லோகல் ச்லாஷ் எஸ்பின்[sbin]; ச்லாஷ் யூசர் ச்லாஷ் லோகல் ச்லாஷ் பின்[bin]; ச்லாஷ் யூசர் ச்லாஷ் எஸ்பின்[sbin]; ச்லாஷ் யூசர் ச்லாஷ் பின்[bin]
05:04 இது கணினிக்கு கணினி கொஞ்சம் வேறுபடலாம்.
05:07 உண்மையில் அது கோலன் டிலிமிடரால் பிரிக்கப்பட்ட டிரக்டரிகளின் பட்டியல். இந்த வரிசையில்தான் ஷெல் செயலாக்க வேண்டிய கமாண்டை தேடும்.
05:18 நாம் நமக்கு வேண்டிய டிரக்டரியை இந்த பட்டியலில் சேர்க்கலாம். அப்போது அதுவும் தேடப்படும்.
05:25 நமக்கு வேண்டிய டிரக்டரியை இந்த பட்டியலில் சேர்க்க டெர்மினலில் டைப் செய்க
5:29 மேல் நிலை எழுத்தில் பிஏடிஹெச்[PATH] ஈக்வல்டு டாலர் மீண்டும் மேல் நிலை எழுத்தில் பிஏடிஹெச்[PATH] கோலன் ஸ்லாஷ் ஹோம் ஸ்லாஷ் பின்னர் நம் ஹோம் டிரக்டரியின் பெயர். என்டர் விசையை அழுத்தவும்.
05:54 இப்போது பாத் வேல்யுவை எகோ செய்தால்
06:04 நம் டிரக்டரி பாத் வேரியபில்களில் சேர்க்கப்பட்டுள்ளதை காணலாம்.
06:10 இங்கு அந்த டிரக்டரி உள்ளதை பாருங்கள்.
06:16 இன்னொரு சுவாரசியமான வேரியபில் லாக்நேம்.
06:20 நடப்பில் செயலாக உள்ள யூசரை இது கொண்டுள்ளது.
06:24 இதன் வேல்யுவை காண எகோ ஸ்பேஸ் டாலர் மேல் நிலை எழுத்தில் லாக்நேம் என டைப் செய்வோம்.
06:35 டெர்மினலை நாம் திறக்கும் போது ப்ராம்ப்ட் ஆக டாலர் குறியை பார்க்கிறோம் இல்லையா? இதை ஒட்டிதான் நாம் கமாண்ட்களை டைப் செய்கிறோம்.
06:42 இதுவே பிரைமரி ப்ராம்ப்ட் ஸ்டிரிங். இதன் என்விரான்மென்ட் வேரியபில்களின் பிரதிநிதி பிஎஸ்ஒன்று[PS1]
06:47 இரண்டாம் ப்ராம்ப்ட் ஸ்டிரிங்கும் உள்ளது.
06:50 நாம் உள்ளிடும் கமாண்ட் மிக நீளமாக போய் அடுத்த வரிக்கு செல்ல நேரிட்டால் வல அம்புக்குறியை ப்ராம்ப்ட் இடத்தில் பார்க்கலாம்.
07:00 இதுவே இரண்டாம் ப்ராம்ப்ட் ஸ்டிரிங். இதன் என்விரான்மென்ட் வேரியபில்களின் பிரதிநிதி பிஎஸ் இரண்டு[PS2].
07:05 இரண்டாம் ப்ராம்ப்டின் மதிப்பு என்ன என்று அறிய டெர்மினலில் உள்ளிடுக: எகோ ஸ்பேஸ் டாலர் பிஎஸ் இரண்டு. என்டரை தட்டுவோம்.
07:20 நம் முதன்மை ப்ராம்ப்ட் ஸ்டிரிங் ஐ அட் தெ ரேட் என்னும் குறியாக மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.
07:28 இப்படி செய்ய டைப் செய்வோம்: மேலெழுத்தில் பிஎஸ்ஒன்று ஈக்வல்டு மேற்கோள்களுக்குள் அட் தெ ரேட். என்டரை தட்டுவோம்.
07:41 இப்போது டாலர் குறிக்கு பதில் அட் தெ ரேட் ஐ காணலாம்.
07:50 கொஞ்சம் சுவாரசியமான வேலை செய்யலாம். ப்ராம்ப்டில் நமது பெயர் வரும்படி செய்யலாம்.
07:56 டைப் செய்து உள்ளிடுக: பிஎஸ்1 ஈக்வல்டு மேற்கோள்களுக்குள் டாலர் லாக்னேம். என்டரை தட்டுவோம்.
08:12 இப்போது ப்ராம்ப்டில் என் பெயர் இருக்கிறது.
08:16 மீண்டும் பழையபடி ஆக்க பிஎஸ்1 ஈக்வல்டு மேற்கோள்களுக்குள் டாலர். என்டரை தட்டுவோம்
08:28 பல என்விரான்மென்ட் வேரியபில்களுக்கு நாம் வேல்யுகளை தந்துள்ளோம்.
08:32 ஆனால் இந்த மாறுதல்கள் எல்லாமே இந்த நடப்பு அமர்வுக்குத்தான் என்பதை நினைவில் கொள்ளலாம்.
08:37 உதாரணத்துக்கு நாம் ஒரு டிரக்டரியை பாத் இல் சேர்த்தோம்.
08:40 டெர்மினலை மூடிவிட்டு திறந்து அல்லது முற்றிலும் புதிய டெர்மினலை திறந்து, பாத் வேரியபில்களின் வேல்யுவை எகோ செய்து பார்த்தால்.
09:00 அத்தனை மாறுதல்களும் போய்விட்டன என்பதை கண்டு ஆச்சரியப்படலாம்.
09:05 இந்த மாறுதல்களை எப்படி நிரந்தரமாக்குவது என்பது இன்னொரு அட்வான்ஸ்ட் டுடோரியலுக்கான பொருளாகும்.
09:13 அடிக்கடி சமீபத்தில் இயக்கிய ஒரு கமாண்டை மீண்டும் இயக்குகிறோம். இதற்கு என்ன செய்ய வேண்டும்? முழு கமாண்டையும் மீண்டும் உள்ளிட வேண்டுமா?
9:22 இல்லை, பல தீர்வுகள் உள்ளன.
09:26 முதலில் விசைப்பலகையின் மேல் நோக்கு அம்பு குறி விசையை அழுத்தினால் கடைசியாக உள்ளிட்ட கமாண்டை காணலாம்.
09:33 அந்த விசையை அழுத்திக்கொண்டே இருக்க முந்தைய கமாண்ட்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரும்.
09:37 பின் செல்ல கீழ் நோக்கிய அம்புக்குறி விசையை அழுத்தலாம்.
09:42 ம்ம்ம் ஆனால் இப்படி மேலும் கீழும் போவது கொஞ்சம் சலிப்பான விஷயம். இதைக்காட்டிலும் நல்ல தேர்வு ஹிஸ்டரி கமாண்ட்.
09:52 ப்ராம்ப்டில் ஹிஸ்டரி என டைப் செய்து ...
09:58 உள்ளிடுங்கள். முன்னே இட்ட கமாண்ட்களின் பட்டியல் தென் படும்.
10:04 நமக்கு பெரிய பட்டியல் வேண்டாம். கடைசி பத்து கமாண்ட்களை பார்த்தால் போதும் என்றால் ...
10:08 ப்ராம்ப்டில் ஹிஸ்டரி ஸ்பேஸ் 10 என டைப் செய்து உள்ளிடுங்கள்.
10:20 இந்த பட்டியலில் ஒவ்வொரு முன் இட்ட கமாண்டுக்கும் ஒவ்வொரு எண் கொடுக்கப்பட்டுள்ளது.
10:27 ஏதேனும் ஒரு கமாண்டை திருப்பியும் தட்டச்ச...
10:32 ஆச்சரிய குறியை டைப் செய்து கமாண்டின் எண்ணை உள்ளிடுக. உதாரணமாக என் பட்டியலில் ஆச்சரியக்குறி 442 என்பது எகோ ஸ்பேஸ் டாலர் பாத் கமாண்டை இயக்கும்
10:51 கடைசி கமாண்ட்க்கு வெறும் இரண்டு ஆச்சரியக்குறியை உள்ளிட்டால் போதும்!
11:03 அடுத்து பார்க்ககூடியது டில்டே சப்ஸ்டிடுஷன். இந்த டில்டே குறி ஹோம் டிரக்டரிக்கு சுருக்கு வழி.
11:12 உதாரணமாக உங்கள் ஹோம் டிரக்டரியில் டெஸ்ட்ட்ரீ என்று ஒரு டிரக்டரி இருப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போது சிடி ஸ்பேஸ் டில்டே ச்லாஷ் டெஸ்ட்ட்ரீ என உள்ளிட்டு அங்கு சென்று விடலாம்.
11:25 நடப்பு வொர்கிங் டிரக்டரிக்கும் கடைசியாக வேலை செய்த டிரக்டரிக்கும் சிடி டில்டே மைனஸ் அல்லது சிடி மைனஸ் கமாண்ட் ஆல் முன்னும் பின்னும் செல்லலாம்.
11:35 உதாரணமாக இப்போது டெஸ்ட்ட்ரீ டிரக்டரியில் இருக்கிறோம். கடைசியாக நாம் இருந்தது ஹோம் டிரக்டரி.
11:41 சிடி ஸ்பேஸ் மைனஸ் கமாண்டை உள்ளிடுக. நாம் ஹோம் டிரக்டரிக்கு சென்று விட்டோம்.
11:47 அதையே மீண்டும் இயக்க டெஸ்ட்ட்ரீ டிரக்டரிக்கு சென்றுவிட்டோம்.
11:55 கடைசியாக ஆனால் முக்கியமாக நாம் பார்க்கப்போகும் கமாண்ட் அலையஸ் கமாண்ட்.
11:59 மீண்டும் மீண்டும் இயக்க வேண்டிய ஒரு நீளமான கமாண்ட் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
12:04 அப்படியானால் இதற்கு ஒரு சிறிய மாற்று பெயரிட்டு கமாண்டை இயக்க இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
12:11 உங்களது டிரக்டரி அடுக்கு மிகபெரியதாக இருந்து இசை டிரக்டரிக்கு செல்ல மிகப்பெரிய பாதையாக இருக்கிறது என்று வைத்துக்கொள்ளலாம். அதற்கு இப்படி ஒரு அலையஸ் ஐ உருவாக்கலாம்.
12:20 டைப் செய்து உள்ளிடுக: அலையஸ் ஸ்பேஸ் சிடிம்யுசிக் ஈக்வல்டு இரட்டை மேற்கோள்களில் சிடி ஸ்பேஸ் ச்லாஷ் ஹோம் ச்லாஷ் எஆர்சி ச்லாஷ் பைல்ஸ்[files] ச்லாஷ் என்டர்டெய்ன்மென்ட் ச்லாஷ் ம்யூசிக்.
12:47 இப்போது இசை டிரக்டரிக்கு போக நினைக்கும் போதெல்லாம் சிடிம்யுசிக் என்று எழுதி உள்ளிட்டால் போதும்!
12:55 இப்போது ம்யூசிக் டிரக்டரியில் இருக்கிறோம் இல்லையா?
12:58 சிடி ஸ்பேஸ் மைனஸ் என உள்ளிட்டு முந்தைய நடப்பு டிரக்டரிக்கு போகலாம்.
13:08 இந்த அலையஸ் அமைப்பை நீக்க சும்மா அன்அலையஸ் ஸ்பேஸ் சிடிம்யுசிக் என எழுதி உள்ளிடலாம்.
13:20 இப்போது மீண்டும் சிடிம்யுசிக் என டெர்மினலில் கமாண்ட் இட்டால் கமாண்டை காணவில்லை என்று பிழை செய்திதான் வரும்.
13:30 நம் நடப்பு வேலைசெய்யும் டிரக்டரியில் இரண்டு கோப்புகள் டெஸ்ட்1 டெஸ்ட்2 என இருப்பதாக வைத்துக்கொள்ளலாம்.
13:38 நாம் ஆர்எம் டெஸ்ட்1 என உள்ளிட்டால் டெஸ்ட்1 டிரக்டரி மௌனமாக நீக்கப்படும்.
13:45 இதே ஆர்எம் கமாண்ட்யுடன் ஹைபன் ஐ என்ற தேர்வை சேர்த்தால் நீக்கல் செயல் இன்டராக்டிவ் செயலாகிவிடும்.
13:52 ஆகவே இப்போது ஒரு அலையஸ் ஐ அமைக்கலாம். அலையஸ் ஈக்வல்டு, மேற்கோள்களில் ஆர்எம் ஸ்பேஸ் ஹைபன் ஐ.
14:03 இப்போது நாம் ஆர்எம் ஐ இயக்கினால் உண்மையில் ஆர்எம் ஸ்பேஸ் ஹைபன் ஐ தான் இயங்கும்.
14:13 இப்போது டெஸ்ட்1 மௌனமாக நீக்கப்பட்டாலும் டெஸ்ட்2 ஐ நீக்குமுன் கணினி உறுதிபடுத்திக்கொண்டது.
14:20 ஆகவே இந்த டுடோரியலில் நாம் என்விரான்மென்ட் வேரியபில்ஸ், ஹிஸ்டரி, அலையஸ் ஆகியன குறித்து பார்த்தோம்.
14:25 இத்துடன் இந்த டுடோரியல் நிறைவு பெறுகிறது.
14:28 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
14:36 மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும்.
14:39 இந்த டுடோரியலுக்கு எழுத்து உபயம் அணிபேன் அவர்கள்.
14:42 இந்த மொழியாக்கம் செய்தது கடலூரில் இருந்து திவா. டப்[dub] செய்து இப்போது வந்தனம் கூறி விடை பெறுவது -----------------------(name of the recorder) from --------------------------(name of the place)signing off.

Contributors and Content Editors

Chandrika, Pravin1389, Priyacst